Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மத்திய அரசைக் கண்டித்து பிகாரில் மார்ச் 2ஆம் தேதி "பந்த்'
- வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது
- சீன எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவை சந்தித்தார் ஒபாமா
- பொய்யாமணி ஊராட்சியில் விளையாட்டுப் போட்டி
- நங்கவரம், மருதூர் பேரூராட்சிகளில் சாலைப் பணிக்கான பூமி பூஜை
- வெள்ளியணையில் ரூ. 72 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
- பாலியல் குற்றத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்
- "மன்னார்குடி பகுதியில் மீத்தேன் வாயு ஆய்வுத் திட்டத்தை நிறுத்த வேண்டும்'
- குடந்தையில் குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
- பாட்டாளி மக்கள் கட்சியின்கும்பகோணம் நகரபுதிய நிர்வாகிகள்
- போலீஸாராக நடித்து பெண்ணிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு
- ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு
- புதுகையில் மதுக்கூட உரிமையாளர் கொலை
- பொன்னமராவதியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
- புதுகை மாவட்டத்தில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு
- கைக்குறிச்சி கல்லூரியில் உயிரியல் தாவரக் கண்காட்சி
- அறந்தாங்கியில் அதிமுக பொதுக்கூட்டம்
- புதுகையில் மதுக்கூட உரிமையாளர் கொலை
- அதிமுகவினர் கொண்டாட்டம்
- நாகையில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- காரைக்காலில் மலிவு விலை உணவகம் திறப்பு
- வைக்கோல் விற்பனை மையம் திறப்பு
- கோயில் நகரத் திட்டத்துக்கு கூடுதல் நிதி
- குடவாசல், நீடாமங்கலத்தில் விழிப்புணர்வு பேரணி
- இந்திய அமைதிப் படை மீது இலங்கையில் புகார்
- அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் போராட்டம்
- குடிநீர்த் தொட்டியை சரியாக சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோகம்
- "பயிற்சியாளர் நியமனம் குறித்து ஆன்டி ஃபிளவரிடம் பேசவில்லை'
- 7.2 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் குளித்தலை நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
- 9 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை
- பிப். 25-ல் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்ய முடிவு
- பிழந்த காங்கிரஸ்... உதித்த தெலங்கானா!
- முன்னாள் படைவீரர்கள் உண்ணாவிரதம்
- "15 வயதிலேயே துணிச்சலுடன் சிறை சென்றவர் தில்லையாடி வள்ளியம்மை'
- குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
- பொதுவிநியோகத் திட்ட துணை பதிவாளர் பொறுப்பேற்பு
- "தொழில்நுட்ப வளர்ச்சிகள் நொடிப்பொழுதில் மாறிவருகின்றன'
- எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
- திருவானைக்காவில்பேருந்து - லாரி மோதல்: 10 பேர் காயம்
- சிறப்பு மருத்துவ முகாம்: 361 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை
- தச்சன்குறிச்சியில் தாய் - சேய் நல மருத்துவ முகாம்
- தேர்தல் 2014: காமெடி தர்பார்!
- பிப். 26, 27-ல் தேசிய ரோபோ தயாரிப்பு போட்டி
- பாஜக - தேமுதிக கூட்டணி உறுதி?
- ராமேசுவரம் தீர்த்த நீரை தெளிக்க ஆட்டோமைசர் இயந்திரம்: என்ஐடி குழு பரிந்துரை
- ஆறு முக்கிய துறைகளில் 217 முக்கிய திட்டங்கள்: தென் மாவட்டங்களில் முதலீடு பெருக வாய்ப்பு
- 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன?
- "முதல்வரிடம் இதனை எதிர்பார்க்கவில்லை'
- இன்று 498 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
- ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்து விரைவில் மிகப்பெரிய போராட்டம்: ஞானதேசிகன்
- மாற்றம் என்பது அவசியம்
- வரலாற்றில் வாழும் வள்ளியம்மை
- அவசரமும் தாமதமும்
- தொண்டர்களுக்கு எப்போதும் துணை நிற்பேன்
- இலங்கை போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை: ஜெனீவா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டும்
- மக்களவைத் தேர்தல்: அதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு
- ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலைக்குத் தடை: தமிழர்களை மத்திய அரசு பழிவாங்குகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு
- தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
- தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும்
- இலவச தேவார பாடல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா
- காலபைரவருக்குஇன்று தேய்பிறை அஷ்டமி விழா
- மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு
- தஞ்சை மாநகராட்சியில் முதல் மாமன்றக் கூட்டம்
- மாநகர மேம்பாட்டுக்குரூ. 80 கோடி: மேயர் பேட்டி
- பெருவுடையார் கோவிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைப்பது குறித்து ஆலோசனை
- குடந்தையில் போலியோ விழிப்புணர்வு பிரசாரம்
- நகர்மன்றக் கூட்டம்: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி இயக்க வலியுறுத்தல்
- விஜயகாந்துக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
- வீடு புகுந்து நகைகள் திருட்டு
- "தேர்தல் நடத்தை விதிமுறைகளில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்
- விஷம் குடித்த தொழிலாளி சாவு
- நீதிமன்ற புறக்கணிப்பு இனி இருக்கக் கூடாது
- இழப்பீடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி
- மரத்திலிருந்து விழுந்து காயமடைந்த சிறுவன் சாவு
- விலையில்லாப் பொருள்கள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- திருப்பத்தூர் தீ விபத்து: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 பேர் உயிரிழப்பு
- நீடாமங்கலம் அருகே குடிசை வீடு தீக்கிரை
- பிப்ரவரி 22 மின் தடை
- கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
- சம்பந்தனூர், கொழப்பலூரில் இன்று இலவச மருத்துவ முகாம்
- தேர்தல் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
- மணல் கடத்தியதாக 4 பேர் கைது
- காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.81 லட்சத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு
- வறட்சி பாதிப்புகளைத் தடுக்க வேண்டும்
- முனுகப்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம்
- சக்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திருவலம் சாந்தா சுவாமிகள் பங்கேற்பு
- பூச்சி மருந்து குடித்து இளைஞர் சாவு
- கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை கருத்தரங்கு
- பாஜகவினர் தேநீருடன் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு தொடக்கம்
- சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
- சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
- மணல் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்
- நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம்
- மண் சரிந்து தொழிலாளி சாவு
- கோவில் இடத்தில் குடியிருப்போர் பெயர் மாற்றம் செய்துகொள்ள அழைப்பு
- 97 பேருக்கு கண் பரிசோதனை
- குப்பை அள்ள மாதம் ரூ.30 லட்சம் செலவு: நகர்மன்றக் கூட்டத்தில் திமுக புகார்
- இரும்புத்தாது வெட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது
- இன்று சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்
| மத்திய அரசைக் கண்டித்து பிகாரில் மார்ச் 2ஆம் தேதி "பந்த்' Posted: 21 Feb 2014 01:10 PM PST பின்தங்கியுள்ள பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 2ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். |
| வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் ஒருவர் கைது Posted: 21 Feb 2014 01:09 PM PST கரூர் அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| சீன எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவை சந்தித்தார் ஒபாமா Posted: 21 Feb 2014 01:09 PM PST இருதரப்பு உறவிலும் பாதிப்பு ஏற்படும் என்ற சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை சந்தித்தார். |
| பொய்யாமணி ஊராட்சியில் விளையாட்டுப் போட்டி Posted: 21 Feb 2014 01:08 PM PST கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொய்யாமணி ஊராட்சியில், கிராமப்புற இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நங்கவரம், மருதூர் பேரூராட்சிகளில் சாலைப் பணிக்கான பூமி பூஜை Posted: 21 Feb 2014 01:08 PM PST கரூர் மாவட்டம், நங்கவரம் மற்றும் மருதூர் பேரூராட்சியில் ரூ. 78 லட்சத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்ள பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வெள்ளியணையில் ரூ. 72 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு Posted: 21 Feb 2014 01:08 PM PST கரூர் மாவட்டம், வெள்ளியணையில் தரம் உயர்த்தப்பட்டு ரூ. 72 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| பாலியல் குற்றத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் Posted: 21 Feb 2014 01:06 PM PST பாலியல் குற்றத்தை விசாரிப்பதற்காகச் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் என். சுப்பையன். |
| "மன்னார்குடி பகுதியில் மீத்தேன் வாயு ஆய்வுத் திட்டத்தை நிறுத்த வேண்டும்' Posted: 21 Feb 2014 01:06 PM PST காவிரி டெல்டா பிராந்தியத்தில் மன்னார்குடி பகுதியில் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு ஆய்வுத் திட்டத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். |
| குடந்தையில் குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 21 Feb 2014 01:06 PM PST பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பாட்டாளி மக்கள் கட்சியின்கும்பகோணம் நகரபுதிய நிர்வாகிகள் Posted: 21 Feb 2014 01:05 PM PST பாட்டாளி மக்கள் கட்சியின் கும்பகோணம் நகரத்துக்கான புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். |
| போலீஸாராக நடித்து பெண்ணிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு Posted: 21 Feb 2014 01:05 PM PST தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள சிங்கபெருமாள் குளம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி (65). இவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அருகிலுள்ள மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். |
| ரோட்ராக்ட் நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 21 Feb 2014 01:05 PM PST அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியின் 2013 - 14-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் மதுக்கூட உரிமையாளர் கொலை Posted: 21 Feb 2014 01:05 PM PST புதுக்கோட்டையில் கத்திக்குத்து காயங்களுடன் மதுக்கூட உரிமையாளரின் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. |
| பொன்னமராவதியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் Posted: 21 Feb 2014 01:04 PM PST பொன்னமராவதியில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் சி. முத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற வாதம்: |
| புதுகை மாவட்டத்தில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு Posted: 21 Feb 2014 01:04 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட ஒரு சுகாதார நிலையம் உள்பட மொத்தம் 6 சுகாதார |
| கைக்குறிச்சி கல்லூரியில் உயிரியல் தாவரக் கண்காட்சி Posted: 21 Feb 2014 01:04 PM PST கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உயிரியல் தாவரக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| அறந்தாங்கியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 21 Feb 2014 01:04 PM PST அறந்தாங்கி தொகுதி அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் மதுக்கூட உரிமையாளர் கொலை Posted: 21 Feb 2014 01:03 PM PST புதுக்கோட்டையில் கத்திக்குத்து காயங்களுடன் மதுக்கூட உரிமையாளரின் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. |
| Posted: 21 Feb 2014 01:02 PM PST வலங்கைமான் வட்டம், ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அதற்கு பரிந்துரை செய்த உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை |
| நாகையில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 21 Feb 2014 01:02 PM PST திடீர் பணியிட மாற்ற நடவடிக்கையைக் கண்டித்து நீதித் துறை ஊழியர் சங்கம் சார்பில், நாகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| காரைக்காலில் மலிவு விலை உணவகம் திறப்பு Posted: 21 Feb 2014 01:02 PM PST காரைக்காலில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மலிவு விலை என்.ஆர். உணவகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| வைக்கோல் விற்பனை மையம் திறப்பு Posted: 21 Feb 2014 01:02 PM PST வேப்பஞ்சேரியில் உலர் தீவன (வைக்கோல்) விற்பனை நிலையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்தார் திருவாரூர் ஆட்சியர் சி. நடராசன். |
| கோயில் நகரத் திட்டத்துக்கு கூடுதல் நிதி Posted: 21 Feb 2014 01:01 PM PST திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்துக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் என புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்தார். |
| குடவாசல், நீடாமங்கலத்தில் விழிப்புணர்வு பேரணி Posted: 21 Feb 2014 01:01 PM PST திருவாரூர் மாவட்டம், குடவாசலில் வெள்ளிக்கிழமை குடிநீர்ப் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| இந்திய அமைதிப் படை மீது இலங்கையில் புகார் Posted: 21 Feb 2014 01:01 PM PST இலங்கையில் மர்மமான முறையில் பலர் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வரும் குழுவிடம், இந்திய அமைதிப் படையினரின் செயல்பாடு குறித்தும் புகார் வந்துள்ளதாக குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
| அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் போராட்டம் Posted: 21 Feb 2014 01:00 PM PST முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்கத் தடை விதித்ததைக் கண்டித்து, கரூரில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு |
| குடிநீர்த் தொட்டியை சரியாக சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோகம் Posted: 21 Feb 2014 01:00 PM PST குடிநீர்த் தொட்டியை சரியாக சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோகிப்பதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. |
| "பயிற்சியாளர் நியமனம் குறித்து ஆன்டி ஃபிளவரிடம் பேசவில்லை' Posted: 21 Feb 2014 01:00 PM PST இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நியமனம் குறித்து ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆன்டி ஃபிளவரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை, பிசிசிஐ செயலாளர் சஞ்சய் படேல் மறுத்துள்ளார். |
| 7.2 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் குளித்தலை நீதிமன்றத்தில் ஒருவர் சரண் Posted: 21 Feb 2014 01:00 PM PST லாலாபேட்டை அருகே கோவை நகை வியாபாரிகளிடம் 7.2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குளித்தலை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒருவர் சரணடைந்தார். |
| 9 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை Posted: 21 Feb 2014 01:00 PM PST கரூர் நகராட்சிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த 9 உறுப்பினர்கள் மீது நடவடிக்கைக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| பிப். 25-ல் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்ய முடிவு Posted: 21 Feb 2014 12:59 PM PST 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 25 ஆம் தேதி குளித்தலை பகுதியில் உள்ள பள்ளிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| பிழந்த காங்கிரஸ்... உதித்த தெலங்கானா! Posted: 21 Feb 2014 12:59 PM PST பிழந்த காங்கிரஸ்... உதித்த தெலங்கானா! |
| முன்னாள் படைவீரர்கள் உண்ணாவிரதம் Posted: 21 Feb 2014 12:59 PM PST நலத் திட்டங்கள் குறித்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதைக் கண்டித்து மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| "15 வயதிலேயே துணிச்சலுடன் சிறை சென்றவர் தில்லையாடி வள்ளியம்மை' Posted: 21 Feb 2014 12:58 PM PST ஆப்பிரிக்காவில் கொண்டு வரப்பட்ட கருப்புச் சட்டத்தை எதிர்த்து தனது பதினைந்தாவது வயதிலேயே துணிச்சலுடன் சிறை சென்றவர் தில்லையாடி வள்ளியம்மை என புகழாரம் சூட்டினார் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி. |
| குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு Posted: 21 Feb 2014 12:58 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். |
| பொதுவிநியோகத் திட்ட துணை பதிவாளர் பொறுப்பேற்பு Posted: 21 Feb 2014 12:58 PM PST கூட்டுறவுத் துறையில் புதுக்கோட்டை மாவட்ட பொதுவிநியோகத் திட்ட துணை பதிவாளராக சூ. சதீஷ்குமார் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இதே போல, புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் |
| "தொழில்நுட்ப வளர்ச்சிகள் நொடிப்பொழுதில் மாறிவருகின்றன' Posted: 21 Feb 2014 12:58 PM PST தொழில்நுட்ப வளர்ச்சியும், கருத்துகளும் நொடிப்பொழுதில் மாறி வருகின்றன என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி. |
| எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் Posted: 21 Feb 2014 12:57 PM PST : கரும் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருவானைக்காவில்பேருந்து - லாரி மோதல்: 10 பேர் காயம் Posted: 21 Feb 2014 12:57 PM PST திருவானைக்கா கொள்ளிடம் பிரிவு சாலையில் வெள்ளிக்கிழமை காலை அரசுப் பேருந்தும், மணல் லாரியும் மோதிக்கொண்டதில் பேருந்து பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். |
| சிறப்பு மருத்துவ முகாம்: 361 பேர் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை Posted: 21 Feb 2014 12:56 PM PST புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்ட முகாமில் பங்கேற்ற 361 பேர் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். |
| தச்சன்குறிச்சியில் தாய் - சேய் நல மருத்துவ முகாம் Posted: 21 Feb 2014 12:56 PM PST கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Feb 2014 12:48 PM PST தேர்தல் 2014: காமெடி தர்பார்! |
| பிப். 26, 27-ல் தேசிய ரோபோ தயாரிப்பு போட்டி Posted: 21 Feb 2014 12:31 PM PST : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ரோபோ தயாரிப்பு போட்டி பிப். 26, 27-ம் தேதிகளில் நடைபெறுவதாக |
| Posted: 21 Feb 2014 12:27 PM PST மக்களவைத் தேர்தலில் பாஜக - தேமுதிக இடையே கூட்டணி உறுதியாகி உள்ளதாகத் தெரிகிறது. |
| ராமேசுவரம் தீர்த்த நீரை தெளிக்க ஆட்டோமைசர் இயந்திரம்: என்ஐடி குழு பரிந்துரை Posted: 21 Feb 2014 12:19 PM PST ராமேசுவரம் தீர்த்த நீரை ஆட்டோமைசர் இயந்திரம் மூலம் தெளிக்க ஏற்பாடு செய்யலாம் என திருச்சி தேசிய தொழில்நுட்ப மைய (என்ஐடி)குழு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. |
| ஆறு முக்கிய துறைகளில் 217 முக்கிய திட்டங்கள்: தென் மாவட்டங்களில் முதலீடு பெருக வாய்ப்பு Posted: 21 Feb 2014 12:18 PM PST தொலைநோக்குத் திட்டத்தின் இரண்டாம் பகுதியில் ஆறு முக்கிய துறைகளில் 217 உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள தொழில் கொள்கையால் தென் மாவட்டங்களில் முதலீடுகள் பெருக வழி ஏற்படும். |
| 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்னென்ன? Posted: 21 Feb 2014 12:17 PM PST சென்னையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் வெள்ளிக்கிழமை செய்து கொள்ளப்பட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 16 ஆயிரத்து 282 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். |
| "முதல்வரிடம் இதனை எதிர்பார்க்கவில்லை' Posted: 21 Feb 2014 12:12 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்கும் முடிவை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். |
| இன்று 498 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு Posted: 21 Feb 2014 12:11 PM PST தமிழகம் முழுவதும் 498 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கும் ஆன்-லைன் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்து விரைவில் மிகப்பெரிய போராட்டம்: ஞானதேசிகன் Posted: 21 Feb 2014 12:09 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார். |
| Posted: 21 Feb 2014 12:06 PM PST வரலாற்றை "அனைத்துப் பாடங்களின் தாய்' என்று கூறுவார்கள். கணிதம், கணிப்பொறியியல் மோகத்தில் திளைத்த சமூகம் கூட இன்று வரலாற்றுப் பாடத்தை திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளே இதற்கு அடிப்படைக் காரணம். |
| Posted: 21 Feb 2014 12:05 PM PST தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன. |
| Posted: 21 Feb 2014 12:05 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்க முற்பட்டதை தேசிய அளவில் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன. |
| தொண்டர்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் Posted: 21 Feb 2014 12:03 PM PST என்னை நம்பி வந்த தொண்டர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி கூறினார். |
| இலங்கை போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை: ஜெனீவா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டும் Posted: 21 Feb 2014 12:03 PM PST ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பி.க்கள் கேட்டுக் கொண்டனர். |
| மக்களவைத் தேர்தல்: அதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு Posted: 21 Feb 2014 11:53 AM PST மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது. |
| Posted: 21 Feb 2014 11:50 AM PST ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரின் விடுதலைக்குத் தடைபெற்று, தமிழர்களை மத்திய அரசு பழிவாங்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். |
| தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் Posted: 21 Feb 2014 11:49 AM PST முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் Posted: 21 Feb 2014 11:46 AM PST மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றோர் திமுக தலைவர் கருணாநிதியிடம் வலியுறுத்தினர். |
| இலவச தேவார பாடல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா Posted: 21 Feb 2014 11:46 AM PST பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயில் வளாகத்தில் குழந்தைகளுக்கான இலவச தேவார பாடல் பயிற்சி வகுப்பு இரண்டாமாண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| காலபைரவருக்குஇன்று தேய்பிறை அஷ்டமி விழா Posted: 21 Feb 2014 11:46 AM PST கும்பகோணம் அருகேயுள்ள அம்மாசத்திரத்தில் ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. |
| மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு Posted: 21 Feb 2014 11:46 AM PST மும்பையில் 2008 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்றார் மத்திய உளவுப் பிரிவு முன்னாள் இயக்குநரும், விவேகானந்தா பன்னாட்டு அறக்கட்டளை இயக்குநருமான அஜித்குமார் டோவல். |
| தஞ்சை மாநகராட்சியில் முதல் மாமன்றக் கூட்டம் Posted: 21 Feb 2014 11:45 AM PST தஞ்சாவூர் நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் முதல் மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மாநகர மேம்பாட்டுக்குரூ. 80 கோடி: மேயர் பேட்டி Posted: 21 Feb 2014 11:45 AM PST தஞ்சாவூர் மாநகர மேம்பாட்டுக்குத் தமிழக முதல்வர் ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் மேயர் சாவித்திரி கோபால். |
| பெருவுடையார் கோவிலில் ஒலி, ஒளிக் காட்சி அமைப்பது குறித்து ஆலோசனை Posted: 21 Feb 2014 11:45 AM PST தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் வளாகத்தில் ஒளி, ஒலிக் காட்சி அமைப்பது தொடர்பாக ஆட்சியர் என். சுப்பையன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| குடந்தையில் போலியோ விழிப்புணர்வு பிரசாரம் Posted: 21 Feb 2014 11:45 AM PST கும்பகோணத்தில் போலியோவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் போலியோ விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| நகர்மன்றக் கூட்டம்: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி இயக்க வலியுறுத்தல் Posted: 21 Feb 2014 11:44 AM PST ஏழை மக்களின் நலன் கருதி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி இயக்க வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். |
| விஜயகாந்துக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி Posted: 21 Feb 2014 11:44 AM PST தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. |
| Posted: 21 Feb 2014 11:44 AM PST தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் அருகேயுள்ள தர்மாம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி (44). இவர் அண்மையில் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் முன் பக்கக் கதவை |
| "தேர்தல் நடத்தை விதிமுறைகளில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் Posted: 21 Feb 2014 11:43 AM PST தேர்தல் நடத்தை விதிமுறைகளில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். |
| Posted: 21 Feb 2014 11:43 AM PST திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் விஷம் குடித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| நீதிமன்ற புறக்கணிப்பு இனி இருக்கக் கூடாது Posted: 21 Feb 2014 11:43 AM PST நீதிமன்ற புறக்கணிப்பு என்ற நிலை இனி வேண்டாம் என புதுவை தலைமை நீதிபதி சி.எஸ். முருகன் வழக்குரைஞர்களை கேட்டுக்கொண்டார். |
| இழப்பீடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி Posted: 21 Feb 2014 11:43 AM PST சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் மன்னார்குடியில் 3 அரசுப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன. |
| மரத்திலிருந்து விழுந்து காயமடைந்த சிறுவன் சாவு Posted: 21 Feb 2014 11:42 AM PST மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தானை அடுத்துள்ள மண்ணுக்குமுண்டானை சேர்ந்த ராமையன் மகன் வினித் (12). அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். புதன்கிழமை அருகில் இருந்த மரத்தில் |
| விலையில்லாப் பொருள்கள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 21 Feb 2014 11:42 AM PST நாகை மாவட்டம், திருக்கடையூரில் வெள்ளிக்கிழமை தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருப்பத்தூர் தீ விபத்து: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 பேர் உயிரிழப்பு Posted: 21 Feb 2014 11:42 AM PST திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். |
| நீடாமங்கலம் அருகே குடிசை வீடு தீக்கிரை Posted: 21 Feb 2014 11:42 AM PST நீடாமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது. |
| Posted: 21 Feb 2014 11:42 AM PST மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்பு பணிகளின் காரணமாக, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 22) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் எஸ். |
| கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகம் முற்றுகை Posted: 21 Feb 2014 11:41 AM PST : தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் மயிலாடுதுறையில் உள்ள கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை |
| சம்பந்தனூர், கொழப்பலூரில் இன்று இலவச மருத்துவ முகாம் Posted: 21 Feb 2014 11:41 AM PST திருவண்ணாமலை மாவட்டம் சம்பந்தனூர், கொழப்பலூரில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) நடைபெறும் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு |
| தேர்தல் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் Posted: 21 Feb 2014 11:41 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள 175 மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Feb 2014 11:40 AM PST போளூரை அடுத்த சனிக்கவாடி ஊராட்சி அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். |
| காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.81 லட்சத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு Posted: 21 Feb 2014 11:40 AM PST செங்கத்தை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.81-லட்சத்தில் கூடுதல் கட்டடத் திறப்பு விழாவை தமிழக முதல்வர் |
| வறட்சி பாதிப்புகளைத் தடுக்க வேண்டும் Posted: 21 Feb 2014 11:40 AM PST தமிழகத்தில் வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| முனுகப்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் Posted: 21 Feb 2014 11:39 AM PST செய்யாறை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த மேல்புத்தூர், முனுகப்பட்டு ஆகிய கிராமங்கள் சார்பாக அம்மா திட்ட |
| சக்திமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திருவலம் சாந்தா சுவாமிகள் பங்கேற்பு Posted: 21 Feb 2014 11:39 AM PST பெரணமல்லூர் அருகே உள்ள எஸ்.காட்டேரி கிராமத்தில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருவலம் சாந்தா சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். |
| பூச்சி மருந்து குடித்து இளைஞர் சாவு Posted: 21 Feb 2014 11:39 AM PST செய்யாறை அடுத்த தளரபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (26). கட்டடத் தொழிலாளி. கடந்த 3 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று அண்மையில் வீடு திரும்பினாராம். |
| கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை கருத்தரங்கு Posted: 21 Feb 2014 11:39 AM PST திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை மேட்ரிக்ஸ் மாணவர்கள் அமைப்பு சார்பில் ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பாஜகவினர் தேநீருடன் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 21 Feb 2014 11:38 AM PST செங்கத்தில் பாஜகவினர் தேநீருடன் துண்டுப் பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வழங்கினர் . |
| சத்துணவு ஊழியர் சங்க மாநில மாநாடு தொடக்கம் Posted: 21 Feb 2014 11:38 AM PST திருவண்ணாமலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 12-வது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 21 Feb 2014 11:38 AM PST போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் சார்பில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Feb 2014 11:38 AM PST வந்தவாசியில் சாலையை சீரமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மணல் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் Posted: 21 Feb 2014 11:37 AM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார். |
| நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கம் Posted: 21 Feb 2014 11:37 AM PST வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 தின சிறப்பு முகாமின் தொடக்க விழா கொடநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Feb 2014 11:37 AM PST தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அருகேயுள்ள வேடங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவரது விவசாயக் கிணற்றை ஆழப்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கோவில் இடத்தில் குடியிருப்போர் பெயர் மாற்றம் செய்துகொள்ள அழைப்பு Posted: 21 Feb 2014 11:37 AM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கட்டடங்கள், மனைகளில் குடியிருப்போர் இம்மாதம் 25-ம் தேதிக்குள் பெயர் மாற்றம் செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| Posted: 21 Feb 2014 11:36 AM PST மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் தென்முடியனூரில் |
| குப்பை அள்ள மாதம் ரூ.30 லட்சம் செலவு: நகர்மன்றக் கூட்டத்தில் திமுக புகார் Posted: 21 Feb 2014 11:36 AM PST திருவண்ணாமலை நகராட்சியில் குப்பைகளை அள்ள மாதம் ரூ.30 லட்சம் செலவிடப்படுவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுவதாகக் கூறி நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இரும்புத்தாது வெட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது Posted: 21 Feb 2014 11:36 AM PST திருவண்ணாமலை அருகே மலையில் இரும்புத் தாது வெட்டி எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். |
| இன்று சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் Posted: 21 Feb 2014 11:36 AM PST சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |