Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதல் இன்று..?

Posted: 18 Feb 2014 01:56 PM PST

காதலுக்கு இது போதாத காலம். இளவரசன் - திவ்யா காதலின் துயர முடிவு, கடந்த ஆண்டின் கசப்பான வரலாறு. எனினும், அந்தக் கசப்பு அத்துடன் முடிந்துவிடவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல் நிலையங்களில் தஞ்சம் அடையும் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கின்றன. 'இனி சென்னை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என்ற அறிவிப்பு வெளியானதும் முதலில் திகீர் அதிர்ச்சி அடைந்தது... காதலர்கள்தான்! சாதி, வர்க்கம், இனம், மதம்... போன்ற பெருஞ்சுவர்களை ஒரே தாவலில் ...

எனக்கான முத்தம்

Posted: 18 Feb 2014 01:51 PM PST

ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ''இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது'' என்ற இடத்தில், இப்போது எட்டாம் வகுப்பு B செக்ஷன் செயல்படுவதாக கரும்பலகை சொன்னது. அரை சுவரும் அதற்கு மேல் ஓட்டுக் கூரையுமாகக் கட்டடம் அப்படியே இருந்தது. ''இதுல நீ எங்க உட்காந்திருந்த... ஃபர்ஸ்ட் பெஞ்சா?'' ''அப்பல்லாம் பெஞ்ச் இல்லை, தரையிலதான் உட்காருவோம்.'' ''அப்ப உன் ஃப்ரெண்ட் யாரு?'' எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என் ஞாபகத்திறனின் ...

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்

Posted: 18 Feb 2014 01:47 PM PST

ஒரு 'பண்ணையாரும் பத்மினி' காரும்... அவ்வளவுதான் கதை! தொலைபேசி, தொலைக் காட்சிப் பெட்டி என தன் கிராமத்துக்கு எதையும் அறிமுகப் படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு விடும் பாசக்காரப் பண்ணையார் ஜெயப்பிரகாஷ். அவரிடம் ஒரு ஃபியட் பத்மினி கார் வந்து சேர்கிறது. ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி துளசி, கார் டிரைவர் விஜய் சேதுபதி என அனைவரின் பிரியத்¬யும் சம்பாதிக்கிறது பத்மினி. இந்த நிலையில் பண்ணையார் குடும்பம் அந்தக் காரைப் பிரிய வேண்டிய சந்தர்ப்பம். பண்ணையார் - பத்மினி இடையிலான அன்பு என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்! யூ-டியூப் ...

வாழ்த்துக்கள் நண்பரே !

Posted: 18 Feb 2014 10:38 AM PST

வாழ்த்துக்கள் நண்பரே !

பல்லாண்டு பல்லாண்டு மகிழ்ச்சியான இத்தினம்
ஆண்டாண்டு உம்மை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.

ரமணியன்  

( யார் இவர் , எதற்காக வாழ்த்துக்கள் என குழம்பும் உறவுகளுக்கு க்ளு தருகிறேன்.
இவர் , என் பெயரின் முன் பாகத்தை அவர் முன் பாகமாகவும்
என் பெயரின் பின் பாகத்தை, அதன் வேறு பெயராகவும் கொண்டவர்.
அது சரி , இன்று என்ன விசேஷம். சேஷம் (மீதம் ) வைத்து அடுத்து கூறுகிறேன்.
ரமணியன் )

ராஜா சர்பத்!....நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ...குளிர்பானம்!.

Posted: 18 Feb 2014 10:11 AM PST

ராஜா சர்பத்!....நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ...குளிர்பானம்!. கொஞ்சம் களைப்பு மேலிட்டால் ...சர்பத் அருந்தும் பழக்கம் நம்மிடையே அதிகம் ..ஆங்காங்கே அமைந்திருக்கும் ...பெட்டிகடைகளில் வியாபார பொருளாய் ...சர்பத் தவறாமல் இடம்பெற இதுவே காரணம் . தெரிந்த யாரையாவது ..கடைதெருவில் சந்தித்தால் ..சர்பத் குடிக்கிறீர்களா ? என்ற விருந்தோம்பல் இன்றும் உண்டு ... சுமார் அரை லிட்டர் பிடிக்கும் டம்பளர் ...இருக்கும் .ஒரு எலுமிச்சை பழத்தை ..இரண்டாய் நறுக்கி ..மரத்தாலான சாறு பிழியும் கருவியில் வைத்து அழுத்தி ...

How Can i get singapore job

Posted: 18 Feb 2014 09:51 AM PST

I am an Electrical Draftsman with 5 Years Gulf Exp So Please Can i get Job In Singapore or Any other Country if You R knowing any job pls contact: ecwnada@gmail.com Now i am in India

இன்று, சிங்காரவேலரின் 154-வது பிறந்தநாள்!

Posted: 18 Feb 2014 07:53 AM PST

இன்று, சிங்காரவேலரின் 154-வது பிறந்தநாள். அவர் யாரென்று நாட்டில் பலருக்குத் தெரியாதது சரித்திரக் குற்றமே. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது சிலையை வைத்துவிட்டு, சிங்காரவேலர் மாளிகையென்று அந்தக் கட்டிடத்துக்குப் பெயர்சூட்டி மகிழ்ந்ததோடு தமிழக அரசு அவரை மறந்துவிட்டது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதைப் பற்றி பரிசீலிக்க உத்தரவிட்டபின்தான், அவரைப் பற்றிய சில தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது ...

நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)

Posted: 18 Feb 2014 07:48 AM PST

நடிகர் திலகம் மனோகரனாக (சிவாஜி என்ற மாநடிகர்) தொடர் 10 பாகம் 3 மதிவதன மனோகரனாக நடிகர் திலகம். மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!? அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் ...

ஹைக்கூ ,லிமரைக்கூ,சென்ரியு

Posted: 18 Feb 2014 05:58 AM PST



காலை நேரம்
வலை நிறைய மீன்கள்
மகிழ்ச்சியில் மீனவன்
-மித்ரா ஹைக்கூ

அத்தனை மீன்கள் வலைகளில்
அடுத்த நாள் கடலிலே
அத்தனை அழுகை அலைகளில்
-ஈரோடு தமிழன்பன் லிமரைக்கூ

படகு நிறைய மீன்கள்
ஐந்தாறு தாலிகள் கரையில்
இலங்கைப் படை சுற்றிவளைப்பு
-ம. ரமேஷ் சென்ரியு


வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 18 Feb 2014 05:57 AM PST



ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்

Posted: 18 Feb 2014 05:55 AM PST

*உங்களைத் திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். இது வெளிப்படையாக கோபத்தைக் காட்டுவதை விட மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்க ஓரே வழி இது தான் . *உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுது போக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும் . *உங்களுக்கு மன அமைதி ...

மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?

Posted: 18 Feb 2014 05:52 AM PST

நம்மில் அநேகம்பேர்களுக்கு Templateகள் ஏதாவது விசயத்துக்காக தேவைப்படுகின்றன. சிலருக்கு அவர்களின் வேப்சைட்டினை அழகாக வடிவமைப்பதற்காக தேவைப்படுகிறது, சிலருக்கு அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அழகான வடிவில் Email அனுப்ப தேவைப்படுகிறது. இதுபோல் பலருக்கு பலவிதமான வேலைகளுக்காக Templateகள் இன்றியமையாததாக உள்ளன. உங்களுக்கு தேவைப்படும் Template ஐ மிக எளிதில் கண்டுபிடிப்பது எப்படி என்பதனை இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளவும்.

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Posted: 18 Feb 2014 05:46 AM PST

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ...

ரமணியின் கவிதைகள்

Posted: 18 Feb 2014 05:43 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

கோடையைச் சமாளிக்க...!

Posted: 18 Feb 2014 05:41 AM PST

கோடை வந்துவிட்டால் உடனே கையில் கூல் ட்ரிங்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில்லென்றும் இனிப்பாகவும் இருப்பதனாலேயே அவை கோடைக்கு ஏற்ற அரு மருந்தாகிவிடாது. நம் நாட்டில் காலம் காலமாக கோடையை சமாளித்திருக்கிறார்கள். எப்படி? இதோ சில சுலபமான தயாரிப்பு முறைகள்.. பானகம் ஒரு கிலோ அச்சு வெல்லத்தில் அரை டம்ளர் தண்­ணீர் விட்டு கெட்டிப்பாகு வைத்து ஒரு ஜாரில் ஊற்றி குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது கொஞ்சமாக எடுத்து ஏலக்காயையும், சுக்கையும் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ...

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Posted: 18 Feb 2014 05:38 AM PST

டெல்லி: இந்தியாவுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடன் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதுகுறித்து பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களுடன் எத்தனை லக்கேஜ்களை எடுத்து வருகின்றனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும். எத்தனை பெட்டி,படுக்கை சொல்லுங்க: அதாவது கையோடு எடுத்து வரும் லக்கேஜ்களையும் கூட அவர்கள் தெரிவிக்க வேண்டும். நிதியமைச்சகம் இதுதொடர்பாக ...

ந.க.துறைவனின் கவிதைகள்

Posted: 18 Feb 2014 05:35 AM PST

*உன் வசம் புரியாத உலகம் புரியாத தத்துவம் புரியாத எழுத்து புரியாத வாழ்வெனப் புலம்பித் தவியாதே. மனதை இருத்து கவனம் செலுத்து உணர், அனுபவி, படி,எழுது புரியும் வரை… குழம்பாதே, அறிவுத் தெளிவு பெறு. புரிந்தால் எல்லாம் புலப்படும், உலக வாழ்வு உன் வசப்படும். *தாய் மொழி நர்சரியில் ஆங்கலம் பயிலும் அந்தக் குழந்தை அம்மாவிடம் கேட்டது "தமிழ் எந்த நாட்டின் தாய் மொழி?"-என்று. *தனிமை கூட்டமாய் வாழும் தென்னையைப் பார்த்து வெறுப்போடு புலம்பிய வண்ணம் ஏரிக் கரையில் தனித்திருந்த ஓற்றைப் ...

இது பெண்களுக்கு எதிரானதல்ல

Posted: 18 Feb 2014 05:34 AM PST

உலகில் உள்ள எத்தனையோ நாடுகள் நாகரீகம் என்கின்ற பெயரில் தங்கள் கலாச்சாரங்களை சீரழித்து கொண்டிருக்கும் போது இந்தியர்கள் மட்டுமே கலாச்சாரம், பண்பாடு, என்று பழைமை மாறாமல் மேற்கத்திய நாகரீகத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், பெண்களை தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் வணங்குவது இந்தியாவில் மட்டும்தான் ! பலநூறு ஆண்டுகளாக சேலை உடுத்திவந்த நம் பெண்கள் உடுத்துவதற்கு எளிதாக இருப்பதாலும், கொஞ்சம் மாடர்னாக இருப்பதாலும் நிறைய பாதுகாப்பாக இருப்பதாலும் சுடிதார் அணிய ஆரம்பித்தார்கள், பின் இரவில் மட்டுமே அணியவேண்டிய ...

நேரடி ஒளிபரப்பை நிறுத்திய பின்... தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது

Posted: 18 Feb 2014 05:27 AM PST

டெல்லி: தனி தெலுங்கானா மாநில மசோதா மக்களவையில் நிறைவேறியது. மூன்று திருத்தங்களுடன் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் தனித்தெலுங்கானா மாநில மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர எம்.பி.க்களின் கடும் அமளிக்கிடையே தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவை நேரடி ஒளிபரப்பை நிறுத்தச் செய்துவிட்டு தனித் தெலுங்கானா மாநில மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உதயமாக உள்ளது ...

E-Tweets

Posted: 18 Feb 2014 05:11 AM PST

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்

Posted: 18 Feb 2014 04:55 AM PST

கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் புன்னகை

“love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Posted: 18 Feb 2014 04:38 AM PST

லவ் பண்ணி வீட்டோட தகராறு பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு காதல் ஜோடியோட ..நிலைமை ...                   #இது கதிர்வேலன் காதல் படத்துல இருந்து யதார்த்தமான ஒரு கலந்துரையாடல் ...யதார்த்தமான வசனங்கள் ... "love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க." "கூப்பிட்ட உடனே ஓடிபோறதும் ,எப்படா நம்ம தேவதைகிட்ட இருந்து message வரும்னு காத்துகிடக்கிரதுமா ...விடிய விடிய தூங்காம இருப்பம் .." நம்மகிட்ட பேசமாட்டாளா ..?? நாளுபூரா சுத்திகிட்டு விலகாம நம்மகூடவே இருந்திர மாட்டாளான்னு .???                   ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -95)

Posted: 18 Feb 2014 04:38 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

முகநூலில் ரசித்தவை!

Posted: 18 Feb 2014 04:35 AM PST

*முல்லாவின் கதை

Posted: 18 Feb 2014 04:12 AM PST

ஓரு நாள் முல்லா நசுருதீன் பூச்சி பிடித்துக் கொணடிருந்தான் அவன் சிலவற்றைப் பிடித்தான். பிறகு தன் மனைவியிடம் "நான் இரண்டு ஆண் பூச்சிகளையும் இரண்டு பெண் பூச்சிகளையும் பிடித்தேன்." என்றான் . அவன் மனைவி "அதிசயமாக உள்ளதே, பூச்சி ஆணா,பெண்ணா என எப்படி கண்டுபிடித்தீர்கள்?"என கேட்டாள். அதற்கு அவன் "இரண்டு கண்ணாடியின் மேல் உட்கார்ந்துக் கொண்டிருந்தன. இரண்டு செய்தித் தாள் மீது உட்காந்துக் கொண்டிருந்தன?" என்றான். -ஆதாரம்:-பகவான் ஓஹோ-வின் "ரகசியமாய் ஓரு ரகசியயம்" என்ற புத்தகத்திலிருந்து.

காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி

Posted: 17 Feb 2014 10:27 PM PST

ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத். காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். 1. வினாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி : ப்ரசோதயாத். 2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேநாய தீமஹி தந்நோ சண்முக: ப்ரசோதயாத் 3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் 4. ஸ்ரீ ...

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்!

Posted: 17 Feb 2014 08:27 PM PST

எறிபத்த நாயன்மாரின் குருபூசை கும்பம் (மாசி) மாதம் கை (அஸ்தம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது. இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய கரிகாற் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை முடிசூட்டிக் கொள்ளும் சிறப்புக் கொண்டது கரூர்! அவ்வூரில் மணி மண்டபங்களும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்து விளங்கின. அமராவதி என்னும் வற்றாத நதி ஒன்றும் வளம் கொழிக்க ஓடிக்கொண்டிருந்து. அந்நதியின் இருமருங்கிலும் பெருந்தவசிகள் ஆசிரமம் அமைத்து அருந்தவம் செய்து வந்தனர். இந்நகரத்தில் ஆனிலை என்னும் ஓர் கோவில் அமைந்திருந்தது. எம்பெருமானுக்கு ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (218)

Posted: 17 Feb 2014 07:56 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பாமரர் தேவாரம்

Posted: 17 Feb 2014 07:23 PM PST

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™