Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை – அரசாங்கம்

Posted: 20 Feb 2014 06:02 AM PST

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை கோரியிருந்தார். எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பில் நவனீதம்பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாராளுமன்றில் வாக்கு வாதம்

Posted: 20 Feb 2014 05:53 AM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் பாராளுமன்றில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. 2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள், சென்ற நாடுகள் மற்றும் அதற்காக செலவிட்ட பணம் ஆகியன தொடர்பிலான தகவல்களை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பாராளுமன்றில் கோரியுள்ளார். எனினும், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது என […]

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும்

Posted: 20 Feb 2014 05:50 AM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என கியூபா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை முறியடிக்கும் நோக்கில் இலங்கை அமைச்சர்களும் ராஜதந்திரிகளும் நட்பு நாடுகள் நோக்கி படையெடுத்துள்ளனர். அந்த வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போது கியூபாவிற்கு விஜயம் செய்துள்ளார். கியூபா விஜயம் செய்துள்ள அமைச்சர் சுசிலிடம், அந்நாட்டு துணை ஜனாதிபதி மிகியுல் டயாஸ் கானெல் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் […]

பாக்கெட் உணவுகளால் ஆபத்து

Posted: 20 Feb 2014 05:45 AM PST

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகள் ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உணவு பொருட்களை பேக்கிங் செய்யும் போது பாதுகாப்பாக மற்றும் பதப்படுத்துவற்காக பார்மால்டிஹைடு என்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் இந்த பொருள், புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. தாகத்தை தணிப்பதற்காக குடிக்கும் குளிர்பானங்களை சேமிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் சாப்பாட்டு மேஜையில் உள்ள தட்டுகள் […]

விஸ்வரூபம் எடுத்துள்ள ஆபாச பட விவகாரம்! பிரதமர் ஆலோசனை

Posted: 20 Feb 2014 05:38 AM PST

ஜேர்மனியில் ஆபாச பட விவகாரம் தொடர்பில் கட்சி தலைவர்களுடன், பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆசோசனை நடத்தியுள்ளார். கனடாவை சேர்ந்த கும்பல் ஒன்று, சிறார்களை தங்கள் வலையில் வீழ்த்தி ஆபாச படம் எடுத்து விற்று வருவது கடந்த 2010ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கும்பலுக்கு ஜேர்மனி உள்பட 94 நாடுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஜேர்மனியில் மட்டும் 800க்கும் மேற்பட்ட நபர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், இவர்களின் செபாஸ்டியன் எடாத்தி(வயது 44) என்ற நாடாளுமன்ற உறுப்பினரும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுநலவாய நாடுகளின் செயற்பாட்டுக்குழுவின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிப்பு

Posted: 20 Feb 2014 05:25 AM PST

பொதுநலவாய நாடுகளின் 2015 ஆண்டு அபிவிருத்தி இலக்கை அடைவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சம்பந்தப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சைப்ரஸ், கிரனடா, சியாராலியோன், டொங்கோவா, தன்சானியா ஆகிய நாடுகளில் தலைவர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அமெரிக்காவில் மோடிக்கு எதிரான விசா மறுப்பு தீர்மானம் வாபஸ்

Posted: 20 Feb 2014 05:22 AM PST

visa

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு எதிரான விசா எதிர்ப்பு தீர்மானத்தை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி எம்.பி. ஸ்காட் பெர்ரி வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். மோடிக்கு எதிரான இந்த தீர்மானத்தை வாபஸ் பெறும் இரண்டாவது எம்.பி. இவர் ஆவார்.

visaமோடிக்கு விசா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து "நாடாளுமன்ற தீர்மானம் 417′ என்ற பெயரில் புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து அந்நாட்டு எம்.பி.க்கள் 42 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். அந்நாட்டின் வெளிவிவகாரக் கமிட்டியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜனநாயகக் கட்சி எம்.பி.யான ஸ்காட் பெர்ரியும் குடியரசுக் கட்சி எம்.பி.யான ஸ்டீவ் சாபோட்டும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து இருந்தனர்.

இவர்களில் ஸ்டீவ் சாபோட், ஏற்கெனவே மோடிக்கு விசா வழங்குவதை எதிர்க்கும் தீர்மானத்தை வாபஸ் பெற்றார். சமீபத்தில் குஜராத்தில் நரேந்திர மோடியை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவெல் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பின்னர் தற்போது ஸ்காட் பெர்ரியும் விசா எதிர்ப்பு தீர்மானத்தை வாபஸ் பெற முடிவு செய்து இருப்பதாக இந்து அமெரிக்க அறக்கட்டளையின் இயக்குநர் ஜே கன்சாரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜே கன்சாரா கூறுகையில், ""மோடிக்கு எதிரான தீர்மானம் தவறானது என்பதை காங்கிரஸ் உறுப்பினர்கள் உணர்ந்துள்ளனர்" என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள்: சிறீதரன் எம்பி

Posted: 20 Feb 2014 05:19 AM PST

ரஜிவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான தமிழக சட்ட சபை தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஈழத்தில் இருந்து மக்கள் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க கூடிய துன்பியல் நிகழ்வான இந்திய பேரரசின் […]

ஜெனிவாவில் வெற்றி பெற மந்திர தந்திரம் செய்யும் இலங்கை!

Posted: 20 Feb 2014 05:18 AM PST

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணையை தோற்கடிக்கும் நோக்கில், ராஜபக்ஷ அரசாங்க மந்திர தந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மனிதன் புல்லை பிடித்தாவது உயிர் தப்பிக்க முயற்சிப்பது போல், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கொண்டு வரும் பிரேரணையை மந்திரீக சக்தி பயன்படுத்தியாவது தோற்கடிக்க வேண்டும் என மகிந்த […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™