Tamil News | Online Tamil News |
- 49 நாள் முதல்வராக நீடித்த கெஜ்ரிவால் ராஜினாமா: 'லோக்பால்' விவகாரத்தால் பதவிக்கு முழுக்கு
- டில்லியில் நிருபர்களிடம் விஜயகாந்த் பாய்ச்சல்: கூட்டணி பற்றிய கேள்விக்கு கோபம்
- ராணுவ தளவாடங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நரேந்திர மோடி விருப்பம்
- மம்தாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம்:அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
- 'கத்துக்குட்டி ராஜ் தாக்கரே': உத்தவ் தாக்கரே கிண்டல்
- வருத்தம் தெரிவித்தார் 'பெப்பர் ஸ்பிரே' ராஜகோபால்
- தி.மு.க.,வுக்கு விஜயகாந்த் ஆதரவு தருவார்: கருணாநிதி நம்பிக்கை
- 'அடுத்த முதல்வராக நீங்கள் வரணும்!': பிரதமர் சொல்லிட்டாருனு விஜயகாந்த் அலட்டல்
- தி.மு.க., மாநில மாநாட்டில் காங்.,கிற்கு எதிரான தீர்மானம்?
- மூன்று மாதங்கள் 'வெயிட்' பண்ணுங்க!: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுரை
- வல்லூர் 3வது அலகில் மின் உற்பத்தி எப்போது?என்.டி.பி.சி., மீது மின்வாரிய அதிகாரிகள் அதிருப்தி
- திரும்பி வந்த நீதிபதி பரிந்துரை பட்டியல்
| 49 நாள் முதல்வராக நீடித்த கெஜ்ரிவால் ராஜினாமா: 'லோக்பால்' விவகாரத்தால் பதவிக்கு முழுக்கு Posted: புதுடில்லி: 'ஜன லோக்பால்' மசோதாவை, மாநில லெப்டினன்ட் கவர்னர் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி தாக்கல் செய்யக் கூடாது' என, டில்லி சட்டசபையில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூறிய தால், தான் விரும்பிய படி, அந்த மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் போன ஏமாற்றத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், 'ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்.இதனால், கடந்த, 49 நாட்களாக டில்லியில் நடந்த பரபரப்பு அரசியல் முடிவுக்கு வந்தது.டில்லியில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி, அமைத்த நாளில் இருந்து, எல்லா விஷயங்களிலும், ஒரே குழப்பமும், சட்டத்திற்கு கட்டுப்படாத ... |
| டில்லியில் நிருபர்களிடம் விஜயகாந்த் பாய்ச்சல்: கூட்டணி பற்றிய கேள்விக்கு கோபம் Posted: டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவரை, நிருபர்கள் பேட்டி காண முயன்ற போது, அவர்களை நோக்கி, நாக்கை துருத்தி, கையை நீட்டி, ''உனக்கெல்லாம், எதுக்கய்யா, நான் பதில் சொல்ல வேண்டும்; போய்யா...'' எனக்கூறி, ஆவேசமாக, விஜய்காந்த் முன்னேற முயன்றதால், பாதியிலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்ததுஎல்.ஏ.,க்கள் அணிவகுப்பு:டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, பிரதமர் இல்லத்தை விட்டு வெளியே வந்த, விஜயகாந்தை, நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். பிரதமர் இல்லத்தின் எதிர்புறம் உள்ள ... |
| ராணுவ தளவாடங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நரேந்திர மோடி விருப்பம் Posted: மும்பை: ''எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியை குறைத்து, எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க, தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்கள் பாடுபட வேண்டும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பேசினார்.'வெப்காஸ்ட்':'நாஸ்காம்' எனப்படும், கம்ப்யூட்டர் சேவை, மென்பொருள் தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில், நரேந்திர மோடி நேற்று, இணையதளம் மூலம், 'வெப்காஸ்ட்' என்ற முறையில் பேசியதாவது:தகவல் தொழில்நுட்பத்தை குறிக்க, பயன்படுத்தப்படும், ஆங்கில வார்த்தையான, ... |
| மம்தாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம்:அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு Posted: கோல்கட்டா:மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பிரசாரம் செய்யப் போவதாக, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பை நடத்தி வரும் ஹசாரே, பிரதமர் உட்பட நாட்டின் உயர் பதவியில் உள்ளவர்களைக் கூட, விசாரிக்க வகை செய்யும், 'லோக்பால்' சட்டத்தை கொண்டு வர, கடந்த சில ஆண்டுகளாக கடும் முயற்சி எடுத்து, வெற்றி கண்டுள்ளார்.அவரின் அணியில் இடம்பெற்றிருந்த, அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக ஆன பின், அன்னா ஹசாரேவுக்கு, அரசியல் வட்டாரங்களில், ... |
| 'கத்துக்குட்டி ராஜ் தாக்கரே': உத்தவ் தாக்கரே கிண்டல் Posted: மும்பை: 'எப்படி போராட்டம் நடத்த வேண்டும் என, தெரியாமல், அரையும் குறையுமாக, போராட்டம் நடத்தி, தான் ஒரு, 'கத்துக்குட்டி' என்பதை, ராஜ் தாக்கரே நிரூபித்து விட்டார்' என, சிவசேனா கிண்டல் செய்துள்ளது.சிவசேனா தலைவர், மறைந்த, பால் தாக்கரேயின், அண்ணன் மகன், ராஜ் தாக்கரே, 'மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' என்ற கட்சியை நடத்தி வருகிறார். நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள, வாகன கட்டண வசூல் மையங்களை அகற்றக் கோரி, நேற்று முன்தினம், ராஜ் தாக்கரே, சாலை மறியல் போராட்டம் அறிவித்தார். போராட்டம் துவங்கிய, சில நிமிடங்களிலேயே, அவர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில், ... |
| வருத்தம் தெரிவித்தார் 'பெப்பர் ஸ்பிரே' ராஜகோபால் Posted: புதுடில்லி: ''லோக்சபாவில், 'பெப்பர் ஸ்பிரே' அடித்ததற்காக வருந்துகிறேன். எனினும், இதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை; எங்கள் பகுதி, எம்.பி.,யை காப்பாற்றவே அவ்வாறு செய்தேன்,'' என, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ஆந்திராவின், விஜயவாடா தொகுதி, எம்.பி., ராஜகோபால் கூறினார்.லோக்சபாவில் நேற்று, தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து, அமளியில் ஈடுபட்ட, ஆந்திர, எம்.பி.,க்களில் ஒருவரான, அதிக ஆத்திரம் அடைந்த, ராஜகோபால், 'பெப்பர் ஸ்பிரே' எனப்படும், பயங்கர, காரமான, கலவர தடுப்பு மருந்தை பயன்படுத்தினார். அதை சுவாசித்த, எம்.பி.,க்கள் பலர், மருத்துவமனைகளில் ... |
| தி.மு.க.,வுக்கு விஜயகாந்த் ஆதரவு தருவார்: கருணாநிதி நம்பிக்கை Posted: "தி.மு.க., கூட்டணிக்கு, யாராக இருந்தாலும் ஆதரவு தருவர். பிடிகொடுக்காமல் இருக்கும், 'ஸ்டன்ட்' நடிகர் விஜயகாந்த், இதில் விதிவிலக்கு அல்ல," என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, திருச்சியில், இன்று துவங்குகிறது. மாநாட்டு திடலை, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று காலை பார்வையிட்டார். பின், அவருக்காக கட்டப்பட்ட, குடிலில் பத்திரிகையாளர் களை சந்தித்தார்.அவர் அளித்த பேட்டி:திருச்சி மாநாட்டை, லோக்சபா தேர்தல் வெற்றிக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாமா? லோக்சபா தேர்தல் வெற்றிக்கு மட்டுமல்ல; தமிழகத்தில் ஆட்சி ... |
| 'அடுத்த முதல்வராக நீங்கள் வரணும்!': பிரதமர் சொல்லிட்டாருனு விஜயகாந்த் அலட்டல் Posted: தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை பிரச்னை உட்பட, பல விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மன்மோகனுக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், இரு முறை கடிதம் எழுதினார். அதற்கு எந்தப் பதிலும் இல்லை.அதனால், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், பிரதமரைசந்திக்க அனுமதி கோரி, இரு மாதங்களுக்குமுன், விஜயகாந்த் மீண்டும் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்திற்கு,பிரதமரிடம் இருந்து பதில் வந்தது. நேற்று பிரதமரை சந்திக்க, விஜயகாந்திற்குஅனுமதி அளிக்கப்பட்டது.இதையடுத்து, விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 20 பேருடன், நேற்று ... |
| தி.மு.க., மாநில மாநாட்டில் காங்.,கிற்கு எதிரான தீர்மானம்? Posted: 'தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம்' என, சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்கு செல்லும் முன், சென்னையில், நேற்று முன்தினம், பேட்டி அளித்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, அப்படிப்பட்ட ஒரு கூட்டணி அமையாது என, தெரிவித்தார்.நேற்று, திருச்சியில் பேட்டி அளித்த போது, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை, குறிப்பால் உணர்த்தும் வகையில், 'கூடா நட்பு கூடாது' என, தெரிவித்தார். அதே நேரத்தில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, தே.மு.தி.க.,வுக்கு மட்டும், அழைப்பு விடுத்து வருகிறார்.இன்றும், நாளையும், திருச்சியில் நடைபெற உள்ள, ... |
| மூன்று மாதங்கள் 'வெயிட்' பண்ணுங்க!: ஆதரவாளர்களுக்கு அழகிரி அறிவுரை Posted: மதுரை : ''பதவி என்பது கால் தூசிக்கு சமம்; மூன்று மாதங்கள், 'வெயிட்' பண்ணுங்க, நல்ல முடிவு வரும்,'' என, மதுரையில் நடந்த, ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி தெரிவித்தார்.அழகிரி பேசியதாவது:நான் மதுரைக்கு வந்த போது, முதலில் அறிமுகமாகிய நபர், தற்போது பதவி இழந்துள்ள, அவைத் தலைவர் இசக்கிமுத்து தான். அரசியலில் அடியெடுத்து வைக்க, அவர் காரணமாக இருந்தார். அன்று எந்த பதவியும் இல்லாமல், சாதாரண தொண்டனாக இருந்தபோதும், என்னை சுற்றி தீவிர ஆதரவாளர்கள் இருந்தனர். பலர் பதவிகள் பெற்றனர்.பல இன்னல்கள்: அவர்கள், தற்போது ... |
| வல்லூர் 3வது அலகில் மின் உற்பத்தி எப்போது?என்.டி.பி.சி., மீது மின்வாரிய அதிகாரிகள் அதிருப்தி Posted: வல்லூர் அனல்மின் நிலையத்தின், மூன்றாவது அலகில், குறித்த காலத்திற்குள், மின் உற்பத்தி துவங்காததால், மின்தடை நேரம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், என்.டி.பி.சி., மீது, மின் வாரிய அதிகாரிகள், அதிருப்தியில் உள்ளனர்.தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல்மின் கழகமான, என்.டி.பி.சி.,யும் இணைந்து, என்.டி.சி.இ.எல்., என்ற கூட்டு நிறுவனம், சென்னையை அடுத்த, வல்லூரில், தலா, 500 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, மூன்று அலகுகளை அமைக்க திட்டமிட்டது. 9,000 கோடி ரூபாய் செலவில், மேற்கொள்ளப்படும், இந்த அனல்மின் நிலைய கட்டுமான பணிகள், 2008ல் துவங்கியது.75 ... |
| திரும்பி வந்த நீதிபதி பரிந்துரை பட்டியல் Posted: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, ஆர்.கே.அகர்வால், நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய குழு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு, 12 பேரை பரிந்துரைத்தது. இந்தப் பட்டியல், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர்கள், வழக்கறிஞர்களுக்கு தெரிய வந்த உடன் கொந்தளித்தனர். 'பட்டியல் முறையானதாக இல்லை; அதை திரும்பப் பெற வேண்டும்' என, கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நீதிபதிகள் பரிந்துரை பட்டியலை திருப்பி அனுப்ப, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 15,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |