Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!

Posted: 15 Feb 2014 12:48 PM PST

பாலு என்ற பெயரில் திரைப்படத் துறையில் பளிச்சென ஒளிவீசியவர்கள் பலர். அவர்களுள் ஒளிகளாலேயே ஒளியூட்டப் பட்ட பெளர்ணமி நிலவு பாலு மகேந்திரா என்னும் உண்ணத ஒளிப்பதிவுப் படக் கலைஞர். கோகிலா, மூன்றாம்பிறை, நெல்லு, பிரயாணம், மணவூரிபாண்டவலு, நீர்க்காசனா முதலிய திரைப்படங்களைத் தம் கேமராவால் வெற்றி பெறச் செய்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் விருதுகளைப் பெற்றவர் பாலு மகேந்திரா. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்தவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர், இலக்கியவாதி, இப்போது நடிகருமான பாலு ...

கவிதை - " தமிழ் சமுதாயம் "

Posted: 15 Feb 2014 12:42 PM PST

பெருந்திணை அற்றைத் திங்கள் அன்போடு புணர்ந்த காதல் திணையில் காதல் தலைவனே தலவியின் காதலன் ஆவான் தோழியின் துணையுடன் இற்றைத் திங்கள் வம்போடு புணரும் இணையத் திணையில் க்ணவனே மனைவியின் காதலன் ஆகிறான் கணினித் தோழியால் எழுத்துக்கள் உரசும் இணையத் வேள்வியில் கருகிப் போனது அன்பின் ஐந்திணை கலாச்சாரம் கெடுத்து ஓடிப் படர்ந்தன பெருந்திணைக் கொடிகள் மரபை மீறி கலாசாரம் கெடுத்து கண்கள் பேசும் காதல் மொழியில் வாய்மொழி ...

காஞ்சியின் கலைக்கோயில்

Posted: 15 Feb 2014 11:39 AM PST

காஞ்சியின் கலைக்கோயில் காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க ஒரு தனவணிகர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவரது குடும்பம் நல்ல செல்வச்செழிப்புடன் இருந்தது. வணிகரின் முன்னோர் தானதர்மம் செய்து வாழ்ந்தவர்கள். தங்கள் ஊரில் சிவன்கோயில் ஒன்றைக்கட்டி நித்யபூஜைக்காக நிலபுலன்களை எழுதி வைத்திருந்தனர். ஆனால், வணிகரோ இஷ்டம் போல ஆடம்பரமாய் வாழ்ந்து சொத்துக்களை விற்றுத் தீர்த்துவிட்டார். அவருடைய உடல்நிலையும் பாதிப்புக்குள்ளானது. அவரது மகனுக்கு குழந்தையும் இல்லாமல் போனது. அதை எண்ணி வருந்தியபடியே காஞ்சிப் ...

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Posted: 15 Feb 2014 11:33 AM PST

மாணவர்களுக்கு பள்ளி பருவ காலத்தில் இருந்தே, பாலியல் தொடர்பான கல்வியை கற்றுத் தருவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி, சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல் பிரச்னை குறித்த விழிப்புணர்வு "நேருக்கு நேர்" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது. பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான ...

வேலன்:-ரீமைண்டர்.

Posted: 15 Feb 2014 08:56 AM PST

நம்முடைய செயல்களை நினைவுப்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.300 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Configure கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் பண்டிகைகள்.பிறந்தநாள்.திருமணநாள்.என விருப்பமான தகவல்களை உள்ளீடு செய்யலாம். ஒவ்வொன்றிக்கும் தேதி யை நாம் செட் செய்துவிடவேண்டும். குறிப்பிட்ட நாள் வந்ததும் நமக்கு நினைவுப்படுத்தும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை ...

காதலர் தினம் !

Posted: 15 Feb 2014 06:45 AM PST

சூப்பருங்க அருமையான வாசகம் அண்மையில் கண்டேன்
மறந்தால் தானே நினைப்பதற்கு
வாலண்டின் நாளை சொன்னேன் ....
புதிது புதிதாக நாட்கள்  எதற்கு
வாழ்வு ஒவ்வொரு நாளும் மறந்து போவதாலா?

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!'' - சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்

Posted: 15 Feb 2014 06:27 AM PST

லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து' என்ற இயக்கம். இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார். அமைப்பின் பொதுச் செயலாளர் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (216)

Posted: 15 Feb 2014 06:07 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நம் உலகம்

Posted: 15 Feb 2014 04:59 AM PST

நமக்கான பிரபஞ்சமொன்றை வடிவமைக்கின்றேன் வார்த்தைகளால்…, புது கவிதையால் உருவானது நம் உலகம்... அன்பில் ஒரு கோட்டை ஆசைகள் அதன் காவல் நிறம் மாறாத காதலே இங்கு நிரந்தரப் பருவக்காலம்... நிலவும் சூரியனும் மறைந்துத் தோன்றும் இரவு பகல் விளையாட்டிற்கு இங்கு இடமில்லை பார்வைகளின் பரஸ்பர ஒளி பரிமாறப்பட்டபடியே..... பருவம் மட்டுமே பருகத் துடிக்கும் நாகரீக காதல் இங்கில்லை அத்துமீரலற்ற அணைப்பின் அர்த்தம் உணர்ந்த அகராதிகளாய் இதழ்நனையா முத்தத்தில் இன்பம் காண்போம்... கையேடு ...

ஹைக்கூ ,லிமரைக்கூ,சென்ரியு

Posted: 15 Feb 2014 04:50 AM PST



காலை நேரம்
வலை நிறைய மீன்கள்
மகிழ்ச்சியில் மீனவன்
-மித்ரா ஹைக்கூ

அத்தனை மீன்கள் வலைகளில்
அடுத்த நாள் கடலிலே
அத்தனை அழுகை அலைகளில்
-ஈரோடு தமிழன்பன் லிமரைக்கூ

படகு நிறைய மீன்கள்
ஐந்தாறு தாலிகள் கரையில்
இலங்கைப் படை சுற்றிவளைப்பு
-ம. ரமேஷ் சென்ரியு


அறிமுகம் - anban

Posted: 15 Feb 2014 04:08 AM PST

பெயர்: anban
சொந்த ஊர்:kumbakonam
ஆண்/பெண்: male
ஈகரையை அறிந்த விதம்:kathaikal
பொழுதுபோக்கு:tv , cricket
தொழில்:lic agent
மேலும் என்னைப் பற்றி: nanbarkalukku vanakkam

புன்னகை பக்கம் - தொடர் பதிவு

Posted: 15 Feb 2014 03:08 AM PST

ராஜபக்‌ஷேவுக்கு எதிராக போராட்டம்: தமிழர்களுக்கு வைகோ அழைப்பு

Posted: 14 Feb 2014 10:35 PM PST

காமன்வெல்த் அமைப்பின் தலைவராக பதவியேற்கவுள்ள ராஜபக்‌ஷேவை எதிர்த்து லண்டன் வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஹிட்லரின் நாஜி படைகள் கூட செய்யாத மிகக் கொடூரமான அழிவுகளை ஈழத் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசின் இராணுவத்தினர் செய்தனர் என்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அண்மையில் மன்னார் மாவட்டத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள், ...

தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்!

Posted: 14 Feb 2014 10:30 PM PST

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தை வியாழக்கிழமை சந்தித்து மனு கொடுத்தனர். தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர் பகத் சிங் உள்ளிட்டோர் காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், அண்மையில் மதுரை வந்திருந்த மத்திய தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனைச் சந்தித்த இவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இதையடுத்து, ...

பாமரர் தேவாரம்

Posted: 14 Feb 2014 10:30 PM PST

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

VIP

Posted: 14 Feb 2014 10:04 PM PST



DOWNLOAD

கண்ணதாசனின் நகைச்சுவை

Posted: 14 Feb 2014 08:29 PM PST


இல்லற இன்பம்

"கல்யாணி ராகம் என்றாலே எனக்குப் பிடிக்காது"
என்றார் பாகவதர்
.
"ஏன்?" என்று கேட்டார் சீடன்.

"என் மனைவி பெயர் கல்யாணி" என்றார் அவர்.

-ஆதாரம்:- கவிஞர் கண்ணதாசனின்
தோட்டத்துப் பூக்கள்-என்ற புத்தகம்.

பூனைகள்

Posted: 14 Feb 2014 08:06 PM PST

ஃ பூசணிக்காய்
உருண்டு போகிற
இடந்தெறியாமல்,
கடுகு
உருண்டுபோகிற
இடத்தைத்
தடிக்கொண்டு
அடிக்கிறார்கள்
இவர்களில்
யார் அறிவாளி?
யார் முட்டாள்?

ஃ பூனைகள்
இல்லாதபோது
தைரியமாய்
எலிகள்
விளையாடுகின்றன
தாய்
வந்து விரட்டுகிறாள்
மகிழ்ந்து
சிரிக்கிறார்கள்
குழந்தைகள்.

லிமரிக்கூ =இமாம்=

Posted: 14 Feb 2014 07:32 PM PST

நலம் வாழ வியர்வையாய் உதிர்க்கும் தாய் சுகவீனமுற்றால் அவளை எதிர்க்கும் சேய் ஒளிந்தது பாசம் வளர்ந்தது வேசம் இங்குள்ளவள் இதயமற்ற சுடுகாட்டுப் பேய் அமைதியின் படுக்கையில் அரசியல் மேசை அதனுள்ளே நடப்பது அக்கிரம பூசை யாருக்கும் புரியாது தடுக்கவும் முடியாது ஒற்றுமையாய் இணைந்து எழுப்புவோம் குரலோசை. உரிமைக்காய் போராடத் தோன்றும் மனம் போராடினால் ஆகிவிடும் உடல் பிணம் செத்து விட்ட மனிதம் எதிலும் இல்லை புனிதம் மௌனியாய் இருப்பதுவே நடப்பு குணம் குப்பைகளை சேகரிப்போனே பெறுகிறான் பரிசில் அட்டூழியங்களுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™