Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,

Posted: 20 Feb 2014 02:41 PM PST

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது. இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்" என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார். சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு ...

இராமாயணத்தில் இருந்து..!

Posted: 20 Feb 2014 11:38 AM PST

ஆவேசத்துடனும் , ஆக்ரோஷத்துடனும் போரிட்டுக்கொண்டிருந்தார் ராமன் : .அப்போது ஒரு இளைஞன் , '' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...'' அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் : '' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?'' '' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !'' அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 20 Feb 2014 09:56 AM PST



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



தோனியின் மனோபாவமும் இந்தியக் கிரிக்கெட் அணியும் !

Posted: 20 Feb 2014 09:18 AM PST

இந்திய கிரிக்கெட் வரலாறு இரண்டு இடங்களில் தோனியின் பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் . ஒன்று , அனைத்து சர்வதேச கோப்பைகளையும் வென்ற இந்தியாவின் சிறந்த அணித்தலைவர் .இரண்டு ,தனி ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணங்களில் மோசமான தோல்விகளை அதிகளவு சந்தித்த இந்தியாவின் அணித்தலைவர் . இந்திய கிரிக்கெட் அணி , 1970 களில் கத்துக்குட்டி அணியாக சர்வதேச போட்டிகளில் விளையாடி மோசமான தோல்விகளை சந்தித்த போது அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . வளரும் அணி தொடர்ந்து தோற்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது ...

80 க்கு 80 தமிழன்பன்

Posted: 20 Feb 2014 08:53 AM PST

80 க்கு 80 தமிழன்பன் "80-80 தமிழன்பன் " எண்பது அகவை எழுத்தினில் வலவை எழுபது பனுவல் தரத்தினில் கரும்புல் எண்ணிலா கவிதை செழித்திட்ட சரிதை எதார்த்த கவியழகன் தத்துவார்த்த அன்பழகன் சுரதா! கூவத்திலுன் கவிப்பணி சுரந்ததா ? உன் பார்வையால் இப்பொற்கவி புனைந்ததா? தேன் ஒழுக்கிலே குறுங்கவி நுழைந்ததா? பால் சுரக்கையில் பண்கவி உதித்ததா? நுண்புலக் கவியினில் சற் கட்புலனுனக்கு பண்புள்ள வார்த்தையில் தண் நற்குணமுனக்கு கவிப்பாயிரம் புனைவதில் யாருண்டு உவமைக்கு இப்பாரினில் விருதுண்டுக் ...

அப்பாவிற்கு அவார்டு

Posted: 20 Feb 2014 07:56 AM PST

அவரை முறைசொல்லி அழைத்திடனும் மாமாஎன அன்புமுகம் கண்டதுமே அழைத்திட்டேன் அப்பாஎன அத்தகைய அப்பாவின் அருமையை உணர்ந்த அடியேன் போதாதென அகிலத்திற்கு உணர்த்திட அரங்கேற வைத்திட்ட அந்த இதழ் 'கணையாழி' அவரின் எழுத்துக்களை அங்கீகாரம் செய்து அன்புடன் அளிக்கும் அன்பளிப்பு இவ்விருது அவர் எழுதிய கதைக்கு அவர் பெற்ற விருதினை அவர் கையால் பெற்றிடும் அப்பெரும் பாக்கியம் அவருக்கு கிட்டவில்லை! அவரின் கால்தரும்வலி அழுத்தும் இரத்தமென அவரால் பயணப்படுவது அறவே முடியாதென்று அன்னாரின் வாரிசுக்கு அப்பெருமையை ...

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Posted: 20 Feb 2014 06:41 AM PST

520 கோடி ரூபாய்க்கு ரோஜா நிற வைரம் ஏலம் -- - ரோஜாவின் நிறம் கொண்ட அரிய வைரம், ஜெனிவாவில் நடந்த, ஏல விற்பனையில், 520 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. வைரம் என்றாலே விலை மதிப்பற்றது. அதிலும், "பிங்க் ஸ்டார்' வைரம் என்றால், அதன் மதிப்பே தனிதான். ஆப்ரிக்க சுரங்கத்தில் இருந்து, "டி பியர்ஸ்' நிறுவனத்தால், வெட்டி எடுக்கப்பட்ட, இந்த வைரத்தின் எடை, 132.5 காரட் (1 காரட்= 0.2கிராம்). பட்டை தீட்டிய பின், 59.60 காரட் எடையான, இந்த வைரத்தின் மதிப்பு, 460 கோடி ரூபாய். ...

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!

Posted: 20 Feb 2014 05:48 AM PST

பேஸ் புக் நிறுவனம் பயனீட்டாளர்களிடையே பிரபலமாக இருக்கும் மற்றொரு செயலியான வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்னும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புக்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த ஒப்பந்தப்படி 18 பில்லியன் அமெரிக்க வெள்ளியை ரொக்கமாகவும், 1 பில்லியன் ரிங்கிட்டை பங்குப் பத்திரங்களாகவும் பேஸ்புக், வாட்ஸ்எப்புக்காக செலுத்தும். இதன் மூலம் இந்த இரண்டு சேவைகளும் மேலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடங்கிய ...

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Posted: 20 Feb 2014 05:24 AM PST

மொகாலி: பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற விவசாயி ஒருவரின் எருமைக்கு, 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார். பஞ்சாபில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்குள்ள, மொகாலியில், இரு தினங்களுக்கு முன், முதல்வர் பாதல், பஞ்சாப் விவசாய உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கால்நடை வளர்ப்பு ...

ரிலாக்ஸ் ப்ளீஸ் ..........

Posted: 20 Feb 2014 04:57 AM PST

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் முதல் வீதி ....First rule ... அதிகாரத்தில் கை வைக்க கூடாது "No power of the house" வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension Second Rule ... அடிப்பெனு மிரட்ட கூடாது "No unwanted scaring" ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது Third rule ... அவங்களால என்ன சமைக்க முடியுமோ ...

திருஷ்டி

Posted: 20 Feb 2014 04:38 AM PST

உப்பின் வெட்டிப்பு
மிளகாய் நெடி, குழந்தைக்கு
திருஷ்டிச் சுற்றினாள் அம்மா.

மேகங்கள் அற்ற வானமாய்
தெளிவு பெற வேண்டும்
தடுமாறாத அறிவின் இருப்பு.

கால மிதித்து அணைத்தேன்
யாரோ வீதியில் புகைத்து
எறிந்து விட்ட சிகரெட்.

அம்மா

Posted: 20 Feb 2014 04:23 AM PST

அடுத்தவர் சொல்லும் அடுக்கடுக்கான அர்த்தமற்ற குற்றங்களை அவள் செவியில் போட்டதில்லை!! அப்பா திட்டும்போதும் அவனை திட்டாதிங்க என்று அன்பாய் அரவணைப்பாள்! அண்ணன் உண்டு என்ற போதும் அன்னையின் பாசம் எந்தன் மீதே!! அப்படிப்பட்ட அன்னையே அதெப்படி முடிந்தது உன்னால், அண்ணனவன் முகநூலில் அறிந்திருந்த பெண்ணொருத்தி அவனை ஏமாற்றிவிட்டாள் அந்த ஏமாற்றம் தாளாமல் அண்ணனவன் உயிரும் விட்டான் அண்ணன் போன சேதி கெட்டு அப்படி துடித்தாயே அந்த நேரம் உன் உயிரும் துறந்தாயே!! அம்மா என் நான் அழைத்தாள் அடுத்த ...

என் தாத்தா

Posted: 20 Feb 2014 04:15 AM PST

அடை மழை காலத்தில் கோவணத்தை மடித்துக் கட்டி தக்காளி தோட்டத்திற்குள் தண்ணீர் புகா வண்ணம் தடுப்பணை போல் வாய்க்காலை வெட்டிப் போட்டு, விவசாயத்தை காத்த என் தாத்தா! அகவை தொண்ணூறு ஆனபோதும் சைக்கிள் மிதித்து பட்டணம் போய் பாட்டிக்கு மெதுவடை வாங்கி வந்தவர் என் தாத்தா! ஊரில் நாலு பேர் பஞ்சாயத்து பேச அழைப்பது என் தாத்தாவைத்தான்! பசி என்று வந்தோர்க்கு புசிக்கும் உணவையே எடுத்துக் கொடுத்து தன் வயிறை பட்டினி போட்ட தாத்தா!! பள்ளிக்கூட விடுப்பில் அப்பாவிடம் சண்டையிட்டு நான் ...

'ஈ' காட்டு!

Posted: 20 Feb 2014 04:12 AM PST

தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான். ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண். ""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் ...

"80-80 தமிழன்பன் "

Posted: 20 Feb 2014 03:52 AM PST

எண்பது        அகவை  எழுத்தினில்        வலவை எழுபது         பனுவல்  தரத்தினில்           கரும்புல் எண்ணிலா         கவிதை  செழித்திட்ட        சரிதை எதார்த்தத்தின்     கவியழகன்  தத்துவார்த்த        அன்பழகன் சுரதா! கூவத்திலுன் கவிப்பணி சுரந்ததா ? உன் பார்வையால் இப்பொற்கவி புனைந்ததா? தேன் ஒழுக்கிலே குறுங்கவி        நுழைந்ததா? பால் சுரக்கையில் பண்கவி        உதித்ததா? நுண்புலக்        கவியினில் சற்  கட்புலனுனக்கு பண்புள்ள        வார்த்தையில் தண்  நற்குணமுனக்கு கவிப்பாயிரம் புனைவதில் ...

யார் யார் என்ன என்ன கண்டுபிடிச்சாங்க?

Posted: 20 Feb 2014 03:16 AM PST

வாங்க, படிங்க, தெரிஞ்சிகோங்க * ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் - ஃபிராங்க்விட்டில் * பார்வையற்றவருக்கான எழுத்துமுறையை கண்டறிந்தர் - லூயி பிரெய்லி * தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர் - J.L பெயர்டு * அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர் * போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் - டாக்டர். ஜோன்ஸ் சால்க் * டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல் * இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில் செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் * குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் ...

சாந்தன், முருகன், பேரறிவாளன் விடுதலை முடிவில் அரசியல் ஆதாயம்?

Posted: 20 Feb 2014 02:53 AM PST

இது வெகுஜன அரசியல் முடிவு - டி.கார்த்திக் ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்வதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தபோதே மூவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இப்போது நடந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இது வரவேற்கத்தக்க விஷயமே. ஆனால், இந்த முடிவின் பின்னணியில் வெகுஜன அரசியல் - ஓட்டு அரசியல் பொதிந்துகிடக்கிறது என்பதே உண்மை. ஈழப் பிரச்சினை, ஈழத் தமிழர் ...

'மாசி' ராசி பலன் (13.2.14 முதல் 14.3.14 வரை)

Posted: 20 Feb 2014 02:51 AM PST

மேஷம் :பலன் எதிர்பாராமல் சேவை செய்யும் மேஷ ராசி அன்பர்களே! முக்கிய கிரகங்களில் சுக்கிரன் பிப்., 25 வரை தனுசு ராசியில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். புதன் மார்ச் 10ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன் ,செவ்வாய் ஆகியோராலும் நன்மை உண்டாகும். சனி, கேது,ராகு,குரு ஆகியோரால் நற்பலன் கிடைக்காது. சூரியனால் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல்நலம் சீராகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ...

இந்தியாவில் மரண தண்டனை: ஒரு பார்வை

Posted: 20 Feb 2014 02:37 AM PST

வரலாறு இதுதான். இந்திய அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவு "சட்டம் அனுமதிக்கும் வழிகளில் அல்லாது – எந்த ஒரு மனிதனின் வாழ்வுரிமையும் பறிக்கப்படக் கூடாது" என்றே கூறுகிறது. பிரிட்டனின் காலனி நாடாக இந்தியா இருந்த காலத்தில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 1860-வது பிரிவின்படி, மரண தண்டனையும் தண்டனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் மரண தண்டனை இந்திய சட்டப் புத்தகத்தில் அப்படியே இடம்பெற்றது. எந்தெந்தக் குற்றங்களுக்கு? இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ...

25000 ஆயிரம் பதிவுகள் கடந்த யினியவன்(கொலைவெறி) அண்ணா

Posted: 20 Feb 2014 02:35 AM PST

உங்க பதிவுகள் இப்போதெல்லாம் ஆமை வேகத்தில் நகர்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா.                      

மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Posted: 20 Feb 2014 02:22 AM PST

மெல்லிசை மன்னர் ... தமிழ்த் திரையிசையின் ஜீவன்... தமிழ்த் திரையிசையின் முன்னோடி.... தமிழ்த் திரையிசையின் இதயம் .... இதுபோன்ற பல மொழிகளுக்கு உரித்தானவர்... இதுபோன்ற பல தகுதிகளை உருவாக்கியவர்.... இதுபோன்ற பல பெருமைகளை உள்ளடக்கியவர்... இவரின் பாடல்கள் ஒலிக்காத நாடில்லை, வீடில்லை, அதை எழுதாத ஏடில்லை, பாடாத வாயில்லை, கேளாத செவியில்லை.. அந்தக் காலத்து கிராமபோன் இசைத் தட்டுத் தொடங்கி இன்றைய பென்டிரைவ் வரை இவர் இசை ஆக்கிரமித்துள்ளது...அதில் இடம் பிடித்துள்ளது... ஆனால்.. பின்னணி ...

போட்டித் தேர்வுக்கு தகவல்கள் தரும் இணையதளம் !

Posted: 20 Feb 2014 01:57 AM PST

இன்றைய போட்டிமயமான உலகில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்கள் தங்களது அறிவுத்திறமையையும், பயிற்சி முறையையும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த சூழ்நிலையில் TRB, NET, SET, UPSC மற்றும் TNPSC போன்ற போட்டி தேர்வுகளை எழுத விரும்பும் பொருளாதார பிரிவு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ww w. economicsquestionsandanswers.com என்ற ...

நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!!

Posted: 20 Feb 2014 12:13 AM PST

1.காலம் கடக்க வேண்டும் இந்த நிலையில் அவரது இதயமும், புத்தியும் ஒன்றுடன் ஒன்று போரில் ஈடுபட்டிருக்கும்.அவர் இன்னும் தனது காதலருடனான காதலில் இருந்து மீண்டு வராத நிலையில், அவர்களது காதலின் மகிழ்ச்சிகரமான நாட்களை அவரது இதயம் மீண்டும் எண்ணி பார்க்கும். மேலும் தற்போதும் முன்பு போல அனைத்தும் சரியாகி மகிழ்ச்சியாக முடியும் என்று அவர் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வார். மறுபுறம் அவரது புத்தி, காதலரது உணர்வுகள் முழுவதும் மாறிவிட்டது என்றும், இனி தன்னால் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை என்று அவருக்கு உணர்த்தும். ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -96)

Posted: 20 Feb 2014 12:10 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்

Posted: 19 Feb 2014 11:43 PM PST

நவக்கிரக கோவில்களின் பலன்கள்- தொடர்பு எண்கள்                 =========================================== கிரகம்: சூரியன் ஸ்தலம்: சூரியனார் கோவில் நிறம்: சிவப்பு தானியம்: கோதுமை வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர் மலர்: செந்தாமரை உலோகம்: தாமிரம் நாள்: ஞாயிறு ராசிகற்கள்: மாணிக்கம் பலன்கள்: காரிய சித்தி. சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349. கிரகம்: சந்திரன் ஸ்தலம்: திங்களூர் நிறம்: வெள்ளை தானியம்: அரிசி வாகனம்: வெள்ளை குதிரை மலர்: வெள்ளரளி உலோகம்: ஈயம் நாள்: திங்கள் ராசிகற்கள்: முத்து ...

வேண்டும்

Posted: 19 Feb 2014 11:18 PM PST

வாழ்க்கையில் துன்பம் வந்தென்னை சூழ்ந்து வாட்டி வதைத்தாலும் வந்தோரெல்லாம் என்னை வார்த்தையால் குத்தினாலும், வழியறியாது என் வாழ்வு வாடிப்போய் நின்றாலும், வரமாட்டான் மீண்டும் முன்னேறி வாழ்க்கையில் இவன் என சொன்னாலும், வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வந்த வலிகளை எல்லாம் வாசற் படியாய் தாண்டி - மீண்டும் வந்திடவேணும் நான் – தூற்றியவர் வாய் பிளந்து நிற்கும் அளவிற்கு, வரத்தை மன தைரியமாய் தா வாடாமல் மனம் இருக்க வேண்டும் எனக்கு!! வரமது நான் கேட்டது ...

நல்ல பாம்பு என்பது இது தானோ

Posted: 19 Feb 2014 11:16 PM PST

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்... ! இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில் விழுந்துவிட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்த முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி. தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள் கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன் அருகில் பெரிய ராஜநாகம் படம் எடுத்து ஆடிக் கொண்டு இருந்தது. கிணற்றில் ஒரு ...

எங்கே அந்த ஏரி?

Posted: 19 Feb 2014 10:44 PM PST

இதோ இங்கேதான் இருந்தது நான் பள்ளி செல்லும்போது அதில்தான் மீன் பிடிப்பார்கள், இதோ இங்கேதான் இருந்தது ஏழுமலை தாத்தா துணி துவைத்த படிக்கட்டு, இதோ இங்கேதான் விழுந்தது என் அரை பவுன் மோதிரம், இதோ இங்கேதான் குளிப்பாள் என் சிறுவயது காதல் தேவதை, இதோ இங்கேதான் நாங்கள் திருட்டு தம் அடிப்போம், இதோ இங்கேதான் பாட்டி கால் வழுக்கி விழுந்தாள்! இப்போது அது எங்கே போனது என்று தெரியல செல்லம், கணிப்பொறியில் என் மகளுக்கு காண்பித்து கொண்டிருக்கிறேன் எங்கள் ஊர் ஏரியை!! விடுமுறையில் வந்தபோது ஏரிக்கு ...

திருநீறு இட்டு யார் கெட்டார்?

Posted: 19 Feb 2014 10:01 PM PST

திருநீறு என்பதை திரு+நீறு என்று பிரிக்கலாம். திரு என்பது 'தெய்வத்தன்மை வாய்ந்தது' என்று பொருள். "பாவங்களை நீற்றுவதால்" நீறு என்று பெயர்.  ஆக திருநீறு என்பது 'பாவங்களை நீக்கும் தெய்வத்தன்மையுடைய பொருள்' என்று அறியலாம். இந்த திரியில் திருநீற்றின் பெருமைகளைப் பற்றிச் சிறிது சிந்திக்கலாம். முதலில் ஒரு வரலாறைப் பார்ப்போம். எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் ...

கவிதையில் யாப்பு

Posted: 19 Feb 2014 08:06 PM PST

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™