Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மேலும் 4 ஆண்டுகள் பெடரர் விளையாடுவார் சாம்ப்ராஸ் நம்பிக்கை

Posted: 20 Feb 2014 12:18 PM PST

லண்டன்,

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார். டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் இவர் தான். 32 வயதான பெடரர் தற்போது தரவரிசையில் 8–வது இடம் வகிக்கிறார். 2012–ம் ஆண்டு விம்பிள்டனுக்கு பிறகு அவர் எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை. இதனால் டென்னிஸ் உலகில் அவரது ஆதிக்கம் முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலையில் அவரால் இன்னும் சாதிக்க முடியும் என்று முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜாம்பவான் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் கூறியுள்ளார். லண்டனில் பேட்டி அளித்த அவர், 'அதே உற்சாகம் மற்றும் உடல்தகுதியுடன் இருக்கிற வரை மேலும் 2 ஆண்டு முதல் 4 ஆண்டுகள் வரை பெடரை களத்தில் பார்க்க முடியும். டென்னிசில் எல்லா சாதனைகளையும் அவர் படைத்து விட்டார். ஆனாலும் அவர் இன்னும் ஒவ்வொரு நாடுகளுக்காக பயணித்து விளையாட ஆர்வமாக இருப்பதை பார்க்கும் போது, எனக்கு ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் நான் 30 அல்லது 31 வயதை எட்டிய போது தளர்ந்து போய் விட்டேன். டென்னிஸ் விளையாட்டை உண்மையாக நேசிப்பவர், பெடரர். முழு திறமையை வெளிக்காட்டி விளையாடினால் அவரால் மேலும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசிக்க முடியும். அவருக்கு பிடித்தமான ஆடுகளமான விம்பிள்டனில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது.' என்றார்.

category:

ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் 5 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண்

Posted: 20 Feb 2014 11:49 AM PST

திருவள்ளூர்,

ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் 5 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

வெட்டிக்கொலை

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஊ.கோ.பெருமாள் (வயது 62). செங்கல்பட்டு தொகுதி அ.தி.மு.க. செயலாளராகவும், ஊரப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி மதியம் 2½ மணி அளவில் தனது காரில், ஊரப்பாக்கம் ஊராட்சியின் 13-வது வார்டு அ.தி.மு.க உறுப்பினர் பழனி, ஊராட்சி மன்றத்தின் செயலாளர் வளர்மதியின் தந்தை வெங்கடகிருஷ்ணன் ஆகியோருடன் கூடுவாஞ்சேரி நோக்கி சென்றார். ஜி.எஸ்.டி சாலை ஓரமாக அழகிரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது திடீர் என காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளை சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டினார்கள்.

வார்டு உறுப்பினர் பழனி, டிரைவர் அசோக் ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பழனி, அசோக் இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். வெங்கடகிருஷ்ணன் உயிருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டார்.

5 பேர் சரண்

பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 ல் ஊராட்சி மன்ற தலைவர் ஊ.கோ.பெருமாள் கொலை வழக்கு சம்பந்தமாக கூடுவாஞ்சேரி சதுரப்பன்தாங்கல் முத்தமிழ்நகரை சேர்ந்த திருகுமரன் (37), கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் நகர் குளக்கரை தெருவை சேர்ந்த ஸ்ரீதர்(32), வெங்கம்பாக்கம் கலைஞர் தெருவை சேர்ந்த குட்டி(22), கூடுவாஞ்சேரி காமராஜ்புரம் முத்துமாரியம்மன் தெருவை சேர்ந்த குமார் (36), வெங்கம்பாக்கம் செந்தமிழ்நகர் சர்ச் தெருவை சேர்ந்த கார்த்திக் (22) ஆகிய 5 பேர் சரண் அடைந்தனர்.

அவர்கள் 5 பேரையும் நீதிபதி தமிழ்ச்செல்வி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, மகன் கைது

Posted: 20 Feb 2014 11:44 AM PST

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

கொலை

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது ஈச்சன் காட்டன்மேடு கிராமம். இங்கு சுடுகாட்டையொட்டி உள்ள கால்வாய் ஒன்றின் புதரில் சாக்கு மூட்டையில் கடந்த 18–ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சோக்கு (வயது 53) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து இரும்பு கம்பியால் இறுக்கப்பட்டிருந்தது. சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு தொழிலாளி சோக்கு பிணமாக கிடந்த இடத்தில் இருந்து அவரது வீடு சுமார் 300 மீட்டர் தூரத்தில் தனியொரு வீடாக உள்ளது.

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக எந்த வேலைக்கும் செல்லாமல் சோக்கு வீட்டில் இருந்து வந்தார். சோக்குவின் மனைவி அலங்காரம் (45). இவர்களுக்கு நாகராஜ் (25) மோகன் (21) என்ற 2 மகன்களும், அனிதா (18) என்ற மகளும் உள்ளனர். கூலித்தொழிலாளி சோக்கு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சோக்குவின் வீட்டின் வாசலில் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி மர்ம ஆசாமிகள் துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் மற்றும் ரத்த தடயங்களை போலீசார் கண்டறிந்தனர். இது தவிர வீட்டின் முன் பக்கம் இருந்த துணி காய போடும் இரும்பு கம்பியை துண்டித்து அதனை கொண்டு சோக்குவின் கழுத்தை இறுக்கி இருப்பதும் பின்னர் அங்கிருந்து சுடுகாடு வரை வயல்வெளியில் இழுத்து சென்று சாக்கு பையில் உடலை வைத்து கட்டி அதனை புதரில் கொலையாளிகள் வீசி சென்றதும் தெரியவந்தது.

இந்த நிலையில் சோக்குவின் வீட்டின் முன்பக்கம் நடந்த சம்பவத்தை எங்களுக்கு எதுவும் தெரியாது என அவரது மனைவி அலங்காரம் முன்னுக்கு பின் முரனாக பேசி மறுத்து வந்தது போலீசாருக்கு அவரது மீதே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் இந்த சம்பவம் நடந்தவுடன் சோக்குவின் இளைய மகன் மோகன் தலைமறைவாகிவிட்டது இந்த சந்தேகத்தை மேலும் உறுதி செய்ய போலீசாருக்கு வலுவான காரணமாக அமைந்தது. இதனையடுத்து தலைமறைவான மோகனையும் அவரது தாயாரும், சோக்குவின் மனைவியுமான அலங்காரத்தையும் பிடித்து போலீசார் தனித்தனியே தீவிர விசாரணை நடத்தினர்.

மனைவி, மகன் கைது

விசாரணையில், மோகன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தாய் மற்றும் தங்கை சம்பாதிக்கும் பணத்தை தந்தை சோக்குவிடம் கேட்டு வாங்கி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை தந்தை சோக்கு தட்டி கேட்டு கண்டிப்பது வழக்கம். இதனால் தந்தை சோக்குவுக்கும் மகன் மோகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்த நிலையில் கடந்த 17–ந்தேதி இரவு வீட்டுக்கு வந்த மோகன் வழக்கம்போல் தந்தை சோக்குவிடம் குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்து உள்ளார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற மோகன் குடிபோதையில் மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்தார். தூங்கி கொண்டிருந்த தந்தை சோக்குவை ஆத்திரத்தில் மோகன் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நோய்வாய்பட்டு இருந்த சோக்கு தலையில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இரும்பு கம்பியால் அவரது கழுத்தை கட்டி சாக்கு மூட்டையில் வைத்து அங்கிருந்து இழுத்துச்சென்று சுடுகாட்டையொட்டி உள்ள கால்வாய் மரபுதரில் மறைத்து வைத்ததாக மோகன் தனது வாக்கு மூலத்தில் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

மேலும், மகன் உருட்டுகட்டையால் அடித்து தனது கணவர் சோக்கு இறந்து விட்டதை தெரிந்த நிலையிலும், மகனை காப்பாற்றும் நோக்கில் தடயங்களை அழித்து உடலை அப்புறப்படுத்த மகனுக்கு தாய் அலங்காரம் உதவியாக இருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆரம்பாக்கம் போலீசார் இந்த வழக்கில் குடிக்க பணம் தராத தந்தையை அடித்து படுகொலை செய்த மகன் மோகனையும், கொலையை மறைக்க அவருக்கு உதவியாக இருந்த தாய் அலங்காரம் மீதும் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் பா.ம.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது

Posted: 20 Feb 2014 11:38 AM PST

சேலம்,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் பா.ம.க.பிரமுகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூக்கில் தொங்கிய சிறுமி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் பூங்கொடி (வயது10). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பூங்கொடி 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 14-ந் தேதி இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி பூங்கொடி மாயமானார். அவரை பல இடங்களில் தேடினார்கள். இந்த நிலையில் சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினாள்.

இதுபற்றி வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கற்பழித்து கொன்ற 5 பேர் கைது

பூங்கொடியின் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி 12-வது வார்டு பா.ம.க. உறுப்பினர் பூபதியை (31) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 'அவரும், அவரது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த ஆனந்தபாபு என்ற சினேக்பாபு (29), ஆனந்தன் (21), பிரபாகரன் (26), பாலு என்ற பாலகிருஷ்ணன் (28) ஆகிய 5 பேரும் சேர்ந்து சிறுமி பூங்கொடியை பாலியல் பலாத்காரம் செய்ததும், சிறிது நேரத்தில் அந்த சிறுமி இறந்துபோனதால், அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி சேலையில் தூக்குமாட்டி தொங்கவிட்டு சென்றதும்' தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
 

category:

சட்ட வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 3 பேர் விடுதலைக்கு தடை மத்திய அரசின் மனுவை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 20 Feb 2014 11:22 AM PST

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு கடந்த 18–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த 3 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

ஜெயலலிதா அறிவிப்பு

இதையடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசியல் சட்டம் பிரிவு 432–ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

மத்திய அரசு மனு

இந்த நிலையில், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்குமாறு கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், ''ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிகளை விடுதலை செய்வோம் என்று மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதுபோன்று முடிவு எடுக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாது. நீதி வழங்கும் உரிமை விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு சரியல்ல. மேலும் இது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரித்த வழக்கு. எனவே மத்திய அரசுடன் மாநில அரசு கலந்து பேசித்தான் முடிவு எடுக்க முடியும். தமிழக அரசு தன்னிச்சையாக தவறாக முடிவு எடுத்துள்ளது. இது விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே, இந்த 7 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவின் மீது தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்றும், 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர விசாரணை

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

அதை ஏற்று, தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், எம்.வி.ரமணா ஆகியோரை கொண்ட அமர்வு அந்த மனு மீது விசாரணை நடத்தியது.

 மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள் எடுத்து வைத்த வாதத்தின் அம்சங்கள்:–

மத்திய அரசின் வாதம்

*முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவின் மீது முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி அவர்களுடைய மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்த மறுசீராய்வு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் வரை 7 பேரின் விடுதலைக்கு தடை விதிக்க வேண்டும்.

*7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கையில், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 433–ன் கீழ் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட கைதிகளிடம் இருந்து உரிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப் படவில்லை.

*சுப்ரீம் கோர்ட்டு 18–ந்தேதி வழங்கிய தீர்ப்பில் "appropriate government" (பொருத்தமான அரசு) என்று குறிப்பிட்டுள்ளது. இது மத்திய அரசுதான். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி இவர்களுடைய விடுதலை குறித்து மாநில அரசு முடிவு எடுப்பது சட்டத்துக்குப் புறம்பானது.

*ஆயுதச்சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவற்றின் கீழ் மத்திய அரசுக்குத்தான் நிர்வாகக் கட்டுப்பாடு உண்டு. எனவே இவர்களின் விடுதலை குறித்து முடிவு எடுக்க மத்திய அரசின் ஒப்புதல் கண்டிப்பாக தேவை.

தமிழக அரசு வாதம்

மத்திய அரசின் வாதத்துக்கு பதில் அளித்து தமிழக அரசு வக்கீல் சவுத்ரி வாதிடுகையில், ''ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து தமிழக அரசு உரிய விதிமுறைகளை பின்பற்றித்தான் முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

தமிழக அரசின் சார்பில் மற்றொரு வக்கீலான ராகேஷ் திவிவேதி வாதிடும்போது, ''மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விட்ட பிறகு, அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கா, மாநில அரசுக்கா என்பதில்தான் பிரச்சினை. தண்டிக்கப்பட்ட கைதிகள், ஆயுதச்சட்டம் போன்ற மத்திய சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்கிறார்கள். ஆனால் எங்கள் வாதம், அந்த மத்திய சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டார்கள். அந்தப்பிரிவுகளில் தண்டனை 2 வருடங்களுக்கு மேல் கிடையாது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனை, அரசியல் சட்டத்தின் 7–வது அட்டவணைப்படி மத்திய, மாநில அரசுகளின் கூட்டு அதிகார வரம்பின்கீழ் வருகிறது. அது, இதுபோன்ற பிரச்சினைகளில் மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ள அதிகாரம் வழங்கி உள்ளது'' என வாதிட்டார்.

நீதிபதிகள் கருத்து

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ''தண்டனையை ரத்து செய்கிற அதிகாரத்தை அரசிடமிருந்து கோர்ட்டு எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் மாநிலங்கள் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த வழக்கில், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதில் நாங்கள் கவலை அடைகிறோம். இதை நாங்கள் ஆராய்வோம். அனைத்து மாநிலங்களும் சட்டநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட்டு விடவில்லை. ஆனால் அவை பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை நாங்கள் பரிசீலிப்போம்'' என கூறினர்.

மேலும், ''மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது என்பது தாமாகவே தண்டனையை ரத்து செய்வதாகி விடாது. சிறையில் இருந்து கைதிகளை விடுவிக்கும் முன்பாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்'' என்றும் நீதிபதிகள் கூறினர்.

இடைக்கால தடை

இதைத்தொடர்ந்து அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசுக்கும், வேலூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதிகள் ஆணையிட்டனர். இதேபோன்று சம்பந்தப்பட்ட கைதிகளுக்கும் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது.

அடுத்த விசாரணை

நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 4 பேர் விவகாரத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர். மத்திய அரசின் மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள் அடுத்த மாதம் 6–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

பள்ளிக்கூட மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியம் இசைக்கும் போட்டி

Posted: 20 Feb 2014 11:14 AM PST

நெல்லை,

பள்ளிக்கூட மாணவர்களுக்கு பேண்ட் வாத்திய கருவிகளை இசைக்கும் போட்டி நேற்று நடைபெற்றது.

இசை போட்டி

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட மாணவ அணிகளுக்கு இடையே பேண்ட் வாத்திய கருவிகளை இசைக்கும் போட்டி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் அணியாக கலந்து கொண்டார் கள்.

போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க் பால் ஜெயசீலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேண்ட் மாஸ்டர் ஜெயராம், நெல்லை பேண்ட் இசை சங்க நிர்வாகி செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள்

இதில் சிறந்த முறையில் பேண்ட் வாத்தியங்களை இசைத்த மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கண்ணை கவரும் வகையில் இருந்தது.

இந்த போட்டியில் பாளையங்கோட்டை குழந்தை ஏசு பெண்கள் பள்ளிக்கூட அணி முதல் இடத்தையும், ஆதித்யா நிகேதன் பள்ளி 2-வது இடத்தையும், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன.

அந்த பள்ளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

700 கிலோ ரேஷன் அரிசியுடன் கார், ஆட்டோ பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Posted: 20 Feb 2014 10:54 AM PST

குழித்துறை,

கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியுடன் கார் மற்றும் ஆட்டோவை உணவு வினியோக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன கண்காணிப்பு

விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரியாக இக்னோசியஸ் சேவியர் புதிதாக பொறுப் பேற்றுள்ளார். அவரும், வருவாய் ஆய்வாளர் சண்முகவேல், டிரைவர் சுரேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மார்த்தாண் டத்தில் இருந்து குழித்துறை நோக்கி ஒரு காரும், ஆட்டோவும் வேகமாக சென்று கொண்டிருந்தன. அவற்றை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், ஆட்டோவும் காரும், வேகமாக சென்றன.

அரிசி பறிமுதல்

உடனே, அதிகாரிகள் அவற்றை துரத்தி சென்றனர். குழித்துறையில் வைத்து ஆட்டோவையும், கல்லுக்கட்டியில் வைத்து காரையும் தடுத்து நிறுத்தினர். உடனே, கார் டிரைவரும், ஆட்டோகாரரும் தப்பி ஓடி விட்டனர்.

தொடர்ந்து, அதிகாரிகள் காரையும், ஆட்டோவையும் சோதனையிட்ட போது, அவற்றில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இவை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் அரிசியையும், கார், மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து, குழித் துறையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத் தனர்.

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘ஆம் ஆத்மி’ மனு

Posted: 20 Feb 2014 10:18 AM PST

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் கடந்த 16&ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து, ஆம் ஆத்மிÕ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

சட்டசபையை கலைத்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும¢ என்ற எங்களின் சிபாரிசை நிராகரித்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது சட்ட விரோதம், தன்னிச்சையான முடிவு. இது, சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த ஒரு கட்சி, டெல்லியை மறைமுகமாக ஆள அனுமதிக்கும் செயல். மேலும், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஷீலா தீட்சித் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை காப்பாற்றுவதற்காக செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

ஊர்வலத்தில் பங்கேற்க கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சென்னை பயணம்

Posted: 20 Feb 2014 09:57 AM PST

நாகர்கோவில்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பதவி உயர்வு வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், வருவாய் கிராம ஊழியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் சங்க குமரி மாவட்ட தலைவர் தங்கதுரை, செயலாளர் நாகேஸ்வர காந்த், கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பிரம்ம நாயகம் உள்பட கூட்டமைப்பை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டவர்கள் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள சங்க கட்டிடம் முன்பு இருந்து ஒரு பஸ் மற்றும் 4 வேன்களில் நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

image: 

ராமேஸ்வரம் வந்தனர்14 தமிழக மீனவர்கள் 4 படகுகளுடன் மீட்பு

Posted: 20 Feb 2014 09:56 AM PST

சென்னை,

கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் இருந்து 14 மீனவர்களுடன் சென்ற 4 மீன்பிடி படகுகள் இலங்கை அருகே உள்ள தீவில் தரை தட்டி நின்றது. அந்த படகுகளையும், மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டனர்.

இவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல்படை இறங்கியது. மீட்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 4 படகுகளையும், 14 மீனவர்களையும் கடல் எல்லையில் இலங்கை கடற்படை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது. மீட்கப்பட்ட அவர்கள் ராமேஸ்வரத்துக்கு அழைத்து வரப்பட்டு மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

category:

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™