ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
- ஏமாற்றம் வேண்டாம்...??
- கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்
- நண்பர்கள் மீண்டும் வருக..!!
- மீள் வருகை..அச்சலா..
- அமுக்குவான் பேய்
- இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்).
- "கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க"
- சுக்கில் இருக்கு சூட்சுமம் !!! -part 1 of 3
- பக்தியும் வேணும்! காசும் வேணும்!
- உனக்குப் புரியாத புல்லரிப்பு என் மெய் சிலிர்ப்பு
- இனி யார் திரும்பத் தருவார்கள் ?
- கவித் தூறல்
- அறிவியல் தகவல்கள்
- கவித் தூறல்கள்
- கனவு
- ஆஸ்த்மா நோயாளிகளுக்கு
- எங்கள் சிவாஜி
- என்னுடைய படங்கள் .
- இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி படம் வேண்டும் - உதவுங்கள்
- file ஐ delete செய்ய வேண்டும்..
- விண்டோஸ்8.1 ல் எந்த பதிப்பு சிறந்தது
- கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு.
- திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி
- அனைவரும் வாழ்க வளமுடன்
- தூக்கம் தொலைத்த சிவாஜியின் அர்ப்பணிப்பு
- அது நடந்தேரும்....
- இலக்கு தூரமில்லை...
- டோனிக்கு சில யோசனைகள்.........
- என்னை பற்றி
- வாழ பிறந்தவன்!
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- எங்கள் ஏரி
- இன்று மட்டும் சிந்திக்க ??
- நொடிக்கு நொடி துணிச்சல்
- வியப்பில் நின்றாள்!!
- பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.
- நாடு..அதை நாடு..
- மனித பிறவி....
- தொடத் தொடத் தொல்காப்பியம் (212)
- மனிதனின் வாழ்க்கையிலே!!
- கிச்சன் விகடன் பத்தகம் வேண்டும்.
| சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000 Posted: 08 Feb 2014 12:42 PM PST அன்பு உறவுகளுக்கு ! என் ஆயிரமாம் பதிவை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் ஒரு திரி தொடங்கலாம் என்று விருப்பம் ! சி மொழி பலருக்கு தெரியும் ! இப்பொழுது அதை பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு ஒரு பயிர்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன் ! தமிழில் விளக்கங்களை தருவது தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ! முக்கியமானது ! என்னை விட சி மொழியை அறிந்தவர்கள் இங்கு பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே ! மற்றவர்களேண்ணை தவறாக எண்ணவேண்டாம் ! அதே சமயம் நான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனே சுட்டி ... |
| Posted: 08 Feb 2014 10:57 AM PST எததனை நாளுதான் ஏமாற்றுவார் இந்த உலகிலே! ஏமாறுபவர் உள்ள வரையில் இது நடக்கும்.. அதுசரி நான் என்ன செய்தேன்! நன்றாக படித்தேன் ,நாலு காசு வேண்டும் என்று; நாற்று நட்டு,கூலிக்கு வேலை செய்தாள் என் தாய்.. தன் வயிறினை ஈரத்துணியினால் கட்டி,என் வயிற்று பசிக்காக... இனியும் நான் எந்தாய் பட்டப்பாடு நான் படக்கூடாது படித்தேன்..பிறகு முடித்தேன் டிகிரியே.. இதுவரை நன்றாக தான் சென்றது.. (அதாவது வண்டியில் வரும்போது...) தம்பி நல்ல பையன் என்றான். நாலு ... |
| கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Posted: 08 Feb 2014 10:55 AM PST மாதவரம் டெலிபோன் காலனியில் கற்பழிக்க முயன்ற அக்காள் கணவர் மேத்யூவை, கல்லூரி மாணவி ஹரிப்ரியா கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரை இழந்த ஹரிப்ரியா, தனது அக்காள் ஹேமாவின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அத்தான் மேத்யூவின் செக்ஸ் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுடனேயே வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் போதையும் காமமும் தலைக்கேறிய நிலையில், மேத்யூ, வக்கிரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். தனது காதல் மனைவியான ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக ... |
| Posted: 08 Feb 2014 10:54 AM PST எங்கோ பிறந்தோம்.. எதற்காக வளர்ந்தோம்.. எப்படி படித்தோம்.. ஏன் தோற்றோம்.. எவ்வாறு வென்றோம்.. எவ்விடம் சாவோம்... என்னடா கவியில் ஏதோ சொல்ல வரேன் .. புரியல உங்களுக்கு,,... அறிவேன் நானும்...??? என்னுள் எழுந்த கேள்விகள் பல அவையில் சில நான் சொன்ன வார்த்தை நாடே பாராட்டினாலும் எனக்கு பெருமை இல்ல.. அதை ஈகரையில் சொன்னால் என்னை பார்க்க உள்ளனர் நண்பர்கள்.. நானும் பேசுவேன் மணிக்கணக்கா,,.. அவர்கள் எண்ணங்கள் என் வண்ணங்கள்....... ஈகரையே நான் மகிழ்ந்த இடம்.. அதில் என் நண்பர்கள் ... |
| Posted: 08 Feb 2014 10:49 AM PST பெயர்:அச்சலா சொந்த ஊர்:தஞ்சாவூர் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:சிவா பொழுதுபோக்கு:ஈகரை தொழில்:கனினி மேலும் என்னைப் பற்றி:மேலும் தொடர்ந்து வர.. நான் இரண்டு பெயர்களில் வந்தேன் ..அதனால் பேன் செய்யப்பட்டேன்.. இனி நான் அவ்வாறு வரமாட்டேன்.. என்னால் ஈகரையில் வர மிகுந்த ஆசை.. என் பழைய அச்சலா என்ற பெயரில் அனுமதி தர வேண்டும்... |
| Posted: 08 Feb 2014 09:35 AM PST இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான ... |
| இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்). Posted: 08 Feb 2014 09:17 AM PST முகபுத்தகத்தில் அமானுஷ்யம் எனும் பக்கத்தில் நான் படித்ததை இங்கே பதிவு செய்கிறேன் . 20ம் நூற்றாண்டில் நம்பவே முடியாத அறிவியல் விதிகளை வெளியிட்டு, உலகையே நிமிர்ந்து உட்கார வைத்தவர் அல்பேர்ட் ஐன்ஸ்டைன். சாத்தியமே இல்லை என்று நினைக்கும் பல இயற்பியல், கணிதக் கோட்பாடுகளை அவர் வெளியிட, திகைத்துப் போனது உலகம். நேரம் (Time) ஒரு வெளியில் (Space) இயங்கும் போது சுருங்குகிறது என்றும், ஒளியானது ஈர்ப்பு விசையினால் வளைகிறது என்றும் ஆச்சரியமான இயற்பியல் கோட்பாடுகளை ஐன்ஸ்டைன் சொன்னார். இவற்றை எல்லாம் பின்னர் ... |
| "கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Posted: 08 Feb 2014 08:37 AM PST கண்ணப்ப நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் மான்றலை (மிருகசீரிஷம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது. உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் ... |
| சுக்கில் இருக்கு சூட்சுமம் !!! -part 1 of 3 Posted: 08 Feb 2014 08:03 AM PST சுருக்கமாக இல்லாவிடினும் பொறுமையாய்ப் படிக்க ஒரு காய்ந்த சுக்கு இவ்வளவு பலன் தருமா என வியக்க வைக்கும் ஒரு கட்டுரை அன்புடன் ரவி ========================== மூலிகைப் பொருட்களில் ''சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ''சுக்கு'' முதலிடம் பெறுகிறது. சுக்கிலிருக்குது சூட்சுமம்'' என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை,முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில்சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ''சுக்கு நீர்'' தயாரித்துக் குடிப்பது ... |
| பக்தியும் வேணும்! காசும் வேணும்! Posted: 08 Feb 2014 07:55 AM PST பக்தியும் வேணும்! காசும் வேணும்! எங்கும் நவீனவசதிகள். சாலை எங்கும் கார்கள் பறக்கின்றன. ஏ.டி.எம். கிளைகளில் பணம் கொட்டுகிறது. செல்போனில் பேசிக் கொண்டே செல்கிறார்கள். நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்வதாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மக்களின் மனதில் மட்டும் நேர்மை சிறிதுமில்லை. வாயில் பொய் மட்டுமே வருகிறது. அப்படி என்றால் வாழ்வில் துன்பம் எப்படி நீங்கும்? மனிதனுக்கு நாணயம் முக்கியம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் கற்பு என்கிறது புறநானூறு. நம் அறிவு சலனப்படுவதாக இருக்கக் கூடாது. "அறிவிலே ... |
| உனக்குப் புரியாத புல்லரிப்பு என் மெய் சிலிர்ப்பு Posted: 08 Feb 2014 07:32 AM PST மதி ஓடு உறவாடி பரிவேடம் தடம்தேடி ==நதி மீது விளையாடி கடலோடு உரையாடி மலையோடு முகிலாகி விளையாட்டு எழிலாகி ==மனதார களி தீர காயங்கள் பல போக எடை போடும் இந்நாளில் கரம் பிடித்து வருபவளே ==பேதுறவு நானடைந்தேன் பேதை உனக்கென்ன விரகத்தை கலைத்து விடு கிரகத்தைக் கழித்துவிடு ==ஊரார் கூடட்டும் தாலி உன் கழுத்தில் ஏறட்டும். அறுகாலி நீயாகி சருகாக நானாகி ==அரசாணி நீயாகி துரு ஆணி நானாகி கலை வாணி கை பிடித்து கையாள நெய்யெடுக்க ==களவாய் இவன் மெய் சிலிர்த்து கை நழுவி நீ செய்யும் மந்திரத்தை ... |
| இனி யார் திரும்பத் தருவார்கள் ? Posted: 08 Feb 2014 07:22 AM PST ஒற்றைப் பனைமரம் ........ ஊரின் மேற்கே உயர்ந்து நிலம் காய்ந்தாலும் நிற்கும் ஒற்றைப் பனைமரம் .... சிறுவர்கள் கட்டுக்கதை பம்பரம் ,ஒழிந்து தேடும் கற்பனை பேய் மரம் ........ பலரின் கடந்த காலம் காட்டும் நிகழ்காலத்தை மறைக்கும் காலமரம் ........ வழியில் செல்வோரின் பேச்சில் நிழல் தரும்,நீர் கொடுக்கும்; இது கண்டிப்பாக இடம் பெரும் பாசமரம் ......... தன் உறவுகள் ஏதுமின்றி தவிக்கும் இதோ! நான் உள்ளேன் என உன்னத ஒற்றை மரம் ......... எப்போதும் நான் கண்டாலும் என்னை வா! என்று ... |
| Posted: 08 Feb 2014 07:16 AM PST ************************************************** நண்பன் ************************************************** மனைவி முற்றத்துப் பூந்தோட்டம் நண்பன் இதயத்து ரோஜாக் கூட்டம். ************************************************** ************************************************** கம்ப்யூட்டர் ************************************************* மனித மூளைகளின் மதிப்பைக் குறைத்து தன்மதிப்பை (வைரஸ்) ஒரே வினாடியில் இழக்கும் மனித மூளையின் கண்டுபிடிப்பு. ************************************************** அடிமை ... |
| Posted: 08 Feb 2014 07:15 AM PST *கடலுக்குக் கரை உண்டு. அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,கரையே இல்லாத கடலும் இருக்கிறது. இக்கரையே இல்லாத அந்த அதிசயக் கடல் எங்கே இருக்கிறது?. பெர்முடா தீவுகளுக்கும், போர்ட்டோரிகாவிற்கும் நடுவே அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள "சார்கோஸ்ஸô" என்னும் அக்கடலுக்கே கரையே கிடையாது. *மலர்களில் "ஆந்தோசயனின்" என்னும் நிறப் பொருள் இருக்கிறது. அதுவே, மலர்களுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. அது இல்லையென்றால் நாம் பலநிறங்களில் மலர்களைப் பார்க்க முடியாது. *"வேர்களின் ரோஜா"- என்று எதைக் ... |
| Posted: 08 Feb 2014 07:07 AM PST ************************* என்னவள் ************************** சுவடுகள் அழிந்து கவடுகள் கிழிந்து போய்விட்டது உன்னை தேடியலைந்து . *************************************************************** ************************** இணையம் ************************** வ(தந்திகள்) பரப்பும் இணையத்தளம் வாய் . **************************************************************** ************************* கவிதை ************************* சித்திரம் வரையப்பட்டு தீட்டப்படுபவை சிலை செதுக்கப்பட்டு ... |
| Posted: 08 Feb 2014 07:03 AM PST அதிகாலைப் பொழுதின் ஆழ்ந்த உறக்கத்தில் இயலாத செயல்கள் ஈர்த்த விஷயங்கள் உவப்பான செய்திகள் ஊக்கத்தின் விதைகள் எல்லாம் அளிக்கும் ஏற்கும் விதமாக ஐயமே வராது ஒன்று நடந்தாலும் ஓராயிரம் நடக்காது ஔடதம் இல்லை அஃதே கனவு! கிருஷ்ணா |
| Posted: 08 Feb 2014 06:48 AM PST ஆஸ்த்மா நோயாளிகளுக்கு அரிய ஆலோசனைகள் . *ஜன நெரிசலும் புழுதியும் அதிகமாக இருக்கக் கூடிய இடத்தில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் . *புகைப் பிடிக்கும் பழக்கத்தை இந்நோயாளிகள் நிறுத்தி விடுவது நல்லது . *மது பானங்களும் இந்நோயாளிகளுக்கு நல்லதல்ல என கூறி நிறுத்தச் சொல்ல வேண்டும் . *மெல்லிய லுôசான ஆடைகளே இவர்களுக்கு உகந்தது எனக் கூறி அணியச் செய்வது நல்லது . *ஆஸ்த்மா நோயாளிகள் உணவு விசயத்தில் முக்கியமாக இரண்டு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அளவுக் கதிகமாக உணவு உண்ணுவதைத் ... |
| Posted: 08 Feb 2014 06:40 AM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| Posted: 08 Feb 2014 06:07 AM PST ![]() |
| இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி படம் வேண்டும் - உதவுங்கள் Posted: 08 Feb 2014 05:56 AM PST நண்பர்களே எனக்கு வடிவேலு நடித்து பெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் தரவிறக்கம் வேண்டும் , உதவுங்கள் |
| file ஐ delete செய்ய வேண்டும்.. Posted: 08 Feb 2014 05:06 AM PST உறவுகளே,,, எனது கம்ப்யூட்டர்-ல் உள்ள ஒரு file ஐ delete செய்ய வேண்டும்.. ஆனால் அந்த file read access மட்டும் தான் உள்ளது..... என்னால் access ஐ மாற்றவும் முடியவில்லை..... யாராவது உதவுங்கள் நண்பர்களே....... |
| விண்டோஸ்8.1 ல் எந்த பதிப்பு சிறந்தது Posted: 08 Feb 2014 04:54 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே, கீழே காணும் விண்டோஸ் 8.1 ல் எது சிறந்தது ? 1.விண்டோஸ் RT 8.1 2.விண்டோஸ் 8.1 3.விண்டோஸ் 8.1 Pro 4.விண்டோஸ் 8.1 Enterprise |
| கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு. Posted: 08 Feb 2014 04:23 AM PST கிரிக்கெட் மேட்ச்....தரிக்கெட் போச்சு. கட்டுவோம் பணத்தை..அடிப்போம் விசில்..பிடிப்போம் தம்மு.. தோற்றால் குடிப்போம் ரம்மு.... போட்டியோ நடப்பது எங்கோ.. அதற்கு இங்கு பெட்கட்டி போட்டா போட்டி.. பகையை உருவாக்குவது எளிது. ஆனால் நட்பை வளர்ப்பதும், உறுதிப்படுத்துவதும் சுலபமலானதல்ல... இன்றைய அரசியல் நாளைய கூவமாறு.. யாரெனும் ஏதேனும் ஒரு எதிரியை ஆபத்தானதாக சித்தரித்து அதன் மூலம் மட்டுமே தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயலும்.. சுருக்கமாகச் சொல்ல எதிர்ப்பு அரசியலால் மட்டுமே ... |
| திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Posted: 08 Feb 2014 04:22 AM PST - திரைப்பட பாடல்களில் முதலடியில் அல்லது பாடலின் நடுவிலும் சிட்டுக்குருவியை பற்றி சொன்ன பாடல்கள் எத்தனை உள்ளன.?.. - பாடல் வரிகளை தெரிந்தவரை பட்டியலிடுங்கள்... - |
| Posted: 08 Feb 2014 03:42 AM PST பெயர்: ஹைதர் உசேன் சொந்த ஊர்: சென்னை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் முலமாக பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது தொழில்: நிர்வாவியல் மேலும் என்னைப் பற்றி: |
| தூக்கம் தொலைத்த சிவாஜியின் அர்ப்பணிப்பு Posted: 08 Feb 2014 01:12 AM PST தூக்கம் தொலைத்த சிவாஜியின் அர்ப்பணிப்பு " /> " /> |
| Posted: 08 Feb 2014 01:08 AM PST மண் மணக்க மக்கள் சிறக்க கட்டினார்கள் ;அணை அதனால் நீயோ பல நபரை அணைத்தாயோ வெளிநாட்டு மக்கள் ஊருராய் சுற்றி சுற்றி பார்த்தார்கள்;ஆகா! இவ்வாறு நம் ஊர் இல்லையே ஏக்கம்.. தடுமாறி ஓட்டும் கார் தடையிருக்கும் ரோட்டினிலே! தங்குதடையின்றி சென்றது... தந்தது ஆனந்தம்.. தவிப்பில் மக்கள்.. தண்டனை அவர்கள் மீறிய வேகத்தில்.......... எத்தனை எத்தனை உயிர்கள்.. இவ்வணையே கட்டினார்கள்.. அப்போதும் எடுத்தாய் சில உயிரே!! இப்போது நீயோ .. இலவசமாக எடுத்தாயே பல ... |
| Posted: 07 Feb 2014 10:53 PM PST ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம் தீவிர நாட்டம் கொள்வோம் நடந்தே ஆகனும் என்ற வேட்க்கை மனதில் தீ சுவாலையாக எரியட்டும்.. விடாமுயற்சியில் என்றும் சிறிதும் மனதில் எண்ணளவும் சலனம் இல்ல....அஃது வெற்றி நம் கையில்.... குருவிகள் இரண்டு இருந்தன.. முட்டைகள் இரண்டு இட்டன.. காலம் காலமாக சந்தோசம் ஒரு நாள் வந்தே தோசம் ஆற்றில் நீர் பெறுக்கடுத்தது... அதனால் குருவியில் வயிற்றில் கவலை உருவெடுத்தது.. என்ன செய்வது .....ஒரு யோசனை நீரை அலகால் எடுத்து வெளியில் இட்டன.. ஆனால் நாட்கள் ஆகியும்.. எல்லாம் ... |
| டோனிக்கு சில யோசனைகள்......... Posted: 07 Feb 2014 10:41 PM PST தொடர் தோல்விகளில் சிக்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு நம் அரசியல்வாதிகள் சிலரின் யோசனைகள் ஜெயலலிதா: டீமை மாத்தாம அப்படியே வச்சிட்டிருந்தா இப்படித்தான் தோத்துப் போவீங்க. 4 ஆட்டங்களுக்கு ஒரு முறையாவது வீரர்களை மாத்துங்க. ஓவர் சரியா போட லைன்னா நாலாவது பந்திலேயே அந்த பவுலரை தூக்கிட்டு இன்னொருத்தரை போடுங்க. முடிஞ்சா கார் தர்றோம்னு சொல்லி எதிர் டீம்ல இருந்து ஆட்களை எடுங்க. அணியின் இப்போதைய நிலைக்கு முன்னாள் கேப்டன்தான் காரணம்னு சளைக்காம அறிக்கை விடுங்க. முக்கியமா அணிக்கு ... |
| Posted: 07 Feb 2014 09:41 PM PST பெயர்:செந்தில். மூ சொந்த ஊர்: களக்காடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுல் பொழுதுபோக்கு:நேரம் இல்லை தொழில்:மென்பொருள் பொறியாளர் மேலும் என்னைப் பற்றி:நல்ல நண்பன். ஈகரை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!!! |
| Posted: 07 Feb 2014 09:38 PM PST நான் ஒருவன் தான் இந்த பாரில் பலநாள் வாழ பிறந்தவன் ;அஃது ஆணவம் கொண்டேன். பிறந்தால் ஒரு நாள் இந்த மண்ணை விட்டு செல்ல வேண்டும் . மனம் மறுக்கிறது.. இன்னும் அந்த நாள் தொலைவில்.... பூமித்தாயின் கருவிலே பிறந்த என்னை மறுபடியும் நீயே! பறித்தாயே! தாயே! என் வசம் இல்லை என் உடல்.. என்று தந்தாயே அவ்வுடல் இன்று உன் மடையில்.. வாழ்வை கொடுத்தாய்... பின்பு நீயே எடுத்தாய்!! இறுதியில் உன்னிடத்தில்.. தரணியில் ஒய்யாரமாக இருந்தேன்;ஓய்வின்றி உழைத்தேன்; பெற்றோருக்காக ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 07 Feb 2014 09:28 PM PST மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| Posted: 07 Feb 2014 09:28 PM PST எங்கள் ஏரி அது எங்கள் ஊர் ஏரி அய்யனாரு அவர்தான் எங்கள் சாமி; அவரே எங்கள் ஏரிச்சாமி; நான் கூப்பிடுவேன் தினமும் அய்யாச்சாமி.. நான் உண்ண பயிறு விளையும்; நான் படுக்க காற்றுக் கொடுக்கும்; எங்கள் விலங்குகளுக்கு மெத்தையாகும்.. அதுதான் என்றும் என் ஊரின் சொத்தாகும்.. வறட்சியிலும் வசந்தகாலம்; வறுமையிலும் குளிர்க்காலம்; செத்தாலும் படுகளம்; பிறந்தாலும் மாறும் காலம்... நான் நீச்சல் பழக ஏற்ற இடம்; பிறர் மீன் பிடிக்க வந்த இடம்; துன்பம் கலைய செல்லும் இடம்; இன்பம் கொடுக்கும் பிறப்பிடம்... நீர் ... |
| Posted: 07 Feb 2014 09:26 PM PST மனிதன் வாழ்க்கை இன்று பிறப்பிற்கும்,இறப்பிற்க்கும் இடையே ஊசலாடுகிறது; எத்தனை எத்தனை மாற்றம் எண்ணில் அடங்கா!!........ பிறந்தோம்: ஏனோ,தானா என்று தினம்,தினம் அல்லல்;சுகமும் துன்பமும்.... வளர்ந்தோம்: இன்னும் நான் கொஞ்சம் உழைத்திருந்தால்.. மனதில் ஏக்கம்; வெற்றிப்பெற.... உழைத்தோம்: நானும் இப்படி ஒரு காலத்தில் இருந்த நாளும் உண்டு -மகிழ்ச்சி; இறைவனின் அருள்.... வாழ்ந்தோம் :நாம் சகோதர நட்புடன் இனி வரும் காலம் இருப்போம்-கனவு; நிஜமாகுமா.... இறந்தோம் :என்ன கொண்டு செல்ல நான் ... |
| Posted: 07 Feb 2014 09:24 PM PST மனதில் துணிச்சல் இருந்தால் மார்க்கத்தில் ஊறு இல்லை..... மட்டம் தட்டிய நினைவுண்டு.. உனது துணிவு யார் கொண்டுச்செல்ல... ஊர் பெயரை எனக்கு நினைவில்லை.. ஆனால் நான் சாதித்த இடமெல்லாம் என் கையில் காசுயில்லா நிலை ஒரு நிமிட துணிவே எனக்கு வழிக்காட்டியது....... ஒரு நொடி நீ சொன்ன சொல் தானே என் பொன்னான வாழ்க்கையில் ஒரு கண்ணான பெண் வந்தாள்.. அவள் ஒரு நொடி துணிந்ததால் என் மனமோ நொடிந்தது.. துணிச்சல் வேண்டும்... அஃது வாழ்வில் என் நிலை யார்க்கு வேண்டா............ நொடிக்கு நொடி துணிச்சல் இருந்தால் ... |
| Posted: 07 Feb 2014 09:18 PM PST கடவுள் இருக்கிறாரா!! கண்டவர் விண்டில்லை! விண்டவர் கண்டில்லை!! நீ! இருப்பது உண்மையா.. என்னிடம் சிலர் சொன்னார்கள்.. நீ! இல்லையென்று! நானும் மறுத்தேன் அப்போது...... என்னுள்ளும் இப்போ தோனுது நீ இருக்கிறாயா! நான் மறந்தேன் அவர்கள் சொன்ன வார்த்தையே!! ஒவ்வொரு நாளும் உன்னை சிலர் சொன்னப்போது நான் நம்பல! ஒரு வேளை நான் நம்பினினோ! அவர்கள் சொன்ன வார்த்தையே!! ஊரும் உன்னை நினைக்கல யாரும் இன்னும் மதிக்கல உன்னை காலில் போட்டு மிதிக்கிறார்கள் ! ஆற்றோரமாய் படிக்கட்டாக.. ஊர்சுற்ற ... |
| பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள். Posted: 07 Feb 2014 09:16 PM PST பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ... |
| Posted: 07 Feb 2014 09:13 PM PST நாடு போற்ற சென்றேன் நாலு காசு பெற்றேன் நாசுக்கா படித்தேன் நாடி சென்ற இடமே நாப்பது வருசம் போனதே! நாட்டம் உண்டு வேலையில் நாங்கள் இருக்கோம் வேலியில் நானும் நீயும் பிறந்தோம் நாட்டுக்காக இறந்தோம்.. நாற்றமடித்த உடம்பே நான்கு நாள் சென்று வீடுவரவில்லையே!! நாவ வரண்டு போனதே நான் விரும்பு நீர் அருந்த நாட்கள் கூட போகுதே நாட்டமுள்ள வாழ்க்கை வாழ.. நாட்டுக்காக உழைத்தால் .. நாட்டின் துயர் அகழுமே!!.. நாடு..என் பரதநாடு.. நாடினேன் என் உயிர் மேல் .. நாட்டம் இன்றும் நாங்கள் இருப்பதால் ... |
| Posted: 07 Feb 2014 09:12 PM PST எத்தனை பிறவி கண்டேன் நான் மனிதனாக பிறக்க ஒரு செல்லாய் பிறந்திருப்பேன்.. மரமாய் ,செடியாய்.. எத்தனை எத்தனை இவ்வளவு பிறந்து இறுதியில் நான் கண்ட உடலில் மனிதன் ஆம்! மனித பிறவி.... அரிய பிறவி..... நான் செவிடுமல்ல... நான் குருடுமல்ல.. நான் ஊமையில்ல... நான் ஊனமில்ல.. ஆகா!! நன்றி இறைவா.... நான் கொடுத்து வைத்தவன்.. நான் கூறிய யாவும் கடந்து பிறந்த தெய்வ பிறவி அது தான் ஆறறிவுப்படைத்த மனித பிறவி.. எத்தனை நன்மை செய்தேன்... எத்தனை தீமை செய்தேன்.. அத்தனையும் இந்த பிறவியில் கழுவ ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (212) Posted: 07 Feb 2014 09:01 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 07 Feb 2014 08:52 PM PST மனிதன் வாழ்க்கை இன்று பிறப்பிற்கும்,இறப்பிற்க்கும் இடையே ஊசலாடுகிறது; எத்தனை எத்தனை மாற்றம் எண்ணில் அடங்கா!!........ பிறந்தோம்: ஏனோ,தானா என்று தினம்,தினம் அல்லல்;சுகமும் துன்பமும்.... வளர்ந்தோம்: இன்னும் நான் கொஞ்சம் உழைத்திருந்தால்.. மனதில் ஏக்கம்; வெற்றிப்பெற.... உழைத்தோம்: நானும் இப்படி ஒரு காலத்தில் இருந்த நாளும் உண்டு -மகிழ்ச்சி; இறைவனின் அருள்.... வாழ்ந்தோம் :நாம் சகோதர நட்புடன் இனி வரும் காலம் இருப்போம்-கனவு; நிஜமாகுமா.... இறந்தோம் :என்ன கொண்டு செல்ல நான் ... |
| கிச்சன் விகடன் பத்தகம் வேண்டும். Posted: 07 Feb 2014 08:45 PM PST கிச்சன் விகடன் என்னும் பத்தகம் வேண்டும், இங்கு மலேசியாவில் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும்? எப்படி தருவிப்பது போன்ற விபரங்களை அன்புடன் வேண்டுகிறேன். மின்னூலாக இருந்தலும் பரவாயில்லை. மருமகளுக்கு வேண்டுமாம். |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

" />
" />