Tamil News | Online Tamil News |
- 'மக்களை முட்டாளாக்குவோரை மதிக்க மாட்டோம்': ராகுல் ஆவேசம்
- பிரபலங்கள் பலர் அரசியலுக்கு வருகை: 'ஆம் ஆத்மி' மற்றும் பா.ஜ.,வில் இணைப்பு
- தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு காண காங்., வியூகம்: சீமந்திரா எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை
- அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு எப்போது? ஆதரவு போஸ்டர் ஒட்டியவர்கள் 'கிலி'
- வருமான வரி வழக்கால் ஜெ.,வுக்கு நெருக்கடி
- நாட்டை காப்பாற்ற காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும்: சென்னை கூட்டத்தில் மோடி அறைகூவல்
- பல லட்சம் பேர் திரண்டதால் குலுங்கியது சென்னை: காங்கிரஸ், 3வது அணி கட்சிகள் மீது கடும் தாக்கு
- இத்தாலி வீரர்கள் மீது திடீர் கரிசனம் ஏன்?
- 'நான் அப்படி சொல்லவே இல்லையே...': அந்தர்பல்டி அடித்தார் சி.பி.ஐ., ரஞ்சித்
- 'கெஜ்ரிவால் பொய் சொல்கிறார்': 'மாஜி' அதிகாரி பட் ஆவேசம்
- வெளிமாநில மின்சாரம் கிடைக்காமல் தமிழகம் தத்தளிப்பு: 3,330 'மெகாவாட்'க்கு ஒப்பந்தம்; கிடைப்பதோ வெறும் 74
| 'மக்களை முட்டாளாக்குவோரை மதிக்க மாட்டோம்': ராகுல் ஆவேசம் Posted: பர்டோலி (குஜராத்): ''டீ வியாபாரிகளை, நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. டீ உட்பட, எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்பவர்களையும், நாங்கள் மதிக்கிறோம்; ஆனால், மக்களை முட்டாள்களாக்குவோரை, நாங்கள் எப்போதும் மதிப்பது இல்லை,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் பேசிஉள்ளார்.குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம், பர்டோலியில், காங்., கட்சி சார்பில், பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .இதில், காங்., துணைத் ... |
| பிரபலங்கள் பலர் அரசியலுக்கு வருகை: 'ஆம் ஆத்மி' மற்றும் பா.ஜ.,வில் இணைப்பு Posted: நாட்டின் பாரம்பரிய கட்சிகளுக்கு வேட்டு வைத்து, கட்சி துவங்கிய ஓராண்டிற்குள் டில்லியில் ஆட்சியை கைப்பற்றிஉள்ள, 'ஆம் ஆத்மி'யின் அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார். கெஜ்ரிவாலின் வெற்றி மற்றும் அவர் பெற்ற புகழால் ஈர்க்கப்பட்ட பிரபலங்கள் பலரும், இதுவரை இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையில், அரசியலில் குதித்த வண்ணம் உள்ளனர்.அரசியல் எழுச்சி: ஆம் ஆத்மி மட்டுமின்றி, பா.ஜ., விலும் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டும், தங்கள் ஆதரவை தெரிவித்தும் வருகின்றனர். இது, நாட்டில் புதிய அரசியல் எழுச்சியை ... |
| தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு காண காங்., வியூகம்: சீமந்திரா எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை Posted: தெலுங்கானா பிரச்னையால், பார்லிமென்டில் ஏற்படும் அமளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சீமந்திரா எம்.பி.,க்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, காங்., திட்டமிட்டுள்ளது.புதிய வியூகம்: நேற்று முன்தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தெலுங்கானா மசோதாவின் இறுதி வடிவத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, பார்லிமென்டின் இரு சபைகளிலும், தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்வது என்று, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பா.ஜ.,வுடன், பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், கடைசி நேரத்தில், தங்களை அந்த கட்சி ஏமாற்றி விடலாம் என்ற ... |
| அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு எப்போது? ஆதரவு போஸ்டர் ஒட்டியவர்கள் 'கிலி' Posted: கோபத்தில் உள்ள அண்ணன் அழகிரியை சந்தித்து, சமாதானம் பேசி, மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கும் விஷயத்தில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் சற்று தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தே.மு.தி.க., உடனான கூட்டணி உறுதியாகும் முன், அழகிரியை சந்திப்பது சரியாக இருக்காது என, நினைப்பதால், இன்று அவர் மதுரை செல்லமாட்டார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர, இருவரின் சகோதரியும், கருணாநிதியின் மகளுமான, செல்வியும், அழகிரியின் மனைவி காந்தி, மகள் கயல்விழி மற்றும் குடும்பத்தினரும் முயற்சி ... |
| வருமான வரி வழக்கால் ஜெ.,வுக்கு நெருக்கடி Posted: ஒரு முதல்வர், அதுவும் வருங்கால பிரதமர் என, விளம்பரப்படுத்தப்படும் நபர், 'குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று, விசாரணை நீதிமன்றம் முடிவு எடுக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தால், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினரின் கவனமும், அந்த வழக்கின் மீது பதிவது இயல்பானது. ஆனால், முதல்வர், ஜெயலலிதாவுக்கு எதிரான, வருமான வரி ஏய்ப்பு வழக்கில், கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஏனோ பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. அதற்கு, அந்த வழக்கு துவங்கிய காலம் ஒரு காரணமாக இருக்கலாம்.பல நோட்டீசுகள்: ... |
| நாட்டை காப்பாற்ற காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும்: சென்னை கூட்டத்தில் மோடி அறைகூவல் Posted: சென்னை: மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, நமது அரசியல் அமைப்புகளை சீர்குலைத்து விட்டது. நாடு முன்னேற்றம் அடைய, காங்கிரஸ் அரசு அகற்றப்பட வேண்டும்,''என, சென்னை அருகே, வண்டலூரில் நேற்று இரவு நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்ருமான, நரேந்திரமோடி அறைக்கூவல் விடுத்தார்.நரேந்திர மோடி தன் பேச்சை துவக்கிய போது, '' எங்கள் உயிருக்கு மேலான தமிழ் தாய்க்கு என் வணக்கம்; தமிழ் மண்ணே வணக்கம்; தமிழ் நண்பர்களே வணக்கம்...'' என, தமிழ்மொழியில் பேசி அசத்தினார். பின், இந்தியில் தன் உரையை தொடர்ந்தார். அவரது பேச்சை, எச்.ராஜா, தமிழில் மொழி ... |
| பல லட்சம் பேர் திரண்டதால் குலுங்கியது சென்னை: காங்கிரஸ், 3வது அணி கட்சிகள் மீது கடும் தாக்கு Posted: சென்னை அடுத்த வண்டலூரில், நேற்று நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சி பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்க, பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து, வண்டலூர் வரை, வழிநெடுகிலும், மோடிக்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணி கட்சிகளைத் தாக்கி பேசினார்.சென்னை அடுத்த வண்டலூரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. தமிழகத்தில், திருச்சிக்கு பிறகு, மோடி பங்கேற்கும், இரண்டாவது பொதுக்கூட்டம் ... |
| இத்தாலி வீரர்கள் மீது திடீர் கரிசனம் ஏன்? Posted: புதுடில்லி: கடந்த, 2012ல், கேரள கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, இத்தாலி கடற்படை வீரர்கள், இந்திய மீனவர்கள் இருவரை, சுட்டு கொன்றனர். இது தொடர்பாக, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டில், தண்டனை நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும், 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வழக்கை விசாரித்து வரும், தேசிய புலனாய்வு அமைப்பிடம், இத்தாலி வீரர்கள் மீதான குற்றச்சாட்டின் தன்மையை, குறைக்கும்படி கோரியுள்ளதாக, தகவல் வெளியானது. தற்போதுள்ள கொலை குற்றச்சாட்டுக்கு பதிலாக, ... |
| 'நான் அப்படி சொல்லவே இல்லையே...': அந்தர்பல்டி அடித்தார் சி.பி.ஐ., ரஞ்சித் Posted: புதுடில்லி: ''இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் தொடர்பாக, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், நான் எதையும் கூறவில்லை,'' என, சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்ஹா, ஒரே நாளில், பல்டி அடித்துள்ளார்.கடந்த, 2004ல், குஜராத் மாநிலத்தில், இஷ்ரத் ஜகான் என்ற கல்லூரி மாணவியும், அவரின் நண்பர்கள் மூன்று பேரும், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு, லஷ்கர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது, போலி என்கவுன்டர் என, குற்றச்சாட்டு எழுந்தது.மகிழ்ச்சி அடைந்திருக்கும்: இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், ... |
| 'கெஜ்ரிவால் பொய் சொல்கிறார்': 'மாஜி' அதிகாரி பட் ஆவேசம் Posted: புதுடில்லி: ''ஜனலோக்பால் மசோதா தொடர்பாக, என்னிடம் ஆலோசனை கேட்டதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது பொய்,'' என, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், கே.என்.பட் கூறியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான ஜனலோக்பால் மசோதா குறித்து, அம்மாநில கவர்னர், நஜீப் ஜங், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்டது தொடர்பாக, சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில், இந்த மசோதாவுக்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதற்கு முன்னதாக, பிரபல சட்ட நிபுணர்களின் கருத்துக்களை ... |
| Posted: தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 3,300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், இம்மாதம், 1,300 மெகாவாட் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 74 மெகாவாட் மட்டுமே கிடைப்பதால், கோடையில், தமிழகம் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, 12 ஆயிரம் மெகாவாட். மின் உற்பத்தி சராசரியாக, 8,000 - 9,000 மெகாவாட். இதனால், 3,000 மெகாவாட் அளவிற்கு, மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, தமிழக மின்சார வாரியம், ஒப்பந்தபுள்ளி மூலம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்தில் உள்ள, தனியார் நிறுவனங்களிடம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 09,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |