மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற கூட்டம் நீடிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது
- வெடிப்பொருள் கடத்துவதாக மிரட்டல்: ஐதராபாத் பன்னாட்டு விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு
- விஜயகாந்துக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
- ‘உற்சாக துப்பாக்கிச் சூட்டுக்கு’ 12 வயது சிறுவன் பரிதாப பலி
- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், ஏழைகளை கவரும் அதிரடி நலத்திட்டங்கள்
- காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் பேட்டி
- ஐதராபாத்தில் வசிக்கும் சீமாந்திரா மக்கள் எங்கள் சகோதரர்கள்: சந்திரசேகரராவ் பேட்டி
- ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை
- தெலுங்கானா பிரச்சினையால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
- கேரள முன்னாள் முதல்–மந்திரி அச்சுதானந்தன் ஆம் ஆத்மி கட்சியில் சேர மறுப்பு
- இணையத் தளம் மூலம் வேட்பாளர்கள் பற்றி மக்களிடம் கருத்து கேட்பு: பாரதீய ஜனதா புதிய திட்டம்
- ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டாம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
- ஏர்-ஏசியா விமான நிறுவனத்திற்கான இறுதி அனுமதியை இன்று வழங்க டிஜிசிஏ முடிவு
- 7 நாட்கள் வரை உறுப்புகளை பதப்படுத்தும் ரசாயனம்: மும்பை டாக்டர் கண்டுபிடிப்பு
- இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் குறைகிறதா?
- சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியபோது ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் பலி
- இளம் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு: தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை
- தெலுங்கானா மசோதா நிறைவேறியது: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
- ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு வழக்கு
- மாநிலங்களவையிலும் தெலுங்கானா மசோதா நிறைவேறியது
| பாராளுமன்ற கூட்டம் நீடிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது Posted: 20 Feb 2014 11:34 PM PST கடைசி பாராளுமன்றத்தின் இறுதி நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவருவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதம் நடந்தது. மேலும் ஊழல் ஒழிப்பு மசோதா உள்பட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற அவகாசம் தேவைப்படுவதால் பாராளுமன்ற கூட்டத்தை நீடிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் எம்.பி.க்கள் இதற்கு எதிர்ப்பு |
| வெடிப்பொருள் கடத்துவதாக மிரட்டல்: ஐதராபாத் பன்னாட்டு விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு Posted: 20 Feb 2014 11:20 PM PST ஐதராபாத்தில் இருந்து புறப்படும் அல்லது அங்கு தரையிறங்கும் டெல்லி விமானத்தின் மூலம் பயங்கரமான வெடிப்பொருட்களை கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக வந்த மிரட்டல் கடிதத்தையடுத்து ஐதராபாத் பன்னாட்டு விமான நிலயத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்த மறுநாள் ஐதராபாத் பன்னாட்டு விமான நிலைய பாதுகாப்பு உயரதிகாரிக்கு |
| விஜயகாந்துக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி Posted: 20 Feb 2014 10:46 PM PST கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயந்தி மேல் முறையீடு |
| ‘உற்சாக துப்பாக்கிச் சூட்டுக்கு’ 12 வயது சிறுவன் பரிதாப பலி Posted: 20 Feb 2014 10:40 PM PST திருமணம், அரசியல் கட்சி தலைவர்களின் வருகை, தேர்தல் வெற்றி விழா போன்றவற்றை பலர் பட்டாசு வெடிச் சத்தத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வரும் நிலையில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களோ... துப்பாக்கி வெடிச் சத்தத்துடன் கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தின் தின்கர்பூர் கிராமத்தில் நேற்றிரவு ஒரு செல்வந்தர் வீட்டு திருமண விழா |
| காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், ஏழைகளை கவரும் அதிரடி நலத்திட்டங்கள் Posted: 20 Feb 2014 10:33 PM PST காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், ஏழைகளை கவரும் வகையில் அதிரடி திட்டங்கள் இடம் பெறுகின்றன. பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. ராகுல் காந்தி மேற்பார்வையில் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் |
| காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் பேட்டி Posted: 20 Feb 2014 09:40 PM PST காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஜனாதிபதி மகள் முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் அரசில் நிதி மந்திரி உள்பட பல்வேறு பதவிகள் வகித்தார். கட்சியிலும் அவர் மூத்த தலைவராக இருந்தார். அவர் ஜனாதிபதியாகி விட்டதால் அரசியலில் |
| ஐதராபாத்தில் வசிக்கும் சீமாந்திரா மக்கள் எங்கள் சகோதரர்கள்: சந்திரசேகரராவ் பேட்டி Posted: 20 Feb 2014 09:32 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான மசோதா பெரும் அமளிக்கு மத்தியில் டெல்லி மேல் சபையில் நேற்று நிறை வேறியது. ஏற்கனவே இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. நேற்று மேல்சபையில் எந்த திருத்தமும் இல்லாமல் நிறைவேறியதால் அதை மீண்டும் மக்களவைக்கு அனுப்ப தேவையில்லை. ஜனாதிபதிக்கு அனுமதிக்கு நேரடியாக அனுப்பி விடலாம். |
| ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை Posted: 20 Feb 2014 09:08 PM PST தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் 29–வது மாநிலமாக தெலுங்கானா உருவாகி உள்ளது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வரவேற்பு |
| தெலுங்கானா பிரச்சினையால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது Posted: 20 Feb 2014 09:05 PM PST தெலுங்கானா பிரச்சினையால் ஆந்திராவில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமாக இருந்தது. அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள் சார்பில் தனித்தனியாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சினையால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தது. நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வந்து இருந்தனர். தர்ம தரிசனம் 4 மணி |
| கேரள முன்னாள் முதல்–மந்திரி அச்சுதானந்தன் ஆம் ஆத்மி கட்சியில் சேர மறுப்பு Posted: 20 Feb 2014 09:02 PM PST கேரள முன்னாள் முதல்–மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமானவர் அச்சுதானந்தன். இப்போது கேரள எதிர்க்கட்சித்தலைவராக உள்ளார். இவருக்கும் கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கம். அச்சுதானந்தனை ஓரம் கட்ட வேண்டுமென சிலர் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அச்சுதானந்தனின் ஆதரவாளர்கள் கூறினர். |
| இணையத் தளம் மூலம் வேட்பாளர்கள் பற்றி மக்களிடம் கருத்து கேட்பு: பாரதீய ஜனதா புதிய திட்டம் Posted: 20 Feb 2014 08:54 PM PST பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்க பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் தீவிரமாக உள்ளன. |
| ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டாம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் Posted: 20 Feb 2014 08:31 PM PST முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, அதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்திருந்தது. அவர்களது கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட்டு அவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்தது. அதற்கு அடுத்த நாள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரும் 3 நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதற்கு மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- அந்த 7 குற்றவாளிகளும் தடா, ஆயுதங்கள் சட்டம் போன்ற மத்திய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அப்படியிருக்கும்போது மத்திய அரசிடம் இப்படி ஒரு முடிவு எடுக்கும் முன்னரே கட்டாயமாக கலந்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். தமிழக அரசு குற்ற விசாரணை முறை சட்டம் 435-ன் படி அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. அந்த சட்ட |
| ஏர்-ஏசியா விமான நிறுவனத்திற்கான இறுதி அனுமதியை இன்று வழங்க டிஜிசிஏ முடிவு Posted: 20 Feb 2014 08:01 PM PST மலேசியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்-ஏசியா வெளிநாட்டு நேரடி முதலீடுகள் திட்டத்தின்கீழ் இந்தியாவின் டாட்டா குழுமத்துடன் இணைந்து தனது விமான சேவையை இந்தியாவில் விரைவில் துவங்கும் எண்ணத்தில் உள்ளது. இதற்கான அனுமதி நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் குர்கானைச் சேர்ந்த உள்நாட்டு குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோவும், இந்திய விமான குழு கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இந்த நிறுவனத்திற்கான அனுமதியை எதிர்த்து |
| 7 நாட்கள் வரை உறுப்புகளை பதப்படுத்தும் ரசாயனம்: மும்பை டாக்டர் கண்டுபிடிப்பு Posted: 20 Feb 2014 03:07 PM PST உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவுக்கு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஒவ்வொரு நாடும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, |
| இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் குறைகிறதா? Posted: 20 Feb 2014 01:23 PM PST இந்தியாவிலுள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 89 சதவீதம் சராசரி அல்லது சராசரிக்கும் கீழே தரப்படுத்தப்பட்டிருப்பது இந்தியாவில் கல்வியின் தரம் குறைகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. |
| சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியபோது ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் பலி Posted: 20 Feb 2014 10:58 AM PST ஜார்கண்ட் மாநிலத்தின் பலமு மாவட்டத்தில் ராஜ்கரா நிலக்கரி கம்பெனிக்கு சொந்தமான சுரங்கம் உள்ளது. அந்த நிலக்கரி சுரங்கத்தில் சட்டவிரோதமாக கும்பல் ஒன்று சுரங்கம் |
| இளம் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு: தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை Posted: 20 Feb 2014 10:01 AM PST காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவி காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் |
| தெலுங்கானா மசோதா நிறைவேறியது: ஆதரவாளர்கள் கொண்டாட்டம் Posted: 20 Feb 2014 09:34 AM PST தெலுங்கானா மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மசோதாவில் செய்யப்பட்ட திருத்தங்கள் மீதான குரல் வாக்கெடுப்பில், பெரும்பான்மை ஆதரவு பெற்றது. |
| ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு வழக்கு Posted: 20 Feb 2014 08:34 AM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்வது |
| மாநிலங்களவையிலும் தெலுங்கானா மசோதா நிறைவேறியது Posted: 20 Feb 2014 06:53 AM PST சர்ச்சைக்குரிய தெலுங்கானா மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மாநிலங்களவையில் கடும் அமளிக்கிடையே இந்த மசோதாவை உள்துறை மந்திரி ஷிண்டே தாக்கல் செய்தார். பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது ஆந்திர மாநில எம்.பி.க்கள், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |