Tamil News | Online Tamil News |
- லோக்சபா தேர்தலை குறி வைக்கிறது 'ஆம் ஆத்மி': நாடு முழுவதும் பிரசாரத்தை துவக்கவும் திட்டம்
- வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் குவிகிறது: 9 மாதங்களில் மட்டும் 1,000 கிலோ சிக்கியது
- டில்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்பு தல்: சட்டசபை கலைப்பு கோரிக்கை நிராகரிப்பு
- மத்தியில் ஆட்சி அமைக்க போகும் கட்சிகளுக்கு சவால்: பொருளாதார விவகாரங்களில் காத்திருக்கும் சிக்கல்
- நான் சொல்வதை கேட்காவிட்டால் கூட்டணிக்கு 'சீட்' : கோஷ்டி தலைவர்களிடம் கருணாநிதி கண்டிப்பு
- காங்கிரசை பகடையாக்கும் விஜயகாந்த்: தி.மு.க.,வில் 'சீட்' பேரம் அதிகரிக்க தந்திரம்
- அரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்!
- நாட்டின் வளர்ச்சிக்கு கடின நடவடிக்கை தேவை : டீக்கடை விவாதத்தில் நரேந்திர மோடி 'பளிச்'
- 'பேச மட்டும் தான் பா.ஜ., லாயக்கு': காங்., துணை தலைவர் ராகுல் பாய்ச்சல்
- தி.மு.க., மாநில மாநாடு திருச்சியில் துவங்கியது: 90 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார் கருணாநிதி
- தமிழக போலீசில் தொடரும் பற்றாக்குறை
- டில்லியில் நடந்த நள்ளிரவு சந்திப்பு மர்மம் நீடிப்பு: விஜயகாந்த் - காங்., தலைவர்கள் ரகசியம்
| லோக்சபா தேர்தலை குறி வைக்கிறது 'ஆம் ஆத்மி': நாடு முழுவதும் பிரசாரத்தை துவக்கவும் திட்டம் Posted: தன் முழு கவனத்தையும், லோக்சபா தேர்தலில் செலுத்த முடிவு செய்துள்ள, 'ஆம் ஆத்மி' கட்சி, வரும், 23ம் தேதி முதல், காங்., - பா.ஜ., கட்சிகளுக்கு எதிராக, நாடு தழுவிய, ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை துவங்கப் போவதாக அறிவித்துள்ளது.ஜன லோக்பால் மசோதாவை, டில்லி சட்டசபையில் தாக்கல் செய்ய, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் முயன்றார். ஆனால், காங்., - பா.ஜ., ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், அந்த முயற்சியை முறியடித்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக, கெஜ்ரிவால் அறிவித்தார். இந்நிலையில், நேற்று, டில்லியில், ஆம் ஆத்மி கட்சியின், உயர்மட்ட அதிகார ... |
| வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் குவிகிறது: 9 மாதங்களில் மட்டும் 1,000 கிலோ சிக்கியது Posted: இந்தியாவில், இரண்டு ஆண்டுகளில், தங்கம் கடத்தல், மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. 2013ன், ஒன்பது மாதங்களில், 1,000 கிலோ தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 500 கோடி ரூபாய். குறிப்பாக, சிங்கப்பூர், துபாய், இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து, தினசரி, 35 - 45 கிலோ தங்கம், விமானம் மூலம் கடத்தி கொண்டு வரப்படுகிறது.சர்வதேச சந்தை நிலவரத்தின்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சில் தகவலின் படி, கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி வரை, இந்தியா, 616.5 ... |
| டில்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு ஒப்பு தல்: சட்டசபை கலைப்பு கோரிக்கை நிராகரிப்பு Posted: புதுடில்லி : டில்லி சட்டசபையை கலைக்கும்படி, 'ஆம் ஆத்மி' தலைவர், கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை, அம்மாநில கவர்னர், நஜீப் ஜங் நிராகரித்து விட்டார். சட்டசபையை முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, அவர், பரிந்துரைத்தார். இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.டில்லியில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 70 தொகுதி களை கொண்ட சட்டசபையில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி கட்சி, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக, கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். ... |
| மத்தியில் ஆட்சி அமைக்க போகும் கட்சிகளுக்கு சவால்: பொருளாதார விவகாரங்களில் காத்திருக்கும் சிக்கல் Posted: வரும் லோக்சபா தேர்தல், முந்தைய தேர்தல்கள் போல் இருக்காது என்பது, பொருளாதார வல்லுனர் களின் கருத்தாக அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன், பொருளாதார கொள்கைகளை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில், முக்கிய அரசியல் கட்சிகளான, பா.ஜ.,வும், காங்கிரசும் தள்ளப்பட்டுள்ளன. எனவே, தங்களின் பொருளாதார கொள்கைகளை, முக்கிய, இரு கட்சிகளின் வேட்பாளர்களான, பா.ஜ.,வின், நரேந்திர மோடியும், காங்கிரசின், ராகுலும் அவ்வப்போது, தங்களின் பொதுக்கூட்டங்களில் கோடிட்டு காட்டி வருகின்றனர்.பொருளாதாரத்தை மேம்படுத்த...:தேர்தலின் போது, வேட்பாளரை யும், கட்சியையும், பிரசார ... |
| நான் சொல்வதை கேட்காவிட்டால் கூட்டணிக்கு 'சீட்' : கோஷ்டி தலைவர்களிடம் கருணாநிதி கண்டிப்பு Posted: கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்றது, காங்கிரஸ் கட்சி. அதேபோல், தி.மு.க., -- அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் இருந்தாலும், தேர்தல் என, வந்து விட்டால், கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவர்.இந்நிலையில், தி.மு.க.,வின் மாநில மாநாடு, திருச்சியில் நேற்று துவங்கியது. இதற்காக, திருச்சிக்கு வந்த கருணாநிதி, ஏற்கனவே திட்டமிட்டபடி, மாநாட்டு நிகழ்ச்சி, அதற்கான வி.ஐ.பி.,க்கள், கூட்டணி கட்சித் தலைவர் வருகை போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.தற்போது, தி.மு.க.,வில், ஒருபுறம் அழகிரி, ஸ்டாலின் கோஷ்டி பிரச்னை; மறுபுறம் பெரும்பாலான மாவட்டங்களில், உள்ளூர் கோஷ்டி மோதல் ... |
| காங்கிரசை பகடையாக்கும் விஜயகாந்த்: தி.மு.க.,வில் 'சீட்' பேரம் அதிகரிக்க தந்திரம் Posted: தி.மு.க.,வுடன், 'சீட்' பேரத்தை அதிகரிக்கவே, பிரதமரை சந்திக்க, விஜயகாந்த் டில்லி சென்றதாகவும், காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், காங்கிரசை, அவர் பகடைக்காயாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.உறுதியான பதில் இல்லை:லோக்சபா தேர்தலுக்காக, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க, பா.ஜ.,வும், தி.மு.க.,வும் விரும்புகின்றன. அதனால், இரு கட்சிகளும், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தை, கூட்டணி தொடர்பாக, பல முறை அணுகின, ஆனாலும், அவர் உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை.கடந்த, 2ம் தேதி, ... |
| அரசு ஊழியர்களுக்காக போடப்பட்ட தமிழக பட்ஜெட்! Posted: கடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி யிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது. காலத்தையும், இடத்தையும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால், உலகமே கைகூடும் என்பது, அதன் பொருள்.குறளுக்கு ஏற்ப, இந்த கால கட்டத்தில், தமிழகத்திற்கு தேவையானதை அறிந்து தான், பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.தமிழகத்தில், 7.50 கோடி பேர் உள்ளனர். 2014 - 15ம், நிதி ஆண்டில், 1.02 லட்சம் கோடி ரூபாயை, தமிழக அரசுக்கு, நாம் வரியாகச் செலுத்த உள்ளோம். இந்தப் பணம், ஏழை ... |
| நாட்டின் வளர்ச்சிக்கு கடின நடவடிக்கை தேவை : டீக்கடை விவாதத்தில் நரேந்திர மோடி 'பளிச்' Posted: நாட்டின் வளர்ச்சிக்காக, சில கடினமான நடவடிக்கைகளை எடுக்கத் தான் வேண்டும்.அவ்வாறு கடின முடிவுகள் எடுக்கும்போது, துவக்கத்தில், ஒன்றிரண்டு நாட்கள், ஊடகங்கள் குற்றம், குறை சொல்லத் தான் செய்யும். ஆனால், நாம் எடுத்த, கடினமான நடவடிக்கையின் பலன்கள், நீண்ட காலத்திற்கு கிடைக் கும்,'' என, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி கூறினார்.மோடி, துவக்கத்தில், டீக்கடைக்காரராக இருந்தார் என்பதை அவர், பெருமையாக பலமுறை கூறியதை, காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் கேவலமாக சித்தரித்தன. அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் எம்.பி., ஒருவர், 'மோடி, டீ விற்கத் தான் ... |
| 'பேச மட்டும் தான் பா.ஜ., லாயக்கு': காங்., துணை தலைவர் ராகுல் பாய்ச்சல் Posted: பெல்காம்: ''பா.ஜ., தலைவர்கள் பேச்சில் மட்டும் தான், வீரம் காட்டுவர்; நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்துவது, காங்கிரஸ் மட்டுமே,'' என, காங்., துணைத் தலைவர், ராகுல் பேசினார்.கர்நாடக மாநிலம், பெல்காமில் நடந்த, காங்., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர், ராகுல் பேசியதாவது:ஊழலுக்கு எதிரான:ஊழலை ஒழிக்கப் போவதாக, பா.ஜ., தலைவர்கள், மேடைதோறும், முழங்குகின்றனர். ஆனால், ஊழலுக்கு எதிரான மசோதாக்களை, பார்லிமென்டில் நிறைவேற்ற விடாமல் தடுப்பது, அவர்கள் தான். ஊழல் குறித்து புகார் கொடுப்போரை பாதுகாக்கும் மசோதா, மக்களுக்கு குறித்த ... |
| தி.மு.க., மாநில மாநாடு திருச்சியில் துவங்கியது: 90 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார் கருணாநிதி Posted: திருச்சியில், தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, நேற்று துவங்கியது. மாநாட்டு பந்தலில், 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில், கட்சிக் கொடியை, கருணாநிதி ஏற்றினார்.இளைஞர் மற்றும் தொண்டர் படை அணிவகுப்பை, ஸ்டாலின் வழிநடத்தினார். மாநிலம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மாநாட்டிற்கு வந்திருந்தனர்.200 ஏக்கர்:திருச்சி, பிராட்டியூரில், தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும், இந்த மாநாட்டிற்காக, 200 ஏக்கர் பரப்பளவில், லட்சக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில், பிரமாண்ட மாநாட்டு ... |
| தமிழக போலீசில் தொடரும் பற்றாக்குறை Posted: தமிழக போலீசில், பற்றாக்குறை என்பது தொடர் கதையாக உள்ளதால், லோக்சபா தேர்தலின் போது, தலைவர்களின் சுற்றுப் பயணம் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.தமிழக போலீசில், டி.ஜி.பி., துவங்கி சாதாரண போலீசார் வரை, பல்வேறு காலி பணியிடங்கள் என்பது தொடர் கதையாக உள்ளது. தமிழகம் முழுவதும் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண போலீசார் வரை, மொத்தம், 1.21 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும்.19 ஆயிரம் பணியிடங்கள்ஆனால், 1.1 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். காலி பணியிடம் என்பது 19 ஆயிரத்து 685ஆக உள்ளது. இதில், ஏ.டி.ஜி.பி.,- மூன்று, ஐ.ஜி., - நான்கு, ... |
| டில்லியில் நடந்த நள்ளிரவு சந்திப்பு மர்மம் நீடிப்பு: விஜயகாந்த் - காங்., தலைவர்கள் ரகசியம் Posted: புதுடில்லி: தே.மு.தி.க.,வுடன், லோக்சபாவில் கூட்டணி வைப்பது தொடர்பாக, டில்லியில், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக, காங்கிரசின் உயர் வட்டாரங்களில், பேசப்படுகின்றன. ஆனாலும், இந்த தகவலை, விஜயகாந்த் தரப்போ அல்லது காங்கிரஸ் தரப்பில் இருந்தோ, உறுதிப்படுத்துவதற்கு, யாரும் முன்வராததால், மர்மம் நீடித்தபடி உள்ளது.பிரதமர், மன்மோகன் சிங்கை சந்தித்து, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து, கோரிக்கை மனு அளிப்பதற்காக, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், டில்லி வந்தார். கடந்த வெள்ளியன்று, ரேஸ்கோர்ஸ் சாலை இல்லத்தில், பிரதமரை, தன் மனைவி, மைத்துனர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் புடைசூழ ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 16,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |