Daily Thanthi |
- இந்தியா உள்பட 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் பாகிஸ்தான்-இலங்கை மோதல்
- போட்டி அட்டவணை
- ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி கடைசி ஓவரில் இங்கிலாந்தை வீழ்த்தியது
- நரேந்திரமோடி குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு ‘‘பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றக்கூட போர் தொடுத்தது இல்லை’’
- இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது
- இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் 10 இந்தியர்கள் போட்டி
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான ரூ.153 கோடி மதிப்பில் பணிகள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
- ராஜீவ் கொலை கைதிகள் 4 பேரை விடுவிக்க சட்டப்படி நடவடிக்கை ஜெயலலிதா பேட்டி
- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா வெளியிட்டார்
- புதுவை அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கம் வாழ்க்கை வரலாறு
| Posted: 24 Feb 2014 02:50 PM PST பாதுல்லா இந்தியா உள்பட 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் 12-வது ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடக்கிறது. பாதுல்லா, மிர்புரில் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், 5 முறை சாம்பியன் இந்தியா, 4 முறை சாம்பியன் இலங்கை, போட்டியை நடத்தும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் கலந்து கொள்கிறது. விராட்கோலி கேப்டன் இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆசிய கண்டத்தில் தலைசிறந்த அணி எது என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் டோனி காயம் அடைந்ததால் விராட்கோலி தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. 100-வது சதம் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட அன்னிய மண்ணில் அடுத்தடுத்து மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இழந்த பெருமையை மீட்க போராடும். இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மட்டுமின்றி வங்காளதேச அணி கடந்த முறை (2012) இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அத்துடன் புதிய அணியான ஆப்கானிஸ்தானும் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. எல்லா அணிகளும் சவால் அளிக்கக்கூடியதாக இருப்பதால் இந்த ஆட்டத்தில் அதிரடிக்கு குறைவு இருக்காது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி எல்லாருடைய மனதிலும் பசுமரத்து ஆணி போல் பதிந்தது சாதனை நாயகன் சச்சின் தெண்டுல்கர் தனது 100-வது சர்வதேச சதத்தை (வங்காளதேசத்துக்கு எதிராக) எட்டியதாகும். அத்துடன் அது தான் அவருடையை கடைசி ஒருநாள் போட்டி தொடராகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான்-இலங்கை ஆசிய கோப்பை போட்டியில் தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் பாதுல்லாவில் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணியினரும், ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஒருநாள் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 137 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இன்று மோதுவது 138-வது முறையாகும். பாகிஸ்தான் அணி 80 ஆட்டங்களிலும், இலங்கை அணி 52 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 4 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்த போட்டி தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிரப்பு செய்யப்படுகிறது. இந்திய அணி மோதும் ஆட்டங்கள் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பாகிறது. அணி வீரர்கள் இன்றைய போட்டிக்கான இரு அணிகள் வருமாறு:- பாகிஸ்தான்: மிஸ்பா உல்-ஹக் (கேப்டன்), அப்துர் ரஹ்மான், அகமது ஷெசாத், அன்வர் அலி, பிலாவால் பாதி, பவாத் ஆலம், ஜூனைத்கான், முகமது ஹபீஸ், முகமது தல்ஹா, சயீத் அஜ்மல், அப்ரிடி, ஷர்ஜீல்கான், சோகைப் மசூத், உமர் அக்மல், உமர்குல். இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), சன்டிமால், சதுரங்க டிசில்வா, மஹேலா ஜெயவர்த்தனே, சுரங்கா லக்மல், மலிங்கா, அஜந்தா மென்டிஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, தமிக்கா பிரசாத், அஷன் பிரியஞ்சன், சங்கக்கரா, செனநாயகே, திரிமன்னே, image: category: |
| Posted: 24 Feb 2014 02:49 PM PST ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:– தேதி மோதும் அணிகள் இடம் நேரம் பிப்.25: பாகிஸ்தான்–இலங்கை பாதுல்லா பகல் 1.30 மணி பிப்.26: இந்தியா–வங்காளதேசம் பாதுல்லா பகல் 1.30 மணி பிப்.27: பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் பாதுல்லா பகல் 1.30 மணி பிப்.28: இந்தியா–இலங்கை பாதுல்லா பகல் 1.30 மணி மார்ச்.1: வங்காளதேசம்–ஆப்கானிஸ்தான் பாதுல்லா பகல் 1.30 மணி மார்ச்.2: இந்தியா–பாகிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.3: இலங்கை–ஆப்கானிஸ் தான் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.4: பாகிஸ்தான்–வங்காளதேசம் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.5: இந்தியா–ஆப்கானிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.6: இலங்கை–வங்காளதேசம் மிர்புர் பகல் 1.30 மணி மார்ச்.8: இறுதிப்போட்டி மிர்புர் பகல் 1.30 மணி --– இதுவரை சாம்பியன்கள் 1984–இந்தியா 1986–இலங்கை 1988–இந்தியா 1990–91–இந்தியா 1995–இந்தியா 1997–இலங்கை 2000–பாகிஸ்தான் 2004–இலங்கை 2008–இலங்கை 2010–இந்தியா 2012–பாகிஸ்தான் --– சாதனை துளிகள்... 30 ஆண்டு கால ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை துளிகள் வருமாறு:– அணியின் அதிகபட்சம்: பாகிஸ்தான்–385/7 (வங்காளதேசத்துக்கு எதிராக, 2010) குறைந்தபட்சம்: வங்காளதேசம் 87 ரன்கள், (பாகிஸ்தானுக்கு எதிராக, 2000) அதிக ரன் குவித்தவர்: ஜெயசூர்யா (இலங்கை)–1,220 ரன்கள் (25 ஆட்டங்கள்) தனிப்பட்ட வீரரின் அதிகபட்சம்: விராட்கோலி (இந்தியா)–183 ரன்கள், (பாகிஸ்தானுக்கு எதிராக, 2012) அதிக சதம் கண்டவர்: ஜெயசூர்யா (இலங்கை)–6 சதங்கள் (25 ஆட்டங்கள்) அதிக விக்கெட் வீழ்த்தியவர்: முரளிதரன் (இலங்கை)–30 விக்கெட்டுகள்(24 ஆட்டங்கள்) சிறந்த பந்து வீச்சு: அஜந்தா மென்டிஸ் (இலங்கை)–13/6 (இந்தியாவுக்கு எதிராக, 2008) image: category: |
| Posted: 24 Feb 2014 02:40 PM PST துபாய், ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜூனியர் உலக கிரிக்கெட் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று துபாயில் நடந்த முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விக்கெட்டுகள் சரிவு 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோட்ஸ் ஆட்டம் இழக்காமல் 76 ரன்னும், ஹிஜ்ஜின்ஸ் 52 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஜியா உல்–ஹக், அமாத் பட், கராமத் அலி தலா 2 விக்கெட்டும், கம்ரன் குலாம் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 57 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தாலும், சாத் ஷகீல் (45 ரன்கள்), அமீர் ஹம்சா (35 ரன்கள்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 8–வது விக்கெட்டுக்கு ஜாபர் கோஹர் (37 ரன்கள்), அமாத் பட் (26 ரன்கள்) ஜோடி நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். கடைசி ஓவரில் 4 ரன் தேவைப்பட்டது. முதல் பந்தை அமாத் பட் பவுண்டரிக்கு விரட்டினார். இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் 49.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை (26–ந் தேதி) துபாயில் நடைபெறும் 2–வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் சந்திக்கின்றன. இந்திய அணி வெற்றி துபாயில் நேற்று நடந்த 5 முதல் 8 இடங்களுக்கான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 291 ரன்கள் குவித்தது. இந்திய வீரர் தீபக் ஹூடா 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் 215 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. image: category: |
| Posted: 24 Feb 2014 11:37 AM PST பீஜிங், அருணாசலபிரதேசத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக சீனா மீது நரேந்திரமோடி கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. 'பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றக்கூட போரிட்டது இல்லை' என்று அந்நாடு கூறியுள்ளது. குற்றச்சாட்டு குஜராத் மாநில முதல்–மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திரமோடி, சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, அம்மாநிலத்தை கைப்பற்றத் துடிக்கும் சீனாவை எச்சரித்தார். நாட்டின் எல்லையை விஸ்தரிக்கும் குணத்தை சீனா கைவிட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்றும் அவர் கூறினார். சீனா மறுப்பு இந்நிலையில், இக்குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நிருபர்களிடம் கூறியதாவது:– சீனா, நாடு பிடிக்கும் கொள்கையை பின்பற்றுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். பிற நாடுகளின் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்றுவதற்கு கூட சீனா போர் தொடுத்தது இல்லை. இது அனைவருக்கும் தெரியும் என்று கருதுகிறேன். எல்லையில் கடந்த பல ஆண்டுகளாக ராணுவ மோதல்கள் நடந்தது இல்லை. எல்லையில் அமைதியை கட்டிக்காக்கும் திறன் எங்களுக்கு உண்டு என்பதற்கு இதுவே சாட்சி. எல்லை பிரச்சினை இது, வருங்காலத்தில் இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கு நல்லது. இது, இருநாட்டுக்கு மட்டுமின்றி, இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்துக்கும் நல்லது. இந்தியாவுடன் எல்லை பிரச்சினை இருப்பது உண்மைதான். அந்த பிரச்சினையை மட்டுமின்றி, எல்லா பிரச்சினைகளையும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே சீனா விரும்புகிறது. இதற்காக இரு நாடுகளும் கடுமையாக பாடுபட்டு வருகின்றன. விரைவில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கருதுகிறோம். இந்தியாவுடன் நல்ல அண்டை நாட்டு உறவை கடைபிடிப்பதையே சீனா விரும்புகிறது. அமைதியான வளர்ச்சிப் பாதையில் செல்லவே உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். image: category:News Group Category: |
| இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது Posted: 24 Feb 2014 11:33 AM PST புதுடெல்லி, இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில், கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் மூலம் கடற்படை வீரர்கள் இருவரும் மரண தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர். இத்தாலி கடற்படை வீரர்கள் கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, கடந்த 2012–ம் ஆண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இத்தாலி சென்ற அவர்கள், மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மீண்டும் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இத்தாலி தூதரகத்தில் தங்கியிருக்கும் அவர்கள் மீது இந்திய கடற்படை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய அரசு வாபஸ் இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறும், 2 வீரர்களையும் விடுதலை செய்ய இந்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரி இத்தாலி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் ஜே.சலமேஸ்வர் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தாலி வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இந்த சட்டத்தின் மூலம் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடல்சார் பாதுகாப்பு பின்னர் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கூலம் இ.வாகன்வதி, 'இத்தாலிய கடற்படை வீரர்கள் 2 பேரும் கடல்சார் பாதுகாப்புக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அதன் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் 2 பேர் மீதும் விசாரணை நடைபெறுவதாகவும்' வாதிட்டார். கடற்படை வீரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோதகி, 'தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் இந்த வீரர்கள் மீது ஏன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது?' என்று கேள்வி எழுப்பினார். 3 நீதிபதிகள் அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இத்தாலிய கடற்படை வீரர்கள் தரப்பில் 1 வாரத்துக்குள் தங்கள் கருத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் மத்திய அரசும் தனது கருத்தை அடுத்த 1 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். image: category:Tagging:News Group Category: |
| இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் 10 இந்தியர்கள் போட்டி Posted: 24 Feb 2014 11:30 AM PST வாஷிங்டன், அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்தலில் 10 இந்திய வம்சாவளிகள் போட்டியிட தீர்மானித்துள்ளனர். அமெரிக்க தேர்தல் அமெரிக்க பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யவும், சில மாநில கவர்னர் பதவிக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதை சந்திக்க ஆளும் ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருந்தாலும் வேட்பாளர்கள் தங்களை இப்போதே தயார்படுத்தி வருகிறார்கள். 10 இந்தியர்கள் போட்டி இந்த தேர்தலில் வேட்பாளராக குதிக்க 10 இந்திய வம்சாவளிகள் தீர்மானித்து இருக்கிறார்கள். இவர்களில் முக்கியமானவர் அமி பெரா ஆவார். தற்போது ஜனநாயக கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் மீண்டும் கலிபோர்னியா 7–வது மாவட்ட தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இவர் தவிர உபேந்திரா ஷிவுகுலா(நியூஜெர்சி), மானான் திரிவேதி(பென்சில்வேனியா), அமர்தீப் கலேகா(விஸ்கான்சின்), சுவாதி டான்டெகர்(லோவா), மஞ்சு கோயல்(இல்லியான்ஸ்) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் கமலா ஹாரீஸ் என்பவர் தெற்கு கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மீண்டும் நிற்கிறார். ஒரே தொகுதியில் மோதல் அதிலும் குறிப்பாக கலிபோர்னியா 17–வது மாவட்ட தொகுதியில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ரோ கன்னா, குடியரசு கட்சி சார்பில் வனிலா மாத்தூர் சிங் ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர், எதிர் கட்சிகளின் வேட்பாளராக மோத இருக்கும் இந்த 2 பேரும் இந்திய வம்சாவளிகள் ஆவர். ரோ கன்னா முன்னாள் துணை மந்திரியாக இருந்தவர். ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தில் தீவிர பங்கு வகித்தவர். வனிலா மாத்தூர் சிங் பிரபல பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கவர்னர் பதவிக்கு கலிபோர்னியா கவர்னர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் நீல் கஷ்காரி நிற்கிறார். இவர் தேர்வு பெறுவதை இந்தியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். காரணம் இவர் வெற்றி பெற்றால் கவர்னராகும் 3–வது இந்தியர் என்ற பெருமை பெறுவார். ஏற்கனவே பாபி ஜிண்டால்(லூசியானா), நிக்கி ஹாலே(தெற்கு கரோலினா) ஆகியோர் பதவி வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. image: category:News Group Category: |
| Posted: 24 Feb 2014 11:22 AM PST சென்னை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான ரூ.153 கோடி மதிப்பிலான பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் நுகர்வோர் கோர்ட்டு திறப்பு இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சென்னையில் 4 கோடியே 56 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் ஆகியவற்றிற்கென புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா 24–ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், சென்னை, சைதாப்பேட்டையில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி ஆணையர் அலுவலக கட்டிடம்; திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், தேனி, சிவகங்கை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், தருமபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 27 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 64,200 மெட்ரிக் டன் கொள்ளவுடன் கட்டப்பட்டுள்ள 48 நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள்; என 27 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். கூட்டுறவுத்துறை கூட்டுறவே நாட்டுயர்வு எனும் முதுமொழிக்கேற்ப, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் உறுதியான மற்றும் ஆற்றல் வாய்ந்த கருவியாக கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில், கூட்டுறவு இயக்கம் பல்வேறு வகையான பணிகளில் பகுதிகளிலும் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வேளாண் கடன், நகைக் கடன், இடுபொருட்கள் விற்பனை, ஆதார விலையில் வேளாண்மை பொருட்கள் கொள்முதல், பொது விநியோகத் திட்டம் போன்ற இன்றியமையாப் பணிகளைக் கூட்டுறவு அமைப்புகள் செயல்படுத்துகின்றன. இவ்வாறு செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களை நவீனப்படுத்தி, மாநிலம் முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவையான சேமிப்புக் கிடங்கு வசதிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. புதிய வங்கிக் கிளைகள் அந்த வகையில், தமிழகம் முழுவதும் 95 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 89 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் கொள்ளவுடன் கட்டப்பட்டுள்ள 840 சேமிப்புக் கிடங்குகள்; வணிக வங்கிகளுக்கு இணையாக, கூட்டுறவு வங்கிகளின் சேவையை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், 4 கோடியே 37 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 15 புதிய கிளைகள்; கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் துல்லியமாக எடை போட, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் பவானி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய மூன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 60 மெட்ரிக் டன் கொள்ளளவில் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கணினி எடைமேடைகள்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்; தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், 2 கோடியே 33 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகங்கள்; என 103 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா 24–ந் தேதியன்று (நேற்று) திறந்து வைத்தார். நகரும் ரேஷன் கடை நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுக்கு 2 குளிர்சாதன வசதியுள்ள வாகனங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை சென்னைக்கு நகர்வு செய்ய ஜி.பி.எஸ். மற்றும் குளிர் சாதன வசதியுடன் கூடிய வாகனங்கள், என மொத்தம் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 குளிர் சாதன வசதியுள்ள வாகனங்கள்; சென்னை மாநகரில் 28 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு நகரும் நியாய விலைக் கடைகள்; கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, கூட்டுறவு வங்கிகளின் 783 கிளைகளில் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், மைய வங்கியியல் கணினி சேவை வசதி; ரூ.153 கோடி மதிப்பு கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளின் 949 கிளைகளில், 6 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள உட்சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு நிழற்படக் கருவிகள்; தனியார் சிறப்பங்காடிகளின் தரத்திற்கு இணையாக, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளின் சிறப்பங்காடிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில், கோயம்புத்தூர் சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைமையகத்தில், 34 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நவீனப்படுத்தப்பட்ட சுயசேவை பிரிவு ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவினால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் மதிப்பு 153 கோடியே 45 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் ஆகும். பணி நியமன ஆணைகள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 40 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 7 ஜீப்புகளை வழங்கும் அடையாளமாக 2 ஜீப் ஓட்டுநர்களுக்கு சாவிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியின்போது உயிரிழந்த 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பட்டியல் எழுத்தர் மற்றும் எடையாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
image: category:Tagging:News Group Category: |
| ராஜீவ் கொலை கைதிகள் 4 பேரை விடுவிக்க சட்டப்படி நடவடிக்கை ஜெயலலிதா பேட்டி Posted: 24 Feb 2014 11:19 AM PST சென்னை, ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 4 பேரை விடுவிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். வேட்பாளர் பட்டியல் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, தனது 66–வது பிறந்தநாளில், 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். பின்னர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:– கூட்டணி போதும் கேள்வி:– ஒரு ஆண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளை நீங்கள் தொடங்கி, தற்போது வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்துள்ளீர்கள். ஆனால், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை கூட்டணி அமைக்க திண்டாடி வருகின்றனவே?. பதில்:– இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்பதைவிட, அவர்களிடமே கருத்து கேளுங்கள். கேள்வி:– வேட்பாளர்கள் பட்டியலை நீங்கள் அறிவித்தபோது, 2 கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடம் உள்ளது என்று தெரிவித்தீர்கள். வேறு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதா?. பதில்:– எங்களுக்கு இந்த கூட்டணி போதும். அவ்வளவுதான். தேர்தல் அறிக்கை கேள்வி:– வரும் பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் 3–வது அணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றனவே?. பதில்:– பொருத்திருந்து பார்ப்போம். தேர்தல் முடிவுகள் வந்தால் தெரியும். கேள்வி:– பாராளுமன்ற தேர்தலில் எதை மையமாக வைத்து பிரசாரம் மேற்கொள்வீர்கள்?. பதில்:– எங்கள் தாரக மந்திரமே அமைதி, வளம், வளர்ச்சி என்பதுதான். மேலும், எதை மையமாக வைத்து பிரசாரம் அமையும் என்ற விவரம், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விரிவாக வெளியிடப்படும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் வெளியிடப்படும். அ.தி.மு.க. குறிக்கோள் கேள்வி:– உங்கள் பிறந்தநாள் செய்தியாக மக்களுக்கு தெரிவிப்பது என்ன?. பதில்:– அமைதி, வளம், வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிய எங்கள் பணிகளுக்கு, மக்கள் துணை நிற்கவேண்டும். இது தமிழக அளவில் மட்டுமல்ல தேசிய அளவிலும். கேள்வி:– தேசிய அளவில் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட 16 கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்துள்ளதே?. அவர்களுக்கு ஆதரவாக பிற மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்வீர்களா?. பதில்:– எனது கவனம் எல்லாம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான். அதுதான் எங்கள் குறிக்கோள். புதிய அரசு அமையும் கேள்வி:– முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மேலும் 4 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளதே?. பதில்:– அவர்கள் கோர்ட்டுக்கு போவார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். சட்டப்படி, தமிழக அரசு இந்த விஷயத்தில், அவர்களை விடுவிக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து வருகிறது. ஆனால் அந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. கேள்வி:– சீமாந்திரா பகுதிக்கு மத்திய அரசு சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. அது போல தமிழகத்திற்கும் நீங்கள் சிறப்பு நிதி கேட்டு வலியுறுத்தி வந்தீர்கள். மீண்டும் வலியுறுத்துவீர்களா?. பதில்:– இந்த அரசிடமா?. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு வெளியே போகின்ற அரசு. புதிய அரசு அமையும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 24 Feb 2014 11:11 AM PST சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 66–வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினார்கள். கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் பிறந்தநாள் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கட்சி அலுவலகத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மதியம் 12.30 மணிக்கு வந்தார். அங்கு அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள், கீழ்க்காணும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். திருவள்ளூர் (தனி)–டாக்டர் பி.வேணுகோபால் பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ்., எம்.பி. அ.தி.மு.க. மருத்துவ அணி செயலாளர், அ.தி.மு.க. மக்களவை குழு செயலாளர். வடசென்னை–டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.எஸ்.சி., வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர். தென்சென்னை–டாக்டர் ஜெ.ஜெயவர்தன் எம்.பி.பி.எஸ். தெற்கு லீத் கேஸ்டில் தெரு, ராஜா அண்ணாமலைபுரம். மத்திய சென்னை–எஸ்.ஆர்.விஜயகுமார் பி.ஏ. பி.எல்., அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர். காஞ்சீபுரம் ஸ்ரீபெரும்புதூர்–கே.என்.ராமச்சந்திரன் பி.எஸ்.சி. எம்.ஏ., காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர். காஞ்சீபுரம் (தனி)–மரகதம் குமரவேல், பி.காம். திருப்போரூர் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச்செயலாளர், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர். அரக்கோணம்–திருத்தணி கோ.அரி, எம்.ஏ. பி.எல்., திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். வேலூர்–பா.செங்குட்டுவன் எம்.ஏ. எம்.எல்., வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர். கிருஷ்ணகிரி–கே.அசோக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர். தருமபுரி–விழுப்புரம் தருமபுரி–பி.எஸ்.மோகன் பி.எஸ்.சி. பி.எல்., தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர். திருவண்ணாமலை–ஆர்.வனரோஜா எம்.ஏ. பி.எட்., அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர். ஆரணி–செஞ்சி சேவல் வெ.ஏழுமலை பி.காம். பி.எல்., விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விழுப்புரம்(தனி)–எஸ்.ராஜேந்திரன் எம்.ஏ., விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர், மாவட்ட ஊராட்சிக்குழு 29–வது வார்டு உறுப்பினர். கள்ளக்குறிச்சி–டாக்டர் க.காமராஜ் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்., விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர். சேலம்–திருப்பூர் சேலம்–வி.பன்னீர்செல்வம் பி.ஏ. பி.எல்., சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளர். நாமக்கல்–பி.ஆர்.சுந்தரம் பி.ஏ. டி.கோ–ஆப்., நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு 4–வது வார்டு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஈரோடு–எஸ்.செல்வக்குமார சின்னையன் பி.எஸ்சி. எம்.ஏ. பி.எல்., ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர். திருப்பூர்–வி.சத்தியபாமா எம்.ஏ., அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர். நீலகிரி (தனி)–டாக்டர் சி.கோபாலகிருஷ்ணன் எம்.ஏ. எம்.பில். எல்.எல்.பி., குன்னூர் நகர மன்ற தலைவர். கோவை–திண்டுக்கல் கோயம்புத்தூர்–ஏ.பி.நாகராஜன் பி.ஏ. பி.எல்., கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளர். பொள்ளாச்சி–சி.மகேந்திரன் எம்.ஏ., திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சி மன்ற தலைவர். திண்டுக்கல்–எம்.உதயகுமார் எம்.ஏ. பி.எல்., நிலக்கோட்டை பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர். கரூர்–டாக்டர் மு.தம்பிதுரை எம்.ஏ. பி.எச்.டி. எம்.பி., அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர், அ.தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் மற்றும் அ.தி.மு.க. மக்களவை குழு தலைவர். திருச்சி–கடலூர் திருச்சிராப்பள்ளி–ப.குமார் பி.எஸ்சி. பி.எல்., எம்.பி., அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர். பெரம்பலூர்–ஆர்.பி.மருதைராஜ் என்ற மருதராஜா எம்.எஸ்.சி., பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர். கடலூர்–ஆ.அருண்மொழிதேவன் பி.எஸ்சி. பி.எல்., கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சிதம்பரம் (தனி)–மா.சந்திரகாசி, எம்.ஏ. பி.எல்.ஐ.எஸ்., பெரம்பலூர் மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். நாகை–தஞ்சாவூர் மயிலாடுதுறை–ஆர்.கே.பாரதிமோகன் டி.டி.சி. அக்ரி, திருப்பனந்தாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். நாகப்பட்டினம் (தனி) – டாக்டர் கே.கோபால் எம்.பி.பி.எஸ். டி.சி.எச். பி.ஜி.டி., திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தஞ்சாவூர் – கு.பரசுராமன், (பி.எஸ்சி.), தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர், நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர். சிவகங்கை–பி.ஆர்.செந்தில்நாதன் பி.எஸ்சி. பி.எல்., சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர். மதுரை–விருதுநகர் மதுரை–இரா.கோபாலகிருஷ்ணன் பி.காம்., மதுரை மாநகராட்சி துணை மேயர். தேனி–ஆர்.பார்த்திபன் பி.ஏ., தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர். விருதுநகர்–டி.ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளர், சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர். ராமநாதபுரம்–அ.அன்வர்ராஜா பி.எஸ்சி. எம்.ஏ., அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், முன்னாள் அமைச்சர். தூத்துக்குடி–ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.ஏ. பி.எல்., தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர். நெல்லை–கன்னியாகுமரி தென்காசி (தனி)–வசந்தி முருகேசன் எம்.ஏ., திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர். திருநெல்வேலி–கே.ஆர்.பி.பிரபாகரன் பி.ஏ. பி.எல்., ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. செயலாளர். கன்னியாகுமரி–டி.ஜாண்தங்கம் பி.ஏ., கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய தலைவர். புதுச்சேரி–எம்.வி.ஓமலிங்கம் டி.சி.இ., காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இரு கம்யூனிஸ்டு கட்சிகள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னர், இவ்விரு கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் பாராளுமன்ற மக்களவை தொகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படுவார்கள். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். வரவேற்பு முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். அதன்பின்னர், அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர் மத்தியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேட்டியளிப்பதற்காக வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| புதுவை அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கம் வாழ்க்கை வரலாறு Posted: 24 Feb 2014 10:59 AM PST பாராளுமன்ற தேர்தல் புதுச்சேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஓமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்தவர். டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் 17–4–1972ல் பிறந்தார். காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். 2006–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோட்டுச்சேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரது தந்தை பாலா வைத்திலிங்கம். முன்னாள் எம்.எல்.ஏ., தாயார் காந்திமதி. ஓமலிங்கத்திற்கு திருமணமாகி சாவித்திரி என்ற மனைவியும், கிஷோர், கந்தவேல் என்ற 2 மகன்களும், பவித்ரா என்ற ஒரு மகளும் உள்ளனர். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |