Tamil News | Online Tamil News |
- நாளை பிரசாரத்தை துவக்குகிறார் சோனியா
- இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி: வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தது அரசு
- லோக்சபாவில் 'பெப்பர் ஸ்பிரே!' அடித்தார் ஆந்திர காங்., - எம்.பி.,: வரலாறு காணாத சம்பவங்களால் பார்லி ஸ்தம்பிப்பு
- காங்கிரசுடன் கூட்டணியா: கருணாநிதி மறுப்பு
- கூவத்தை சுத்தப்படுத்த ரூ.3,800 கோடி: சாலைகள் உள்ளிட்ட 17 திட்டங்களுக்கு ரூ.2,000 கோடி கடன் வாங்க முடிவு
- மோடியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு: குஜராத் அரசுக்கு பாராட்டு
- காங்கிரசுடன் மீண்டும் கூட்டணியா? ஸ்டாலின் கொந்தளிப்பு; பிரசாரம் செய்ய மறுப்பு
- ஆண்களுக்கு ரூ.50; பெண்களுக்கு ரூ.20: தி.மு.க., மாநாடு நுழைவுக் கட்டணம்
- காதலில் இதுவும் ஒரு நிலை: காதலனுக்காக வைர நகை திருடிய பெண் கைது
- 'சுத்த' தமிழில் அசத்திய சீனப்பெண்கள்: 'தங்லீஷ்' நபர்களுக்கு 'பாடம்'
| நாளை பிரசாரத்தை துவக்குகிறார் சோனியா Posted: திருவனந்த புரம் : கேரளாவி்ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர் சோனியா முறைப்படி பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளார்.தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு்ள்ள நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தலைமையிலான குழு ஒன்றை சோனியா அறிவி்ததார். இந்த அறிவிப்பை ... |
| இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி: வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தது அரசு Posted: சென்னை: தமிழக அரசு, நேற்று, வரி இல்லாத பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தது. தமிழகத்தின், 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மொத்த வருவாய், 1.27 லட்சம் கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வருவாயில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என்ற பெயரில், இலவசங்களுக்காக, 48 ஆயிரம் கோடி ரூபாய், செலவிடப்படுகிறது. மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு, 35 ஆயிரத்து 720 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. இலவசங்கள் மற்றும் ஊதியத்துக்கு, மொத்தமாக, 84 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகிறது. இது, மொத்த வருவாயில், 67 சதவீதம். மாநிலத்தின் நிதி பற்றாக்குறை, 26 ஆயிரம் கோடி ரூபாய் என, ... |
| Posted: தெலுங்கானா மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய, மத்திய அரசு தரப்பில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிராக, அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என்ற அச்சம் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.காலை, 11:00 மணிக்கு, லோக்சபா துவங்கியதும், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயை, தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்யுமாறு, சபாநாயகர் மீரா குமார், அழைத்தார். ஷிண்டே எழுந்த மறுகணமே, சபைக்குள் பெரும் ரகளை மூண்டது. லோக்சபாவுக்குள் நடந்த ரகளையின் போது, உச்சகட்டமாக, 'பெப்பர் ஸ்பிரே' மயக்க மருந்தை, பீய்ச்சியடித்ததால், ... |
| காங்கிரசுடன் கூட்டணியா: கருணாநிதி மறுப்பு Posted: சென்னை: ''தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., இடையே, கூட்டணி அமையும் சூழ்நிலை இல்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.திருச்சி மாநாட்டிற்கு செல்லும் முன், சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: திருச்சியில், தி.மு.க., சார்பில் நடைபெறும் மாநாடுகள், எப்போதுமே திருப்புமுனை மாநாடுகளாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில், நாளை முதல், இருநாட்கள் நடைபெறும் மாநாடும், திருப்புமுனை மாநாடாக, இந்திய துணை கண்டத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் மாநாடாக அமையும். எங்கள் கூட்டணிக்கு, புதிய கட்சிகள் வரலாம், வராமலும் இருக்கலாம். நாங்கள் எடுத்த முடிவை ... |
| Posted: சென்னை: தமிழக அரசின் 2014-15ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூவத்தை சுத்தப்படுத்துதல், சேத்துப்பட்டு ஏரி புனரமைப்பு, மருத்துவமனைகள் மேம்பாடு, கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்தல் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.கூவம் நதி சீரமைப்பு: கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கு, இந்த நிதியாண்டில், 3,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இந்த சீரைமப்பின் போது பாதிக்கப்படக் கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் ... |
| மோடியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு: குஜராத் அரசுக்கு பாராட்டு Posted: காந்திநகர்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், நான்சி பவல், குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசியதன் மூலம், மோடி மீதான, 13 ஆண்டு கால புறக்கணிப்பை அமெரிக்கா கைவிட்டுள்ளது.குற்றச்சாட்டு: நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு, 2005 முதல், 'விசா' வழங்க மறுத்து வந்தது. '2002ல், குஜராத்தில் நடந்த மத கலவரங்களை ஒடுக்கத் தவறினார்' என, மோடி மீது கூறப்பட்ட, தவறான குற்றச்சாட்டுகளின் படி, அமெரிக்கா, மோடிக்கு, விசா வழங்க மறுத்து வந்தது. எனினும், அவர், 'வீடியோ ... |
| காங்கிரசுடன் மீண்டும் கூட்டணியா? ஸ்டாலின் கொந்தளிப்பு; பிரசாரம் செய்ய மறுப்பு Posted: தமிழகத்தில், புதிய கூட்டணியை ஏற்படுத்த, காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வுடன் பேசி, கூட்டணியை உறுதி செய்துள்ள காங்., தலைமை, தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தி.மு.க., தரப்பிலும், கனிமொழி உட்பட, சிலர், காங்., கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். அதனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கட்சிகள், ஓரணியில் வரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் நேற்று, இந்த தகவலை மறுத்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ''தி.மு.க., தலைமையில், தற்போதுள்ள கூட்டணியில், எந்த மாற்றமும் இல்லை,'' என, தெரிவித்துள்ளார்.கூட்டணியில் சேர்த்தால்: கருணாநிதியின் இந்த ... |
| ஆண்களுக்கு ரூ.50; பெண்களுக்கு ரூ.20: தி.மு.க., மாநாடு நுழைவுக் கட்டணம் Posted: திருச்சி: தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, நுழைவுக் கட்டணமாக, ஆண்களுக்கு, 50 ரூபாயும், பெண்களுக்கு, 20 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது.தி.மு.க.,வின், 10 வது மாநில மாநாடு, திருச்சியில், வரும், 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளன. விடுப்பட்ட சில பணிகள் மட்டுமே, தற்போது நடந்து வருகின்றன. மாநாட்டில், பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே பிரமாண்ட, எல்.இ.டி., ... |
| காதலில் இதுவும் ஒரு நிலை: காதலனுக்காக வைர நகை திருடிய பெண் கைது Posted: காஞ்சிபுரம்: காதலனின் மருத்துவப் படிப்புக்காக, நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை, காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.காஞ்சிபுரம் எம்.எம்., அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 10ம் தேதி, இவரது வீட்டில், வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஜெயகுமாரிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வரும் ... |
| 'சுத்த' தமிழில் அசத்திய சீனப்பெண்கள்: 'தங்லீஷ்' நபர்களுக்கு 'பாடம்' Posted: திருநெல்வேலி: நெல்லை பல்கலை விழாவில் பங்கேற்ற, சீன வானொலியின் பெண் அறிவிப்பாளர்கள், 'சுத்த' தமிழில் பேசி அசத்தினர்.ஐ.நா., சபையின் 'யுனெஸ்கோ' சார்பில், பிப்., 13 அன்று 'சர்வதேச வானொலி தினம்' கொண்டாடப்படுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தொடர்பியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சீன அரசு வானொலியின், தமிழ் ஒலிபரப்பு பிரிவு, பெண் அறிவிப்பாளர்கள் ஷன்ஷிங், ஷோசின் பங்கேற்றனர். துறைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் தொகுத்து வழங்கினார். ஷன்ஷிங், ஷோசின் இருவரும், ஒரு வார்த்தை கூட வேறு மொழி கலக்காமல், 'சுத்த' தமிழில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |