மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மும்பையில் நீர்மூழ்கி கப்பலில் விபத்து: 5 வீரர்கள் காயம்
- பா.ஜ.கவுடன் கூட்டணி: பஸ்வானை மிரட்டும் காங்கிரஸ்
- தேர்தல் அறிக்கை தயாரிக்க ஊழியர்களிடம் கருத்து கேட்கும் ராகுல்
- கேரளா அருகே நண்பரின் உறவு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட தொழிலாளி படுகொலை
- விரும்பாத மக்கள் மீது ஃபத்வாக்களை திணிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
- சந்தனகட்டை கடத்தல்காரர்களை பிடிக்க வானில் பறந்த விமானத்தை தரை இறக்கிய அதிகாரிகள்
- முஸ்லிம்களிடம் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஆவேசம்
- ரூ.12,400 கோடி சொத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மலையாளி யூசுப்அலி
- பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கு திட்டமிட்டப்படி தேர்தல்
- கலவரத்தை தடுக்க முடியாத மோடி ஆண்மையற்றவர்: சல்மான்குர்ஷித் பேச்சால் சர்ச்சை
- தென்னை பதநீர் விற்பனை செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியது
- முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணிக்காத பயணிக்கு ரீபண்ட் இனி கிடைக்காது: ரெயில்வே நிர்வாகம்
- மதுராவில் 3 பேர் தலை துண்டித்து படுகொலை
- விசுவ இந்து பரிசத் கட்சியினருக்கு அரசியல் செயல்திட்டங்கள் எதுவும் கிடையாது: பிரவீன் தொகாடியா பேட்டி
- காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் சீட் கிடையாது: ராகுல் காந்தி அதிரடி
- தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள்
- பாலியல் புகாரில் சிக்கிய உத்தரகாண்ட் அமைச்சர்
- காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்றாக புதிய அணி உதயம்
- ஒட்டகத்திற்கு மாநில பாரம்பரிய அந்தஸ்து அளிக்க ராஜஸ்தான் அரசு முடிவு
- "மோடி ரத யாத்திரை": வசுந்தர ராஜே கொடியசைத்து தொடங்கி வைத்தார்
| மும்பையில் நீர்மூழ்கி கப்பலில் விபத்து: 5 வீரர்கள் காயம் Posted: 25 Feb 2014 11:29 PM PST கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் ஐ.என்.எஸ். சிந்து ரக்ஷாக் என்ற கடற்படை நீர்மூழ்கி கப்பலில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 கடற்படை வீரர்கள் பலியானார்கள். இந்த நிலையில் மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பலில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல் பரிசோதனைக்காக மும்பை கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு |
| பா.ஜ.கவுடன் கூட்டணி: பஸ்வானை மிரட்டும் காங்கிரஸ் Posted: 25 Feb 2014 11:12 PM PST பீகாரில் காங்கிரஸ் – லல்லு கட்சி கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தொகுதிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ராம்விலாஸ் பஸ்வான் பா.ஜ.க. கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ராம்விலாஸ் பஸ்வானின் இந்த முடிவால் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது இதன் காரணமாக ராம்விலாஸ் பஸ்வான் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. |
| தேர்தல் அறிக்கை தயாரிக்க ஊழியர்களிடம் கருத்து கேட்கும் ராகுல் Posted: 25 Feb 2014 11:03 PM PST பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் பெரும் சவாலாக உள்ளன. மாநில கட்சிகளும் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பை சமாளிக்க காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி புதிய வியூகம் வகுத்துள்ளார். இதன் அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தலில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் |
| கேரளா அருகே நண்பரின் உறவு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட தொழிலாளி படுகொலை Posted: 25 Feb 2014 09:55 PM PST திருவனந்தபுரத்தை அடுத்த சிறையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் மனு (வயது 28). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும்,2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றார். அதன்பிறகு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அம்பு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதனால் மனு அடிக்கடி அம்புவின் வீட்டுக்கு சென்றார். இதில் அம்புவின் உறவு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி |
| விரும்பாத மக்கள் மீது ஃபத்வாக்களை திணிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு Posted: 25 Feb 2014 09:51 PM PST இஸ்லாமிய அமைப்புகளால் நியமிக்கப்படும் முஃப்தி மற்றும் காஜிக்கள் வழங்கும் ஃபத்வாவை (இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அவற்றில் தேர்ச்சி பெற்ற கல்வியாளர் வழங்கும் பரிந்துரை அல்லது தீர்ப்பு) ஏற்றுக் கொள்ள விரும்பாத மக்களின் மீது அவற்றை திணிப்பதை தடை செய்ய வேண்டும் என தனது கட்சிக்காரரின் சார்பில் விஷ்வா லோச்சன் மேடம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கில் இஸ்லாமிய சட்ட வாரியத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் |
| சந்தனகட்டை கடத்தல்காரர்களை பிடிக்க வானில் பறந்த விமானத்தை தரை இறக்கிய அதிகாரிகள் Posted: 25 Feb 2014 09:31 PM PST திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறியதும் விமானம் பறக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். உடனே பைலட் விமானத்தை கிளப்பி விண்ணில் பறக்க தொடங்கினார். சில நிமிடங்களில் திருவனந்தபுரம் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த விமானத்தை உடனே தரை இறக்கும்படி விமானிக்கு உத்தரவு வந்தது. அதிர்ச்சி அடைந்த |
| முஸ்லிம்களிடம் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஆவேசம் Posted: 25 Feb 2014 09:25 PM PST பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், எப்போதாவது தவறு நடந்திருந்தால் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார். பாரதீய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல என்று கூறிய ராஜ்நாத்சிங் பா.ஜ.க. ஒரு முறை நாட்டை ஆள, முஸ்லிம்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். |
| ரூ.12,400 கோடி சொத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மலையாளி யூசுப்அலி Posted: 25 Feb 2014 09:19 PM PST உலக பணக்காரர்கள் பற்றிய விபரங்களை வெளியிடும் வெளிநாட்டு நிறுவனம் 2014– ம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் வெளிநாடு வாழ் இந்தியரான யூசுப்அலி உலகின் பணக்கார மலையாளி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் அபுதாபியில் வசிக்கிறார். |
| பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கு திட்டமிட்டப்படி தேர்தல் Posted: 25 Feb 2014 09:16 PM PST ஆந்திராவை பிரித்து புதிதாக தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்–மந்திரி பதவியை கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார். அவர் தெலுங்கானா எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். |
| கலவரத்தை தடுக்க முடியாத மோடி ஆண்மையற்றவர்: சல்மான்குர்ஷித் பேச்சால் சர்ச்சை Posted: 25 Feb 2014 09:15 PM PST மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சல்மான்குர்ஷித் பரூக்கபாத் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– இது என்னுடைய தொகுதி சிலர் (மோடி) இங்கு வந்து என்னன்னவோ பேசி விட்டு செல்கிறார்கள். உங்களை பாதுகாப்பதாக சொல்கிறார்கள். நிச்சயமாக அவரால் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. உங்களை பாதுகாக்கும் அளவுக்கு அவர் வலுவான மனிதர் அல்ல. 2002–ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்த போது அவர் அங்கு |
| தென்னை பதநீர் விற்பனை செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியது Posted: 25 Feb 2014 07:58 PM PST இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான கேரள மாநிலத்தில் சுமார் 15 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில் இருந்து பதநீரை இறக்கி விற்க மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என கேரள வேளாண்மை பல்கலைக்கழகம் அனுமதி கோரியிருந்தது. இதன் மூலம் மாநில தென்னை விவசாயிகளின் வருமானம் பெருகும். மக்களும் ஆரோக்கியமான, உடலுக்கு தேவயான இயற்கை சத்து மிக்க பானத்தை பருகி நோயின்றி வாழலாம் என வேளாண்மை துறை |
| முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணிக்காத பயணிக்கு ரீபண்ட் இனி கிடைக்காது: ரெயில்வே நிர்வாகம் Posted: 25 Feb 2014 07:46 PM PST இதுநாள் வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் குறிப்பிட்ட நாளில் தனது பயணத்தைத் தவறவிடும் ஒரு பயணி ரயில் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் 50 சதவிகித தள்ளுபடியுடன் தனது டிக்கெட்டிற்கான ரீபண்ட் தொகையைப் பெறும் திட்டமே இந்திய ரயிவே நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கான மானியத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ள ரயில்வே துறை பொது இட ஒதுக்கீட்டு முறையில் இதுபோல் முன்பதிவு செய்யப்படும் தனியார் அல்லது ஒரு குழுவின் சில நபர்கள் பயணத்தைத் தவறவிட்டால் அதற்கு ரீபண்ட் அளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது.இந்த நடைமுறை வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| மதுராவில் 3 பேர் தலை துண்டித்து படுகொலை Posted: 25 Feb 2014 07:16 PM PST உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகரின் ரெயில் தண்டவாளம் அருகே கிடந்த 3 தலை துண்டிக்கப்பட்ட பிரேதங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இந்த 3 பேரும் உத்தரபிரதேசத்தின் பரத்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது அவர்களை கொன்ற ஒரு கும்பல் தலையை துண்டித்து |
| விசுவ இந்து பரிசத் கட்சியினருக்கு அரசியல் செயல்திட்டங்கள் எதுவும் கிடையாது: பிரவீன் தொகாடியா பேட்டி Posted: 25 Feb 2014 07:08 PM PST நாக்பூரில் விசுவ இந்து பரிசத் கட்சியின் சார்பில் ஏழை நோயாளிகளுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த கட்சியின் தலைவரும், புற்றுநோய் டாக்டருமான பிரவீன் தொகாடியா நேற்று நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நாங்கள் எந்த அரசியல் கட்சியினரையோ அல்லது தனிநபரையோ பின்தொடரவில்லை. எங்களுக்கு என்று அரசியல் செயல்திட்டங்கள் எதுவும் கிடையாது. நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை. சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை அரசியல் கட்சியினர் |
| காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் சீட் கிடையாது: ராகுல் காந்தி அதிரடி Posted: 25 Feb 2014 04:25 PM PST காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அசாம் மாநிலம் திபுவில், 9 சுயாட்சி கவுன்சில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:- தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தினருக்கு 'சீட்' கொடுப்பதை நான் விரும்பவில்லை |
| தவறு நடந்திருந்தால் மன்னித்து ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வேண்டுகோள் Posted: 25 Feb 2014 03:29 PM PST பாராளுமன்றத் தேர்தலையொட்டி, நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைக்க 272-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்ற குறிவைத்து பாரதிய ஜனதா பிரசாரம் செய்து வருகிறது. இதில் முஸ்லிம் மக்களின் பங்கு தொடர்பாக டெல்லியில் பாரதிய ஜனதா சார்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங் |
| பாலியல் புகாரில் சிக்கிய உத்தரகாண்ட் அமைச்சர் Posted: 25 Feb 2014 02:04 PM PST உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருப்பவர் கார்க் சிங் ராவத். இவர் கடந்த வருடம் ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் |
| காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்றாக புதிய அணி உதயம் Posted: 25 Feb 2014 01:43 PM PST இடதுசாரிகள், அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து, காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்தால், பிரதமர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு |
| ஒட்டகத்திற்கு மாநில பாரம்பரிய அந்தஸ்து அளிக்க ராஜஸ்தான் அரசு முடிவு Posted: 25 Feb 2014 12:12 PM PST பாலைவனப் பகுதி நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதி மக்கள் ஒட்டகங்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனர். பாலைவனப் போக்குவரத்திற்கு உதவுவதால் பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களின் எண்ணிக்கை அங்கு விரைவாகக் குறைந்து வருகின்றது |
| "மோடி ரத யாத்திரை": வசுந்தர ராஜே கொடியசைத்து தொடங்கி வைத்தார் Posted: 25 Feb 2014 11:38 AM PST மக்களவை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மோடி பெயரில் ரத யாத்திரையை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தர ராஜே கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதுகுறித்து செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |