Tamil News | Online Tamil News |
- அதிக 'சீட்' கேட்டு உதிரி கட்சிகள் தொடர்ந்து பேரம்: தமிழகத்தில் அணிகள் இறுதியாவதில் குழப்பம் நீடிப்பு
- ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்படும் சீனாவுக்கு மோடி எச்சரிக்கை
- ஓசையின்றி உருவாகும் புதிய பறவை சரணாலயங்கள்: நெரிசல், மாசு பிரச்னைகளுக்கு இடையே நடக்கும் அதிசயம்
- எந்த பக்கம் 'சீட்' அதிகமோ அங்கு போகலாம்? தி.மு.க., - பா.ஜ.,விடம் மாறி மாறி தே.மு.தி.க., கூட்டணி பேச்சு
- நூற்றாண்டை கடந்து நினைவில் நிற்கும் 'போட் மெயில்'
- தொண்டர்கள் மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய காங்., திட்டம்
- மூன்றாவது அணி ஆலோசனை கூட்டம்: தமிழக முதல்வர் டில்லி வருவாரா?
- மோடியின் டீ பிரசாரத்தை முறியடிக்க 'ராகுல் பால் பூத்' திட்டம் துவக்கம்
- அரசு போக்குவரத்து கழகங்களில் 40 சதவீதம் பேர் நோயாளிகள்
- தொங்கு பாராளுமன்றமா? அதற்கு இடமே இல்லை என்கிறார் அத்வானி
| அதிக 'சீட்' கேட்டு உதிரி கட்சிகள் தொடர்ந்து பேரம்: தமிழகத்தில் அணிகள் இறுதியாவதில் குழப்பம் நீடிப்பு Posted: இம்மாத இறுதியில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தமிழகத்தில் இன்னும் கூட்டணிகள் முடிவாகவில்லை. எதனுடன் எது கூட்டு சேரப் போகிறது என்பதை கணிக்க முடியாத, குழப்ப நிலையே நீடிக்கிறது. அதிக, 'சீட்' கேட்டு உதிரி கட்சிகள் பேரம் பேசுவதால், கூட்டணியை முடிவு செய்ய முடியாமல், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் - பா.ஜ., போன்ற பிரதான கட்சிகள் திணறுகின்றன.லோக்சபா தேர்தலுக்கான, கூட்டணி பேச்சு வார்த்தைகள், தமிழகத்தில், கடந்த இரண்டு மாதமாக நடந்து வருகின்றன. ஆனாலும், அ.தி.மு.க., அணியை தவிர்த்து, வேறு எந்த கூட்டணியும் முழுமை பெறவில்லை. தி.மு.க., - காங்கிரஸ் ... |
| ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்படும் சீனாவுக்கு மோடி எச்சரிக்கை Posted: பஷிகாட் (அருணாச்சல்): ''சர்வதேச நாடுகள் அனைத்தும், வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும்போது, சீனா மட்டும், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்படுவது சரியல்ல. இந்த எண்ணத்தை, சீனா, கைவிட வேண்டும். இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட, விட்டுத் தர மாட்டோம்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, நாடு முழுவதும், தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஒரே நாளில் மட்டும், அருணாச்சல பிரதேசம், அசாம், திரிபுரா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களில், சூறாவளி பிரசாரம் ... |
| ஓசையின்றி உருவாகும் புதிய பறவை சரணாலயங்கள்: நெரிசல், மாசு பிரச்னைகளுக்கு இடையே நடக்கும் அதிசயம் Posted: சமீபத்தில் நடந்த ஊர்ப்புறப் பறவைகள் (ஜி.பி.பி.சி.,) கணக்கெடுப்பில், சென்னையில் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கிடையே கவனிக்கப்படாத சில பகுதிகள், பறவைகளை ஈர்க்கும் நீர்நிலைகளாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும், ஜி.பி.பி.சி., எனப்படும், 'ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு', கடந்த, 14ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த கணக்கெடுப்பில், தனி நபர்கள், ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர். பறவைகள் கணக்கெடுப்பு குறித்த, 801 பட்டியல்களை சமர்ப்பித்து, தமிழகம் தேசிய ... |
| Posted: எந்தக் கட்சியால், அதிக லாபம் கிடைக்கிறதோ, அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில், தி.மு.க., - பா.ஜ., என, இரு கட்சிகளிடம், மாறி மாறி கூட்டணி பேச்சு நடத்தி வருகிறார், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த். இதனால், அவரது கட்சி நிர்வாகிகள், கடும் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசியல் வரலாற்றில், எந்த கட்சிக்கும் இல்லாத அளவுக்கு, லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி வைக்க, தி.மு.க., - -பா.ஜ., கட்சிகள் பெரிதும் விரும்புகின்றன. இதுதொடர்பாக, தூதர்கள் மூலம் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து ... |
| நூற்றாண்டை கடந்து நினைவில் நிற்கும் 'போட் மெயில்' Posted: கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக, கடல் கடந்து செல்வது, தமிழர்களுக்கு புதிதல்ல. 'திரை கடல் ஓடி, திரவியம் தேடு...' என்ற பாடல் நமக்கு ஓராயிரம் நினைவுகளை தரும். அந்த வகையில், சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன், ரயில் வசதி இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நல்ல தொடர்பு இருந்த காலம் அது.இன்றைய காலகட்டத்தில், நதி நீர் பிரச்னை உட்பட, பல்வேறு விஷயங்களுக்காக, அண்டை மாநிலங்களுடன், தமிழகத்திற்கு எப்போதும் சச்சரவு தான் இருந்து ... |
| தொண்டர்கள் மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய காங்., திட்டம் Posted: புதுடில்லி: லோக்சபா தொகுதி வேட்பாளர்களை, அடிமட்ட தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், திட்டமிட்டுள்ளார்.பார்லிமென்ட் நிறைவு பெற்று விட்டதால், விரைவில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. பெரும்பாலான கட்சிகள், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியும், இந்த பணியை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக, டில்லி லோக்சபா தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்த, அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு, அதன் படி, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, காங்கிரஸ் கட்சி தேர்வு குழு ... |
| மூன்றாவது அணி ஆலோசனை கூட்டம்: தமிழக முதல்வர் டில்லி வருவாரா? Posted: மூன்றாவது அணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், அடுத்த வாரம், டில்லியில் நடக்கவுள்ளது. இதில், தமிழக முதல்வர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.மீண்டும்: காங்., - பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, பிற முக்கிய கட்சிகள் எல்லாம், ஒன்றாக இணைந்து, புதிய அணியாகச் செயல்படுவதில், ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே, இரண்டு முறை, இந்த கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன. இந்நிலையில், வரும், 25ம் தேதி, இந்த கட்சிகளின் தலைவர்கள், மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளனர். மா.கம்யூ., - இ.கம்யூ., பார்வர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம், ... |
| மோடியின் டீ பிரசாரத்தை முறியடிக்க 'ராகுல் பால் பூத்' திட்டம் துவக்கம் Posted: லக்னோ: நரேந்திர மோடியின், டீ பிரசாரத்துக்கு போட்டியாக, உ.பி.,யில், 'ராகுல் பால் பூத்'களை, அம்மாநில காங்கிரசார் துவக்கியுள்ளனர்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, இளமை காலத்தில், டீ வியாபாரம் செய்ததால், காங்., கட்சியினர், அவரை கிண்டலடிக்கும் விதமாக, 'டீ வியாபாரி' என, விமர்சித்தனர். இது, மோடிக்கு சாதகமாக அமைந்து விட்டது. பா.ஜ.,வினர், நாடு முழுவதும், 'மோடி டீக்கடை' என்ற பெயரில் கடைகளை அமைத்து, பொதுமக்களுக்கு, இலவசமாக டீ வழங்கி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள டீக்கடை வியாபாரிகளுடன், 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக, மோடி, கலந்துரையாடும் ... |
| அரசு போக்குவரத்து கழகங்களில் 40 சதவீதம் பேர் நோயாளிகள் Posted: முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்கள், கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட, ரத்த தான முகாம் சோதனையில், 40 சதவீத ஊழியர்கள் நோய்களின் பிடியில் சிக்கி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.1.32 லட்சம் பேர்: போக்குவரத்துக் கழகங்களின், பத்து கோட்டம், 21 மண்டலம், 280க்கும் மேற்பட்ட டெப்போக்க மூலம், 22,165 பஸ் இயக்கப்படுகிறது. பஸ்களில் டிரைவர், கண்டக்டர்கள், டெக்னிசியன், அதிகாரி, அலுவலக பணியாளர், தொழிலாளர் என, மொத்தம், 1.32 லட்சம் பேர் பணி புரிகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின், 66வது பிறந்த நாளை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்களின் ... |
| தொங்கு பாராளுமன்றமா? அதற்கு இடமே இல்லை என்கிறார் அத்வானி Posted: புதுடில்லி:லோக்சபா தேர்தல் நடந்தபின்னர் தொங்கு பார்லிமென்ட் அமையுமோ? என்ற கேள்விக்கே இடமில்லை என பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி . டில்லியில் பா.ஜ., தலைமயைகத்தி்ல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,லோக்சபா தேர்தலில் பா.ஜ.க., பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று தனிப்பெரும் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் அதன் விளைவாக காங்கிரஸ், தனது மோசமான நிர்வாகம் மற்றும் ஊழலால் காங்கிரஸ் வெளியேற்றப்படும். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை இப்படி ஒரு மோசமான ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 23,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |