Tamil News | Online Tamil News |
- கடைசி நாள் நிகழ்ச்சியுடன் 15வது பார்லிமென்ட் முடிவு: புது லோக்சபாவிலாவது எம்.பி.,க்கள் செயல்படுவரா?
- கடைசி கூட்டத்தொடர்: பரஸ்பர புகழாரம்
- டில்லியை நோக்கி ராணுவம் நகர்ந்த விவகாரம்: இரண்டு ஆண்டுக்கு பின் மீண்டும் எழுந்தது சர்ச்சை
- 'டிவி' நேரடி விவாத நிகழ்ச்சியில் மோதல்: அடித்து கொண்ட 'ஆம் ஆத்மி' தலைவர்கள்
- ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பதா? 'ஆம் ஆத்மி' தலைவர் கெஜ்ரிவால் கொதிப்பு
- காங்கிரசுடன் கூட்டணி வேண்டுமா? தி.மு.க., நேர்காணலில் மாறுபட்ட கருத்து
- ஆந்திராவில் பத்து தொகுதி கடன் வாங்கலாமா? பா.ம.க., அலம்பலால் பா.ஜ., அலறல்
- நன்றி மறந்துவிட்டனரே...: அழகிரி கடும் வருத்தம்
- செயல்பாட்டுக்கு வந்தது அரசு பல்நோக்கு மருத்துவமனை: உயர் சிகிச்சைக்கு மட்டும் அனுமதி: சளி, காய்ச்சலுக்கு அல்ல
- அமெரிக்க கோர்ட்டில் வழக்கு : ரத்து செய்ய சோனியா கோரிக்கை
| கடைசி நாள் நிகழ்ச்சியுடன் 15வது பார்லிமென்ட் முடிவு: புது லோக்சபாவிலாவது எம்.பி.,க்கள் செயல்படுவரா? Posted: புதுடில்லி: நடப்பு, 15வது லோக்சபா, நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த லோக்சபாவின், கடைசி கூட்டத் தொடரான, குளிர்காலத் தொடர் முழுவதும், எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களின் வரிப்பணம் வீணாகப் போனது. இரண்டொரு மாதங்களில் நடக்கவுள்ள தேர்தலுக்கு பின், புதிதாக அமைய உள்ள, 16வது லோக்சபாவாவது, மக்களுக்கு பயனுள்ள வகையில், ஆரோக்கியமான விவாதங்களுடன் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் நிலவுகிறது.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், பொதுத் தேர்தலை அடுத்து, லோக்சபாக்கள் உருவாகின்றன. நடப்பு, 15வது லோக்சபா, 2009, ஜூன், 1ல் அமைந்தது; அத்துடன், பிரதமர், ... |
| கடைசி கூட்டத்தொடர்: பரஸ்பர புகழாரம் Posted: புதுடில்லி: 15வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. இதில் எம்.பி.,க்கள் பல ரகளைகளுக்குப்பின் கட்சிப்பாகுபாடின்றி ஒருவருக்கொருவர் புகழாரம் சூட்டிக்கொண்டனர்.பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: ''லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அம்சங்கள், மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் பலவீனத்தை பிரதிபலிக்கும் வகையில், எதிர் வரும் லோக்சபா தேர்தல் அமையும்,'' என, நம்பிக்கை தெரிவித்தார். பிரதமரைத் தொடர்ந்து பேசிய, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ., லோக்சபா தலைவருமான, சுஷ்மா சுவராஜை வெகுவாக ... |
| டில்லியை நோக்கி ராணுவம் நகர்ந்த விவகாரம்: இரண்டு ஆண்டுக்கு பின் மீண்டும் எழுந்தது சர்ச்சை Posted: புதுடில்லி: கடந்த, 2012ல், டில்லியை நோக்கி, ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் நகர்ந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மையே இதற்கு காரணம்' என, முன்னாள் ராணுவ அதிகாரி கூறியதை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மறுத்துள்ளார்.கடந்த, 2012ல், வி.கே.சிங், ராணுவ தளபதியாக இருந்தார். அப்போது, அவரின் வயது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, அவர் ஓய்வுபெறும் தேதியில் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக, வி.கே.சிங்கிற்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.ராணுவப் புரட்சி: ... |
| 'டிவி' நேரடி விவாத நிகழ்ச்சியில் மோதல்: அடித்து கொண்ட 'ஆம் ஆத்மி' தலைவர்கள் Posted: புதுடில்லி: 'டிவி' விவாதத்தில் பங்கேற்ற, 'ஆம் ஆத்மி' நிர்வாகியும், அந்த கட்சியிலிருந்து விலகிய பெண் ஒருவரும், காரசாரமாக பேசி, கடைசியில், கைகலப்பில் ஈடுபட்டனர்.வட மாநிலங்களில் பிரபலமான, தனியார், 'டிவி' ஒன்றில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான, இஜாஸ் கான் என்ற ஆண் நபரும், டீனா சர்மா என்ற பெண்ணும் பங்கேற்றனர்.மீண்டும் பா.ஜ.,வில்: பாரதிய ஜனதாவில் இருந்து, சில மாதங்களுக்கு முன் விலகி, ஆம் ஆத்மியில் சேர்ந்திருந்த டீனா சர்மா, சமீபத்தில், அந்த கட்சியிலிருந்து விலகி, மீண்டும், பா.ஜ.,வில் இணைந்துள்ளார். ஆம் ஆத்மி தலைவர், ... |
| ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பதா? 'ஆம் ஆத்மி' தலைவர் கெஜ்ரிவால் கொதிப்பு Posted: புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுவிக்கும், தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ள, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ''இது, தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்,'' என, கூறியுள்ளார்.டில்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடிக்கு, கடிதம் எழுதியுள்ளேன். அதில், இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக, மோசடி செய்துள்ள, 'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானி விஷயத்தில், வாய் திறக்க மறுப்பதேன் என, கேள்வி ... |
| காங்கிரசுடன் கூட்டணி வேண்டுமா? தி.மு.க., நேர்காணலில் மாறுபட்ட கருத்து Posted: 'காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம்; தே.மு.தி.க., வந்தால் சேர்த்துக் கொள்வோம். இப்போது, கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உடனேயே தேர்தலை சந்திக்கலாம்' என, தி.மு.க.,வின் இரண்டாவது நாள், நேர்காணலின் போது, கட்சியினர் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.அறிவாலயத்தில்...: லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட, விருப்பமனு அளித்தவர்களிடம், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் அன்பழகன் மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர், நேர்காணல் நடத்தி வருகின்றனர். தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் ... |
| ஆந்திராவில் பத்து தொகுதி கடன் வாங்கலாமா? பா.ம.க., அலம்பலால் பா.ஜ., அலறல் Posted: 'ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கினால், கூட்டணிக்கு வர மாட்டோம்; தனித்து நின்று ஆறு தொகுதிகளில், எங்களால் வெற்றி பெற முடியும்; நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும், தே.மு.தி.க.,வால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாசின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அன்புமணி, பா.ஜ., தலைவர்களிடம் சவால் விட்டுள்ளார்.அன்புமணியின் இந்த ஆவேசப் பேச்சால், பா.ஜ., கூட்டணியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வின் இந்த கோபத்துக்கு, தே.மு.தி.க.,வுடன் நடந்த பேச்சுவார்த்தையும், அக்கட்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதுமே காரணம் என, ... |
| நன்றி மறந்துவிட்டனரே...: அழகிரி கடும் வருத்தம் Posted: ''என்னால், பதவிகள் பெற்று அனுபவிக்கும் பலர், நன்றி கெட்டவர்களாக மாறிவிட்டனர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, தி.மு.க., அமைப்புச் செயலருமான, மு.க.அழகிரி பேசினார்.மதுரையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது: தற்போது, என்னால் பலர், கட்சிப் பதவிகளை இழந்து விட்டனர்; பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நன்றி மறக்கக் கூடாது. தற்போது, கட்சிப் பதவிகளில் உள்ள பலர், எதைப் பற்றியும் கவலைப்படாமல், என் மீதுள்ள விசுவாசத்தால், என்னுடன் இருக்கிறார்கள்; அவர்களுக்கு நன்றி. ஆனால், என்னால், பதவிகள் பெற்று அனுபவித்த பலர், ... |
| Posted: சென்னை: சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை, நேற்று முதல், செயல்பாட்டுக்கு வந்தது. 'சளி, காய்ச்சல், தலைவலி என, பொதுமக்கள் இங்கு வந்து அலைய வேண்டாம்; மருத்துவமனைகளில் இருந்து, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என, அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தி.மு.க., ஆட்சியின் போது, புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த கட்டடம், ஏழை மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், டில்லி, 'எய்ம்ஸ்' ... |
| அமெரிக்க கோர்ட்டில் வழக்கு : ரத்து செய்ய சோனியா கோரிக்கை Posted: புதுடில்லி: சீக்கியர்களுக்கான மனித உரிமை அமைப்பு, அமெரிக்காவில், தன் மீது தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா மனு தாக்கல் செய்துள்ளார்.நியூயார்க்கில் உள்ள, சீக்கியர்களுக்கான மனித உரிமை அமைப்பும், 1984ல், டில்லியில் சீக்கியர்கள் படுகொலைகளில் பாதிக்கப்பட்ட இருவரும், சோனியாவுக்கு எதிராக, நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து, பதிலளிக்கும்படி, சோனியாவுக்கு, நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட், "சம்மன்' அனுப்பியது. இதற்கு பதிலளித்து, சோனியா சார்பில், அவரது வழக்கறிஞர் தாக்கல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |