Daily Thanthi |
- 9-ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
- ஓய்வூதியம் என்பது தர்மம் அல்ல: சுதந்திர போராட்ட தியாகிக்கு 4 வாரத்துக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
- தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு
- ஊரப்பாக்கம் ஊராட்சித்தலைவர் கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை 2–வது நாளாக கடைகள் அடைப்பு, அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
- அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- ரூ.5 கோடியில் ஏரி, குளங்கள் சீரமைக்கும் பணி கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார்
- கோவையை குப்பையில்லா நகரமாக மாற்றுவது எப்படி?
- ராகுல் காந்தி
- ‘‘பிரதமராக இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?’’ ராகுல் காந்தி வருத்தம்
| 9-ம் வகுப்பு மாணவன் தீக்குளிப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை Posted: 19 Feb 2014 12:20 PM PST கூடலூரில் 9-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன் றார். அவருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:- பள்ளி மாணவன் தேனி மாவட்டம், கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் அருகில் வசிப்பவர் கவிதா. இவருடைய கணவர் முத்து இறந்து விட்டார். கவிதாவுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ள னர். மூத்த மகன் விக்னேஷ் குமார் (வயது 14). இவன் தனது வீட்டின் அருகில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ்குமாரின் ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்புத்தகங் கள் காணாமல் போய்விட்டது. இதனால் புத்தகம் இல்லாமல் அவர் பள்ளிக்கு சென்றார். பாடம் நடத்தும் போது விக்னேஷ்குமாரிடம் புத்தகம் இல்லாததை பார்த்த ஆசிரியர் ஒருவர் மாணவரை கண்டித் துள்ளார். புத்தகம் வாங்கி வந் தால் தான் வகுப்பில் அனு மதிப்பேன் என்று கூறி மாண வனை வெளியேற்றிய தாக கூறப்படுகிறது. தீக்குளிப்பு 2 நாட்களாக பள்ளிக்கு சென்ற போதிலும் மாணவன் விக்னேஷ்குமாரை வகுப்புக் குள் நுழைய அனுமதிக்காமல் இருந்துள்ளனர். நேற்றும் பள் ளிக்கு சென்ற விக்னேஷ் குமாரை வகுப்புக்குள் அனு மதிக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் மனவேத னையுடன் வீட்டுக்கு வந்த அவன், வீட்டில் இருந்த மண் எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றி எரிந்ததால் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். படுகாயங்களுடன் துடித்த விக்னேஷ்குமாரை 108 ஆம்பு லன்சு மூலம் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவ னுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் முத்துமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறியல் இதனிடையே நேற்று இரவு 9 மணியளவில் மாணவன் விக்னேஷ்குமாரின் உறவினர் கள், பள்ளிக்கூடம் முன்பு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வகுப்பு ஆசிரியரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். image: category: |
| Posted: 19 Feb 2014 11:55 AM PST சென்னை, தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தர்மம் போல் அரசு அதிகாரிகள் எண்ணக்கூடாது என்றும் சுதந்திர போராட்டத் தியாகிக்கு 4 வாரத்துக்குள் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்தவர் சுதந்திரபோராட்ட தியாகி என்.சுப்பிரமணியம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– ஜெயிலில் அடைப்பு இந்தியன் சுதந்திர லீக் மற்றும் இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றில் பணியாற்றி, 1944–ம் ஆண்டு பர்மாவில் ஆங்கிலேயர் படையினரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டேன். இதையடுத்து சுதந்திரபோராட்ட தியாகி ஓய்வூதியம் கேட்டு, சென்னை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்தேன். அந்த விண்ணப்பத்துடன், என்னுடன் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த எம்.சுப்பிரமணி, இந்திய தேசிய ராணுவ அமைப்பின் தமிழக தலைவர் பி.கே.சேர்வை உள்ளிட்டோரின் ஒப்புதல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தேன். மீண்டும் மறுப்பு என்னுடைய விண்ணப்பத்தை பரிசீலித்த கலெக்டர், 2005–ம் ஆண்டு எனக்கு ஓய்வூதியம் வழங்கும்படி தமிழக பொதுத்துறை செயலாளருக்கு பரிந்துரை செய்தார். ஆனால், இந்த பரிந்துரையை செயலாளர் நிராகரித்துவிட்டார். இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, என்னுடைய விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் பரிசீலித்த பொதுத்துறை செயலாளர், என்னுடன் ஜெயிலில் இருந்தவர்கள் வழங்கிய சான்றிதழ் உண்மை தன்மையில் சந்தேகம் உள்ளதாக கூறி ஓய்வூதியம் வழங்க மறுத்து உத்தரவிட்டார். எனவே, எனக்கு சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. சர்ச்சை இல்லை இந்த மனுவை நீதிபதி கே.ரவிசந்திரபாபு விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:– மனுதாரர் என்.சுப்பிரமணியம் சுதந்திர போராட்ட தியாகி என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. இவருக்கு சுதந்திர போராட்ட தியாகி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை செயலாளருக்கு, சென்னை மாவட்ட கலெக்டரும் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், மனுதாரருடன் ஜெயிலில் இருந்தவர்கள் கொடுத்த ஒப்புதல் சான்றிதழ் உண்மை தன்மை மீது சந்தேகம் கொண்டு, அவருக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து, பொதுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஓய்வூதியம் தர்மம் அல்ல ஆனால், மனுதாரருடன் ஜெயிலில் இருந்தவர்கள் கொடுத்த சான்றிதழ்கள் மீது அரசு செயலாளர் சந்தேகம் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவை உண்மை இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ளவில்லை. அரசு அதிகாரியின் செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. மேலும், மனுதாரருக்கு இப்போது 87 வயது ஆகிறது. சுதந்திரத்துக்காக போராடியவர், இந்த வயதிலும் ஓய்வூதியத்துக்காக போராடி வருகிறார். இதுபோன்ற தியாகிகளுக்கு, அரசு ஓய்வூதியம் வழங்குவது என்பது தர்மம் போல் அரசு அதிகாரிகள் எண்ணக்கூடாது. வழங்கவேண்டும் இதுபோன்ற நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் அரசு அதிகாரிகள் காலதாமதம் வழங்க கூடாது. எனவே மனுதாரர் ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களின் அடிப்படையில், அவருக்கு 4 வாரத்துக்குள் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க மறுத்த பொதுத்துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இவ்வாறு நீதிபதி ரவிசந்திரபாபு கூறியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு Posted: 19 Feb 2014 11:21 AM PST சென்னை, தமிழக அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கிரிஜா வைத்தியநாதன், ஆர்.கண்ணன், கே.கணேசன் மற்றும் மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள அசோக்குமார் குப்தா, சி.பி.சிங், சசி சேகர், ராஜீவ்நயன் சவுபே ஆகிய 7 பேருக்கும் தலைமை செயலாளராக அந்தஸ்து உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இவர்கள் 1981–ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் சேர்ந்தவர்கள். இதுவரை முதன்மை செயலாளர்களாக பணியாற்றிய இவர்கள் இனி, கூடுதல் தலைமை செயலாளர் என்ற பதவியை வகிப்பார்கள். image: category:Tagging:News Group Category: |
| Posted: 19 Feb 2014 11:18 AM PST வண்டலூர், ஊரப்பாக்கம் ஊராட்சித்தலைவர் கொலை வழக்கில் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன. அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வெட்டிக்கொலை சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஊ.கோ.பெருமாள். இவர் அ.தி.மு.க செங்கல்பட்டு தொகுதி செயலாளராகவும், ஊரப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2½ மணி அளவில் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். உடன் இருந்த கவுன்சிலர் பழனி, டிரைவர் அசோக் ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. மற்றொருவரான வெங்கடகிருஷ்ணன் உயிருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை 9½ மணி அளவில் பெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, எம்.எல்.ஏ.க்கள் அனகை டி.முருகேசன், கணிதாசம்பத், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் கே.என்.ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து 100–க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் பெருமாளின் இறுதி ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைப்பு ஊரப்பாக்கம் பகுதியில் நேற்று 2–வது நாளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் உடன் சென்ற ஊராட்சி செயலாளர் வளர்மதியின் தந்தை வெங்கடகிருஷ்ணனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 2–வது நாளாக ஊரப்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காஞ்சீபுரம் செய்திகள் image: category:Tagging: |
| அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 19 Feb 2014 11:14 AM PST தஞ்சாவூர், காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் தஞ்சை தலைமை தபால் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்கு மாவட்ட தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜராஜன் வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெகதீசன், அரங்கராசன், தமிழ்நாடு அரசு தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் சங்க மாநில தலைவர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை உண்ணாவிரதத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 2004-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகஅரசில் பணிபுரியும் அலுவலர்களுக்காக பிரத்யேகமாக மாநில ஊதியக்குழு அமைக்க வேண்டும். தமிழகஅரசின் சார்பில் தலைமை செயலாளர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுமன்ற கூட்டம் நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் நிர்வாக பணியை ஆற்றி வரும் அமைச்சுப்பணியாளர்களுக்கு மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தமிழகஅரசில் பணிபுரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய தினக்கூலி, சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்யக்கூடாது என்று தமிழகஅரசால் வெளியிடப்பட்ட ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். image: category: |
| ரூ.5 கோடியில் ஏரி, குளங்கள் சீரமைக்கும் பணி கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார் Posted: 19 Feb 2014 11:09 AM PST பேராவூரணி, பேராவூரணி பகுதியில் ரூ. 5 கோடியில் ஏரி, குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்கும் பணிகளை தஞ்சை கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார். சீரமைக்கும் பணிகள் தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி மற்றும் பாசன ஏரி குளங்கள், அணைக்கட்டுகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதியில் தமிழக அரசின் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் அக்னி ஆறு வடிநில உபகோட்டத்தில் உள்ளதும், பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளதுமான கல்லணை கால்வாய் கடைமடை பகுதியில் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரி, குளங்கள் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.4 கோடியே 96 லட்சத்து 10 ஆயிரம் அனுமதி அளித்துள்ளது. கலெக்டர் தொடங்கி வைத்தார் அதன்படி திருச்சி மண்டல தலைமை பொறியாளர் பைந்தமிழ்செல்வன், கீழகாவிரிவடிநில கண்காணிப்பு பொறியாளர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டுதல் படி பட்டுக்கோட்டை அக்னிஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாதவன் மேற்பார்வையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கங்காதரபுரம், புதிரிவயல், கற்குளம்வாரி ஆகிய 3 அணைக்கட்டுகளும், அதன் மூலம் பாசனம் பெறும் 9 குளங்களும் தூர்வாரி கட்டுமான பணிகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இதன் முதல்கட்ட பணிகளை தஞ்சை கலெக்டர் சுப்பையன் ரெண்டாம்புளிக்காடு கிராமம் புதிரிவயல் என்ற இடத்தில் தொடங்கி வைத்தார். அப்போது உதவி செயற்பொறியாளர்கள் கேசவன், திலீபன், தியாகராஜன் உதவிபொறியாளர்கள் சோமசுந்தரம், கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக கலெக்டர் குளத்தின் கரைகளை உயர்த்தி கட்டும் இடங்களை பார்வையிட்டார். image: category: |
| கோவையை குப்பையில்லா நகரமாக மாற்றுவது எப்படி? Posted: 19 Feb 2014 11:01 AM PST கோவை, கோவையை குப்பையில்லா நகரமாக மாற்றுவது எப்படி? என்பது குறித்து 7 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. கலந்தாய்வுக்கூட்டம் கோவை, சிம்லா, பூடான் நாட்டில் உள்ள பென்சோலிங், வங்காளதேசம் நாட்டில் உள்ள டாக்கா, இலங்கையில் உள்ள மத்தலை, நேபாளம் நாட்டில் உள்ளஹேட்டா, டான்சன் ஆகிய நகரங்களில் குப்பையில்லா நகரமாக்கும் என்பதை குறிக்கும் சூன்யா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட 7 நகரங்களின் உறுப்பினர்கள், பிரதிநிதிகள், மற்றும் அலுவலர்களின் 4-வது கலந்தாய்வுக்கூட்டம் கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. கூட்டத்தை கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- சூன்யா திட்டம் தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள 7 நகரங்கள் இணைந்து சூன்யா திட்டத்தின் மூலம் குப்பையில்லா நகரமாக்கும் மகத்தான பணியை இக்லி என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கடந்த 1 ஆண்டாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் கோவை மற்றும் சிம்லா மாநகராட்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 23-வது வார்டு முன்மாதிரி வார்டாக தேர்வு செய்யப்பட்டு குப்பையில்லா நகரமாக்கும் பணி நடக்கிறது. அதன்படி குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணி அந்த வார்டில் நடக்கிறது. இதுவரை 28.96 டன் மறு சுழற்சிக்கான பிளாஸ்டிக் குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த திட்டம் மற்ற வார்டுகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. குப்பையில்லா நகரம் இதன் மூலம் இதுவரை 302.79 டன் குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்பட்டுள்ளன. மறு சுழற்சிக்கு பயன்படும் இந்த குப்பைகள் மூலம் கிடைக்கும் வருமானம் துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் துப்புரவு பணியாளர்கள் ஆர்வமுடன் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று குடியிருப்போர்களும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகின்றனர். குப்பைகளை சாலைகளில் கொட்டுவதை தவிர்க்கவும், உணவு கழிவுகளை உரமாக்கவும் வீடுகளுக்கு மண்பாண்ட தொட்டிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கோவையை குப்பையில்லா நகரமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கூறினார். குப்பை மூலம் வருமானம் முன்னதாக கோவையை குப்பையில்லா நகரமாக மாற்றுவது குறித்து கலந்தாய்வு நடந்தது. அப்போது 7 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் நாடுகளில் குப்பைகளை தரம் பிரித்தல், மற்றும் அதன் மூலம் வருமானம் ஈட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பற்றி விளக்கினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் லதா, உதவி கமிஷனர் சிவராசு, நகர்நல அலுவலர் பி.அருணா, செயற்பொறியாளர் லட்சுமணன், உதவி கமிஷனர் சுப்பிரமணியன், கவுன்சிலர் மணிமேகலை, ராக், சிறுதுளி அமைப்பு பிரதிகள் பலர் கலந்து கொண்டனர். image: category: |
| Posted: 19 Feb 2014 10:59 AM PST |
| Posted: 19 Feb 2014 10:56 AM PST புதுடெல்லி, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலையாவது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இந்த நாட்டில் பிரதமராக இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்று வருத்தத்துடன் கூறினார். ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நேற்று முன்தினம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் கூறியது. இதைத்தொடர்ந்து, அவர்கள் மூவரையும் மற்றும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார். ராகுல் காந்தி வருத்தம் இந்த நிலையில், ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் உள்ள புராப் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், இதுபற்றி மன வருத்தத்துடன் குறிப்பிட்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:– நீதி கிடைக்கவில்லை கொலை கைதிகள் விடுதலை செய்யப்படுவது எனக்கு துயரம் அளிப்பதாக உள்ளது. இந்த நாட்டில் பிரதமராக இருந்த ஒருவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? பிரதமரை கொன்றவர்கள் விடுதலையானால் சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும்? இதுபற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். மரண தண்டனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த தண்டனையை நிறைவேற்றுவதால் எனது தந்தை திரும்ப வந்து விடப்போவது இல்லை. ஆனால் இது எனது தந்தை அல்லது எனது குடும்பம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்த தேசத்தின் பிரச்சினை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
