Tamil News | Online Tamil News |
- ராஜ்யசபாவில் அ.தி.மு.க., தி.மு.க., எம்.பி.,க்கள் ரகளை: காகிதம் கிழிப்பு, மைக் உடைப்பால் சபை ஒத்திவைப்பு
- 'லோக்பால் மசோதாவுக்காக ராஜினாமா செய்ய தயார்': அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மிரட்ட ல்
- அழிவை ஏற்படுத்திய காங்., ஆட்சி : நரேந்திர மோடி ஆவேசம்
- மூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரம் : நிதிஷ்குமாருடன் கம்யூ., தலைவர்கள் ஆலோசனை
- பா.ஜ.,வை முறியடிக்க முலாயம், மாயாவதி புது திட்டம்: தலித்கள், முஸ்லிம்கள் ஓட்டுகளை அள்ள தீவிரம்
- '5 நாளில் முடிவை சொல்லுங்க!': பா.ம.க., - தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., கெடு
- மணமாகாத ஒருவரே பிரதமராகும் வாய்ப்பு
- கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவில்... : ராமதாஸ் 'சூசக' பேட்டி
- 'பட்ஜெட் தொடர் முடியும் வரை மின் உற்பத்தியை குறைக்காதீங்க'
- உ.பி.,யில் முஸ்லிம் ஓட்டுகளை கவர முலாயம் முயற்சி
- காங்., - தேசியவாத காங்., மகா.,வில் தொகுதி பங்கீடு
| Posted: அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்களின் அமளி காரணமாக, ராஜ்யசபாவில் நேற்று, வரலாறு காணாத, ரகளை ஏற்பட்டது. சபைத் தலைவர், ஹமீத் அன்சாரி முன் இருந்த, மைக்குகள் உடைக்கப்பட்டன. அலுவல் குறிப்பேடுகள் கிழிக்கப்பட்டு, சபையில் பறக்க விடப்பட்டதால், ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.குளிர்கால கூட்டத்தொடருக்காக, கடந்த, 5ம் தேதி, பார்லிமென்ட் கூடியது. துவங்கிய நாளில் இருந்து, தமிழக மீனவர்கள் பிரச்னையை விவாதிக்க வேண்டுமென, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகளின், எம்.பி.,க்கள் கோரி வருகின்றனர்.இரு கட்சிகளுமே, இது குறித்து விவாதிக்க, தினமும், 'நோட்டீஸ்' அளித்த போதிலும், சபைத் ... |
| 'லோக்பால் மசோதாவுக்காக ராஜினாமா செய்ய தயார்': அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மிரட்ட ல் Posted: புதுடில்லி: 'ஊழலை ஒழிக்கும், ஜன லோக்பால் மசோதாவுக்காக, என் முதல்வர் பதவியை, ஆயிரம் முறை ராஜினாமா செய்யத் தயார்' என, மத்திய அரசுக்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.டில்லி முதல்வரும், 'ஆம் ஆத்மி' கட்சி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி சட்டசபையில், ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில், தீவிரமாக உள்ளார். 'டில்லி மாநில அரசின் மசோதாக்களுக்கு, மத்திய அரசிடம் ஒப்புதல் பெற மாட்டேன்' என, ஆவேசமாக கூறியிருந்தார்.இந்நிலையில், இந்தி மொழி, 'டிவி' சேனலுக்கு, கெஜ்ரிவால் அளித்துள்ள பேட்டி:சாதாரண மக்களின் கைகளில், ... |
| அழிவை ஏற்படுத்திய காங்., ஆட்சி : நரேந்திர மோடி ஆவேசம் Posted: காந்தி நகர் : ''சுதந்திர இந்தியா வரலாற்றில், ஐ.மு., கூட்டணி ஆட்சியின், கடந்த, 10 ஆண்டு காலம், நாட்டின் வளர்ச்சிக்கு அழிவை ஏற்படுத்திய, மிக மோசமான காலம்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், காந்தி நகர் அருகே, பா.ஜ., புதிய அலுவலக திறப்பு விழாவில், நேற்று பேசியதாவது:நாட்டின், பொருளாதாரம், தற்போது ஒட்டு மொத்தமாக சீர்குலைந்து உள்ளது. மத்தியில், கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும், காங்கிரஸ் கட்சி தான், இதற்கு காரணம்.சாமானிய மக்களின் பாதுகாப்பு, கேள்விக்குறியாகி ... |
| மூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை மும்முரம் : நிதிஷ்குமாருடன் கம்யூ., தலைவர்கள் ஆலோசனை Posted: புதுடில்லி : காங்., - பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை அமைப்பது குறித்து, ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான, நிதிஷ் குமார், இடதுசாரி கட்சி தலைவர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக, வரும் லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணியை உருவாக்கு வதற்கான நடவடிக்கைககள், தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. இடதுசாரி கட்சி தலைவர்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 'பிரேக்பாஸ்ட் மீட்டிங்': கடந்த 5ம் தேதி, டில்லியில், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, அ.தி.மு.க., ... |
| பா.ஜ.,வை முறியடிக்க முலாயம், மாயாவதி புது திட்டம்: தலித்கள், முஸ்லிம்கள் ஓட்டுகளை அள்ள தீவிரம் Posted: நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம், உத்தர பிரதேசம். 80 லோக்சபா தொகுதிகளை உடைய, இம்மாநிலத்தில், வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது, பாரதிய ஜனதா கட்சி. அதற்கேற்ற வகையில், தீவிர பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும், அதிக தொகுதிகளை கைப்பற்ற, திட்டம் வகுத்து செயல்படுகிறது.ஆனால், இந்த இரு தேசிய கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையிலும், தங்களுக்கு சாதகமாக ஓட்டுகளைப் பெறவும், குறிப்பாக, தலித் ஓட்டுகளைப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி ... |
| '5 நாளில் முடிவை சொல்லுங்க!': பா.ம.க., - தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., கெடு Posted: 'தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் கூட்டணி முடிவை, வரும், 15ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., கெடு விதித்துள்ளது. அதற்குள் முடிவை தெரிவிக்காவிட்டால், இக்கட்சிகளின் வருகைக்காக, காத்திருக்கப் போவதில்லை என்றும், தற்போதுள்ள கட்சி களின் துணையோடு, தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை, வரும், 15ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும், கூட்டணி பற்றிய பேச்சு நீடிக்கக் கூடாது என்றும், தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் எனவும், பா.ஜ., தலைமை ... |
| மணமாகாத ஒருவரே பிரதமராகும் வாய்ப்பு Posted: பா.ஜ., தன் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை முன்னிறுத்தியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி, தங்களின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாகஅறிவிக்கவில்லை. தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், அடுத்த பிரதமர், ராகுல் தான் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.மொத்தம், 80 லோக்சபா தொகுதிகளை உடைய, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சியான, பகுஜன் சமாஜும், பிரதமர் பதவியை குறிவைத்தே, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி என, அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில், பிரதமர்வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர் ... |
| கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவில்... : ராமதாஸ் 'சூசக' பேட்டி Posted: சென்னை: ''தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.பா.ம.க., சார்பில், 'மாதிரி பட்ஜெட்' நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அதை வெளியிட்ட அக்கட்சி, நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:பா.ம.க., சார்பில், 11 ஆண்டுகளாக, தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன், மக்கள் மன்றத்தில் 'மாதிரி பட்ஜெட்' வெளியிட்டு வருகிறோம். இந்த நடைமுறை மேற்கத்திய நாடுகளில் உள்ளன. நாங்கள் வெளியிட்டது 12வது பட்ஜெட்இதில் முக்கிய ... |
| 'பட்ஜெட் தொடர் முடியும் வரை மின் உற்பத்தியை குறைக்காதீங்க' Posted: 'சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை, குடியிருப்புகளுக்கு, சீராக மின் வினியோகம் வழங்க வேண்டும். அதனால், அனல்மின் நிலையங்களில், மின் உற்பத்தியை குறைக்க வேண்டாம்' என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.வரும், 13ம் தேதி, சட்டசபை கூடுகிறது. அப்போது, எதிர்க்கட்சிகள், மின்தடை குறித்து, பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், சட்டசபை முடியும் வரை, குடியிருப்புகளுக்கு, மின்தடை செய்யாதவாறு, மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, ... |
| உ.பி.,யில் முஸ்லிம் ஓட்டுகளை கவர முலாயம் முயற்சி Posted: உ.பி.,யில், முசாபர்நகர் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, முஸ்லிம்களின் ஓட்டுகளை கவரவும், அந்த சமுதாயத்தினரின் ஓட்டுகளை, சமாஜ்வாதியில் தக்க வைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ள, முலாயம் சிங் யாதவ், பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்.முக்கிய முடிவுகள் : முதற்கட்டமாக, முஸ்லிம்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதிக்க, முடிவு செய்துள்ள முலாயம், உருது கல்வி நிலையங்கள் மேம்பாட்டிற்கு, பல திட்டங்களை அறிவிக்க வேண்டும் என, மகனும், மாநில முதல்வருமான, அகிலேஷ் யாதவிற்கு உத்தரவிட்டுள்ளார். கட்சித் தலைவர், முலாயம், அவர் மகன், முதல்வர், அகிலேஷ் மற்றும் ... |
| காங்., - தேசியவாத காங்., மகா.,வில் தொகுதி பங்கீடு Posted: மும்பை:மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்.,கட்சிகளுக்கு இடையே, லோக்சபா தேர்தல், தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், காங்., 26 இடங்களிலும், தேசியவாத காங்., 22 இடங்களிலும் போட்டியிட நேற்று முடிவு செய்யப்பட்டது.காங்., கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசில், மத்திய அமைச்சர், சரத் பவாரின் தேசியவாத காங்.,கட்சி அங்கம் வகிக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில், இவ்விரு கட்சிகளும், 26 22 இடங்களில் போட்டியிட்டன.அது போல், இந்த முறையும், இரு கட்சிகளும், தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 11,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |