Daily Thanthi |
- ரேஷன்கடை தொடர்ந்து செயல்படக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- காமரசவல்லி–சவுந்தரேசுவரர் சுவாமி கோவில் மகாகும்பாபிஷேகம் கலெக்டர் கலந்து கொண்டார்
- புன்னை வனநாதர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் பெருவிழா
- முதல்–அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை
- நமணசமுத்திரத்தில் பயனாளிகளுக்கு ரூ-1 கோடி கடன் உதவிகள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வழங்கினார்
- வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது
- ஜெயலலிதா பிறந்தநாள் விழா அ.தி.மு.க. மகளிர் அணியினர் பழனிக்கு பாதயாத்திரை மேயர் தலைமையில் 66 பேர் புறப்பட்டனர்
- கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- குறிப்பிட்ட சில பணிகளில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற சிறப்பு இளைஞர் காவல் படை தொடக்கம் 10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை ஜெயலலிதா வழங்கினார்
- ராணுவ வீரர்களுக்கு சான்றிதழ்கள் பிரிகேடியர் சுரேஷ்குமார் வழங்கினார்
| ரேஷன்கடை தொடர்ந்து செயல்படக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் Posted: 10 Feb 2014 02:49 PM PST ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை காலனியில் ரேஷன்கடை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறி யலில் ஈடுபட்டனர். திடீர் மறியல் ராமநாதபுரத்தை அடுத் துள்ள சூரங்கோட்டை கால னியில் 475 குடும்ப அட்டைதா ரர்கள் உள்ளனர். இங்கு கடந்த 35 ஆண்டுகளாக பகுதி நேர ரேஷன்கடை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இங்கிருந்த ரேஷன் கடை மூடப்பட்டு இடையர் வலசையில் ரூ.7 லட்சம் செல வில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று பொது மக் கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டது. மேலும் அப் பகுதிக்கு காவிரி குடிநீரும் முறையாக சப்ளை செய்யப் படவில்லையாம். இதனால் சூரங்கோட்டை காலனியை சேர்ந்த 50 பெண்கள் உள்பட 100க் கும் மேற்பட்ட பொது மக்கள் ராமநாதபுரம்-நயி னார் கோவில் சாலையில் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் தாசில்தார் திரு நீலகண்டபிள்ளை, வட்ட வழங்கல் அலுவலர் கோவிந் தன், போலீஸ் துணை சூப்பி ரண்டு அண்ணாமலையாழ் வார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது சூரங்கோட்டை கால னியில் உள்ள பகுதி நேர ரேஷன் கடை தற்காலிகமாக அதே இடத்தில் இயங்கும் என்றும், காவிரி குடிநீர் வினி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாசில் தார் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால் அப்பகு தியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. image: category: |
| காமரசவல்லி–சவுந்தரேசுவரர் சுவாமி கோவில் மகாகும்பாபிஷேகம் கலெக்டர் கலந்து கொண்டார் Posted: 10 Feb 2014 02:22 PM PST திருமானூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காமரசவல்லி சவுந்த ரேசுவரர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேகம் அரியலூர் மாவட்டம், திரு மானூர் ஊராட்சி ஒன்றியம், காமரசவல்லி சவுந்தரேசுவரர் சுவாமி திருக்கோவில் விமான மற்றும் மூலஸ்தான கும்பாபி ஷேகம் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை யில் அரியலூர் எம்.எல்.ஏ. மணிவேல் முன்னிலையில் நடைபெற்றது. கோவிலின் சிறப்பு காவிரி பாயும் சோழ மண் டலத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அரியலூர் மாவட்டம், வட்டம் காமரசவல்லி சவுந்தரேசுவரர் திருக்கோவில் சுந்தர சோழ மன்னரால் (கி.பி.957–974) சுமார்1050 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பெற்ற புராதான சரித்திர புகழ் பெற்ற திருக் கோவிலாகும். பரிஷித் மகா ராஜா பாம்பு தீண்டி இறந்து விட அவனுடைய மகன் ஜன மேஜெய மகாராஜா உலகில் உள்ள பாம்புகள் அழித்துவிட எண்ணி ஸர்பம் யாகம் செய்யும் போது உலகில் உள்ள எல்லா பாம்புகளும் யாகத்தீயில் விழுந்து மடிந்துவிட பாம்புகளின் தலைவனான கார்க்கோடன் மட்டும் மகா விஷ்ணுவை நோக்கி தவமிருக்க மகா விஷ்ணுவின் அறிவுரையின்படி இத்தலத்தில் உறையும் சிவப்பெருமானை வழிப்பட்டு தன்னுடன் குலம் தழைக்க வரத்தை கடக லக்கனம், கடக ராசியில் பெற்றார். கார்கோடேஸ்வரர் சுவாமி கார்க்கோடன் வரம் பெற்றதால் அன்றிலிருந்து கார்கோடேஸ்வரர் சுவாமி என பெயர் பெற்றார். மேலும், ஸ்ரீ கார்கோடேஸ்வரர் 2 கட்டளைகளை பிறப்பித்தார். தன்னை யார் வந்து வணங்கி னாலும் பல ஸர்பதோஷ விளைவுகளான திருமணத் தடை, உத்தியோகத்தடை, புத்திர பாக்கியமின்மை, தம்ப திக்குள் மனவேற்றுமை பிரிவு கள், கல்வித்தடை, சொல்ல தெரியாத, சொல்ல முடியாத வியாதிகள், மன குழப்பங்கள் இருக்க கூடாது என்றும் நிவர்த்தி தலமாக இருக்க வேண்டும். இந்த ஊரில் யாரையும் ஸர்பம் தீண்ட கூடாது. அப்படி தீண்டினால் அவர்கள் உயிர் இழக்க கூடாது என்றும் உறுதி வாங்கி கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை பாம்பு தீண்டி இறந்தவர்கள் யாருமில்லை. இத்தகைய சிறப்புகளை பெற்ற பழமையான இத் திருத்தலத்தின் திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பசாமி, வருவாய் அதிகாரி கணபதி, உதவி ஆணையர் (இந்து சமய அறநிலைத்துறை) ஜெகநாதன், செயல் அலுவலர் (பொ) மணி, தாசில்தார் முருகன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அன்பழகன், ஊராட்சி மன்றத்தலைவர் சிவாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். image: category: |
| புன்னை வனநாதர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் பெருவிழா Posted: 10 Feb 2014 01:59 PM PST நொய்யல், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா புன்னம் ஊராட்சியில் உள்ளது புன்னைவனநாதர் கோவில். இந்த கோவிலில் திருவாக முற்றோதுதல் பெரு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புன்னைவன நாயகி, புன்னை வனநாதர் உள்பட அனைத்து தெய்வங் களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டது. திருவாசக முற்றோதுதல் பெருவிழாவில் சிறப்பு விருந் தினராக திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவன டியார் திருக் கூட்டத்தை சேர்ந்த திருவாசக சித்தர் தாமோதரன் கலந்து கொண்டு திருவாசக முற்றோதுதலை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக் கணக்கான சிவனடி யார்கள் கலந்து கொண்டு திருவாசகத்தைப் பாடினர். விழாவில் கரூர், நாமக்கல், ஈரோடு மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும் புன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு, புன்னைவனநாயகி, புன்னைவனநாதரை தரிசனம் செய்து, திருவாசகத்தைப் பாடினர். image: category: |
| முதல்–அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை Posted: 10 Feb 2014 01:56 PM PST கரூர், கரூர் மாவட்ட அ.தி. மு.க.சார்பில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ முகாம் முதல்–அமைச்சர் ஜெய லலிதா பிறந்த நாளை முன் னிட்டு, கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இலவச மருத் துவ முகாம் நடந்தது. கரூர் சி.எஸ்.ஐ. பெண்கள் பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த முகாமிற்கு டாக்டர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். முது நிலை மேலா ளர் சாமுவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இருதய சிகிச்சை இந்த முகாமில் இருதய சிகிச்சை, நரம்பியல் மருத்து வம், பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், ஆஸ்துமா சிறப்பு சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை போன்ற பல் வேறு நோய் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பலர் மேல் சிகிச்சைக் காக பரிந்துரை செய்யப்பட் டனர். இதில் ஏராளமான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். நினைவு பரிசு பின்னர் மாலை முகாமில் சிகிச்சை அளித்த டாக்டர் கள், நர்சுகள், பணியாளர்கள் அனைவருக்கும் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செய லாளர் ஏ.ஆர்.காளியப்பன், பொருளாளர் முரளி, கரூர் தொகுதி செயலாளர் திருவிகா, இணை செய லாளர் வக்கீல் விஜய குமார், நகர செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய செய லாளர்கள் கமலக் கண்ணன், எம்.ஆர்.விஜய பாஸ்கர், மார்க்கண்டேயன். எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். image: category: |
| நமணசமுத்திரத்தில் பயனாளிகளுக்கு ரூ-1 கோடி கடன் உதவிகள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வழங்கினார் Posted: 10 Feb 2014 01:48 PM PST அரிமளம், அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை திறப்பு விழா, வங்கி தலைவரும், மேலாண்மை இயக்குனருமான நரேந்திரா தலைமையில், மண்டல மேலாளர்கள் சம்பந்தம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு, வங்கி கிளையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் டிராக்டர் கடன், சிறுதொழில் கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், நடப்பு ஆண்டில் 7 சதவீத வட்டியில் 4 கோடி விவசாயிகளுக்கு ரூ.7 லட்சம் கோடி விவசாய கடனாக வழங்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது, என்றார். விழாவில் முன்னதாக முதன்மை மண்டல மேலாளர் மாதவன் வரவேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குனர் சுஜாதா, முன்னாள் எம்.ஏல்.ஏ. சுப்புராம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ், வட்டார தலைவர்கள் முகம்மது இப்ராகீம், கணபதி அம்பலம், நமணசமுத்திரம் பூத் கமிட்டி பொறுப்பாளர் நடராஜன், அய்யாகண்ணுஅம்பலம், இளைஞர் காங்கிரஸ் முருகானந்தம், நகர தலைவர்கள் இப்ராகிம்பாபு, செல்லையா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன், சுந்தரகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை மேலாளர் சிவசங்கரன் நன்றி கூறினார். image: category: |
| வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது Posted: 10 Feb 2014 01:37 PM PST மயிலம் அருகே 2 கார்களில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை போலீ சார் கைது செய்தனர். காரில் மதுபாட்டில் கடத்தல் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மயிலம் வழியாக 2 கார்களில் மதுபாட்டில்கள் கடத்துவதாக மயிலம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளக்கொளத்தூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய ரங்கன் தலைமையிலும், செண்டூரில் சப்-இன்ஸ் பெக்டர் பிரபு தலைமையிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 கார்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 கார்களையும் போலீசார் மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ரூ.6 லட்சம் மதிப்பு அங்கு 2 காரையும் ஓட்டி வந்த டிரைவர்களிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை சித்தலம்பாக்கத்தை சேர்ந்த தம்பிரான் மகன் அருண்(வயது 27), கூடுவாஞ்சேரி மேட வாக்கத்தை சேர்ந்த சங்கர்(28) என்பது தெரிய வந்தது. மேலும் கார்களில் புதுச் சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் 241 மது பாட்டில் களும், விஷ சாராயமும் கடத்தியது தெரியவந்தது. உடனே 2 பேரையும் போலீ சார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களையும், அதை கடத்த பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத் திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. image: category: |
| Posted: 10 Feb 2014 12:21 PM PST திருப்பூர், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணியினர் 66 பேர் மேயர் விசாலாட்சி தலைமையில் நேற்று திருப்பூரில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். பாதயாத்திரை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாள் விழா வருகிற 24–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் 66 பேர் திருப்பூரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்று, பழனி முருகனுக்கு பால் குடம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேயர் விசா லாட்சி தலைமையில் திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் இருந்து மகளிர் அணி நிர்வாகி கள் 66 பேர் நேற்று மாலை பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. சீனியம்மாள், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெகதாம் பாள், திருப்பூர் மாநகர மகளிர் அணி செயலாளர் கீதா ஆறு முகம், மாவட்ட ஊராட்சி கவுன் சிலர் கவிதா, திருப்பூர் மாநக ராட்சி மண்டல தலை வர் கிருத்திகா உள்பட நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகி கள் 66 பேர் பாதயாத்திரை மேற் கொண்டனர். அமைச்சர் வாழ்த்து பாதயாத்திரை செல்லும் மகளிர் அணி நிர்வாகிகளுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொன்னாடை அணிவித்து, எலுமிச்சை பழம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைமேயர் குணசேகரன் மற்றும் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ் ணன், ஜான், முத்துசாமி, நியமனக்குழு உறுப்பினர் முருகசாமி, நிலைக்குழு தலை வர்கள் அன்பகம் திருப்பதி, சந்திர சேகர் மற்றும் கவுன் சிலர்கள் ஜெயக்குமார், பி.கே.முத்து, சண்முகசுந்தரம், அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணப் பன், மார்க்கெட் சக்திவேல், கருவம்பாளையம் மணி உள் பட பலர் கலந்து கொண்ட னர். பால் குடம் நேற்று மாலை பாத யாத்திரை தொடங்கிய மக ளிர் அணியினர் வருகிற 14–ந் தேதி பழனிக்கு செல்கிறார்கள். பின்னர் திருஆவினன்குடி டி.என்.கே. திருமண மண்ட பத்தில் இருந்து மேயர் விசா லாட்சி உள்பட 66 பெண்களும் பால்குடம் எடுத்து பழனி மலையில் கிரிவலம் செல் கிறார்கள். இதைத்தொடர்ந்து மலைக் கோவில் சென்று, முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல்லாண்டு வாழவும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்– அமைச் சர் ஜெயலலிதா பிரதமர் ஆகவும் வேண்டி பாலதண்டா யுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். image: category: |
| கூடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Feb 2014 12:12 PM PST கூடலூர், தேயிலை பயிருக்கு மானியம் ரத்து செய்யப் படுவதை கண்டித்து கூடலூர் தாலுகா அலு வலகம் முன்பு சிறு விவ சாயிகள் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினார் கள். மானியம் ரத்து கூடலூர் பகுதியில் செக் ஷன்-17 (வகைப்படுத்தப்ப டாத) நிலங்கள் ஆயிரக்கணக் கான ஏக்கர் உள்ளது. இதில் ஏராள மான விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக தேயிலை வாரியம் மூலம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செக்ஷன்-17 நிலங் களில் விவசாயம் செய்துவரும் தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்க கூடாது என வனத்துறை தரப்பில் பரிந்து ரைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதைகண்டித்து கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சாஜி தலைமை தாங்கினார். இதில், துணை தலைவர் கந்த சாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் ரிச்சர்ட், முருகன், ஜேக்கப், விசுவநாதன், மனோகர், சூடாமணி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கண்டன ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் செக்ஷன் -17 நிலங்களில்வாழும் மக்கள் மற்றும் விவசாயிக ளுக்கு பட்டா வழங்க வேண் டும். இதேபோல் செக்ஷன்-17 நிலங்களில் தேயிலை விவ சாயம் செய்து வரும் விவசாயி களுக்கு வழங்கக்கூடிய மானி யத்தை ரத்து செய்ய கூடாது என்று கோஷங்களை எழுப் பினார்கள். இந்த ஆர்ப்பாட் டத்தில் தி.மு.க. நகர செயலாளர் லியாகத் அலி, காங்கிரஸ் கட்சி அம்சா, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் குஞ்சுமுகமது, முருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அனிபா உள்பட ஏராளமான விவசாயி கள் கலந்து கொண்டனர். image: category: |
| Posted: 10 Feb 2014 12:10 PM PST சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சட்டம்–ஒழுங்கை பராமரிப்பது, குற்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, இயற்கை இடர்பாடுகளின்போது மீட்பு பணிகளை மேற்கொள்வது போன்ற இன்றியமையா பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் மேம்பாட்டிற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா அறிவிப்பு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையில் ஆட்பற்றாக்குறையை தவிர்க்கவும், காவல் துறையின் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சில பணிகளில் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட ஒரு துணைப்படையை உருவாக்க வேண்டியதன் அவசியம் கருதியும் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை என்ற ஒரு சிறப்பு படை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் என்று 29.10.12 அன்று சட்டப்பேரவையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். மேலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு ஏப்ரல் 23–ந் தேதி அன்று சட்டசபையில், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 10 ஆயிரத்து 500 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்ய நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை அலுவலகங்களில் வழங்கப்பட்டன. 10,099 பேர் தேர்வு அதன் அடிப்படையில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 488 இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் தகுதியுடைய ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 846 இளைஞர்கள் எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட்டனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரத்து 865 பேர் 37 மையங்களில் நடைபெற்ற உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் இறுதியாக 10 ஆயிரத்து 99 பேர் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த சிறப்பு படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாகனங்கள் ஓட்டுதல், கணினி இயக்குதல், தபால் பணிகள், முதலுதவி, இரவு ரோந்து, பொதுமக்கள் தொடர்பு முதலியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். 40 வயது வரை பணி பயிற்சிக்கு பின்னர், காவல் துறை வாகனங்களை ஓட்டுதல், கணினியில் விவரங்களை பதிவு செய்தல், விபத்துக்குள்ளானவர்களை மீட்டு உயிர் காப்பதில் காவல் துறையினருக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் 40 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 7,500 ரூபாய் வழங்கப்படும். இந்த சிறப்பு படையினர் ஓராண்டு பணியினை நிறைவு செய்த பின்னர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் சிறப்பு தேர்வில் கலந்துகொண்டு தகுதி அடிப்படையில் காவல் துறையில் பணியமர்த்தப்படுவர். 12–ந் தேதி பயிற்சி தொடக்கம் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான பயிற்சி 12–ந் தேதி அன்று தொடங்கப்படும். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர், காவலர்களுக்கான சிறப்பு அங்காடிகளில் அளிக்கப்படும் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர். இதுதவிர, அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையிலும், பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு கடவுச்சீட்டும் வழங்கப்படும். இளைஞர் படையினர்களுக்கு இரண்டு செட் காக்கி சீருடை, காக்கி தொப்பி, கருப்பு நிற தோல் காலணிகள், கம்பளியாலான காலுறை, சங்கிலியுடன் கூடிய விசில், கருப்பு நிற தோல் பெல்ட் ஆகியவை வழங்கப்படும். தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் டி.என்.எஸ்.பி.ஒய்.பி. என்று பொறிக்கப்பட்ட அடையாள தோள் பட்டை அணிவார்கள். பணிநியமன ஆணைகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவினால் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 99 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதின் அடையாளமாக 25 பேருக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் வாழ்த்தினார். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு, அவருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கலந்துகொண்டோர் இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா, காவல் துறை தலைமை இயக்குனர் கே.ராமானுஜம், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| ராணுவ வீரர்களுக்கு சான்றிதழ்கள் பிரிகேடியர் சுரேஷ்குமார் வழங்கினார் Posted: 10 Feb 2014 12:08 PM PST குன்னூர், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில் 2-ம் பரிசு பெற்ற ராணுவ வீரர்க ளுக்கு எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண் டெண்ட் பிரிகேடியர் சுரேஷ் குமார் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களை யும் வழங்கினார். எம்.ஆர்.சி. ராணுவ முகாம் இந்திய ராணுவத்தில் பல் வேறு ரெஜிமெண்ட் சென் டர்கள் உள்ளன. இதில் தென் மாநிலத்தில் எம்.ஆர்.சி.என்று அழைக்கக்கூடிய மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் சிறப்பான நிலையில் உள்ளது. இந்த ரெஜிமெண்டல் சென் டர் இந்திய ராணுவத்தில் பல் வேறு நிலைகளில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் வீரர்கள் ராணுவ தினம் மற்றும் குடி யரசு தின விழாவில் பங்கு பெற்று பல்வேறு பரிசுகளை பெற்று உள்ளனர். இதில் ராணுவ தின அணி வகுப்பில் முதல் பரிசும், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் 2-ம் பரிசும், வாத்தியங்களில் 2-ம் பரிசும், ராணுவ வாத்தியங்களில் 2-ம் பரிசும் பெற்று உள்ளனர். ராணுவ வீரர்களுக்கு சான்றிதழ்கள் எம்.ஆர்.சி. ராணுவ முகாமை சேர்ந்த டான்முனி சங்கர் சிறந்த குடியரசு தின கமாண்டர் பரிசு பெற்றார். வாத்திய பிரிவில் விஜயன் முதல் பரிசு பெற்றார். இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக நேற்று எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் சுரேஷ்குமார் ராணுவ வீரர்களுக்கு ரொக்கப்பரிசை யும், சான்றிதழ்களையும் வழங் கினார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:- இந்திய ராணுவத்தில் உள்ள ரெஜி மெண்டல்களில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் என்று அழைக்கப்படக் கூடிய எம்.ஆர்.சி. ராணுவ முகாம் தலைசிறந்து விளங்குகிறது. இந்த பயிற்சி முகாம் தென் னகத்தில் உள்ள இளைஞர் களுக்கு ராணுவ பயிற்சி அளித்து அவர்களை தலை சிறந்த ராணுவ வீரர்களாக உருவாக்கி வருகிறது. 150 ராணுவ வீரர்கள் தேர்வு எம்.ஆர்.சி. ரெஜிமெண் டிற்குட்பட்ட யூனிட்டுகளில் இருந்து 150 ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ராணுவ தினம் மற்றும் குடியரசு தின விழாவுக்காக பயிற்சி கொடுக் கப்பட்டது. இவர்கள் சுமார் 7 மாத காலம் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராணுவ தினத்தில் முதல் பரிசும், குடியரசு தின அணி வகுப்பில் 2-ம் பரிசும் பெற்றனர். இது எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு கிடைத்த சிறப்பு ஆகும். அவர்களை வாழ்த்து கிறேன். இவ்வாறு அவர் கூறினார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |