Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- போட்டி அரசியல் காரணமாகவே 7 பேருக்கும் விடுதலை: பி.எஸ்.ஞானதேசிகன் குற்றச்சாட்டு
- ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் பாராட்டு
- "தமிழக அரசு விடுவிக்க சட்டத்தில் இடமுண்டு'
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே வர்த்தக வழித்தடம்
- முருகனும், நளினியும் லண்டனில் வசிக்க முடிவு
- தாமதமாக இருந்தாலும் பெரிதும் மகிழ்ச்சி: நளினியின் தந்தை பேட்டி
- தமிழக அரசின் முடிவு: மக்களவையில் திமுக - அதிமுக வாக்குவாதம்
- ரவிச்சந்திரனின் தாயார் ஆனந்தக் கண்ணீர்
- மத்திய அரசு ஏற்பு; காங்கிரஸ் கண்டனம்
- 7 பேர் விடுதலை: தாமதமாக வந்தாலும், மகிழத்தக்க முடிவு
- 3 பேரின் விடுதலை பற்றி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை
- அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்: மகிழ்ச்சியை சக கைதிகளிடம் பகிர்ந்தனர்
- யார் யார் எந்தெந்த சிறையில்...?
- மரணத்தில் இருந்து வாழ்வை நோக்கி....
- நெஞ்சில் குத்திய வேதனையை மறக்க முடியவில்லை!
- தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு பாஜக, அதிமுக, திமுக கண்டனம்
- நெடுந்தொடர் அடிமைகள்!
- கல்விக் கடனுக்கு தனி வங்கி!
- தாமதத்துக்கு தண்டனை!
- எஸ்.சி. துணைத் திட்டத்தை கண்காணிக்க முதல்வர் தலைமையில் குழு
- கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வற்புறுத்த வேண்டாம்
- வரியில்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும்
- மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்: தமிழக அரசு
- மதுவிலக்கு சாத்தியமா என்பதை திமுகவிடம் கேளுங்கள்
- 185 புதிய பஸ்கள்-109 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள்
- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, அன்றும்...இன்றும்
- ஒரு தொழிற்சாலை கூட கர்நாடகத்துக்கு செல்லாது: தமிழக அரசு
- நீலகிரி மாவட்ட விவசாயிகள்-பெண்கள் மேம்பாட்டுக்கு கடன் உதவி
- ஏப்ரல்-மே மாதங்களில் 6 கட்ட பொதுத் தேர்தல்?
- மத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கான உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மனு
- "சிக்னல் கோளாறால் மக்களவை தொலைக்காட்சி இயங்கவில்லை'
- மாநிலங்களவையில் அமளி: தெலங்கானா மசோதா தாக்கல் ஒத்திவைப்பு
- "தாவூத் இப்ராஹிமைக் கைது செய்ய அமெரிக்க உதவியை கேட்கவில்லை'
- பி.எஃப். வட்டியில் 0.25% உயர்த்த அரசு பரிசீலனை
- சீமாந்திரத்தில் "பந்த்': இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- கோயில் யானையைப் பராமரிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் நூதனப் போராட்டம்
- அரசு அலுவலர்கள் உண்ணாவிரதம்
- இலவச வீடு வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்
- சாலைப் பணியை மேற்கொள்ள குடிசை முன் மண்ணைக் கொட்ட எதிர்ப்பு
- வழக்குரைஞர்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு
- முன்னாள் ராணுவ வீரர் மாயம்
- கன்னியாகுமரியில் தாய் சேய் நல மருத்துவ முகாம்
- ஆற்றூர் மரியா கல்லூரியில் 22 இல் பட்டமளிப்பு விழா
- குமரி மாவட்டத்தில் 19 பஸ்கள் இயக்கம்
- மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
- அகஸ்தீசுவரம் கல்லூரியில் இன்று இலக்கணக் கருத்தரங்கு தொடக்கம்
- மரியகிரி கல்லூரியில் விளையாட்டு விழா
- நாகர்கோவிலில் பிப். 22-இல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா
- பாலூர் குளம் சாலை சீரமைக்கும் பணி
- சரவணந்தேரியில் ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா
- மார்க்சிஸ்ட் தெருமுனைக் கூட்டம்
- குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம்:சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
- வடசேரி சந்தையில் வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாமல் கடைகள் கட்ட நடவடிக்கை
- ஆசாரிப்பள்ளத்தில் நாளை இலவச மெகா மருத்துவ முகாம்
- ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜிநாமா
- 812 பேருக்கு விலையில்லா பொருள்கள்
- மனுநீதி நாள் முகாமில் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- ஒருங்கிணைந்த வேளாண் பெருந்திட்ட வளாகம் திறப்பு
- நெற்பயிரில் களை எடுப்பு: இணை இயக்குநர் ஆய்வு
- பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கல்
- பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
- வீட்டின் பூட்டை உடைத்து மொபெட், சிலிண்டர் திருட்டு
- கல்லூரியில் 2 நாள் பயிற்சிப் பட்டறை
- கத்திக் குத்தில் படுகாயமடைந்த செவிலியருக்கு ஆட்சியர் ஆறுதல்
- உக்ரைனில் போராட்டம் தீவிரம்: 25 பேர் சாவு
- தமிழ் ஆசிரியர்களுக்கு நாளை கலந்தாய்வு
- நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டம்
- கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள்
- சாராயம் விற்றதாக பெண் கைது
- ஜனநாயக வாலிபர் சங்க பொதுக் கூட்டம்
- சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி
- உலக தாய்மொழி தின விழா
- மேல்செங்கம் கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
- "மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை'
- சோலார் தெருவிளக்கு திருட்டு
- வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
- குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
- ஆசிரியப் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆசிரியப் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி
- வென்ற மாணவர்களுக்கு பரிசு
- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தற்கொலை: தகவல்களை வெளியிட இந்திய சமூகம் வலியுறுத்தல்
- ரோட்டரி சங்கத்தில் முப்பெரும் விழா
- பெண் கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கு இளைஞர்கள் மூவருக்கு மரண தண்டனை
- தாய்லாந்தில் தொடர் போராட்டம்: பிரதமர் பதவி விலகக் கோரி பேரணி
- ஏப்ரல்-மே மாதங்களில் 6 கட்ட பொதுத் தேர்தல்?
- பொது ஒழுங்கைக் காக்க "லிட்டில் இந்தியா'வில் புதிய தாற்காலிக சட்டம்
- செய்யாறு
- நாகர்கோவில்
- தலிபான்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது: அமெரிக்கா
- அமெரிக்காவில் மோடிக்கு எதிரான விசா மறுப்பு தீர்மானம் வாபஸ்
- என்னுடைய பேச்சுக்கு சேவை வரி விதித்து நாட்டின் வருமானத்தைப் பெருக்குகிறார் சிதம்பரம்
- பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மக்களவைக் கூட்டத் தொடரை நீட்டிக்கத் தயார்
- நிறைவேறியது இடைக்கால பட்ஜெட்
- ஜார்க்கண்ட் அமைச்சர் திடீர் நீக்கம்
- பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
- மம்தாவுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு
- பேய்க்குளம் அருகே கோயில் தோரணவாயில் திறப்பு
- "கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்'
- ஆழ்வார்திருநகரி கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்
- காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
| போட்டி அரசியல் காரணமாகவே 7 பேருக்கும் விடுதலை: பி.எஸ்.ஞானதேசிகன் குற்றச்சாட்டு Posted: 19 Feb 2014 01:31 PM PST போட்டி அரசியல் காரணமாகவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் குற்றம்சாட்டினார். |
| ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் பாராட்டு Posted: 19 Feb 2014 01:29 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். |
| "தமிழக அரசு விடுவிக்க சட்டத்தில் இடமுண்டு' Posted: 19 Feb 2014 01:18 PM PST குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு மறுத்தால், அரசியலமைப்புச் சட்டம் 161-ஆம் விதியின்படி தமிழக முதல்வர் விடுவிக்க முடியும் என்று நளினியின் வழக்குரைஞர் புகழேந்தி கூறினார். |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே வர்த்தக வழித்தடம் Posted: 19 Feb 2014 01:12 PM PST இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக அமைக்கப்படும் வர்த்தக வழித்தடத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் சீனா, பாகிஸ்தான் அதிபர்கள் புதன்கிழமை கையெழுத்திட்டனர். |
| முருகனும், நளினியும் லண்டனில் வசிக்க முடிவு Posted: 19 Feb 2014 01:05 PM PST உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவும், தமிழக முதல்வரின் உடனடி நடவடிக்கையாலும் விடுதலையை எதிர்நோக்கியுள்ள முருகனும், நளினியும், தங்கள் மகள் ஹரித்ராவுடன் லண்டனில் வசிக்க முடிவு செய்துள்ளதாக அவர்களது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார். |
| தாமதமாக இருந்தாலும் பெரிதும் மகிழ்ச்சி: நளினியின் தந்தை பேட்டி Posted: 19 Feb 2014 01:05 PM PST தீர்ப்பு தாமதமாகக் கிடைத்திருந்தாலும் நளினி, முருகன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என புதன்கிழமை நளினியின் தந்தை சங்கரநாராயணன் (90) தெரிவித்தார். |
| தமிழக அரசின் முடிவு: மக்களவையில் திமுக - அதிமுக வாக்குவாதம் Posted: 19 Feb 2014 01:04 PM PST தமிழக சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக மக்களவையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. |
| ரவிச்சந்திரனின் தாயார் ஆனந்தக் கண்ணீர் Posted: 19 Feb 2014 01:03 PM PST முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். |
| மத்திய அரசு ஏற்பு; காங்கிரஸ் கண்டனம் Posted: 19 Feb 2014 01:02 PM PST ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். அதேசமயம், அத் தீர்ப்பின்படி மூவரையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| 7 பேர் விடுதலை: தாமதமாக வந்தாலும், மகிழத்தக்க முடிவு Posted: 19 Feb 2014 01:00 PM PST ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் விடுதலை தர, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தாமதமான நடைமுறை என்றாலும் மகிழத்தக்க முடிவு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| 3 பேரின் விடுதலை பற்றி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை Posted: 19 Feb 2014 12:58 PM PST முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் விடுதலை குறித்துப் பேச திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்: மகிழ்ச்சியை சக கைதிகளிடம் பகிர்ந்தனர் Posted: 19 Feb 2014 12:57 PM PST தங்களை விடுதலை செய்யப்படுவதற்கான அரசு உத்தரவு எப்போது வரும் என புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராபர்ட் பயஸ்ஸூம், ஜெயக்குமாரும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். |
| யார் யார் எந்தெந்த சிறையில்...? Posted: 19 Feb 2014 12:55 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 23 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரில் நளினி உள்ளிட்ட 4 பேர் வேலூர் சிறையில் உள்ளனர். |
| மரணத்தில் இருந்து வாழ்வை நோக்கி.... Posted: 19 Feb 2014 12:55 PM PST 1991- மே 21- ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இதில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு உள்ளிட்ட மேலும் 17 பேர் உயிரிழந்தனர். |
| நெஞ்சில் குத்திய வேதனையை மறக்க முடியவில்லை! Posted: 19 Feb 2014 12:22 PM PST எனது நெஞ்சில் குத்திய வேதனையை இன்னும் மறக்க முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி கூறினார். |
| தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு பாஜக, அதிமுக, திமுக கண்டனம் Posted: 19 Feb 2014 12:20 PM PST இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதாக பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் கண்டனம் தெரிவித்தன. |
| Posted: 19 Feb 2014 12:12 PM PST ஒரு மாலை நேரம். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு போர்ஷனில் ஊரிலிருந்து வந்திருந்த தாய்க்கும் அந்த வீட்டில் வசிக்கும் மகளுக்குமான உரையாடல் இது: |
| Posted: 19 Feb 2014 12:10 PM PST வங்கிக் கடன்களில், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களால் அதிக அளவில் பேசப்படுவதும், அலசி ஆராயப்படுவதும் கல்விக் கடன்தான். கடந்த சில ஆண்டுகளாக, மத்திய பட்ஜெட்களிலும் கல்விக் கடன் பற்றிய தகவல் அல்லது சலுகை இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. |
| Posted: 19 Feb 2014 12:10 PM PST ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஏதோ ராஜீவ் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்துவிட்டது என்று பார்ப்பதைவிட, தாமதமாக வழங்கப்படும் நீதியைப் போலவே, தாமதமாக செயல்படுத்தப்படும் தண்டனையும் அநீதியானது என்கிற பார்வையில்தான் அணுக வேண்டும். |
| எஸ்.சி. துணைத் திட்டத்தை கண்காணிக்க முதல்வர் தலைமையில் குழு Posted: 19 Feb 2014 12:03 PM PST ஆதிதிராவிடர் நல துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியின் பயன்பாடு குறித்து கண்காணிக்க முதல்வர் அல்லது நிதி அமைச்சர் தலைமையில் கண்கானிப்புக் குழு அமைக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் கோரிக்கை விடுத்தார். |
| கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வற்புறுத்த வேண்டாம் Posted: 19 Feb 2014 12:02 PM PST கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்த வேண்டாம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார். |
| வரியில்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும் Posted: 19 Feb 2014 12:00 PM PST நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் விதிக்கப்படாததால் வரியல்லாத வருவாயை அதிகரிப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அ. சௌந்தரராசன் கோரிக்கை விடுத்தார். |
| மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம்: தமிழக அரசு Posted: 19 Feb 2014 11:59 AM PST மாணவர்களின் எதிர்கால நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார். |
| மதுவிலக்கு சாத்தியமா என்பதை திமுகவிடம் கேளுங்கள் Posted: 19 Feb 2014 11:58 AM PST தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமா என்பதை திமுகவிடம் கேட்குமாறு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்தார். |
| 185 புதிய பஸ்கள்-109 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் Posted: 19 Feb 2014 11:57 AM PST தமிழகத்தில் 185 புதிய பஸ்களையும் 109 புனரமைக்கப்பட்ட பஸ்களையும் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை நகருக்கு மேலும் 50 மினி பஸ்களை அவர் துவக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. |
| புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, அன்றும்...இன்றும் Posted: 19 Feb 2014 11:56 AM PST புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் பேரவை பேச்சு அன்று எப்படி இருந்தது என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்தால் சிரிப்பலை எழுந்தது. |
| ஒரு தொழிற்சாலை கூட கர்நாடகத்துக்கு செல்லாது: தமிழக அரசு Posted: 19 Feb 2014 11:54 AM PST தமிழகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை கூட கர்நாடகத்துக்கு இடம் பெயராது என தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார். |
| நீலகிரி மாவட்ட விவசாயிகள்-பெண்கள் மேம்பாட்டுக்கு கடன் உதவி Posted: 19 Feb 2014 11:53 AM PST நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்கென கடன் உதவிகளை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. |
| ஏப்ரல்-மே மாதங்களில் 6 கட்ட பொதுத் தேர்தல்? Posted: 19 Feb 2014 11:49 AM PST எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் 6 கட்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| மத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கான உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மனு Posted: 19 Feb 2014 11:48 AM PST சிறுபான்மையினராக உள்ள பின்தங்கிய வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 4.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. |
| "சிக்னல் கோளாறால் மக்களவை தொலைக்காட்சி இயங்கவில்லை' Posted: 19 Feb 2014 11:48 AM PST தெலங்கானா மசோதா நிறைவேறியபோது சிக்னல் கோளாறால் மக்களவை தொலைக்காட்சி இயங்கவில்லை என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| மாநிலங்களவையில் அமளி: தெலங்கானா மசோதா தாக்கல் ஒத்திவைப்பு Posted: 19 Feb 2014 11:47 AM PST தெலங்கானா மசோதாவை மாநிலங்களவையில் புதன்கிழமை அறிமுகம் செய்ய முற்பட்டபோது கடும் அமளி, தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தால் தாக்கல் செய்யப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. |
| "தாவூத் இப்ராஹிமைக் கைது செய்ய அமெரிக்க உதவியை கேட்கவில்லை' Posted: 19 Feb 2014 11:45 AM PST இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமை கைது செய்ய உதவும்படி அமெரிக்காவிடம் அரசு கேட்கவில்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். |
| பி.எஃப். வட்டியில் 0.25% உயர்த்த அரசு பரிசீலனை Posted: 19 Feb 2014 11:43 AM PST தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (ஈ.பி.எஃப்) வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் கொடிகுன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார். |
| சீமாந்திரத்தில் "பந்த்': இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 19 Feb 2014 11:42 AM PST தனித் தெலங்கானா மாநிலம் ஏற்படுத்துவதற்கான மசோதா (ஆந்திர மறுசீரமைப்பு மசோதா-2013) மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் ஆந்திர மாநிலம் சீமாந்திரப் பகுதியில் புதன்கிழமை பந்த் நடத்தப்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| கோயில் யானையைப் பராமரிக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் நூதனப் போராட்டம் Posted: 19 Feb 2014 11:41 AM PST குழித்துறை கோயில் யானை கோபாலனைப் பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டித்து, குமரி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கோபாலன் யானைக்கும், யானை பாகன்களுக்கும் உணவு வழங்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. |
| Posted: 19 Feb 2014 11:41 AM PST காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நாகர்கோவிலில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
| இலவச வீடு வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் Posted: 19 Feb 2014 11:40 AM PST நாகர்கோவிலில் இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக அரசு இலவச வீடு வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் சத்தியாகிரக போராட்டம் புதன்கிழமை தொடங்கியது. |
| சாலைப் பணியை மேற்கொள்ள குடிசை முன் மண்ணைக் கொட்ட எதிர்ப்பு Posted: 19 Feb 2014 11:40 AM PST குமரி மாவட்டம் கடையல் அருகே சாலைப் பணிக்காக குடிசை முன் மண் போட புதன்கிழமை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். |
| வழக்குரைஞர்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு Posted: 19 Feb 2014 11:40 AM PST குமரி மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். |
| Posted: 19 Feb 2014 11:40 AM PST புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் பகுதியில் காணாமல் போன ராணுவ வீரரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கன்னியாகுமரியில் தாய் சேய் நல மருத்துவ முகாம் Posted: 19 Feb 2014 11:39 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் தாய் சேய் நல மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஆற்றூர் மரியா கல்லூரியில் 22 இல் பட்டமளிப்பு விழா Posted: 19 Feb 2014 11:39 AM PST ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (பிப். 22) நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி. பிலிப் பங்கேற்று பட்டம் |
| குமரி மாவட்டத்தில் 19 பஸ்கள் இயக்கம் Posted: 19 Feb 2014 11:39 AM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 புதிய பஸ்கள் புதன்கிழமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனையில் இருந்து 19 பஸ்கள் இயக்கப்பட்டன. |
| மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் Posted: 19 Feb 2014 11:38 AM PST மார்த்தாண்டத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புதிய பேருந்து நிலையப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்ததையடுத்து, இப் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா புதன்கிழமை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். |
| அகஸ்தீசுவரம் கல்லூரியில் இன்று இலக்கணக் கருத்தரங்கு தொடக்கம் Posted: 19 Feb 2014 11:38 AM PST அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் "தொல்காப்பிய இலக்கணப் பொருண்மையும் சங்க இலக்கியமும்' என்ற தலைப்பில் இலக்கணக் கருத்தரங்கு வியாழக்கிழமை (பிப். 20) தொடங்குகிறது. |
| மரியகிரி கல்லூரியில் விளையாட்டு விழா Posted: 19 Feb 2014 11:38 AM PST களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் 16 ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் பிப். 22-இல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா Posted: 19 Feb 2014 11:38 AM PST நாகர்கோவிலில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (பிப். 22) நடைபெறுகிறது. |
| பாலூர் குளம் சாலை சீரமைக்கும் பணி Posted: 19 Feb 2014 11:37 AM PST பாலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பாலூர் குளம் சாலையில் ரூ. 8 லட்சத்தில் சீரமûக்கும் பணி தொடங்கப்பட்டது. |
| சரவணந்தேரியில் ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா Posted: 19 Feb 2014 11:37 AM PST கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சரவணந்தேரியில் ரூ. 4 லட்சம் செலவில் ரேஷன் கடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா |
| மார்க்சிஸ்ட் தெருமுனைக் கூட்டம் Posted: 19 Feb 2014 11:37 AM PST காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர்த்து மூன்றாவது அணியை மக்கள் ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரத்தில் செவ்வாய்க்கிழமை தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. |
| குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம்:சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 19 Feb 2014 11:37 AM PST குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறுவதையொட்டி சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. |
| வடசேரி சந்தையில் வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாமல் கடைகள் கட்ட நடவடிக்கை Posted: 19 Feb 2014 11:37 AM PST நாகர்கோவில் வடசேரி சந்தையில் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடைகள் அமைக்கப்படும் என நகராட்சித் தலைவர் எம்.மீனாதேவ் தெரிவித்தார். |
| ஆசாரிப்பள்ளத்தில் நாளை இலவச மெகா மருத்துவ முகாம் Posted: 19 Feb 2014 11:36 AM PST தமிழக முதல்வரின் 66-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சார்பில் இலவச மெகா மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது. |
| ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜிநாமா Posted: 19 Feb 2014 11:36 AM PST தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். அத்துடன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்து விட்ட அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். |
| 812 பேருக்கு விலையில்லா பொருள்கள் Posted: 19 Feb 2014 11:36 AM PST தண்டராம்பட்டை அடுத்த எடத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எடத்தனூர் பகுதி கிராம மக்களுக்கான தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| மனுநீதி நாள் முகாமில் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 19 Feb 2014 11:36 AM PST திருவண்ணாமலை அருகே புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 48 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் கோ.முத்துக்குமாரசாமி வழங்கினார். |
| ஒருங்கிணைந்த வேளாண் பெருந்திட்ட வளாகம் திறப்பு Posted: 19 Feb 2014 11:35 AM PST திருவண்ணாமலையில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் பெருந்திட்ட வளாகத்தை புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்தார். |
| நெற்பயிரில் களை எடுப்பு: இணை இயக்குநர் ஆய்வு Posted: 19 Feb 2014 11:35 AM PST திருவண்ணாமலையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் களை எடுக்கும் பணியை வேளாண் இணை இயக்குநர் ஆய்வு செய்தார். |
| பள்ளியில் கராத்தே பெல்ட் வழங்கல் Posted: 19 Feb 2014 11:35 AM PST திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில் கராத்தே பயிற்சியில் தேர்வு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு Posted: 19 Feb 2014 11:34 AM PST ஆரணியை அடுத்த முடையூர் அண்ணாமலையார் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் பூட்டை உடைத்து மொபெட், சிலிண்டர் திருட்டு Posted: 19 Feb 2014 11:34 AM PST திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து மொபெட், சிலிண்டர், டிவிடி பிளேயரைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கல்லூரியில் 2 நாள் பயிற்சிப் பட்டறை Posted: 19 Feb 2014 11:34 AM PST திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் கணிப்பொறி துறை சார்பில், 2 நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. |
| கத்திக் குத்தில் படுகாயமடைந்த செவிலியருக்கு ஆட்சியர் ஆறுதல் Posted: 19 Feb 2014 11:34 AM PST தண்டராம்பட்டு அருகே பணியின்போது, கத்திக் குத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் செவிலியருக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் ஆறுதல் கூறினார். |
| உக்ரைனில் போராட்டம் தீவிரம்: 25 பேர் சாவு Posted: 19 Feb 2014 11:34 AM PST உக்ரைனில் மூன்று மாதங்களாக நீடித்து வரும் அரசுக்கு எதிரான போராட்டம் புதன்கிழமை தீவிரமடைந்த நிலையில், போலீஸாருக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் 25 பேர் உயிரிழந்தனர். |
| தமிழ் ஆசிரியர்களுக்கு நாளை கலந்தாய்வு Posted: 19 Feb 2014 11:33 AM PST திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) முதுகலை தமிழ்ப் பாட ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. |
| நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டம் Posted: 19 Feb 2014 11:33 AM PST போளூரை அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள ஜமுனாமரத்தூரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக் குழு நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டம் பிப்ரவரி 17, 18-ம் தேதிகளில் நடைபெற்றது. |
| கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் Posted: 19 Feb 2014 11:33 AM PST திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. |
| Posted: 19 Feb 2014 11:33 AM PST வில்வாரணி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக கலசப்பாக்கம் போலீஸாருக்கு கிடைத்தது. |
| ஜனநாயக வாலிபர் சங்க பொதுக் கூட்டம் Posted: 19 Feb 2014 11:32 AM PST இல்லம்தோறும் மதச்சார்பின்மை உள்ளம்தோறும் தேசப்பற்று' என்ற கருத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுக் கூட்டம் ஆதமங்கலம் புதூர் சந்தை மேட்டில் அண்மையில் |
| சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி Posted: 19 Feb 2014 11:32 AM PST ஒருங்கிணைந்த நீர்வடி மேலாண்மை திட்டத்தின் கீழ் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. |
| Posted: 19 Feb 2014 11:32 AM PST வந்தவாசி நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா வந்தவாசி கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மேல்செங்கம் கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் Posted: 19 Feb 2014 11:31 AM PST செங்கம் அருகே மேல்செங்கம் கிராமத்தில் சிபிஆர் தேசிய சுற்றுச்சூழல் கல்வி மையம், செங்கம் ஆர்.பி.டபிள்யு.ஓ. தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் |
| "மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை' Posted: 19 Feb 2014 11:31 AM PST செங்கம் பேரூராட்சி குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. |
| Posted: 19 Feb 2014 11:31 AM PST வந்தவாசி அருகே ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சோலார் மின்விளக்கு திருட்டு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| Posted: 19 Feb 2014 11:31 AM PST வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர் பங்கேற்றனர். |
| குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 19 Feb 2014 11:31 AM PST தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கம் ஒன்றியக் |
| ஆசிரியப் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 19 Feb 2014 11:30 AM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டக் கிளை நிர்வாகிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆசிரியப் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி Posted: 19 Feb 2014 11:30 AM PST ஆரணி வட்டார வள மையத்தில் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு மேலாண்மைக் குழு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 19 Feb 2014 11:30 AM PST தமிழக முதல்வர் பிறந்த நாளையொட்டி கீழ்விஷாரம் சத்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று பரிசு மற்றும் சான்றிதழ்களைப் பெற்றனர். |
| ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தற்கொலை: தகவல்களை வெளியிட இந்திய சமூகம் வலியுறுத்தல் Posted: 19 Feb 2014 11:30 AM PST ஆஸ்திரேலியாவில் குடியேற்ற காவல் மையத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இந்திய மாணவரின் சாவு தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டில் வாழும் இந்தியச் சமுதாயம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ரோட்டரி சங்கத்தில் முப்பெரும் விழா Posted: 19 Feb 2014 11:30 AM PST செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம், ரோட்டரி கிராமிய குழுமம் ஆயிலவாடி பெயர் பலகைத் திறப்பு விழா, தொடக்கப் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட கருவி வழங்கும் விழா என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பெண் கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கு இளைஞர்கள் மூவருக்கு மரண தண்டனை Posted: 19 Feb 2014 11:29 AM PST ஹரியாணா மாநிலம், ரேவாரி மாவட்டத்தில் 19 வயது இளம் பெண்ணைக் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞர்கள் மூவருக்கு துவாரகா விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. |
| தாய்லாந்தில் தொடர் போராட்டம்: பிரதமர் பதவி விலகக் கோரி பேரணி Posted: 19 Feb 2014 11:29 AM PST தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பேரணி நடத்தின. |
| ஏப்ரல்-மே மாதங்களில் 6 கட்ட பொதுத் தேர்தல்? Posted: 19 Feb 2014 11:29 AM PST எதிர்வரும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் 6 கட்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| பொது ஒழுங்கைக் காக்க "லிட்டில் இந்தியா'வில் புதிய தாற்காலிக சட்டம் Posted: 19 Feb 2014 11:28 AM PST சிங்கப்பூரில் கலவரம் ஏற்பட்ட லிட்டில் இந்தியா பகுதியில் பொது ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸாருக்கு அனுமதியளிக்கும் வகையில் அந்நாட்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. |
| Posted: 19 Feb 2014 11:28 AM PST |
| Posted: 19 Feb 2014 11:28 AM PST |
| தலிபான்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது: அமெரிக்கா Posted: 19 Feb 2014 11:27 AM PST தலிபான்களுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. |
| அமெரிக்காவில் மோடிக்கு எதிரான விசா மறுப்பு தீர்மானம் வாபஸ் Posted: 19 Feb 2014 11:26 AM PST பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு எதிரான விசா எதிர்ப்பு தீர்மானத்தை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி எம்.பி. ஸ்காட் பெர்ரி வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். மோடிக்கு எதிரான இந்த தீர்மானத்தை வாபஸ் பெறும் இரண்டாவது எம்.பி. இவர் ஆவார். |
| என்னுடைய பேச்சுக்கு சேவை வரி விதித்து நாட்டின் வருமானத்தைப் பெருக்குகிறார் சிதம்பரம் Posted: 19 Feb 2014 11:25 AM PST "என்னுடைய பேச்சுக்கு சேவை வரி விதித்து நாட்டின் வருமானத்தைப் பெருக்க மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடினமாக உழைத்து வருகிறார். என்னுடைய பேச்சு நாட்டிற்கு பயனளிப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது'' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். |
| பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மக்களவைக் கூட்டத் தொடரை நீட்டிக்கத் தயார் Posted: 19 Feb 2014 11:24 AM PST பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடப்பு மக்களவைக் கூட்டத் தொடரை நீட்டிக்கத் தயார் என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது. |
| Posted: 19 Feb 2014 11:23 AM PST வரும் 2014-2015ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அதிகமான விவாதமின்றி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. |
| ஜார்க்கண்ட் அமைச்சர் திடீர் நீக்கம் Posted: 19 Feb 2014 11:22 AM PST ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அந்த மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சந்திரசேகர் துபேவை புதன்கிழமை திடீரென நீக்கினார். |
| Posted: 19 Feb 2014 11:19 AM PST உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. |
| Posted: 19 Feb 2014 11:18 AM PST சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிப்பதாக புதன்கிழமை அறிவித்தார். ஒரு நேரத்தில், ஊழலுக்கு எதிராக அவருடன் போராட்டம் நடத்திய அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவில்லை என்றும் ஹசாரே தெரிவித்தார். |
| பேய்க்குளம் அருகே கோயில் தோரணவாயில் திறப்பு Posted: 19 Feb 2014 11:18 AM PST பேய்க்குளம் அருகேயுள்ள தெய்வேந்திரபுரி தெய்வேந்திரமுடையார் சாஸ்தா கோயில் தோரண வாயில் திறக்கப்பட்டது. |
| "கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 19 Feb 2014 11:17 AM PST எட்டயபுரம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| ஆழ்வார்திருநகரி கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் Posted: 19 Feb 2014 11:17 AM PST ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மாசித் திருவிழா, பிப். 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா |
| காயல்பட்டினத்தில் கந்தூரி விழா Posted: 19 Feb 2014 11:17 AM PST காயல்பட்டினம் பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, தீவுத்தெரு சந்திப்பில் அமைந்துள்ள மஹான் ஃபழ்லுல்லாஹ் ஸாஹிப் ஈக்கியப்பா அடக்கஸ்தலத்தில் கந்தூரி விழா நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |