Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராணுவ ஆட்சி இந்தியாவில் சாத்தியமற்றது : அந்தோணி

Posted:

கொச்சி:இந்தியாவில் ராணுவ ஆட்சி, சாத்தியமற்றது என்றும் அப்படி ஒரு வாய்ப்பு ஏற்படாது என திட்டவட்டமாக மறுக்கிறார். ம்த்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அந்தோணி.சிவில் அரசாங்கம், ஆயுத படைகள் மீது கொள்கை விவகாரங்களில் நம்பிக்கை வைக்கலாம். வாக்குறுதி கொடுக்கலாம் என உறுதியாக கூறினார்.இது குறித்து கடலோர பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில், விருதுகள் வழங்கி பேசும் போது இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: எனக்கு ராணுவ படைகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது.ஆனால் ராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்பு இல்லை.ராணுவம், கடற்படை மற்றும் விமான படையினரின் ...

தேர்தல் அறிக்கையில் 'இலவசங்களை' அள்ளி வீச கட்சிகளுக்கு கடிவாளம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு

Posted:

புதுடில்லி: வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் கட்சிகள், இனி, தேர்தல் அறிக்கைகளில், தங்கள் இஷ்டப்படி, இலவசங்களை அள்ளி விட முடியாது. 'இலவச பொருட்களை வழங்குவதாக கூறும் கட்சிகள், அதற்கான காரணத்தையும், அதற்கு தேவையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்ற விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.சமீபகாலமாக, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது, அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில், இலவச பொருட்களை வழங்குவதாக அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளன. 'டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கால்நடை, தங்கம், லேப்டாப்' என, அரசியல் கட்சிகளால், ...

கருவூலத்தை கைப்பற்ற துடிக்கும் 'கை'யை தடுப்பேன்: பஞ்சாபில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி வீராவேசம்

Posted:

லூதியானா: ''நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தால், அரசின் கருவூலத்தை கைப்பற்ற நினைக்கும், 'கை'யை தடுப்பேன். ஊழல் மலிந்த, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ராணுவ வீரர்களையும் ஏமாற்ற நினைக்கிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.லோக்சபா தேர்தல்: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலம், லூதியானாவில், நேற்று நடந்த, லோக்சபா தேர்தல் பிரசார, பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: குஜராத்துக்கும், பஞ்சாபுக்கும், ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. குஜராத்தின் ...

கருத்து கணிப்புகள் மீது கெஜ்ரிவால் பரபரப்பு புகார்

Posted:

ரோதக்: ''கருத்துக் கணிப்புகள் பின்புலத்தில் பணம் கைமாறுகிறது''. என்று, 'ஆம் ஆத்மி' கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பாக பேசினார்.'ஆம் ஆத்மி' கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை நேற்று துவக்கினார். தன் சொந்த மாநிலமான அரியானா வின், ரோதக்கில் நடந்த, கட்சி பிரசார கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: மோடியோ, ராகுலோ, முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் தயவு இல்லாமல் ஆட்சி நடந்த முன்வருவாரா? 'காஸ்' விலை உயர்வு விவகாரம் குறித்து, நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலும் தங்கள் நிலையை வெளிப்படுத்த கோரி ...

பா.ஜ.,வின் ரத்த அரசியல்: ராகுல் ஆவேச குற்றச்சாட்டு

Posted:

டேராடூன்: ''மதங்களுக்கு இடையிலும், ஜாதிகளுக்கு இடையிலும், மோதல்களை உருவாக்குவதன் மூலம், பா.ஜ., ரத்த அரசியல் நடத்துகிறது,'' என, காங்., துணை தலைவர் ராகுல் பேசினார்.உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடந்த, காங்., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் துணை தலைவர், ராகுல் பேசியதாவது: ஊழலுக்கு எதிரான மசோதாக்களை, பார்லிமென்டில் நிறைவேற்ற, காங்., கட்சி, பெரும் முயற்சி செய்தது. ஆனால், பா.ஜ., அந்த முயற்சிகளை முறியடித்து விட்டது. ஊழலை ஒழிக்கப் போவதாக கூறி வரும், நரேந்திர மோடி, தான் ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், 'லோக்ஆயுக்தா' கோர்ட்டை ...

பா.ம.க., திட்டத்தை முறியடிக்க அ.தி.மு.க., தீவிரம்: சமுதாய தலைவர்களை கவர புதிய முயற்சி

Posted:

லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சமுதாய அமைப்புகளை எல்லாம், தங்களுக்கு ஆதரவாக திருப்பும் பணியில், அ.தி.மு.க., ஈடுபட்டுள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஏற்படுத்திய, சமுதாய கூட்டணியில் உள்ள தலைவர்களையும், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக இழுக்கும் பணியில், அமைச்சர்கள் களம் இறங்கியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, லோக்சபா தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இக்கனவு நிறைவேற, 40 தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் ...

சிங்கப்பூர் பறந்தார் விஜயகாந்த்: கூட்டணி முடிவுடன் திரும்புவாரா?

Posted:

மருத்துவப் பரிசோதனைக்காகவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கவும், மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றார், விஜயகாந்த்.கால் வீக்கம் ஏற்படுவதால், நீண்ட நேரம் நின்றபடி பிரசாரம் செய்ய முடியாமல், தே.மு.தி.க., தலைவர், விஜய காந்த் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, நீண்ட நேரம் படிக்கும்போது, கண்களில் நீர் கசிவு, மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் லேசான அடைப்பு, தோல் அரிப்பு பிரச்னை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அவருக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு தொடர்ச்சியாக, பல நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியது ...

மோடிக்கு போட்டியாக டீக்கடைகளை திறந்த லாலு

Posted:

பாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியின், டீக்கடை விவாதங்களுக்கு போட்டியாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத்தும், பீகாரின் பல நகரங்களில், டீக்கடைகளை துவக்கியுள்ளார்.நரேந்திர மோடி, துவக்கத்தில், டீக்கடை வைத்திருந்தார். அதை, காங்கிரஸ் ஏளனமாக கூறியதால், அதையே தங்கள் பிரசார ஆயுதமாக, பா.ஜ., மாற்றியது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான டீக்கடைகள், நரேந்திர மோடி பெயரில் துவக்கப்பட்டுள்ளன. 'சாய் பே சர்ச்சா' என்ற பெயரில், டீக்கடை விவாதங்களை, மோடி நடத்தி வருகிறார். இதனால், அவருக்கு வரவேற்பு அதிகரித்து ...

'வாட்ஸ்அப்' கண்டுபிடிப்பாளரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை

Posted:

சான்பிரான்சிஸ்கோ: பிரபல, 'வாட்ஸ்அப்' தொழில்நுட்பத்தால், 1,200 கோடி ரூபாய்க்கு அதிபதியான, ஜான் கூமின், கடந்த கால வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது.உலகம் முழுவதும், மொபைல் போன் பயன்பாட்டாளர்களிடையே, 'வாட்ஸ்அப்' மென்பொருள் புகழ் பெற்று விளங்குகிறது. தங்கள் கையில் உள்ள, மொபைல் போன் மூலம், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களுடன், குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை எளிதாக, குறைந்த கட்டணத்தில் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம், இந்த மென்பொருளை, 'பேஸ்புக்' சமூக வலைதளம், 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியதுடன், ஜான் கூமை, தன்னுடைய இயக்குனர்கள் குழுவில் ஒருவராக ...

காஸ் சிலிண்டர் டீலர்கள் நாளை முதல் 'ஸ்டிரைக்': தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted:

மதுரை: 'காஸ் சிலிண்டர் டீலர்களின் பல கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக', காஸ் டீலர்கள் அறிவித்தனர். இதனால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.மதுரையில் நேற்று, அகில இந்திய எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய எல்.பி.ஜி., வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில், தென்மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு துணைத் தலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது: காஸ் சிலிண்டர்களில் வீட்டு உபயோக மானிய விலை சிலிண்டர், மானியம் இல்லாத சிலிண்டர், வர்த்தக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™