Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரயில் பட்ஜெட்டில் பயணிகள், சரக்கு கட்டண உயர்வு இல்லை: விமான கட்டணம் போல் 17 'பிரீமியம் எக்ஸ்பிரஸ்' அறிமுகம்

Posted:

புதுடில்லி: ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்த, இடைக்கால, ரயில்வே பட்ஜெட்டில், லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, பயணிகள், சரக்கு கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. எனினும், விமானக் கட்டணம் போன்று, அதிக வசூலை ஈட்டித் தரும், 17 'பிரீமியம் எக்ஸ்பிரஸ்' ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, அறிவித்தார்.நடப்பு, 15வது லோக்சபாவின் பதவிகாலம், மே மாதம் முடிவடைகிறது. அதற்கு முன், ஏப்ரல் அல்லது மே மாதத்தில், 16வது லோக்சபாவுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு தான், முழு அளவிலான ரயில்வே பட்ஜெட்டை ...

அரிசிக்கு வசூலித்த வரியை திருப்பி கொடுங்கள்: பிரதமருக்கு ஜெ., கடிதம்

Posted:

சென்னை: 'அரிசியை வேளாண் விளை பொருளாக, அறிவிக்க வேண்டும். அதன் மீதான, சேவை வரியை, ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே வசூலித்த வரியை திருப்பி கொடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: மத்திய நிதி அமைச்சகம், நியாயமற்ற முறையில், அரிசிக்கு, சேவை வரி விதித்துள்ளது. கடந்த, 2012ல், சேவை வரியில், மாற்றம் செய்யப்பட்டபோது, 'வேளாண் விளை பொருள்' என்ற அடிப்படையிலும், மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, சேவை வரி விலக்கில் இருந்து, அரிசி நீக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர், பொது வினியோகம் மற்றும் ...

ரயில்வே பட்ஜெட்டில் வழக்கம் போல் தமிழகம் புறக்கணிப்பு: அள்ளின மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்கள்

Posted:

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடோ, முக்கிய புதிய ரயில்களோ, புதிய ரயில் தடங்களோ, புதிய திட்டங்களோ எதுவும் இல்லாமல், வழக்கம்போல, இந்த முறையும், ரயில்வே பட்ஜெட், தமிழகத்தை புறக்கணித்துள்ளது. அதே நேரத்தில், வட மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்திற்கு, பல திட்டங்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு முறை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், தமிழகத்தில் நடைபெற்று வரும், ரயில்வே திட்டங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகும்.'பிரீமியம் ரயில்கள்': எதிர்பார்ப்புகளை ஏமாற்றும் விதத்தில், பட்ஜெட் உரைகளில், ...

பொதுமக்கள் அரசியல் அறிவு பெற வேண்டும்: டீ கடையில் மோடி பேச்சு

Posted:

ஆமதாபாத்: ''மத்திய காங்., அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்,'' பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள டீ கடையில் அமர்ந்து, நாட்டின் பல நகரங்களில் 1000 டீ கடைகளில் டி.டி.எச்., தொழில்நுட்பம் மூலம் நரேந்திர மோடி கலந்துரையாடினார். ''டீ அருந்தி கொண்டே விவாதிக்கலாம்,'' எனக் கூறிய அவர், ''தேநீரும், தொழில் நுட்பமும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது என்றார். பின், ''மோசமான நிர்வாகத்துக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக உள்ளது. இது குறித்து சாதாரண மக்கள் தொடர்ந்து விவாதிக்கின்றனர். மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை ...

'கொக்கி' போட்டு மின்சாரம் திருடும் கட்சிகள்: தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்க மின் வாரியம் முடிவு

Posted:

லோக்சபா தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு, அரசியல் கட்சிகள், முறையாக விண்ணப்பிக்காமல், மின்சாரத்தை, திருட்டுத்தனமாக எடுத்தால், அதற்கான கட்டண விவரங்களை, தேர்தல் கமிஷனிடம் புகாராக அளிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.மின் பற்றாக்குறை: தமிழகத்தில், மின் தேவை, 12,000 மெகாவாட்; மின் உற்பத்தி, சராசரியாக, 8,000 - 9,000 மெகாவாட்; மின் பற்றாக்குறை, 3,000 மெகாவாட். கோடை காலத்தில், மின் பற்றாக்குறை, 4,000 மெகாவாட்டாக உயரும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே, அரசியல் கட்சிகளின், பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில், முறையாக விண்ணப்பிக்காமல், மின்சாரத்தை ...

'கேப்டன்' பட்டம் பறிபோகுமா? விஜயகாந்திற்கு திடீர் சிக்கல்

Posted:

'ராணுவ பொறுப்பில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்படும், 'கேப்டன்' என்ற அடைமொழியை, அரசியல்வாதியான விஜயகாந்த் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என, தமிழக உள்துறை செயலருக்கு, காந்தியவாதியும், முன்னாள் ராணுவ வீரருமான கண்ணன் கோவிந்தராஜ் கடிதம் அனுப்பி உள்ளார்.திருப்புமுனை: திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி, தற்போது, தே.மு.தி.க., என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர், விஜயகாந்த். இயக்குனர், ஆர்.கே.செல்வமணி இயக்கிய, 'கேப்டன் பிரபாகரன்' என்ற திரைப்படம், நடிகர் விஜயகாந்துக்கு, அவரின் திரைஉலக வாழ்வில், பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனால், ...

தி.மு.க., கட்சியை விட 'டாப்!': காங்., 'டிக்கெட்'டிற்கு போட்டி!

Posted:

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கென கூட்டணி எதுவும் இல்லை. தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளை இணைத்து, வலுவான அணி அமைக்கும் முயற்சியை, இப்போது தான் துவங்கியுள்ளது. அதற்குள், வேட்பாளர் தேர்வில் இறங்கி விட்டது. இதற்காக, கடந்த இரண்டு நாட்களாக, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடத்தப்பட்டது. தமிழக காங்கிரஸ் அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்நிகழ்ச்சியில், 39 தொகுதிகளுக்கு, 1,200 பேர் வரை, மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பரிசீலிப்பதற்காக, கட்சியின் தேர்தல் குழு நேற்று முதல் முறையாக கூடியது. 25 பேர் கொண்ட, ...

பையனிடம் சொல்லி, அம்மாவிடம் சொல்லி... காங்., - தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரம்

Posted:

விஜயகாந்தின் தே.மு.தி.க., யார் பக்கம் சாயும் என்ற கேள்விக்கு, விடை தெரியாத நிலையில், தமிழக அரசியலில், திடீர் திருப்பமாக, தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., கூட்டணி அமைக்க, பேச்சுவார்த்தைகள் துவங்கி உள்ளன.மேலும், தே.மு.தி.க.,வின் எதிர்பார்ப்பை, காங்கிரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும் எனக் கூறப்படுவதால், இரு கட்சிகளும் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டில்லி காங்., தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், முகுல் வாஸ்னிக் ஆகியோர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, காங்., மேலிட ...

பார்லி., அமளியை பார்த்து பிரதமர் இதயத்தில் ரத்தம் கசிகிறதாம்!

Posted:

புதுடில்லி: ''பார்லிமென்ட்டில் நடக்கும் அமளியை பார்த்து, என் இதயத்தில் ரத்தம் கசிகிறது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக கூறினார்.பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: கடந்த சில நாட்களாக, பார்லி மென்ட்டின், இரு சபைகளிலுமே, தெலுங்கானா உள்ளிட்ட பிரச்னைகளால், கடும் அமளி நிலவுகிறது. கூச்சல், குழப்பம் காரணமாக, சபையை நடத்த முடியாமல், ஒத்திவைக்க வேண்டிய சூழல் உள்ளது. இது, ஜனநாயக நடைமுறைக்கு ஏற்பட்டுள்ள, மிகப் பெரிய துயரம். சபையில் நடக்கும் அமளியை பார்த்து, என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. சபையை சுமுகமாக நடத்த, ஒத்துழைப்பு அளிக்கும்படி, அனைத்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™