Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தவறாக பிரசாரம் செய்யும் ஊடகங்களை நசுக்க வேண்டும்: ஷிண்டே

Posted:

புனே:காங்கிரசுக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என பேசி மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அச்சுறுத்தியுள்ளார்.இது குறித்து தனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடந்த ஒரு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிண்டே பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:சமீபத்தில் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் காங்கிரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை பரப்பிவரும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என்றார். எனது துறை கட்டுப்பாட்டின் கீழ் ...

40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ.,: கம்யூனிஸ்ட்களுக்கு "சீட்” உண்டா என்பது "சஸ்பென்ஸ்”

Posted:

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, தன் பிறந்த நாளான, நேற்று, அதிரடியாக, 40 லோக்சபா தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசாரப் பயணத் திட்டத்தை வெளியிட்டார். இதனால், கம்யூ., கட்சிகளுக்கு, 'சீட்' உண்டா என்ற, 'சஸ்பென்ஸ்' உருவாகி உள்ளது.முதல்வர் ஜெயலலிதா வின், 66வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., சார்பில், நேற்று, மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பகல், 12:30 மணிக்கு, முதல்வர், கட்சி அலுவலகம் வருவதாகவும், பத்திரிகையாளர்களை சந்திப்பதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, பிறந்த நாளுக்கு கட்சி அலுவலகம் வராத முதல்வர், திடீரென வருவதாக, தகவல் வந்ததால், முக்கிய ...

பா.ஜ., பக்கம் சாயும் பஸ்வானை பார்த்து காங்., அச்சம்: பல கட்சிகளும் எதிரணியில் திரள்வதால் பீதி

Posted:

பா.ஜ., கூட்டணியில், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி இணையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இது, நடந்து விட்டால், பா.ஜ., கூட்டணி பலமாகி விடும் என, காங்., மேலிடம் அஞ்சுகிறது. இதனால், ராம்விலாஸ் பஸ்வானை, தங்கள் பக்கம் இழுக்க, காங்., தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆந்திராவின், தெலுங்கு தேசம் உட்பட, பல கட்சிகளும், பா.ஜ.,வுடன் அணி சேர ஆயத்தமாகி வருவதால், கடும் பீதியில் காங்கிரஸ் உறைந்துள்ளது.போட்டா போட்டி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதில், காங்கிரசும், பா.ஜ.,வும், தீவிரமாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், பலமாக உள்ள கட்சிகளை, தங்கள் பக்கம் ...

போலீஸ் மீது பயம் விலகுகிறதா: தொடர்ந்து தாக்கப்படும் எஸ்.ஐ.,க்கள்

Posted:

நாகமலைபுதுக்கோட்டை: எதிராளியின் பயமே போலீசின் பலம். இந்த பயம் குறையும்போது, போலீஸ் மீதான தாக்குதல் நிகழுகிறது. இதற்கு முதல் பலி தூத்துக்குடி எஸ்.ஐ., வெற்றிவேல். அடுத்து, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின்சுதன். இவர்களின் இறப்புகளால், அச்சமடைந்த போலீசாருக்கு, தைரியமூட்ட, 'போலீசார் தங்கள் உயிருக்கு அச்சம் ஏற்படும் பட்சத்தில், துப்பாக்கியால் சுடலாம்' என டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்தார். ஆனாலும், ரோந்து செல்லும் போலீசார் பலருக்கு, துப்பாக்கி கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், தோட்டா இருப்பதில்லை.சில நாட்களுக்கு முன், மதுரை மதிச்சியம் ...

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி: முதல்வர் கொடுத்த 'ஷாக்'கால் முக்காடு

Posted:

லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற இலக்குடன், தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க., பக்கம் தாவிய, அக்கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., பாண்டியராஜனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேபோல், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்ற ஆறு பேரும், அதிருப்தி அடைந்துள்ளனர்.நிராகரித்து விட்டார்: விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பாண்டிய ராஜன். இவர், தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, விஜயகாந்தி டம், 'சீட்' கேட்டார். ஆனால், கட்சியில் ஒருவருக்கு, ஒரு பதவிதான் வழங்கப்படும் எனக் கூறி, ...

அ.தி.மு.க.,வில் படித்தவர்கள், புதுமுகங்களுக்கு அடித்தது 'லக்': 'சிட்டிங்' எம்.பி.,க்கள் ஆறு பேருக்கு 'அல்வா'

Posted:

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட, லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், படித்த, கட்சிக்கு விசுவாசமான, நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றிய, புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தற்போதைய, எம்.பி.,க்கள் ஆறு பேருக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 3,000த்துக்கும் மேற்பட்டோர், விருப்ப மனு தாக்கல் செய்தனர். இவர்களில், 40 பேர், நேற்று வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் பலர், புதுமுகங்கள்.தேர்தலுக்கு பின், ...

உனக்கு 18... எனக்கு 14... சரியா: தே.மு.தி.க., பா.ம.க.,வால் பா.ஜ., 'டென்ஷன்'

Posted:

சென்னை: பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., 18 தொகுதிகள், பா.ம.க., 14 தொகுதிகள் கேட்பதால், பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. எனினும், இம்மாத இறுதிக்குள், கூட்டணியை முடிவு செய்து விடுவோம் என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க., இடம் பெற முன்வந்துள்ளன. இக்கட்சிகளுடன், பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த வாரத்தில் நடந்த, பேச்சுவார்த்தையை முடித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூர் சென்றுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில், அவர் ...

தி.மு.க., தொண்டர்கள் விலைபோக மாட்டார்கள்: ஸ்டாலின் பேச்சு

Posted:

திண்டுக்கல்: "தி.மு.க., தொண்டர்கள் விலைபோக மாட்டார்கள். தலைமையின் உத்தரவினை மட்டுமே அவர்கள் செயலாற்றுவார்கள்," என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.திண்டுக்கல்லில், தி.மு.க., மாவட்டச் செயலாளர் ஐ.பெரியசாமி இல்ல திருமண விழா நடந்தது. தி.மு.க., சட்டசபை கொறடா சக்கரபாணி வரவேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை தி.மு.க., சந்தித்தது. இருப்பினும் ஆத்தூர் தொகுதியில், பெரியசாமி, 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பும், அவர்களின் ...

டெண்டர் வெளியிடுவதில் அரசு நிறுவனங்கள் மும்முரம்: 20 - 25 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு

Posted:

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு, இன்னும் சில தினங்களில், வெளியாக உள்ளது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும் என்பதால், அரசு துறை நிறுவனங்கள், தற்போது, டெண்டர் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.பற்றாக்குறை: தமிழகத்தில், எரிசக்தி, நெடுஞ்சாலை, விவாசயம், உணவு, வருவாய் என, 37 அரசு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும், ஐந்து முதல், 10 வரை அரசு சார்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், சாலை அமைத்தல், கட்டடம் கட்டுதல், உணவு பொருட்கள் கொள்முதல் உள்ளிட்ட பணிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ...

ஒரு அங்குல இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை: நரேந்திர மோடியின் பேச்சுக்கு சீனா விளக்கம்

Posted:

பீஜிங்: அண்டை நாடுகளின், ஒரு அங்குல நிலத்தைக் கூட, அபகரிக்க நினைக்கவில்லை' என, சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.அருணாசல பிரதேசத்தில், கடந்த வாரம், நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய, கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, அருணாசல பிரதேச எல்லையை, சீனப் படைகள், ஆக்கிரமிப்பு செய்வதை எச்சரித்தார். 'நாட்டின் எல்லையை விஸ்தரிக்கும் எண்ணத்தை, சீனா கைவிட வேண்டும்; இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை, எந்த சக்தியாலும் பறிக்க முடியாது' என, அவர் பேசினார். மோடியின் இந்த குற்றச்சாட்டை, சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக பெண் அதிகாரி, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™