Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முகநூலில் ரசித்தவை!

Posted: 24 Feb 2014 03:07 PM PST

ஈழத்தின் வரலாறு - குமரிக்கண்டம் முதல் சிறிலங்கா வரை

Posted: 24 Feb 2014 01:56 PM PST

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -97)

Posted: 24 Feb 2014 01:55 PM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

Yahoo மின்னஞ்சல் கடவுச்சொல்லை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்!

Posted: 24 Feb 2014 12:15 PM PST

Yahoo தளத்தில் மின் அஞ்சல் வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு, Yahoo நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னால், Yahoo தளத்தை ஊடுறுவும் முயற்சிகள், சில ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் வெற்றி பெறாததால், தொடர்ந்து அவர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு, Yahoo கேட்டுக் கொண்டுள்ளது.

இளநரை

Posted: 24 Feb 2014 12:11 PM PST

தற்போது இளம் வயதிலேயே தலையில் உள்ள முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இது தற்போதைய இளம் வயதினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானவை. இப்படி இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவரீதியாக காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து வெள்ளை முடியை ஏற்படுத்திவிடுகிறது. ...

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்

Posted: 24 Feb 2014 11:49 AM PST

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் பெரும்பான்மை சமூகத்துக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 பேரில் வன்னியர் 8 , ஆதி திராவிடர் 7, கொங்கு வேளாள கவுண்டர்கள் 7, முக்குலத்தோர் (தேவர்)- 6, நாடார்-3, முதலியார் 2 பேர். அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 ...

மணம் வீசுது! - சிறுவர் கதை

Posted: 24 Feb 2014 11:00 AM PST

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார். இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார். அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர். ""எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்,'' ...

72000 பதிவுகள் எனும் மைல் கல்லை எட்டிய நம் சிவா அண்ணாவை வாழ்த்துகிறேன்

Posted: 24 Feb 2014 10:56 AM PST

பிஸ்கட் உண்பது நல்லதா?

Posted: 24 Feb 2014 10:18 AM PST

பிஸ்கட் உண்பது நல்லதா? அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? என்ற தலைப்பில் சி.ஏ.ஐ என்ற என்.ஜி.ஒ அமைப்பு கருத்தரங்கம் நடத்தியது. கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டவை: பழம், பிஸ்கட், வடை, சமோசா, சாலட், முறுக்கு போன்ற கொறிக்கும் தீனிகளை ஓய்வு நேரங்களிலோ, உணவுக்கு மாற்றாக சில நேரங்களிலோ எடுத்து கொள்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் இவைகளின் தரம் பற்றி விவாதித்தாலும் இவை உடலுக்கு எந்த வகையில் உகந்தது என்ற விவாதம் இன்னும் உலகெங்கும் நடைபெற்று தான் வருகிறது. இவைகளுள் தேநீர் மற்றும் ...

பாராளுமன்றத் தேர்தல் 2014 - அதிமுக வேட்பாளர் பட்டியல்!

Posted: 24 Feb 2014 10:16 AM PST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு: 1. திருவள்ளூர் ( தனி) : டாக்டர் P.வேணுகோபால், B.Sc., MBBS., M.P., கழக மருத்துவ அணிச் செயலாளர், கழக மக்களவை குழுச் செயலாளர் 2. சென்னை வடக்கு : T.G.வெங்கடேஷ் ...

தங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா ?

Posted: 24 Feb 2014 09:51 AM PST

நாகரிகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லிக்கொள்ளும் இக்காலத்திலும் தங்கத்தைத் திருமணத்திற்கு ஒரு தகுதியாகக் கருதுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். பெண்களுக்குத் திருமணமாகும்போது சீதனமாகக் கொடுக்கும் சீர் வகையறாக்கள் போதாதென்று அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லயோ தங்க நகைகளும் கொடுத்தாக வேண்டுமென்பது தலைமுறை தலைமுறையாக எழுதாத சட்டமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக பெண்ணைப் பெற்றோர் காலம் முழுதும் சிக்கனமாக இருந்து சேமிக்க வேண்டியிருக்கிறது. எத்தனையோ தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இருக்கும் கொஞ்ச, நஞ்ச ...

பார்பி பொம்மைகள்: அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்து !

Posted: 24 Feb 2014 09:00 AM PST

பார்பி பொம்மையைப் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. நீண்ட கூந்தலும், ஒடுங்கிய இடையும், மெல்லிய கால்களும் கொண்ட அந்தப் பொம்மையைப் பார்த்துப் பெண்கள் பலரும் பொறாமைப்படலாம். அது போன்ற உடலையும், அழகையும் பெறப் பலர் ஆசைப்படலாம். ஆனால் உண்மையில் பார்பி பொம்மை நாம் பொறாமைப்படும் அளவுக்கு அழகானதா? அந்த அழகு உண்மையில் சாத்தியம்தானா? உண்மையில் பார்பி பொம்மையைப் போல் உலகில் எவருமே இருக்க முடியாது என்று உடற்கூறு வல்லுநர்கள் கூறுகிறார்கள். பார்பி பொம்மையை வைத்துச் செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகள் ...

தாய் மொழியில் சிந்திப்பவர்களால்தான் திறமையாக கற்க முடியும்.

Posted: 24 Feb 2014 08:37 AM PST

தாய் மொழியில் சிந்திப்பவர்களால்தான் திறமையாக கற்க முடியும். தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்களுக்குள் தமிழில் பேசுங்கள். தமிழை முறையாக கற்றுக்கொள்ளுங்கள், தமிழில் இருப்பதைப்போல்அதிகமான அறநூல்கள் எந்த மொழியிலும் இல்லை,இப்பிறப்பில் நன்றாக வாழ்வதற்கும் மறுபிறப்பில் நன்றாக இருப்பதற்கும் ஏற்ற வாழ்க்கை முறைகளை கற்பிப்பன இந்த அற நூல்கள்.இவற்றை அறியாது விட்டால் எப்பவும் துன்பமே, ஆகவே இந்த அற வழியைத் தெரிந்து கொள்வதற்காகவென்றாலும் தமிழை கற்ப்போம். தமிழை நாங்கள் வளர்க்க வேண்டியதில்லை தமிழ் ...

இராமாயணத்தில் இருந்து..!

Posted: 24 Feb 2014 08:33 AM PST

ஆவேசத்துடனும் , ஆக்ரோஷத்துடனும் போரிட்டுக்கொண்டிருந்தார் ராமன் : .அப்போது ஒரு இளைஞன் , '' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...'' அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் : '' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?'' '' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !'' அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து ...

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் - கம்பு ஆலு ரொட்டி !

Posted: 24 Feb 2014 08:26 AM PST

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் ...

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)

Posted: 24 Feb 2014 07:50 AM PST

நன்றி நண்பர்களே,

உங்கள் மேலான கருத்துகளை இங்கு சொல்லவும்.

தலைவர் சிவாவுக்கு ஒரு வேண்டுகோள் : யாரவது தவறுதலாக அங்கு கம்மென்ட் செய்தால் அதை தயவு செய்து இங்கு மாற்றி விடவும்.

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - நெல்லிக்காய் சாதம் !

Posted: 24 Feb 2014 07:49 AM PST

ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம். தேவையானவை: 500gm தனியா 500gm கடலை பருப்பு 250gm குண்டு மிளகாய் பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் ) செய்முறை : பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும். தனி எ எடுத்துவைக்கவும் அதே வாணலில் மற்றவற்றை ...

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் சாதம் !

Posted: 24 Feb 2014 07:49 AM PST

இப்போ அரை நெல்லிக்காய் சீசன், எனவே அதைக்கொண்டு என்ன என்ன செய்யலாம் என்று இந்த திரி இல் பார்க்கலாம் எனக்குத்தெரிந்து கீழ் உள்ளவைகள் செய்யலாம் உங்களுக்கு தெரிந்த குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் அரை நெல்லிக்காய் ஜூஸ் ! அரை நெல்லிக்காய் தொக்கு, அரை நெல்லிக்காய் சாதம், அரை நெல்லிக்காய் ரசம் என பலவகைகள் செய்யலாம்.

ஆவாரை - Cassia auriculata

Posted: 24 Feb 2014 07:46 AM PST

புராணங்களில் சொல்வதுபோல் ஏழு கடல், ஏழு மலைகளுக்கு அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள். சாதாரணமாக, நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் புன்னகைப்பவை... ஆவாரை. வறண்ட நிலத்தில் தான் வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை. இந்தச் செடி இருக்கும் இடங்கள்தான், உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் ...

இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!

Posted: 24 Feb 2014 07:43 AM PST

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபலமாகி வருகிறது 'வாட்ஸ்ஆப்' (WhatsApp) என்கிற 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்' என்கிற ஆப்ஸ்... உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற்றத்தில் இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் அசால்ட்டாக அனுப்பலாம். இந்த 'வாட்ஸ்ஆப்' மாதிரியான வேறு சில 'இன்ஸ்டன்ட் மெசேஜிங்' ஆப்ஸ்களை இப்போது பார்ப்போம். வைபர் (Viber) என்னதான் வாட்ஸ்ஆப் ...

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்!

Posted: 24 Feb 2014 07:43 AM PST

இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.   ''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும். ''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். உணவுப்பழக்கத்தின் ...

மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்

Posted: 24 Feb 2014 07:38 AM PST

மகா சிவராத்திரி விரதம் என்பது ஹிந்து மதத்தில் மிக முக்கியமான விரதமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி விரதம் அதிக ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த விரத்தத்தை மேற்கொள்பவர்கள், சிவபெருமானின் அருளை பெறுவார்கள். இது போக, இந்த விரத்தத்தை கடைப்பிடிப்பதால், மனிதர்களை தாக்கும் இரண்டு முக்கிய இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தலாம். இந்த இரண்டு முக்கிய சக்திகையும் 'ராஜாஸ்' என்றும் 'டமாஸ்' குணா என்றும் அழைக்கின்றனர். 'ராஜாஸ்' குணா என்பதற்கு எளிதில் உணர்ச்சிக்கு ஆட்படும் நடவடிக்கைகளின் தரம் என்று பொருளாகும். ...

மாமா அங்கள் படப்போகும் பாடு.

Posted: 24 Feb 2014 07:37 AM PST

மாமா அங்கள் அவர்களின் வாழ்வில் அடுத்த கட்டம். நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்பா?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு எங்கப்பா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏம்பா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது ...

”முரண்தொடை...!”

Posted: 24 Feb 2014 07:36 AM PST

"இதயசாரல்" வலைப்பூவில் ரசித்தவை... நுனியில் பற்றியத் தீயின் நாக்குகள் கசியும் புகையை நுகரும் மனிதம் இசையின் சுரங்களை உணர்தல் இயலுமா..? எரியும் புல்லாங்குழல் கேட்கிறது... விளக்கின் ஒளியில் விழுந்து இறக்கும் இரவு வாழ்க்கை வாழ்ந்து முடிக்கும் விடியலில் எழும் கதிரவன் ஒளியால் கவரப்படாத விட்டில் பூச்சிகள்... பூக்களைத் தின்று இலைகளில் கூடுகட்டும் புழுக்களின் பசியினில் அழிந்திடும் செடிதனில் அழகிய தலைமுறை பிறந்திட வேண்டியே ஆழமாய் வேர்களின் பயணம்... புழுக்களை கொன்று புரதம் எடுக்கும் வன்மம் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (221)

Posted: 24 Feb 2014 07:20 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

புத்தனின் போதிமர நிழல்.....

Posted: 24 Feb 2014 07:06 AM PST

உனது கனவுகளின் அடித்தளங்கள் என்னால் உருவாக்கப்படுகின்றன கண்களை மூடி எண்ணங்களை ஒருமுகப்படுத்து.... நெற்றிப் பொட்டில் வண்ண வண்ண கலவைகளின் வடிவமைப்பில் ஒரு பூங்கா உருவாவதை உன்னால் உணரமுடியும் ! கனவுக்குள் ஒரு கனவை உருவாக்கி ஆளுமைப்படுத்த ஒரு கனவுத் தொழிற்சாலை எனக்கு தேவைப்படுகிறது..... சிந்தனை முதலீடுகளில் நேரம் தொலைந்தாலும் சிதைந்த நினைவுகளை செம்மைப்படுத்த முயல்கிறேன்! கனவுகளில் மட்டும் தொடரும் என் நினைவுகளை நிகழ்கால வாழ்க்கையிலும் மனதில் கொள்! அறிமுகமில்லா இந்த இருவரின் ...

ஈகரை உறவுகளின் பதிவுகளும் பின்னூட்டமும்.....!

Posted: 24 Feb 2014 07:01 AM PST

நிறுவனர் சிவா சிவா பின்னூட்டம் தலைமை நடத்துனர் ஆதிராக்கா ஆதிராக்கா பின்னூட்டம் யினியவன் அண்ணா யினியவன் அண்ணா பின்னூட்டம் ராஜா ராஜா பின்னூட்டம் பாலாஜி பாலாஜி பின்னூட்டம் தமிழன் தமிழன் பின்னூட்டம் வழிநடத்துனர்கள் அசுரன் அசுரன் அண்ணா பின்னூட்டம் பாலாகார்த்திக் பாலாகர்த்திக் பின்னூட்டம் சாந்தன் சாந்தன் பின்னூட்டம் ரபீக் ரபீக் பின்னூட்டம் தாமு தாமு பின்னூட்டம் ராஜு சரவணன் ராஜு சரவணன் பின்னூட்டம் மன்ற ஆலோசகர் கே.பாலா கே.பாலா அண்ணா பின்னூட்டம் இளமாறன் ...

எழுதப்படாத கவிதை...!!

Posted: 24 Feb 2014 06:59 AM PST

என்னுள் இருந்து என் எண்ணங்களை ஆட்சிசெய்யும் என்னவனைக் கவிதையாய் வடித்திட உருகும் மனத்துடன் விடியும் ஒவ்வொரு நாளும் விரும்புகிறேன்..!! வார்த்தைகள் வசப்படாது வஞ்சனை செய்திட மனதாளும் மன்னவனை வார்த்தையில் அடக்கிடவும் இயலுமோ..?!! மனதைச் சுண்டியிழுத்து நாடி, நரம்புகளை புடைக்கச்செய்து எங்கோ இருந்தபடி எனை வீணையாய் மீட்டும் ஆழி அலையின் ஓசையாய் ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...! மனதிற்குள் மறைந்திருந்து நான் விழிமூடும் நேரத்தில் கதிரவனையே கூசச்செய்யும் பார்வையுடன்.. மின்னலும் ...

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Posted: 24 Feb 2014 06:50 AM PST

நண்பர்களுக்கு காலை வணக்கம்.

எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 24 Feb 2014 05:28 AM PST



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

இந்த தமிழனையும் தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 24 Feb 2014 05:25 AM PST

... கல்யாணசுந்தரம் - 45 வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர், 30 வருடங்களாக நூலக பொறுப்பாளராக இருந்து, உலகத்திலே தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு ஒதுக்கும் ஒரே நபர் இவர் மட்டும் தான். தன் தேவைக்காக உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்.. இதை பாராட்டும் வகையில் ஒரு அமெரிக்க அமைப்பு, இவர்க்கு "மேன் ஆப் மில்லினியம்" பட்டம் குடுத்தனர். மற்றும் 30 கோடி அன்பளிப்பு அளித்தனர் அதையும் வழக்கம் போல் அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டார ். * நூலக அறிவியல் பாடப் ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 24 Feb 2014 05:21 AM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 24 Feb 2014 04:58 AM PST

*என்ன குற்றம் செய்தனர்?
ஏன் அவ்வளவு வெறுப்பு
குழந்தைகளைக் கொன்ற கம்சன்.

*மரத்தில் தொங்குகிறது
பிரார்த்தனைத் தொட்டில்
தாலாட்டுகிறது காற்று
.
*வெண்மையாய பூத்திருக்கிறது
பறவைகள் சுவைக்கவில்லை
செடியில் வெடித்திருக்கும் பருத்தி

வெண்பாவில் விடுகதைகள்

Posted: 24 Feb 2014 04:49 AM PST

வெண்பாவில் விடுகதைகள் குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம். விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும் பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும் கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு. இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில் அலையும் மலருண்டு வாசமில்லை காயில் இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை விலையில்லா ஏழையிது வே! --ரமணி, 01/10/2013 விடைகள் ...

ந.க.துறைவன் புதுக்கவிதை

Posted: 24 Feb 2014 04:48 AM PST

காதல் இந்திய இளைஞனின் இதய பூர்வமான காதலை இணைத்துப் பார்ப்பதைவிட-இங்கே பிரித்து வைக்கப் பிரியப்படுகிறவர்களே அதிகம் . இப்படிச் செய்வது பொறாமையால் அல்ல. அறியாமையால் தான். சாதிகளுக்கும் மதங்களுக்கும் கைவிலங்கிடப்படக் காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதுவே மொழிகளையும் தேசியத்தையும் கூட இணைக்கும் பாலமாகும் . இது விரும்புகிறவர்களுக்கு கரும்பின் இனிப்பாகும். நடிப்பவர்களுக்கு வெறுப்பாகும். எவருக்கு வெற்றியடைகிறதோ அதுவே மனித நேயக் காதல். டிசம்பர்-1988 . இனி்-கவிதை ...

ந.க.துறைவன் சென்ரியு கவிதை

Posted: 24 Feb 2014 04:39 AM PST

1 .அழகான வண்ணங்களில் அழகுபடுத்திக் கொள்கிறது சுவையான இனிப்புக்கள் . 2 என்ன தவறு செய்தனர்? இத்தனை வெட்டுக்கள் இரத்தம் ஓழுக இரப்பர் மரம். 3. முழு நிர்வாணமாய் நின்று அழுதுக் கொண்டிருக்கிறது தெருவில் ஓரு குழந்தை.. 4. முத்தமிடுவதற்கு தடையாக இருக்கிறதென்று வெட்டிவிட்டான் மீசை. 5. முறைத்துப் பார்த்தாள் பஸ்ஸில் நின்றிருந்தவள் மேல் முழங்கையால் இடிபட்டது முலை.

ஜீவ காந்த சக்தி

Posted: 24 Feb 2014 04:39 AM PST

இந்த உடலிலே திடப் பொருள், நீர்ப்பொருள், வெப்பம், காற்று, உயிர் என்று இவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால், அந்த உயிரானது மிக மிக நுண்ணிய பரமாணுக்கள். கோடி கோடி பரமாணுக்கள் அந்த விண் துகள்கள் கூட்டாக இயங்கிக் கொண்டிருப்பது தான் உயிர். ஒவ்வொரு உயிர்த் துகளிலேயும் தன்னுடைய சுழற்சியினால் வரக்கூடிய விரிவு அலை ஒரு அழுத்தம் பெறுகிறது. ஏனென்றால் வெளியிலே இருக்கக் கூடிய உயிருக்கும் உள்ளே உள்ள உயிருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இது உடலிலே சுழன்று சுழன்று ஏழு தாதுக்களுக்குச் சத்துப் பொருளாக (Essence) ...

NGO - Non Governmental Organization - பகீர் பின்னணியும் அதிர்ச்சி அரசியலும்

Posted: 24 Feb 2014 04:29 AM PST

'இந்தத் தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா...' என்று கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே... அப்படி சமீப காலமாக ஒருவித அயர்ச்சியை உண்டாக்குகின்றன 'என்.ஜி.ஓ.' (NGO-Non Governmental Organization) என்று அழைக்கப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்! தமிழ்நாட்டில் எந்த நகரத்துக்கு, எந்தக் கிராமத்துக்குச் சென்றாலும் இவர்களே நிறைந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல், மனித உரிமை, குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி... என சகல துறைகளிலும் என்.ஜி.ஓ-க்களின் ஆதிக்கமே. இவர்கள் செய்துவரும் 'தொண்டுக்கு' ...

குருவும் சிஷ்யர்களும்- சிறுகதை

Posted: 24 Feb 2014 04:03 AM PST

குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார், அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்,ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது. குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா? மாணவர்கள்:- நிரம்பிடுச்சு குரு :-இல்லை என சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி பாத்திரத்தை நிரப்பினார் குரு:- இப்போது . . .? மாணவர்கள்:- நிறைஞ்சிடுச்சி குரு:- இல்லை அடுத்து மணலை கொட்டினார் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது குரு :-இப்போது . . .? மாணவர்கள்:- முழுவதும் நிரம்பியது ...

சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே..

Posted: 24 Feb 2014 04:00 AM PST

தேர்தல் 2014 ஸ்பெஷலின் அடுத்த சர்வே இது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினரை மட்டும் மையப்படுத்தி 'சிறுபான்மையினர் நிலை!' என்ற தலைப்பில் சர்வே எடுத்தது ஜூ.வி. டீம். தேர்தல்களில் சிறுபான்மையினரின் வாக்களிப்பு மாற்றங்களை உண்டாக்கியிருக் கிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு, மதவாதம், இட ஒதுக்கீடு, மோடி... என முக்கிய அம்சங்களை உள்ளடக்கி எட்டு கேள்விகளுடன் ஜூ.வி. டீம் சிறுபான்மையினரை சந்தித்தது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை அடையாளம் கண்டும், மசூதிகளிலும் சர்ச்களிலும் வழிபாட்டுக்கு வந்த சிறுபான்மையினரிடமும் ...

பிஸினஸ் - குட்டிக்கதை

Posted: 24 Feb 2014 02:42 AM PST

கோ யம்பேட்டில் மொத்தவியாபாரக் கடை வைத்திருப்பவர் 'பழக்கடை' பாண்டி! பல ஊர்களில் இருந்தும் ஆப்பிள், ஆரஞ்சு என்று வாங்கி விற்கக்கூடிய ஆள். அவர் கடைதேடி ஒரு இளைஞன் வந்து நின்றான். ''அண்ணாச்சி... என் பேர் கண்ணன். ஒரு ஃப்ரெண்டோடு சேர்ந்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். குறைஞ்ச அட்வான்ஸுக்கு நூறு ஆப்பிள் பழங்கள் கொடுத்தீங்கன்னா வித்து உங்க பணத்தை செட்டில் பண்ணிடுவேன்'' என்றான். ''தொழில் தொடங்கறது நல்ல விஷயம். நான் 'குரோர்பதி' அமிதாப்பச்சன் ஸ்டைலில் ஒரு கேள்வி கேட்கிறேன். சரியா பதில் சொல்லிட்டா, ...

காஷ்மீரி மட்டன் ரெசிபி

Posted: 24 Feb 2014 02:32 AM PST

கட்டா மீட் என்பது காஷ்மீரி மட்டன் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபியில் எண்ணற்ற மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதால், இந்த மட்டன் ரெசிபியின் சுவையானது அட்டகாசமாக இருக்கும். மேலும் இது விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட ஏற்ற ஒரு மட்டன் ரெசிபியாகும். தேவையானவை : =============== மட்டன் - 750 கிராம் வெங்காயம் - 3 (நறுக்கியது)சீரகம் - 2 டீஸ்பூன்கிராம்பு - 4பட்டை - 1 இன்ச்கருப்பு ஏலக்காய் - 2உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்காஷ்மீரி மசாலா - 1 டீஸ்பூன்இஞ்சி ...

வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!

Posted: 24 Feb 2014 02:23 AM PST

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 23 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக அண்மையில் வருமான வரித்துறை அறிவிக்க, தங்களுக்கும் நோட்டீஸ் வந்துவிடுமோ எனப் பலரும் குழம்பிப்போய்க் கிடக்கிறார்கள். இந்தக் குழப்பங்களுக்குத் தெளிவான பதில் பெற சென்னை வருமான வரி முதன்மை ஆணையர் எஸ்.ரவியைச் சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் அவர். ''வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகச் சொல்லப்படுகிறதே... எவ்வாறு இது செயல்படுத்தப்படுகிறது?' ''வருமான ...

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 24 Feb 2014 12:49 AM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

இறுதிப் பயணமாய் இந்த மரணம்

Posted: 24 Feb 2014 12:34 AM PST

மரணப் படுக்கையின் இறுதி அந்த நேரங்கள் உயிர் பறி போகும் (பறிக்கும்) சிலநொடிகள் பச்சை புண்ணில் வேலிக் கம்பிகள் கிழிப்பதாய் பூவொன்றின் காம்பை பிள்ளைகள் முறிப்பதாய் வேதனையால் வாட்டசாட்டமான உடல் வாடும் உதவிக்காய் கண்கள் எல்லோரையும் தேடும் ஒன்றும் உதவாததாய் கைகள் தானாக வீழும் தண்ணீர் வேண்டி நாக்கு பெரிதாய் கொஞ்சம் நீளும் கத்தும் உறவுகளின் கண்ணீர் துடைக்க முடியாது மரணப் பிடியில் இருந்து தப்பிக்க இயலாது கண்கள் மேலேந்தி கடைசி தருணத்தைப் பார்த்தபடி தனது நற்செயலை மட்டும் தூக்கிச் ...

ந.க.துறைவன் புதுக்கவிதை

Posted: 24 Feb 2014 12:27 AM PST

காதல் இந்திய இளைஞனின் இதய பூர்வமான காதலை இணைத்துப் பார்ப்பதைவிட-இங்கே பிரித்து வைக்கப் பிரியப்படுகிறவர்களே அதிகம் . இப்படிச் செய்வது பொறாமையால் அல்ல. அறியாமையால் தான். சாதிகளுக்கும் மதங்களுக்கும் கைவிலங்கிடப்படக் காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதுவே மொழிகளையும் தேசியத்தையும் கூட இணைக்கும் பாலமாகும் . இது விரும்புகிறவர்களுக்கு கரும்பின் இனிப்பாகும். நடிப்பவர்களுக்கு வெறுப்பாகும். எவருக்கு வெற்றியடைகிறதோ அதுவே மனித நேயக் காதல். டிசம்பர்-1988 . இனி்-கவிதை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™