Tamil News | Online Tamil News |
- விரைவில் மாறப்போகிறது தமிழகம்? எல்லா தொழில்களையும் அரசே நடத்த முடிவு: அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதில் நழுவல்
- ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க என்றுமில்லாத அமைச்சரவை அவசர கூட்டம்!
- மொபைல் போன், இ.எம்.ஐ., மூலம் நன்கொடை வசூல்: 'ஆம் ஆத்மி' கட்சி புது முடிவு
- 14 'சீட்' தந்தால் கூட்டணி; இல்லையேல்...: தி.மு.க.,வுக்கு தே.மு.தி.க., நிபந்தனை
- சல்லடை போட்டு தேடும் அ.தி.மு.க.,: ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இணையாக வேட்பாளர் தேர்வு
- பொது கூட்டங்களுக்கு சேவை வரி வசூலிப்பதா? நிதி அமைச்சர் சிதம்பரத்தை கிண்டலடிக்கும் மோடி
- பிரதமரை கொன்றவர்களை விடுவிப்பதா: ராகுல் கடும் அதிருப்தி
- இப்படி போனால் தேர்தலை எதிர்கொள்வது எப்படி: அழகிரி ஆதங்கம்
- மலிவு கட்டணத்தில் சினிமா பார்க்க 'அம்மா' திரையரங்கம்: சென்னைவாசிகளுக்கு இப்படியும் ஒரு வசதி
| Posted: நேற்று வெளியான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், அரசே நடத்தும், 'அம்மா' திரையரங்குகள் துவங்கப்படும் என்ற, அறிவிப்பு, கம்யூனிஸ்ட் நாடாக இருந்த, சோவியத் யூனியனைப் போல் தமிழகம் மாறி வருகிறதோ என்ற, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமில்லாமல், 'அம்மா' பயணியர் தங்கும் விடுதிகள், 'அம்மா' 20 லிட்டர் கேன் குடிநீர் என்ற, திட்டங்களையும் அறிவித்து, சென்னை மாநகராட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தாக்கமோ, என்னவோ, இந்த ஆட்சியில், 'அம்மா' உணவகம், 'அம்மா' மருந்தகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' காய்கறி கடை என, புதிய தொழில்களை ... |
| ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க என்றுமில்லாத அமைச்சரவை அவசர கூட்டம்! Posted: சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுவிப்பதாக, தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்று எடுத்த முடிவை, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில், காவிரி பிரச்னை முதல், சிவகாசி தீ விபத்துகள், வறட்சி உட்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்குக் கூட அமைச்சரவையின் அவசர கூட்டம் நடத்தப்பட்டதுஇல்லை என்பது, குறிப்பிடத்தக்கது.நேற்று முன்தினம், ராஜிவ் கொலையாளிகளின் கருணை மனு குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கடும் கால தாமதம் ஏற்பட்டு உள்ளதால், ... |
| மொபைல் போன், இ.எம்.ஐ., மூலம் நன்கொடை வசூல்: 'ஆம் ஆத்மி' கட்சி புது முடிவு Posted: புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து, சட்ட விரோதமாக நன்கொடை வசூலிப்பதாக, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு எதிராக, புகார் கூறப்பட்டுள்ள நிலையில், மொபைல் போன் மற்றும் இ.எம்.ஐ., மூலம் நன்கொடை வசூலிக்க, அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.ராஜினாமா: டில்லியில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி, சமீபத்தில், ஆட்சியிலிருந்து வெளியேறியது. அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, டில்லியில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.அம்பலப்படுத்த...: முன்னதாக, விதிமுறைகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து ... |
| 14 'சீட்' தந்தால் கூட்டணி; இல்லையேல்...: தி.மு.க.,வுக்கு தே.மு.தி.க., நிபந்தனை Posted: 'எங்களுக்கு, 14 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில், பா.ஜ., கூட்டணிக்கு சென்று விடுவோம்' என, தி.மு.க.,வுக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.திரைமறைவு: உள்ளாட்சித் தேர்தலில், 10 சதவீத ஓட்டுகளைப் பெற்றதால், விஜயகாந்தின், தே.மு.தி.க.,விற்கு, இந்த தேர்தலில், மவுசு உருவாகியுள்ளது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக, திரைமறைவு பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன. பா.ஜ., கூட்டணியில், ஏற்கனவே, ம.தி.மு.க., - -ஐ.ஜே.கே., -புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு ... |
| சல்லடை போட்டு தேடும் அ.தி.மு.க.,: ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இணையாக வேட்பாளர் தேர்வு Posted: லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் கள் தேர்வு, தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு இணையாக நடந்து வருகிறது. தகுதிக் குறைவானவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், பட்டியலில் இடம் பெற்று விடக்கூடாது என்பதற்காக, ஜெயலலிதா, இப்படிப்பட்ட கடும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.பதவி காக்க...: லோக்சபா தேர்தலில், அ.திமு.க., சார்பில் போட்டியிட, 3,000க்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்து உள்ளனர். போட்டியிட விருப்பம் இல்லாதவர்களும், தகுதி இல்லாதவர்களும், தற்போதுள்ள பதவியை, காத்துக் கொள்ள, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, ... |
| பொது கூட்டங்களுக்கு சேவை வரி வசூலிப்பதா? நிதி அமைச்சர் சிதம்பரத்தை கிண்டலடிக்கும் மோடி Posted: காந்திநகர்: ''நான், பங்கேற்கும் பொதுக் கூட்டங்களுக்கு சேவை வரி வசூலிப்பதன் மூலம், நாட்டின் வருவாயை பெருக்குவதற்கு, நிதி அமைச்சர் சிதம்பரம், தீவிரமாக முயற்சித்து வருகிறார்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, கிண்டலடித்துள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், காந்திநகரில் நேற்று நடந்த கருத்தரங்கில் பேசியதாவது:சிறிய அளவில் நுழைவு கட்டணம்: பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின், நாடு முழுவதும் சென்று, பிரசாரம் செய்து வருகிறேன். நான் பங்கேற்கும் கூட்டங்களுக்கு ... |
| பிரதமரை கொன்றவர்களை விடுவிப்பதா: ராகுல் கடும் அதிருப்தி Posted: அமேதி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது, தனக்கு வருத்தம் அளிப்பதாக, காங்., துணை தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.காங்., துணை தலைவரும், முன்னாள் பிரதமர் ராஜிவின் மகனுமான, ராகுல், உ.பி., மாநிலம் அமேதியில் நடந்த, கட்சி கூட்டத்தில் பேசியதாவது: எப்போதுமே, மரண தண்டனைக்கு எதிரானவன் நான். என் தந்தையை கொலை செய்தவர்களுக்கு, தூக்கு தண்டனை விதிப்பதால், அவர், உயிருடன் திரும்பி வரப் போவது இல்லை. ஆனாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்தவரை கொலை செய்தவர்களையே, தண்டிக்காமல் விட்டால், சாதாரண மக்களுக்கு, அரசிடம் எப்படி நீதி ... |
| இப்படி போனால் தேர்தலை எதிர்கொள்வது எப்படி: அழகிரி ஆதங்கம் Posted: மதுரை: ''தி.மு.க., வில் இருந்து ஒவ்வொருவராக நீக்கினால், வரும் தேர்தலில் எப்படி, எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியும்,'' என முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி பேசினார்.சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, மதுரை நிர்வாகிகளின், இல்ல திருமண விழா, நேற்று நடந்தது. அதில் அவர் பேசியதாவது: நீக்கப்பட்டவர்கள், கட்சியில் என்ன பற்று வைத்திருந்தனரோ, அதை போல் என் மீதும் அன்பும், பாசமும் வைத்து பணியாற்றி வந்தனர். எந்த காரணமும் இன்றி அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனது பேட்டிக்காக போஸ்டர் ஒட்டினர். அதற்காக அவர்களை நீக்கினர். இந்த கூத்து எங்கும் நடக்காது. நான் நியாயம் ... |
| மலிவு கட்டணத்தில் சினிமா பார்க்க 'அம்மா' திரையரங்கம்: சென்னைவாசிகளுக்கு இப்படியும் ஒரு வசதி Posted: சென்னை: நேற்று வெளியான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், இந்தியாவில் வேறெங்கும் இல்லாத திட்டமாக, மலிவு கட்டண திரையரங்கங்களை நிறுவி, நடத்த மாநகராட்சி முனையும் என, அறிவிக்கப்பட்டு உள்ளதுசென்னை மாநகராட்சியின் 201415ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, மேயர் சைதை துரைசாமி நேற்று வெளியிட்டார். மொத்தம் 132 அறிவிப்புகள் இடம்பெற்ற பட்ஜெட்டில், வரும் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, மேயர் அறிவித்த 'அம்மா' திட்டங்கள் தான் சிறப்பிடம் பெற்றன.'அம்மா' திட்டங்கள்: ஏழை, நடுத்தர மக்களின் பொழுதுபோக்கு அம்சத்தை பூர்த்தி செய்ய, மாநகராட்சியில் காலியாக உள்ள ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 20,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |