Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் குட்டு: தமிழக அரசு நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Posted:

புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், முறையான நடைமுறைகளை பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும் தடை விதித்துள்ளது. இதனால், ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு, திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, 'தடா' கோர்ட், 1998ல் தூக்கு தண்டனை விதித்தது. அந்த உத்தரவை, 1999, மார்ச், 11ல் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. அவர்களின் தண்டனை, ...

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, பிரதமர், மன்மோகன் சிங், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதுபோல், காங்., மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:முரணானது: நாட்டின், உயரிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய, ராஜிவை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்ய, தமிழக அரசு ...

'குற்றங்கள் நிகழாத நாடோ, ஊரோ கிடையாது!': தே.மு.தி.க., புகாருக்கு முதல்வர் பதில்

Posted:

சென்னை: ''தமிழகத்தில், கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது,'' என, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், குற்றம் சாட்டினார். அதற்கு, முதல்வர் ஜெயலலிதா, ''குற்றங்கள் நிகழாத, நாடோ, ஊரோ கிடையாது,'' என்றார்.பட்ஜெட் மீது, சட்டசபை எதிர்க் கட்சி துணைத் தலைவரான, தே.மு.தி.க.,வை சேர்ந்த மோகன்ராஜ் பேசினார். அவ்வப்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறுக்கிட்டு, பதில் அளித்தனர்.விவாத விவரம்:மோகன்ராஜ்: சொத்து வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும். தமிழகத்தில், கொலை, கொள்ளை, போன்றவை அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கை, முறையாக பராமரிக்க வேண்டும்.அமைச்சர் ...

எதிர்க்கட்சி கூட்டணியை கலைக்க ஜெ., அஸ்திரம்: ஏழு பேர் விடுதலையின் திகில் பின்னணி

Posted:

தி.மு.க., - தே.மு.தி.க.,- காங்., கூட்டணி உருவானால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதால், அத்தகைய கூட்டணி உருவாவதை தடுக்க, ராஜிவ் கொலையாளிகள் விடுதலை அஸ்திரத்தை, முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி உள்ளார்.சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில், முதல்வர் ஜெயலலிதா, உறுதியாக இருப்பார் என்பது, அனைவருடைய நம்பிக்கை. கடந்த காலங்களில், தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகள், விடுதலைப் புலிகளை ஆதரித்தபோது, அவர்களை ஜெயலலிதா, உறுதியாக எதிர்த்தார். இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடையை, நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.எண்ணத்தில் ...

'கட்சிக்கு ரூ.10 கோடி வரை டெபாசிட் கட்டலாம்': நேர்காணலில் பங்கேற்றவர்கள் ஸ்டாலினிடம் உறுதி

Posted:

லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, 40 தொகுதிகளுக்கும், 1,200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்தனர். விருப்பமனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல், தி.மு.க., தலைமையகமான, சென்னை அறிவாலயத்தில் நேற்று துவங்கியது.கன்னியாகுமரி தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணலில், தற்போதைய எம்.பி., ஹெலன் டேவிட்சன், மாவட்ட ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், மனோ தங்கராஜ், நாசரேத் பசலியான் உட்பட, 26 பேர் பங்கேற்றனர்.ஆளுக்கொரு கேள்வி: திருநெல்வேலி தொகுதிக்கான நேர்காணலில், தேவதாஸ் சுந்தரம், சேவியர் செல்வராஜ், அருணகிரியும், தென்காசிக்கு, ...

பா.ஜ., பக்கம் திரும்பியது தே.மு.தி.க.,: இரண்டு நாட்களாக நீடிக்கிறது பேச்சுவார்த்தை

Posted:

பா.ஜ., - தி.மு.க., - காங்கிரஸ் என, வரிசையாக, ஒவ்வொரு கட்சியிடமும் கூட்டணிக்கு தூது விடுத்து, பேச்சும் நடத்திய தே.மு.தி.க., இப்போது தான் இறுதி முடிவுக்கு வந்துள்ளது. அவரது மனைவி, மைத்துனரின் பிடிவாதம் காரணமாக, பா.ஜ., கூட்டணியில் சேர்வது என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, பா.ஜ., தலைவர்களுக்கு, தே.மு.தி.க., தரப்பில் இருந்து, நேற்று முன்தினம் அழைப்பு வந்தது. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலர் மோகன்ராஜூலு ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, விஜயகாந்தை சந்தித்தனர். அதன் ...

'பண்ருட்டி' குடும்பத்துடன் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Posted:

சென்னை: உடல்நிலை சரியில்லாததால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி, தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், நேற்று, தன் குடும்பத்தினருடன், முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தார். இவர் ஏழு முறை, எம்.எல்.ஏ., மற்றும் நான்கு முறை அமைச்சர், ஒரு முறை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிகளை வகித்துள்ளார்.தி.மு.க., சார்பில்: முதன் முறையாக, 1967ல், தி.மு.க., சார்பில், பண்ருட்டி தொகுதியில், வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். அடுத்து, 1971 தேர்தலிலும் வெற்றி பெற்றார். அப்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அதன்பின், ...

பெற்றோருடன் வாழ முடியாமல் நானும் தண்டனை அனுபவிக்கிறேன்: முருகன் - நளினி மகள் ஹரித்ரா உருக்கம்

Posted:

லண்டன்: ''என் பெற்றோரை மன்னிக்க வேண்டும்,'' என, ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற, முருகன்- நளினி தம்பதியின் மகள், ஹரித்ரா, 22, கோரியுள்ளார்.முன்னாள் பிரதமர், மறைந்த ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற முருகன் மற்றும் நளினி இருவரும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுடைய மகள் ஹரித்ரா. வேலூர் சிறையில், பிறந்த ஹரித்ரா, இரண்டு ஆண்டுகள் தாய் நளினியிடம் வளர்ந்தார். கடந்த 2005ல், பிரிட்டனில் குடியேறினார். இப்போது, லண்டனில், மருத்துவம் படித்து வருகிறார். முருகன், நளினி உள்ளிட்டோரை, தமிழக அரசு விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து ஹரித்ரா, தனியார், ...

துறைமுகம் மதுரவாயல் மேம்பால பணியை தொடரலாம்: தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted:

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை, 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 19 கி.மீ., தூரத்துக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. கூவம் ஆற்றின் வழியாக, மேம்பாலம் அமைகிறது. மூன்று ஆண்டுகளுக்குள், திட்டப் பணிகளை முடிக்க வேண்டும். மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால், 15 முதல் 20 நிமிடங்களில், மதுரவாயலில் இருந்து துறைமுகத்தை அடையலாம்; தற்போது, இரண்டு மணி நேரம் ஆகிறது. இப்பணிகள் துவங்குவதற்கு முன், சென்னை மாநகராட்சியிடம் இருந்து, 2008ல், தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™