Tamil News | Online Tamil News |
- மின்சார வாரியம் அதிக லாபம்:மின் கட்டணத்தை குறைக்கிறார் மம்தா பானர்ஜி
- பட்ஜெட்டில் முடிந்த வரை கவர்ச்சி: கார், மொபைல் போன் விலை குறையும்
- 1 ரூபாய் வருவாயில் 25 காசு கடன்
- இடைக்கால பட்ஜெட்டிற்கு கருணாநிதி வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு
- ரயில்வே பட்ஜெட் மீது பார்லி.,யில் விவாதம் இல்லை: தெலுங்கானா அமளியால் அப்படியே நிறைவேற்றம்
- கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
- காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி
- சமுதாய கூட்டணிக்கும் 'சீட்' : பா.ஜ.,விடம் ராமதாஸ் அடம்
- பட்ஜெட்டில் புளுகினாரா ரயில்வே அமைச்சர்?உண்மையை அம்பலப்படுத்துகிறார் சங்க தலைவர்
- மதுரையில் வெடிகுண்டு வழக்குகள் அதிகரிப்பது ஏன்:ரகசிய அமைப்பின் மீது சந்தேகம்
| மின்சார வாரியம் அதிக லாபம்:மின் கட்டணத்தை குறைக்கிறார் மம்தா பானர்ஜி Posted: கோல்கட்டா:நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மின் கண்டனம் கண்டபடி உயர்ந்து வந்தாலும் மேற்கு வங்கத்தில்,கடந்த நிதியாண்டில் மின்சார வாரியம் எதிர்பார்ப்பையும் மீறி அதிகமாக ரூ.15 கோடி லாபம் பெற்றுள்ளதால், மக்களுக்கே அந்த லாபத்தை பகிர்ந்தளிக்கும் விதமாக மின் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.மின் உற்பத்தி மற்றும் நிர்வாக செலவுகள் மற்றும் பகிர்மானம் ஆகியவை கண்டபடி உயர்ந்து தேவையும் பெருகி வருவதால் அதனை கருத்தில் கொண்டு எல்லா மாநிலங்களிலும் மின்கட்டணம் உயர்த்துவதைதான் எல்லா மாநில அரசுகளும் ... |
| பட்ஜெட்டில் முடிந்த வரை கவர்ச்சி: கார், மொபைல் போன் விலை குறையும் Posted: புதுடில்லி: கடும் நிதி நெருக்கடியால், தேர்தல் நோக்கில், பெரும் கவர்ச்சி சலுகைகளை அறிவிக்க முடியாத நிலையிலும், போகிற போக்கில், சற்று கவர்ச்சி காட்டுவதற்காக, சில வரி குறைப்புகளையும், கடன் சலுகைகளையும், நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் அறிவித்து உள்ளார்.நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், கடைசி பட்ஜெட். அடுத்த, நான்கு மாதங்களுக்கு மட்டுமான பட்ஜெட் என்பதால், இதில் பெரிய அளவில், கொள்கை முடிவுகளை யாரும் ... |
| 1 ரூபாய் வருவாயில் 25 காசு கடன் Posted: வரும் 2014 - 15ம் நிதியாண்டில், மத்திய அரசின் மொத்த வருவாயில், கடன் மூலம், 25 சதவீதம் திரட்டிக் கொள்ளப்படும்.இது, நடப்பு நிதியாண்டில், 27 காசுகளாக உள்ளது. இது, அரசின் வருவாய் உயர்ந்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.வரும், 2014 - 15ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், மத்திய அரசின் நிகர கடன், 4.57 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், 4.68 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.ஆக, மத்திய அரசின் கடன், 11 ஆயிரம் கோடி ரூபாய் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், மத்திய அரசின் திட்ட ஒதுக்கீட்டுச் செலவு, ஒரு ரூபாயின் ... |
| இடைக்கால பட்ஜெட்டிற்கு கருணாநிதி வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு Posted: புதுடில்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் வரவேற்றுள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள்: கருணாநிதி வரவேற்பு: இடைக்கால பட்ஜெட்டில், எதிர்பார்த்த அளவிற்கு ஏராளமான சலுகைகள் இல்லை. எனினும் ஓரளவிற்கு வரவேற்கத்தக்கது. அரிசிக்கான சேவைவரி ரத்து, கல்விக் கடன் மீதான வட்டியில் சலுகை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. தி.மு.க., மாநாட்டில், 'அரிசிக்கு சேவை வரி விதிக்க கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாட்டில், நான்கு மிகப்பெரிய, சூரிய ... |
| ரயில்வே பட்ஜெட் மீது பார்லி.,யில் விவாதம் இல்லை: தெலுங்கானா அமளியால் அப்படியே நிறைவேற்றம் Posted: புதுடில்லி:பார்லிமென்டில், எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல், வரலாற்றிலேயே முதல்முறையாக, இடைக்கால ரயில்வே பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது போலவே, இன்று அல்லது ஓரிரு நாட்களில், தெலுங்கானா மசோதாவையும் நிறைவேற்ற, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதால், பரபரப்பு காணப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட்டுக்கு முன், ரயில்வே பட்ஜெட், லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பொதுத் தேர்தல் ஆண்டு என்பதால், ஏப்ரலுக்கு பிறகு, நான்கு மாதங்களுக்கான, செலவினங்களுக்கு தேவையான நிதி, இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.இடைக்கால ... |
| கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம் Posted: புதுடில்லி:'கச்சத்தீவு விவகாரம் முடிந்து போன விஷயம். அதை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை' என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மத்திய அரசு பதில்:'இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு, மத்திய அரசு பதில் அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் ... |
| காங்., உதவி கேட்டாரா கேப்டன் : இப்படியும் கிளம்புகிறது புரளி Posted: லோக்சபா தேர்தல் கூட்டணி விஷயத்தில், எந்தக் கட்சிக்கும் பிடிகொடுக்காத விஜயகாந்த், கடந்த 13ம் தேதி, தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லி சென்று, மறுநாள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழக பிரச்னைகள் குறித்து பேசினார்.அத்துடன், காங்., மேலிட தலைவர்களைச் சந்திக்க, அவர் முயற்சித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களுக்காக, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் மற்றும் முக்கிய தலைவர்கள், மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டதால், விஜயகாந்தால், யாரையும் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், காங்., இரண்டாம் மட்ட தலைவர்கள் மூலம், விஜய காந்த் ... |
| சமுதாய கூட்டணிக்கும் 'சீட்' : பா.ஜ.,விடம் ராமதாஸ் அடம் Posted: 'தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உடன் இனி கூட்டணி சேர்வதில்லை' என்பதில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் உறுதியாக இருப்பதால், லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., உடன் கூட்டணி அமைப்பதில், அந்தக் கட்சியின், இளைஞர் அணி செயலர், அன்புமணி ஆர்வம் காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான, குரு, 'சமீபத்தில் உருவாக்கப்பட்ட, சமுதாய கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டும்' என, குரல் எழுப்பினார். ஆனாலும், பா.ஜ., தலைவர்கள் விளக்கியதன் அடிப்படையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கூட்டணிக்கு ரகசிய ஒப்புதல் அளித்தார்.அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணியில், ... |
| பட்ஜெட்டில் புளுகினாரா ரயில்வே அமைச்சர்?உண்மையை அம்பலப்படுத்துகிறார் சங்க தலைவர் Posted: வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது... என்பது ரயில்வே துறையை பொறுத்த வரையில், இந்த காலகட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது. சில ஆண்டுகளாகவே, ரயில்வே பட்ஜெட்டில், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால், ரயில்வே வளர்ச்சி பணிகள் நிறைவேற, மேலும் பல ஆண்டுகளாகும் அவலம் நிலவுகிறது.இந்நிலையில், ரயில்வே அமைச்சர், மல்லி கார்ஜூன கார்கே, தாக்கல் செய்த ரயில்வே இடைக்கால பட்ஜெட், 'பொய்களின் சங்கமம்' என்கிறார், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் செயல் தலைவர், இளங்கோவன்.பாதுகாப்பு இல்லை:மேலும், 'குறைந்த உண்மையை' பட்ஜெட் வாயிலாக, 'ஊதிக் காட்டி ... |
| மதுரையில் வெடிகுண்டு வழக்குகள் அதிகரிப்பது ஏன்:ரகசிய அமைப்பின் மீது சந்தேகம் Posted: மதுரை: மதுரையில், அடுத்தடுத்து வெடிகுண்டுகள்கண்டெடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனாலேயே, தொடர்ந்து குண்டு வைக்கப்படுகின்றன. உள்ளூர் போலீசாருக்கு பதில், சிறப்பு பிரிவு போலீசார் விசாரித்தால், முற்றுப்புள்ளி ஏற்பட வாய்ப்புண்டு.மதுரையில், விதவிதமான குண்டு வைப்பதும், அதை கண்டெடுப்பதும் போலீசாருக்கு 'வழக்கமாகி' விட்டது. பொதுமக்களுக்கும் அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளால் வாழ்வது 'பழக்கமாகி'விட்டது. ஆனாலும், சில நோக்கங்களுக்காக, அரசை எச்சரிக்கும் விதமாக 'பைப்' வெடிகுண்டு, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 18,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |