Daily Thanthi |
- கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதியாக என்றுமே இருந்ததில்லை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
- பெண் என்ஜினீயர் கொலை பணம் கேட்டு தொல்லை கைதான டாக்டர் வாக்குமூலம்
- புதுச்சேரியில் துணிகரம் என்ஜினீயர் மனைவியை கொன்று நகை கொள்ளை
- ஏற்றுமதி 6.3 சதவீதம் அதிகரிக்கும்
- வாகனத்துறை நிறுவன பங்கு விலை உயர்ந்தது ‘சென்செக்ஸ்’ 97 புள்ளிகள் அதிகரிப்பு
- 2016–ஆம் ஆண்டிற்குள் உருக்கு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும்
- தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 48.22 கோடி டாலராக குறைந்தது
- இடைக்கால பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 4.6 சதவீதமாக குறையும் என அறிவிப்பு
- ஆன்மிகம் (18-02-2014)
- ‘அ’ நடிகருடன் பேச தடை!
| Posted: 17 Feb 2014 11:20 AM PST புதுடெல்லி, கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதியாக என்றுமே இருந்ததில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தனது பதிலில் கூறியுள்ளது. கச்சத்தீவை திரும்பப்பெற கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியா–இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்துசெய்து, கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:– இலங்கைக்கு சொந்தமானது கச்சத்தீவு பகுதியானது இலங்கைக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவந்தது. இந்தப் பிரச்சினைக்கு முடிவுகாணும் வகையில்தான் கடந்த 1974, 76–ம் ஆண்டுகளில் ஒப்பந்தம் போடப்பட்டன. அந்த ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு பகுதி இலங்கைக்கு சொந்தமானது என்றும், அந்தப் பகுதிக்குள் சென்று இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கவோ, வலைகளை உலர்த்தவோ அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. கச்சத்தீவானது அதற்கு முந்தைய காலங்களிலும் தமிழகத்திற்கு சொந்தமான பகுதியாக இருந்ததில்லை. எனவே, கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்கனவே முடித்துவைக்கப்பட்ட ஒரு பிரச்சினை. இதில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ, திரும்பப் பெறுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எல்லை தாண்டுவதால் அதே நேரத்தில் இந்திய மீனவர்களின் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளால் மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் போதும் மத்திய அரசு அந்த நாட்டு கடற்படையினருடன் பேச்சு நடத்தி அவர்களை பத்திரமாக நாட்டுக்கு திரும்பி வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்திய எல்லையில் இந்திய மீனவர்கள் ஒருவர் கூட இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதும் தாக்கப்படுவதும் இல்லை. எல்லைதாண்டி செல்வதால்தான் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. image: category:Tagging:News Group Category: |
| பெண் என்ஜினீயர் கொலை பணம் கேட்டு தொல்லை கைதான டாக்டர் வாக்குமூலம் Posted: 17 Feb 2014 11:15 AM PST புதுச்சேரி, பெண் என்ஜினீயர் கொலையில் விவாகரத்து பெற்ற அவரது கணவர் டாக்டர் செல்வராஜ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதில் இடம், பணம் கேட்டு தொல்லை கொடுத்தததால் கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டினேன் என்று கூறியுள்ளார். பெண் என்ஜினீயர் கொலை புதுச்சேரி நகராட்சியில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ஜீனத்(வயது 45) கடந்த 12–ந் தேதி மறைமலை அடிகள் சாலையில் ஸ்கூட்டரில் சென்ற போது காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். முதலில் அவர் விபத்தில் இறந்தார் என்று உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் விஜயேந்திரனை கைது செய்தனர். ஜீனத்தின் தாயார் போலீசாரிடம் தனது மகள் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும் இதில் தனது மகளின் முன்னாள் கணவர் டாக்டர் செல்வராஜிக்கு தொடர்பு உண்டு என்றும் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் விஜயேந்திரனிடம் போலீசாரிடம் விசாரணை நடத்திய பின்னர்தான் இது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்தது. ஜீனத்தின் விவாகரத்து பெற்ற கணவரும், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருப்பவருமான டாக்டர் செல்வராஜ் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார், டாக்டர் செல்வராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித், முருகன், ராஜீ, வேலு, வீரா ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டாக்டர் செல்வராஜ் அளித்த வாக்குமூலம் வருமாறு:– காதல் திருமணம் நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வையங்குடியை சேர்ந்தவன். நான் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு சென்னையில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தேன். இந்த நிலையில் ஜீனத் நான் ஆஸ்பத்திரி நடத்திய பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அங்கு வருவார். அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். சென்னையில்தான் குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடைய ஜீனத்திற்கு புதுச்சேரி நகராட்சியில் வேலை கிடைத்தது. இதனால் நாங்கள் சென்னையை காலி செய்துவிட்டு புதுவை கதிர்காமம் பகுதிக்கு வந்தோம். அங்கு தனியாக நான் ஒரு ஆஸ்பத்திரி நடத்தினேன். பின்னர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் எனக்கு வேலை கிடைத்தது. விவாகரத்து நான் எனக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்களை விற்று புதுவையில் 2 இடங்களை வாங்கினேன். அதில் ஒன்று எனது பெயரிலும், மற்றொன்று எனது மனைவி பெயரிலும் உள்ளது. எனது மனைவிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை நான் கண்டிக்கவே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே அவர் விவாகரத்து பெற்றார். அதன்பிறகு எனக்கு தெரியாமல் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்றதோடு மட்டுமன்றி நீதிமன்றத்தை அணுகி எனது பெயரில் இருந்த சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்தார். மேலும் லட்சக்கணக்கில் ஜீவனாம்சம் கேட்டு தொந்தரவு செய்தார். அதிக தொல்லை கொடுத்ததால் வேறு வழியில்லாமல் தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதனை என்னிடம் மருத்துவம் பார்க்க வரும் வேலாயுதம் என்பவரிடம் முறையிட்டேன். அவர் மூலம் கூலிப்படை அமைத்து காரை ஏற்றி ஜீனத்தை கொலை செய்து விட்டு, விபத்து என்று நாடகமாடினோம். ஆனால் போலீசார் இதனை கண்டுபிடித்து எங்களை கைது செய்தனர். இவ்வாறு செல்வராஜ் கூறினார். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிபதிமுன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். image: category: |
| புதுச்சேரியில் துணிகரம் என்ஜினீயர் மனைவியை கொன்று நகை கொள்ளை Posted: 17 Feb 2014 10:56 AM PST புதுச்சேரி, புதுச்சேரியில் என்ஜினீயர் மனைவியை கொன்று நகையை கொள்ளையடித்த மர்ம மனிதனை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– என்ஜினீயர் மனைவி புதுச்சேரி நூறடி சாலை நடேசன் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சுசீலா (வயது53). ராமசாமி சவுதி அரேபியாவில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். அவருடன் தான் சுசீலாவும் வசித்து வந்தார். இவர்களுக்கு முருகன் என்ற மகனும் வித்யா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். மகனும் அமெரிக்காவில் தங்கி இருந்து படிக்கிறார். ராமசாமிக்கு புதுவை நூறடி சாலையில் சொந்தமாக மாடி வீடு உள்ளது. அவ்வப்போது சுசீலா புதுச்சேரிக்கு வந்து செல்வார். கடந்த மாதம் சுசீலாவின் தம்பி இளங்கோவின் மனைவி மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்காக அவர் புதுவை வந்தார். வாடகைக்கு விட.... இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள சுசீலா வீட்டு மாடி பகுதியை வாடகைக்கு விட முடிவு செய்தார். இதற்காக மாடி பகுதியை சிறிது மாற்றி அமைத்து கட்டினார். வீட்டின் முன்பு வீடு வாடகைக்கு விடப்படும் என்று அட்டை தொங்க விடப்பட்டிருந்தது. அதில் செல்போன் எண்ணும் குறிப்பிட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த சுசீலா நேற்று முன்தினம்தான் புதுச்சேரிக்கு வந்து அவரது வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலை சுசீலாவை அவரது கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் எதிர்தரப்பில் போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் அவர் சுசீலாவின் தம்பி இளங்கோவை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டார். உடனே அவர் சுசீலாவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது கீழ் தளத்தில் சுசீலாவை காணவில்லை. இதனால் மாடி பகுதிக்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டு, சாவி கொத்துகள் வெளியே கிடந்தது. கழுத்தை நெரித்து கொலை இளங்கோ கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கே ஒரு அறையில் சுசீலா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி இளங்கோ போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து பார்த்தபோது அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. நகை கொள்ளை மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, காதில் இருந்த கம்மல் போன்றவை காணாமல் போயிருப்பது தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர் யாரோ நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. சுசீலா இறந்த தகவல் அவரது கணவர் மற்றும் மகன், மகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கொலை குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி 2 கிலோமீட்டர் தூரம் ஓடி ஒரு மதுக்கடைக்குள் சென்று நின்றுவிட்டது. யாரும் கவ்விப்பிடிக்கவில்லை. 150 பேர் போலீசார் சுசீலாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவரது வீட்டை வாடகைக்கு கேட்டு 150க்கும் அதிகமான நபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. பொதுவாக அவர் கீழ் தளத்தில்தான் படுத்திருப்பார். ஆனால் நேற்று அவர் மாடியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். எனவே வீட்டை வாடகைக்கு கேட்க வந்தவரிடம் வீட்டை காட்ட செல்லும்போது இந்த கொலை நடந்து இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அல்லது அவர் அணிந்திருந்து நகையை கொள்ளையடிப்பதற்காக வீட்டை வாடகைக்கு கேட்பது போல் நடித்து அவரை மாடிக்கு அழைத்துச் சென்று இந்த கொடூர செயலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சுசீலாவுடன் செல்போனில் பேசியவர்கள் யார்–யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். மோப்ப நாய் மதுக்கடைக்குள் சென்றதால் நேற்று மதுக்கடைக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தெரிவித்துள்ளார். இந்த கொலையில் சில தகவல்களும், முக்கிய தடயங்களும் கிடைத்துள்ளதாகவும் எனவே விரைந்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். – – – image: category: |
| ஏற்றுமதி 6.3 சதவீதம் அதிகரிக்கும் Posted: 17 Feb 2014 10:42 AM PST புதுடெல்லி, நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் ஏற்றுமதி 6.3 சதவீதம் அதிகரித்து 32,600 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது இடைக்கால பட்ஜெட் உரையின் போது இதனை தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்த நிலையால் சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் ஏற்றுமதி முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 1.8 சதவீதம் குறைந்திருந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் (ஏப்ரல்–ஜனவரி) ஏற்றுமதி 5.7 சதவீதம் அதிகரித்து 25,700 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் இறக்குமதி 7.81 சதவீதம் சரிந்து 37,700 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து வர்த்தக பற்றாக்குறை 12,000 கோடி டாலராக குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 992 கோடி டாலராக குறைந்தது. இதற்கு அம்மாதத்தில் ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து 2,675 கோடி டாலராக அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இறக்குமதி இறக்குமதி குறைவது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கு ஆரோக்கியமானது இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டிலுமே வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்பதே இலக்கு என ப.சிதம்பரம் தெரிவித்தார். ஏற்றுமதி வளர்ச்சி பாதைக்கு விரைவாக திரும்பியுள்ளது. அதே சமயம் உலக வர்த்தகத்தில் நமது பங்களிப்பு வளர்ச்சி காண வேண்டியது அவசியம். 2013 ஆம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2011–ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக உயர்திருந்தது. இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தி துறை முக்கியதுவம் வாய்ந்ததாக உள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய உற்பத்தியாளர்களின் போட்டி திறனை அதிகரிக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் பொறியியல் சாதனங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. image: category: |
| வாகனத்துறை நிறுவன பங்கு விலை உயர்ந்தது ‘சென்செக்ஸ்’ 97 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 17 Feb 2014 10:08 AM PST மும்பை பங்கு வியாபாரம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமை அன்று நன்றாக இருந்து. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 97 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 25 புள்ளிகளும் அதிகரித்தது. பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.6 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கணிசமாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரம் மந்தமாக இருந்தது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியுள்ளது என பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது ப.சிதம்பரம் தெரிவித்தார். உற்பத்தி துறையை மேம்படுத்தும் வகையில் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. கார்களுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டதையடுத்து மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த மகிந்திரா & மகிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மேலும் எச்.டீ.எஃப்.சி. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் உள்ளிட்ட பல வங்கி பங்குகள் மின்சாரம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது. அதேசமயம் ரியல் எஸ்டேட், உலோகம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த சில நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் டாட்டா பவர், மாருதி சுசுகி, டாக்டர் ரெட்டீஸ் லேப் உள்ளிட்ட 20 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம் கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட 10 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. வர்த்தகம் முடியும்போது 'சென்செக்ஸ்' 97.24 புள்ளிகள் அதிகரித்து 20,464.06 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,492.43 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 20,338.95 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்கு சந்தை தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிஃப்டி' 24.95 புள்ளிகள் உயர்ந்து 6,073.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,080.65 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,038.30 புள்ளிகளுக்கும் சென்றது. image: category: |
| 2016–ஆம் ஆண்டிற்குள் உருக்கு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் Posted: 17 Feb 2014 10:00 AM PST புதுடெல்லி, 2016–ஆம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் ஆண்டு உருக்கு உற்பத்தி திறன் 3.50 கோடி டன்னாக இருந்தது. அப்போது சர்வதேச அளவில் நம் நாடு எட்டாவது இடத்தில் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் உருக்கு துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகள் காரணமாக தற்போது ஆண்டு உற்பத்தி திறன் 8.90 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் நம்நாடு தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கபட்டிருந்தது. தற்போது கர்நாடகா மாநிலத்தில் சுரங்க பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவா மாநிலத்திலும் விரைவில் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருக்கு மற்றும் இரும்பு துறைகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ரூபாய் வெளி மதிப்பு சரிவால் ஏற்றுமதி மூலம் இந்திய உற்பத்தியாளர்கள் பலன் அடைந்தனர். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படதொடங்கியுள்ளதால் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012–17) உருக்கு நிறுவனங்கள் சுமார் ரூ.91 ஆயிரம் கோடியை விரிவாக்க நடவடிக்கைகளில் முதலீடு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆண்டு உற்பத்தி திறன் அதிகரிக்கும். image: category: |
| தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 48.22 கோடி டாலராக குறைந்தது Posted: 17 Feb 2014 09:51 AM PST மும்பை மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் தங்கம் இறக்குமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தொடர்ந்து பத்தாவது மாதமாக ஜனவரியில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 32.8 சதவீதம் சரிந்து 48.22 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் சென்ற நிதி ஆண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது. இதற்கு கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதை காரணமாகும். எனவே மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனையடுத்து தங்கம் இறக்குமதி தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக தங்க ஆபரணங்கள் தயாரிக்க போதுமான தங்கம் கிடைக்கவில்லை. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் தங்கம் ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 49.5 சதவீதம் குறைந்து 550 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டு நடவடிக்கை உள்நாட்டு நிறுவனங்களின் நலன் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இறக்குமதி கட்டுபாட்டு நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும் என இத்துறை நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். image: category: |
| இடைக்கால பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 4.6 சதவீதமாக குறையும் என அறிவிப்பு Posted: 17 Feb 2014 09:46 AM PST புதுடெல்லி வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திங்கள்கிழமை அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4.6 சதவீதமாக வைத்திருக்க முடியும் என ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உற்பத்தி துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல், பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுதல், உற்பத்தி துறையை மேம்படுத்துதல் ஆகியவை நமது முக்கிய லட்சியங்களாகும் என்று தெரிவித்தார். சென்ற ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்த நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை 4.8 சதவீதமாக வைத்து இருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இது 4.6 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும், சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்தியாவின் கடன் பெறும் தகுதியை குறைக்கும் என்ற அச்சப்பாடு நீங்கியுள்ளது என்றும் சிதம்பரம் தெரிவித்தார். நிதி பற்றாக்குறையை குறைக்கும் வகையில் நடப்பு நிதி ஆண்டிற்கான திட்டச் செலவினம் ரூ.5,55,532 கோடியிலிருந்து ரூ.4,75,532 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டிற்கு திட்டச் செலவினத்திற்கு ரூ.5,55,322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினம், வட்டிச் செலவினம், உணவு, உரம், பெட்ரோலிய பொருள்கள் போன்றவற்றிற்கான மானியம் திட்டம் சாரா செலவினம் ஆகும். இதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.12.08 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எரிபொருள், உணவு மற்றும் உர மானியத்திற்கு ரூ.2.46 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எரிபொருள் மானியம் ரூ.65,000 கோடியாகும். சென்ற நிதி ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.45,000 கோடி எரிபொருள் மானியம் இந்த நிதி ஆண்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.35,000 கோடி இந்த நிதி ஆண்டிலிருந்து அடுத்த நிதி ஆண்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அன்றாட செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் 4.1 சதவீதமாகவும், அடுத்த 2016–17–ஆம் நிதி ஆண்டிற்குள் 3 சதவீதமாகவும் வைத்து இருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அன்றாட செலவுகள் மற்றும் முதலீட்டு செலவுகள் உள்ளிட்ட மொத்த செலவினத்திற்கும், கடன் அல்லாத மொத்த வரவிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் நிதி பற்றாக்குறை ஆகும். அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த நிதி ஆண்டில் (2013–14) 4,500 கோடி டாலராக குறையும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை எப்போதும் இல்லாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு தங்கம் இறக்குமதி முக்கிய காரணமாகும். எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் அன்னியச் செலாவணி கையிருப்பு 1,500 கோடி டாலர் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது என்றும், நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் நடப்பு நிதி ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டுகளில் வளர்ச்சி குறைந்தபட்சம் 5.2 சதவீதமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நடப்பு நிதி ஆண்டில் ரூ.66,000 கோடி அளவிலான 296 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் வளர்ச்சி முறையே 4.5 சதவீதம் மற்றும் 4.8 சதவீதமாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டியது போன்ற காரணங்களால் சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.5 சதவீதமாக குறைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.6 சதவீதமாக இருந்தது. வேளாண் துறை வேளாண் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. கடந்த 2012–13–ஆம் வேளாண் பருவத்தில் உணவு தானியங்கள் உற்பத்தி 25.54 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு பருவத்தில் 26.39 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வேளாண் உற்பத்தி 4.6 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வேளாண் துறைக்கு வழங்கப்படும் கடன் இலக்கை காட்டிலும் ரூ.35,000 கோடி அதிகரித்து ரூ.7.35 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டிற்கான வேளாண் கடன் இலக்கு ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் தொழில்துறை உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு வாகனங்கள், செல்போன், உருக்கு உள்ளிட்ட உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவே காரணமாகும். கார் விலை குறையும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2013–ஆம் ஆண்டில் இந்தியாவில் கார் விற்பனை 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் 10 சதவீதம் சரிவடைந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மீதான உற்பத்தி வரி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், சிறப்பு பயன்பாட்டு வாகனங்கள் மீதான உற்பத்தி வரி 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகவும், பெரிய கார்கள் மீதான உற்பத்தி வரி 24–27 சதவீதத்திலிருந்து 20–24 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான செல்போன்களுக்கான வரி 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செல்போன் விற்பனை அதிகரிக்கும். நுகர்வோர் சாதனங்கள் மீதான உற்பத்தி வரியும் 2 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. உணவு பணவீக்கம் குறைந்து வரும் நிலையிலும் அது இன்னும் 8.8 சதவீதமாக உள்ளது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது என சிதம்பரம் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு 5.05 சதவீதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.79 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வங்கிகள் வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.11,200 கோடி மூலதனம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.5.97 லட்சம் கோடி கடன் திரட்ட முடிவு செய்துள்ளது. அரிசி சேமித்து வைக்கப்படும் கிடங்குகளுக்கான சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரடி மானிய திட்டத்தின் கீழ் 2.10 கோடி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,370 கோடிக்கு நேரடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. image: category: |
| Posted: 17 Feb 2014 09:39 AM PST illavasa Malargal Image upload: ![]() illavasa Malargal PDF upload: illavasa Malargal Term References: |
| Posted: 17 Feb 2014 09:32 AM PST 'பால்' நடிகையுடன் நட்பாக இருந்த 'அ' நடிகரின் கவனம் இப்போது, பிரியமான ஒரு நடிகை பக்கம் திரும்பி இருக்கிறது. இருவருக்கும் இடையே நட்பையும் தாண்டி, நெருக்கமான அன்பு வளர்ந்து வருகிறதாம். இந்த அன்பு, காதலாக கனிந்துவிடக் கூடாது என்பதில் நடிகையின் குடும்பம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறதாம். முதல்கட்ட நடவடிக்கையாக, நடிகருடன் போனில் பேசக்கூடாது என்று தடை விதித்து இருக்கிறார்களாம்! category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
