Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் மலை

Posted: 05 Feb 2014 08:22 AM PST

திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் மலையில்  இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்த காட்சி.

 

4

பாக்தாத் நகரில் தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் பலி

Posted: 05 Feb 2014 08:19 AM PST

பாக்தாத்,

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் பிரதமர் அலுவலகம், தூதகரங்கள் அமைந்துள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்த பசுமைப்பிரதேசத்தின் அருகில் அடுத்தடுத்து 4 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன.முதலில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் எதிரே இரண்டு கார் குண்டுகள் வெடிக்கப்பட்டன. இதில் 12 பேர் உடல் சிதறி பலியாகினர். தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்தியதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறின.

முதல் தாக்குதல் நடந்து முடிந்த சிறிது நேரத்தில், பசுமைப்பிரதேச சோதனை முனையத்தின் அருகில் மனித வெடி குண்டு தாக்குதல் நடந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் குல்லானி சதுக்கத்தில் ஒரு குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளால் பாக்தாத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
 

category:

News Group Category:

இடஒதுக்கீடு குறித்துஜனார்தன் திரிவேதி கூறியது அவரது சொந்த கருத்து: காங்கிரஸ்

Posted: 05 Feb 2014 08:15 AM PST

புதுடெல்லி,

ஜாதி வாரியாக இடஒதுக்கீட்டை நிறுத்தி விட்டு பொருளாதார ரீதியாக அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்தன் திரிவேதி கருத்து தெரிவித்தார். இது அரசியலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஜனார்தன் திரிவேதியின் கருத்தை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா மறுத்துள்ளார். டெல்லியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், இடஒதுக்கீடு குறித்து ஜனார்தன் திரிவேதி கூறியது அவரது சொந்த கருத்து என்றும் இடஒதுக்கீடு கொள்கையில் தற்போதைய நிலையே தொடரும் என்று ரன்தீப் கூறினார்.டெல்லி மேல்-சபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ராஜீவ்சுக்லாவும் இதே கருத்தை வெளியிட்டார். இடஒதுக்கீடு கொள்கையில் தற்போதைய நிலையே நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.
 

category:

News Group Category:

மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் கருணாநிதி பேட்டி குறித்து விசாரிக்க வேண்டும்

Posted: 05 Feb 2014 08:11 AM PST

சென்னை,

சென்னை கெல்லீசைச் சேர்ந்தவர் சந்தானம். வக்கீலான இவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:கடந்த மாதம் 28ந் தேதி அன்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், மு.க.ஸ்டாலினுக்கு, மு.க.அழகிரி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி, உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதோடு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் : சோனியாகாந்தி உறுதி

Posted: 05 Feb 2014 07:56 AM PST

புதுடெல்லி,

ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்ந்து நீடிக்கும் என்று,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உறுதி அளித்தார்.

டெல்லி மேல்-சபைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் திவிவேதி, ஜாதி அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீடுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருந்தார்.அவருடைய இந்த கருத்துக்கு மேல்-பையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஜனார்த்தன் திவிவேதியின் இந்த கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில்,எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கை நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித ஐயப்பாடோ, மாறுபட்ட கருத்தோ கிடையாது. இந்த இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தி வலுப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். இந்த முறை தொடர்ந்து நீடிக்கும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 

category:

News Group Category:

மேஷம்

Posted: 05 Feb 2014 07:47 AM PST

நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய பொருள் சேர்க்கை உண்டு. தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். ஆரோக்கிய பாதிப்பு அகலும். குடும்பத் தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்.

Zodiac sign:

Astro Category: 
Daily

பூரண மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் காந்தியவாதி சசிபெருமாள் உள்பட 4 பேர் கைது

Posted: 05 Feb 2014 07:21 AM PST

அம்பத்தூர்,

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காந்தியவாதி சசிபெருமாள், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த 31-ந்தேதி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய அவர் இன்று காலை அம்பத்தூர் வந்தார்.அம்பத்தூரில் மேனாம்பேடு கருக்கு பகுதியில் பள்ளி-கல்லூரி மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடை முன்பாக அவர் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் தேனி ரவிசந்திரராஜா, மேனாம்பேடு பகுதியை சேர்ந்த செல்வம், கணேஷ் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, மதுகுடிப்போர் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த செல்லபாண்டியன் மற்றும் சேகரன், குணசீலன் உள்பட 20 பேர் கலந்து கொண்டனர்.அவர்கள் பூரண மதுவிலக்கு கோரி கோஷம் போட்டனர். பின்னர் காந்திவாதி சசிபெருமாள் பூரண மதுவிலக்கு கோரிக்கை பற்றி பேசினார். சம்பவ இடத்துக்கு வந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் மற்றும் போலீசார் முறையான அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சசிபெருமாள், ரவிசந்திரராஜா, செல்வம், கணேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

category:

News Group Category:

தேரோட்டம்**

Posted: 05 Feb 2014 07:07 AM PST

தார்வாரில் உள்ள முருக மடத்தின் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த காட்சி.

6

திருச்சியில் தி.மு.க.மாநாட்டின் முகப்பு தோற்றம்

Posted: 05 Feb 2014 07:04 AM PST

திருச்சியில் தி.மு.க.மாநாட்டின் முகப்பு தோற்றம் டெல்லி செங்கோட்டை வடிவத்தில் அமைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

3

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு வணிகர்கள் ஆதரவு கிடையாது வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேட்டி

Posted: 05 Feb 2014 07:00 AM PST

தேனி,

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கோ, அந்த கட்சி சார்ந்த கூட்டணிக்கோ வணிகர்களின் ஆதரவு கிடையாது என்று தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.

வெள்ளையன் பேட்டி

தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உணவு பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டம்–2006 கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் வியாபாரிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. இதற்காக பிப்ரவரி 4–ந்தேதியை கடைசி நாளாக அறிவித்தது. தற்போது மேலும் 6 மாதத்திற்கு பதிவு செய்து கொள்ள மத்திய அரசு கால அவகாசம் அளித்து உள்ளது.

இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சட்டமே வேண்டாம், இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. வெளிநாட்டு வியாபாரிகளின் நலனுக்காக உள்நாட்டு வியாபாரிகளை அழிக்க நினைக்கும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஆதரவு கிடையாது

மத்திய அரசு அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுகிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான். உணவு பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கோ, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்கும் கட்சிக்கோ வணிகர்களின் ஆதரவு கிடையாது.

உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியே வர வேண்டும் என்று வாக்குறுதி அளித்து உள்நாட்டு வியாபாரிகளை பாதுகாக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். வருகிற மே மாதம் 5–ந்தேதி திருநெல்வேலியில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடத்த உள்ளோம்.

இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.

News Group Category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™