Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எங்கும் தமிழை விதைப்பேன்...

Posted: 17 Feb 2014 11:02 AM PST

தமிழை என்றும் காக்க தலையையும் தானம் தருவேன் - செந் தணலில் எரித்தால்கூட - செந் தமிழை நானும் மறவேன்... ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட தமிழும் எனக்குத் தாய்ப்பால் குறளில் குடித்தேன் முப்பால் - முத் தமிழில் சுவைத்தேன் தேன்பால்... என்னிலம் நன்னிலம் என்பேன் - அட என்னுயிர் தமிழே என்பேன் எங்கும்தமிழை விதைப்பேன் - எனை புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்... பாரில் பலமொழி இருப்பு - அதில் பைந்தமிழேத் தனிச் சிறப்பு காரில் குதிக்கும் மழையும் - அட கவிதைகள் இசைக்கும் தமிழில்... சொல்வளம் கொண்டது ...

2014-15 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்; சிறப்பம்சங்கள்!

Posted: 17 Feb 2014 11:00 AM PST

புதுடெல்லி: புதிய வரி விதிப்புகள் ஏதுமில்லாத 2014-15 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். இதில் அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மொபைல் , சிறிய ரக கார்கள், பைக்குகளுக்கான உற்பத்தி வரி குறைக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு தெலங்கானா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு ...

கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம்

Posted: 17 Feb 2014 10:43 AM PST

தமிழ் கடவுள் முருக பெருமானை போற்றும் "கந்த சஷ்டி கவசம் " --எளிய விளக்கம் # இன்று முருகனுக்கு உகந்த 'தை பூச ' திருநாள் ...... நூற்றாண்டுகளாக முருகனை போற்றி பாட படும் 'கந்த சஷ்டி கவசம் ' பற்றிய ஒரு பதிவு ! கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர். 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் ...

ஸ்ரீ மதுராஷ்டகம்

Posted: 17 Feb 2014 09:39 AM PST

அதரம் மதுரம் வதனம் மதுரம் னயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் | ஹ்றுதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 1 || வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் வலிதம் மதுரம் | சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 2 || வேணு-ர்மதுரோ ரேணு-ர்மதுரஃ பாணி-ர்மதுரஃ பாதௌ மதுரௌ | ன்றுத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 3 || கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் | ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 4 || கரணம் ...

ஹரித்வார் !!

Posted: 17 Feb 2014 09:25 AM PST

உலகம் உண்மையை பிரதிபலித்துக்கொண்டே உள்ளது . அதைப்பார்க்கிரவர்கள் அதிலிருந்து ஒரு பகுதி உண்மையை கிரகித்துக்கொள்கிறார்கள் . அவர்கள் புரிந்து கொண்டதற்கும் மேலாக இன்னும் எவ்வளவோ கிரகிக்கவேண்டிய உண்மை – முழுமை இன்னும் எஞ்சித்தான் இருக்கிறது . காலம் காலமாக படிப்படியாக உண்மைகள் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன . ஆனால் கொஞ்சம் புரிந்து கொண்டவர்கள் தாங்கள் அறிந்து கொண்டதுமட்டுமே முழுமை என்பதுபோல சுய பெருமை அவர்களை மேலும் அறிய விடாமல் தடை செய்து விடுகிறது . ஒருவேளை அடுத்த பிறவியில் இறைவன் அருளினால் ...

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Posted: 17 Feb 2014 08:35 AM PST

கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!

அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!

வேண்டும்

Posted: 17 Feb 2014 08:06 AM PST

வாழ்க்கையில் துன்பம் வந்தென்னை சூழ்ந்து வாட்டி வதைத்தாலும் வந்தோரெல்லாம் என்னை வார்த்தையால் குத்தினாலும், வழியறியாது என் வாழ்வு வாடிப்போய் நின்றாலும், வரமாட்டான் மீண்டும் முன்னேறி வாழ்க்கையில் இவன் என சொன்னாலும், வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வந்த வலிகளை எல்லாம் வாசற் படியாய் தாண்டி - மீண்டும் வந்திடவேணும் நான் – தூற்றியவர் வாய் பிளந்து நிற்கும் அளவிற்கு, வரத்தை மன தைரியமாய் தா வாடாமல் மனம் இருக்க வேண்டும் எனக்கு!! வரமது நான் கேட்டது ...

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Posted: 17 Feb 2014 07:50 AM PST

- 1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது? - 2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு நடைபெறுகிறது? - 3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது? - 4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது? - 5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன? - 6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது? - 7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது? - 8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்? - 9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது? - 10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -94)

Posted: 17 Feb 2014 07:47 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

'அ' முதல் 'ஃ' வரையான ஒரே பாடலில் ராமாயணம் !

Posted: 17 Feb 2014 07:43 AM PST

அன்றொருநாள் ராமன் வனம் சென்றதுவும், ஆங்கவனும் பொன்மானைக் கொன்றதுவும், இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும், ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும், உம்பி ஒருவனை ராமன் பெற்றதுவும், ஊறுசெய் வாலி தனை அழித்ததுவும், எம்பிரார்க்காய் அநுமன் கடல் கடந்ததுவும், ஏற்றமிகு இலங்கை தீப்பட்டதுவும், ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும், ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும், ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும், ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும், . அஃ'தன்றோ ஒரு பாடல் ராமகாதை !              Courtesy - -- ஆழிக்கையன் through ...

நிலாப்பெண்

Posted: 17 Feb 2014 07:36 AM PST

மாலை பின்பொழுதில்
எங்கு சென்றுவிடுகிறான் இவன்

இன்னும்
எத்தனை இரவுகள்
தனியாய் காத்திருப்பது.,

என,
தினம்  நினைத்து
உருகி தேய்ந்துகொண்டிருக்கிறது,
நிலாப்பெண்.

ஆதவனை நினைத்து.

21000 ஆயிரம் பதிவுகள் கடந்த சமையல் ராணி கிருஷ்ணாம்மா....

Posted: 17 Feb 2014 06:29 AM PST

21000 ஆயிரம் பதிவுகள் கடந்த  சமையல் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாங்க.... மனமார்ந்த வாழ்த்துகள்மா

என்னைப்பற்றி

Posted: 17 Feb 2014 05:27 AM PST

பெயர்:- நிலாசூரியன் சொந்த ஊர்:- கடலூர் மாவட்டம் ஆண்/பெண்:- ஆண் ஈகரையை அறிந்த விதம்:- வலைதளத்தில்  நிறைய விடயங்கள் சேகரிக்க நான் முயலும்பொழுது எல்லாம் ஈகரையை காண்பதுண்டு, நீண்ட நாட்களாக ஈகரையோடு இணைய வேண்டும் என்று நினைத்தேன், இப்பொழுது அதற்கான நேரம் கனிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. பொழுதுபோக்கு:- புத்தகங்கள் படிப்பது, சமுதாயம் பற்றி பேசுவது. தொழில்: தர்பொழுதையெ தொழில் கணிப்பொறி, நிரந்தர தொழில் விவசாயம். மேலும் என்னைப் பற்றி:- என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமில்லை, சாதாரணமான ...

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Posted: 17 Feb 2014 05:17 AM PST

அழுத்த சமைப்பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதங்கிய பின் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும். பின் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் போடவும். பின் மஞ்சள்தூள் மிளகாய்தூள் மல்லித்தூள் போட்டு பச்சை வாசம் சென்றபின் கீமாவைப் போடவும். உப்பு போட்டு கீமா வெந்தபின் அரிசியைக் கலந்து, மட்டன் வேக வைத்த நீர் அல்லது தண்ணீர் ஊற்றி ஒரு விசில் (அ) இரண்டு விசில் விடவும். பரிமாறுமுன் கொத்தமல்லித்தழை (அ) புதினா இலைகளை நறுக்கி தூவி விடவும். பிரியாணி தயார். தக்காளி வெங்காயம் ...

விடுமுறை விண்ணப்பம்

Posted: 17 Feb 2014 05:15 AM PST

ஒரு தொழில் நிமித்தமாகவும், குடும்ப வேலையாகவும் நான் இன்று இரவு கேரளா செல்கிறேன் உறவுகளே. மீண்டும் மூன்று தினங்கள் கழித்து சந்திப்போம்.

மீண்டும் சந்திக்கும் போது, ஒரு முக்கியமான முடிவு எடுத்திருப்பேன் என எண்ணுகிறேன். அந்த எண்ணம் ஓ.கே. ஆனால் நிச்சயம் உங்களுடன் பகிர்கிறேன்.

எங்கே அந்த ஏரி?

Posted: 17 Feb 2014 04:36 AM PST

இதோ இங்கேதான் இருந்தது நான் பள்ளி செல்லும்போது அதில்தான் மீன் பிடிப்பார்கள், இதோ இங்கேதான் இருந்தது ஏழுமலை தாத்தா துணி துவைத்த படிக்கட்டு, இதோ இங்கேதான் விழுந்தது என் அரை பவுன் மோதிரம், இதோ இங்கேதான் குளிப்பாள் என் சிறுவயது காதல் தேவதை, இதோ இங்கேதான் நாங்கள் திருட்டு தம் அடிப்போம், இதோ இங்கேதான் பாட்டி கால் வழுக்கி விழுந்தாள்! இப்போது அது எங்கே போனது என்று தெரியல செல்லம், கணிப்பொறியில் என் மகளுக்கு காண்பித்து கொண்டிருக்கிறேன் எங்கள் ஊர் ஏரியை!! விடுமுறையில் வந்தபோது ஏரிக்கு ...

VLC மீடியா ப்ளேயரின் லேட்டஸ்ட் வெர்சன் VLC2.0 "Two flower" டவுன்லோட் செய்ய

Posted: 17 Feb 2014 03:15 AM PST

இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் இருந்தாலும் இன்றும் பெரும்பாலானவர்களின் விருப்பமான மென்பொருளாக VLC Media Player மென்பொருள் திகழ்கிறது. இந்த மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் உள்ள சில பிரச்சினைகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இதற்க்கு VLC2.0 "Two Flower" என பெயரிட்டு உள்ளனர். சில புதிய மாற்றங்கள்: மீடியோ பைல்களை ஓபன் செய்யும் வேகமாக Decode செய்து நமக்கு வேகமாக காட்டுகிறது. ...

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 17 Feb 2014 01:46 AM PST

* காலில் தைத்த முள் நெஞ்சில் வலி தாயின் ரத்த பாசம். *மண்ணில் பிறந்து வளர்ந்து மண்ணிற்கே உரமான இலை என் உடம்பு. *வீண் சண்டைக்குப் போய் வாலிழந்து வந்தது சவரில் வசிக்கும் பல்லி. *பயிருக்குப் போட்ட உரத்தைத் தின்றது சத்தில்லாத மண். *இறந்த கரப்பானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டன எறும்புகள். *புணர்ச்சியின்றி கருவுற்று காய்த்தன கனிகள் காற்று கொடுத்த மகரந்தம். -ந.க.துறைவனின் "நதிக்கரைகள்"-என்ற தொகுப்பிலிருந்து.

மௌனப் புயல்

Posted: 17 Feb 2014 12:38 AM PST

வண்ணத்துப் பூச்சியின் மௌனம் மலருக்குப் புரியு ம். காற்றின் மௌனம் மரங்களுக்குப் புரியும். மேகத்தின் மௌனம் பயிர்களுக்குப் புரியும் . காவிரியின் மௌனம் கரைகளுக்குப் புரியும். விதையின் மௌனம் மண்ணுக்குப் புரியும். பிறந்தப் பூமியில் வாழ்வினை வெறுத்து அமைதியற்று வேதனைப் புலம்பலை மௌனமாய் அடக்கி வாழும் மானுடத்தின் மௌனம் யாருக்குப் புரியும்?.

ஆப்பிள் அல்வா

Posted: 17 Feb 2014 12:25 AM PST

6 அல்லது 7 ஆப்பிள்களை தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிதாக வெட்டிக்கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி நெய்யில் ஆப்பிள்களை நன்கு சுருள வதக்கவும். பின்னர் இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு, ஆப்பிள்கள் மென்மையாகும் வரை கரண்டியால் அழுத்தவும். 5 மேசைக்கரண்டி (அ) அதற்கு மேல் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி பட்டைப்பொடி சேர்த்து நெய்வெளியேறும் வரை கிளறவும். பிறகு தட்டில் பரப்பி உண்ணலாம். இருவர் (அ) மூவர் உண்ணும் அளவு வரும். எளிமையான முறை.

வீடியோ player இல் மூவி ஓடி கொண்டு இருக்கும் போது SUBTITLE தெரியவேண்டும். அதற்குரிய வீடியோ ப்ளேயர் சாஃப்ட்வேர் லிங்க் கொடுங்கள்.

Posted: 16 Feb 2014 11:30 PM PST

வீடியோ player இல் மூவி ஓடி கொண்டு இருக்கும் போது SUBTITLE தெரியவேண்டும். அதற்குரிய வீடியோ ப்ளேயர்
சாஃப்ட்வேர் லிங்க் கொடுங்கள்.


மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு..

Posted: 16 Feb 2014 10:39 PM PST

*
முக நூலில் கடந்த இரண்டு நாட்களாக மதுரை பற்றிய அலசல்.. எனது  இடுகைகளை இங்கு தொகுத்திருக்கிறேன்..
*

நீங்கள் கைகோத்திருப்பது நாட்டுக்காகவா அம்பானிக்காகவா?- அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை....

Posted: 16 Feb 2014 08:55 PM PST

டிசம்பர் 28-ல் நாங்கள் பதவிப் பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் முக்கியமானது. 'சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம்' என்று இந்த காங்கிரஸ்காரர்கள் எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால், இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரஸும் பா.ஜ.க-வும் கைகோத்துக்கொண்டன. எதற்காகக் கைகோத்திருக்கிறீர்கள்? இந்திய வரலாற்றிலேயே இப்படி ...

ந.க. துறைவன் ஹைபுன்

Posted: 16 Feb 2014 08:01 PM PST

அந்தச் சம்பவம் நடக்கா தென்று தான் நினைத்தார்கள் எப்படியோ நிகழ்ந்து விட்டது?. எதிர்ப்பாராமல் நிகழ்ந்து விட்டதற்காக யார் வருத்தப்படடு, என்ன பயன் விளையப் போகிறது?. நிகழும் சம்பவம் எந்த நொடியிலும் நிகழ்ந்தேறி விடலாம். எவரிடம் இருக்கிறது நடக்கவிருக்கும் சம்பவத்தைத் தடுத்து நிறுத்தும் மாய மந்திரச் சக்தி. எப்படியோ,எவருக்கும் புரியாமல் புதிராகவே புதைக் குழிக்குள்ளேயே மறைந்துப் போனது குயிலியின் மரணம். விரைந்து வருகின்றன எரி நட்சத்திரங்கள பூமியில் விழுந்து தற்கொலை.

வாழ்க்கையின் கவிதைகள் - மதுபாலிகா

Posted: 16 Feb 2014 06:31 PM PST

-
கருத்தரங்கு

--

-
'அலுவலகத்தையும்
பணியையும்
காதலியுங்கள்'
அறிவுறுத்தினார்
பொது மேலாளர்
-
அலுவலக காதலர்கள்
சிரித்துக் கொண்டனர் -
தங்களுக்குள்
-
-----------------------------------

வேலன்:-என்றும் இளமையாக இருக்க 100 வழிகள்.

Posted: 16 Feb 2014 06:27 PM PST

மார்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று சொல்லுவார்கள். திரையுலகில் திரு.சிவக்குமார் அவர்களையும் திரையுலக மார்கெண்டேயன் என்று சொல்லுவார்கள். அதுபோல நாமும் என்றும் இளமையாக இருக்க ;இந்த புத்தகத்தில் நூறு வழிகள் கொடுத்துள்ளார்கள். 5 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஒன்பது தலைப்புகளில் வழிமுறைகள் எளிமையாக கொடுத்துள்ளார்கள்.  இடைஇடையே அழகிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™