Daily Thanthi |
- பாராளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை: கமல்நாத்
- ஜெயலலிதாவுடன் சரத்குமார் சந்திப்பு
- பாச மழை
- தெலுங்கானா ஆதரவாளர்கள் உற்சாக ஆட்டம்
- பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு
- பிரதமருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
- நல்லுறவில் பெரிய தீங்கை ஏற்படுத்தும்; ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா எதிர்ப்பு
- மிரட்டல்; இத்தாலியிலுள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா கோரிக்கை
- திருமண விருந்து தயாரித்தபோது கொதிக்கும் தண்ணீரில் விழுந்த சமையல்காரர் உடல்வெந்து சாவு
- ஓடும் ரெயிலில் ஜெர்மனி நாட்டு இளம் பெண் கற்பழிப்பு: பீகார் வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
| பாராளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை: கமல்நாத் Posted: 21 Feb 2014 08:09 AM PST புதுடெல்லி, மத்திய காங்கிரஸ் அரசு, ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித்தவித்து வருகிறது. அதனால் கெட்டுப்போன காங்கிரசின் பெயரை மீட்பதற்காக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஊழல் ஒழிப்புக்காக மசோதாக்களை உருவாக்க திட்டமிட்டார். அவரது கனவுப்படி 6 மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. இந்த மசோதாக்களை நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் முடியவில்லை. ராகுல் காந்தியின் கனவில் உதித்த 6 ஊழல் ஒழிப்பு மசோதாக்களுக்காக அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஊழல் ஒழிப்பு மசோதாக்கள், கடந்த 2011ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ளன. நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை கடந்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு வந்தவை அல்ல. எனவே, அவற்றை நிறைவேற்ற கூட்டத்தொடரை நீட்டிக்கலாம் என்று எவ்வளவோ கூறி பார்த்தேன். ஆனால், எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. எனவே, இந்த மசோதாக்களுக்காக அவசர சட்டம் கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்வோம். ஜனாதிபதியின் கருத்து என்ன என்றும் பார்ப்போம் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| ஜெயலலிதாவுடன் சரத்குமார் சந்திப்பு Posted: 21 Feb 2014 07:59 AM PST |
| Posted: 21 Feb 2014 07:56 AM PST |
| தெலுங்கானா ஆதரவாளர்கள் உற்சாக ஆட்டம் Posted: 21 Feb 2014 07:50 AM PST |
| பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு Posted: 21 Feb 2014 07:40 AM PST |
| பிரதமருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு Posted: 21 Feb 2014 07:37 AM PST |
| நல்லுறவில் பெரிய தீங்கை ஏற்படுத்தும்; ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா எதிர்ப்பு Posted: 21 Feb 2014 07:21 AM PST பீஜிங், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் திபெத் புத்தமத தலைவர் தலாய் லாமாவை ஜனாதிபதி ஒபாமா சந்தித்து பேச இருக்கிறார். இது கலாசாரம் மற்றும் மதநல்லிணக்கம் அடிப்படையிலானது என்று வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம் அளித்தார். ஆனால் ஒபாமா, தலாய் லாமா சந்திப்பு நடத்தக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அதிகாரி ஹூ வா ஹூனாயிங் வெளியிட்ட அறிக்கையில் சீனாவுக்கு எதிரான மன உணர்வு கொண்ட தலாய்லாமாவை ஒபாமா சந்திக்க முடிவு செய்திருப்பது எங்களை மிகவும் பாதிக்க கூடியது. இதனால் இரு நாடுகள் இடையிலான நல்லுறவில் பெரிய தீங்கை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category:News Group Category: |
| மிரட்டல்; இத்தாலியிலுள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா கோரிக்கை Posted: 21 Feb 2014 07:04 AM PST புதுடெல்லி, கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை 2012–ம் ஆண்டு இத்தாலி கடற்படை வீரர்கள் மஸ்ஸிமிடானோ லட்டோன் மற்றும் சால்வடோர் கிர்ரோன் ஆகியோர் சுட்டுக்கொன்றனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இடையில் இத்தாலி சென்ற அவர்களை இந்தியா அனுப்பமாட்டோம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தை அடுத்து அவர்கள் இந்தியா கொண்டுவரப்பட்டனர். தங்கள் நாட்டின் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற வேண்டுகோளுடன் இத்தாலி அரசு அவர்களை இந்தியாவுக்கு அனுப்பியது. இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்கள் மீதான வழக்கின் விசாரணை தாமதமாவதால் இந்தியாவிற்கான இத்தாலி தூதரை சொந்த நாட்டிற்கு திரும்ப அழைக்க இத்தாலி அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இமெயிலில் கடந்த சில நாட்களாக கடும் மிரட்டல் வந்துள்ளது. மேலும், பார்சல் மூலம் புல்லட்கள் வந்துள்ளது. இதனை அடுத்து தூதரகத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு அந்நாட்டு அரசுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. கடற்படை வீரர்கள் விவகாரமே இதற்கு காராணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. image: category:News Group Category: |
| திருமண விருந்து தயாரித்தபோது கொதிக்கும் தண்ணீரில் விழுந்த சமையல்காரர் உடல்வெந்து சாவு Posted: 21 Feb 2014 06:51 AM PST மைசூர், மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது 38). சமையல்காரரான இவர், மைசூர் சரஸ்வதிபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு விருந்து தயாரிப்பதற்காக வந்து இருந்தார். சோறு சமைப்பதற்காக அவர் பெரிய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தார். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், அரிசியை களைந்து கொதிக்கும் தண்ணீரில் போடுவதற்காக பாத்திரத்தின் அருகில் சஞ்சீவ் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கியதில் அவர் கொதிக்கும் தண்ணீர் இருந்த பாத்திரத்தில் விழுந்து விட்டார். இதில் உடல் முழுவதும் வெந்த நிலையில் வலி தாங்காமல் சஞ்சீவ் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த சமையல்காரர்கள் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் சஞ்சீவ் பரிதாபமாக செத்தார். இதுகுறித்து சரஸ்வதிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். image: category:Tagging:News Group Category: |
| ஓடும் ரெயிலில் ஜெர்மனி நாட்டு இளம் பெண் கற்பழிப்பு: பீகார் வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 21 Feb 2014 06:44 AM PST சென்னை, ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் மெர்சி (வயது 18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், கடந்த ஜனவரி மாதம் 10&ந்தேதி மங்களூரில் இருந்து சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்தார். அப்போது, அவருடன் பீகாரை சேர்ந்த சதன்குமார் என்பவர் பயணம் செய்தார். இவர், சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இரவில் ரெயிலில் சக பயணிகள் தூங்கிய பின்னர், மெர்சியை சதன்குமார் கற்பழித்துள்ளார். இதுகுறித்து ஜனவரி 12&ந்தேதி சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டின் தூதரகம் மூலம் போலீசில் மெர்சி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதன்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சதன்குமார் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின் போது; மனுதாரர் தரப்பு வக்கீல், ரெயிலில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அந்த ரெயில் முழுவதும் பயணிகள் இருக்கும்போது, இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் வாதம் செய்யப்பட்டது. 18 வயது வெளிநாட்டு பெண், தன்னுடைய எதிர்காலத்தையும், கற்பையும் பற்றி கவலைப்படாமல் பொய் புகாரை கொடுக்கமாட்டார். இந்த சம்பவம் மனிதத்தன்மை இல்லாத கொடூரமான குற்றமாகும். எனவே இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால், அது வழக்கு விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று கூறி ஐகோர்ட்டு அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




