மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கெஜ்ரிவால் ஆட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. டெல்லி கவர்னருக்கு கடிதம்
- மங்கள்யான் விண்கலம் 1½கோடி கி.மீ. தூரத்தை கடந்தது: இன்னும் 233 நாட்களில் இலக்கை அடையும்
- ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியா நிற்கிறார்: நரேந்திர மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?
- ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் பதிவு: விசாரணை நடத்த சி.பி.ஐ. உத்தரவு
- 'ஒரு நோட்டு-ஒரு ஓட்டு' முழக்கத்துடன் மோடி கூட்டத்தில் வைத்திருந்த 5 உண்டியல்கள் சூறை: பா.ஜ.க.வினர் அதிர்ச்சி
- ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு: சீமாந்திரா அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்
- பாராளுமன்ற தேர்தல் தேதி 27–ந்தேதி அறிவிப்பு?
- தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: கிரண்குமார் ரெட்டி டெல்லியில் போராட்டம்
- டி.பி.சந்திரசேகரன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர்களிடம் மீண்டும் போலீஸ் விசாரணை
- திருப்பதியில் நாளை ரத சப்தமி விழா: ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா
- கான்பூர்: நகராட்சி உறுப்பினரைக் குப்பைக்கூளங்களுடன் சிறைப் பிடித்துவைத்திருந்த குடியிருப்புவாசிகள்
- திருமணமான பெண்ணை கற்பழித்ததாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராமன் சுவாமி கைது
- கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1.7 லட்சமாகும்: ஆய்வில் தகவல்
- இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், தெலுங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங்
- மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை
- பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையை எழுப்ப தி.மு.க. திட்டம்
- பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரி கைது
- தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ், பிரதமருடன் சந்திப்பு
- ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என்று மத்திய மந்திரி காலில் விழுந்த 20 எம்.எல்.ஏ.க்கள்
- சத்தீஸ்கார் மாநிலத்தில் குகை இடிந்து விழுந்து 8 பேர் பலி
| கெஜ்ரிவால் ஆட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. டெல்லி கவர்னருக்கு கடிதம் Posted: 04 Feb 2014 11:02 PM PST டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து அவரது கட்சியைச் சேர்ந்த வினோத் குமார் பின்னி எம்.எல்.ஏ போர்க் கொடி தூக்கினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டதாகவும், கெஜ்ரிவால் தவறான வழியில் செல்வதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து பின்னி எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளித்த ஐக்கிய ஜனதா தளம் |
| மங்கள்யான் விண்கலம் 1½கோடி கி.மீ. தூரத்தை கடந்தது: இன்னும் 233 நாட்களில் இலக்கை அடையும் Posted: 04 Feb 2014 10:50 PM PST செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மங்கள்யான் என்னும் விண்கலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5–ந்தேதி விண்ணில் செலுத்தியது. சுமார் ஒரு ஆண்டு பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடையும் வகையில் அந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இயங்கி வரும் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் ஆகிறது. இந்த 3 மாதத்தில் அந்த விண்கலம் சுமார் 1½ கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்து உள்ளது. |
| Posted: 04 Feb 2014 10:24 PM PST பாராளுமன்ற தேர்தலில் சுமார் 400 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தற்போதைய எம்.பி.க்கள் மீண்டும் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்க ஆம் ஆத்மி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு வாக்காளர்களை கவர ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளது. அதன்படி பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை |
| ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் பதிவு: விசாரணை நடத்த சி.பி.ஐ. உத்தரவு Posted: 04 Feb 2014 10:22 PM PST 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 17 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வக்கீலுமான பிரசாந்த் பூஷன் பேட்டியளித்தார். அப்போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான சி.டி.யை வெளியிட்டார். அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், தி.மு.க. தலைவர் கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன், கடந்த தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் ஆகியோர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் இருப்பதாக தெரிவித்தார். அதில் 4 உரையாடல் பதிவுகள் இருந்தன. |
| Posted: 04 Feb 2014 09:57 PM PST 2014- பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி 'ஒரு நோட்டு-ஒரு ஓட்டு' என்ற புதிய பிரசார யுக்தியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்படி, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் தங்களது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தும் வகையில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் தலா ஒரு |
| ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு: சீமாந்திரா அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் Posted: 04 Feb 2014 09:54 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர பிரிவினையை எதிர்த்து சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்கள் ஏற்கனவே 2 மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் |
| பாராளுமன்ற தேர்தல் தேதி 27–ந்தேதி அறிவிப்பு? Posted: 04 Feb 2014 09:37 PM PST பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏப்ரல் 10–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 27–ந்தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியும் நடக்கிறது. தேர்தல் தேதியை அறிவித்த பிறகே ஐ.பி.எல். போட்டி |
| தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: கிரண்குமார் ரெட்டி டெல்லியில் போராட்டம் Posted: 04 Feb 2014 09:16 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் மசோதாவை ஆந்திர சட்டமன்றம் நிராகரித்து திருப்பி அனுப்பியது. இருந்த போதிலும் தெலுங்கானா மசோதாவை பாராளு மன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி நேற்று டெல்லி சென்றார். அங்கு சீமாந்திரா பகுதி மந்திரிகள், |
| டி.பி.சந்திரசேகரன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவர்களிடம் மீண்டும் போலீஸ் விசாரணை Posted: 04 Feb 2014 08:45 PM PST கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து புரட்சிக்கர கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டவர் டி.பி.சந்திரசேகரன். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கும் அந்த கட்சியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. |
| திருப்பதியில் நாளை ரத சப்தமி விழா: ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா Posted: 04 Feb 2014 08:21 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450–க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டு பிரமோற்சவத்தின் போது 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதியில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதேபோல் ஆண்டு தோறும் நடக்கும் ரத சப்தமி விழாவில் 7 வாகனங்களில் மலையப்பசாமி வீதி உலா வருகிறார். சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் நாளை ரத சப்தமி விழா நடக்கிறது. நாளை காலை தொடங்கி இரவுவரை விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை ஒரே நாளில் 7 வா |
| கான்பூர்: நகராட்சி உறுப்பினரைக் குப்பைக்கூளங்களுடன் சிறைப் பிடித்துவைத்திருந்த குடியிருப்புவாசிகள் Posted: 04 Feb 2014 07:01 PM PST உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்பூர் நகரின் பட்டேல் நகர் குடியிருப்புவாசிகள் தங்கள் தெருக்களில் சுத்தம் செய்யப்படாமல் மலைபோல் குவிந்த குப்பைகளால் மிகவும் தொல்லைக்கு ஆளாகினர். குவிந்து கிடந்த குப்பைகளால் ஏற்பட்ட சுகாதாரமற்ற நிலை ஒருபுறமிருக்க அங்கிருந்த சாக்கடைகளும் சுத்தம் செய்யப்படாமல் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன. இவற்றை சுத்தம் செய்யச்சொல்லி அந்த பகுதி மக்களும் பலமுறை நகராட்சி அலுவலகத்திலும், தங்களின் நகராட்சி உறுப்பினரான மனோஜ் |
| திருமணமான பெண்ணை கற்பழித்ததாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராமன் சுவாமி கைது Posted: 04 Feb 2014 05:10 PM PST ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஹரிகேஷ் நகர் தலைவரான ராமன் சுவாமி, ஜனவரி மாதம் 25-ம் தேதி திருமணமான பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கெடுத்துவிட்டதாக பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. |
| கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1.7 லட்சமாகும்: ஆய்வில் தகவல் Posted: 04 Feb 2014 04:27 PM PST கர்நாடக மாநிலத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 50,000க்கு சற்று அதிகமாக மட்டுமே உள்ளன என்ற அரசின் கூற்றை அம்மாநிலத்தின் சமீபத்திய ஆய்வே மற்றியமைத்துவிட்டது சமீபத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அதன் கணக்கீடுகள் 1,70,525 என்ற அளவைக் காட்டின. |
| இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், தெலுங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி: மன்மோகன்சிங் Posted: 04 Feb 2014 03:23 PM PST இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், தெலுங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். நடப்பு பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 21-ந் தேதி முடிகிறது. |
| மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை Posted: 04 Feb 2014 02:28 PM PST மேற்குவங்கத்தின் தம்லுக் பகுதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மிட்னாபூர் மாவட்ட நந்திகிராம் தொகுதி துணை பிரதானான சமர் மைத்தி சந்தைக்கு சென்று இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியது. |
| பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையை எழுப்ப தி.மு.க. திட்டம் Posted: 04 Feb 2014 01:25 PM PST பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் மீராகுமார் நேற்று நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். |
| பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரி கைது Posted: 04 Feb 2014 01:02 PM PST உத்தரகாண்ட் மாநிலத்தின் பழம்பெருமை வாய்ந்த பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியாக இருப்பவர் கேசவன் நம்பூதிரி. இவர், டெல்லி மெராலியிலுள்ள ஒரு ஹோட்டலில் கடந்த திங்களன்று அவரது உதவியாளர் விஷ்ணு பிரசாத்துடன் தங்கியிருந்தார். அப்போது, பத்ரிநாத்தில் ஓட்டல் வைத்திருக்கும் தனக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு போன் செய்து ஓட்டலுக்கு அழைத்துள்ளார். |
| தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ், பிரதமருடன் சந்திப்பு Posted: 04 Feb 2014 12:55 PM PST தெலுங்கானா மசோதா நிறைவேற்றுவதில் ஒரு உறுதியற்ற நிலை உள்ளதால், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். |
| ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என்று மத்திய மந்திரி காலில் விழுந்த 20 எம்.எல்.ஏ.க்கள் Posted: 04 Feb 2014 12:25 PM PST தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான வரைவு மசோதாவை இறுதி செய்வதற்காக டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் மத்திய மந்திரிகளின் குழு ஆலோசனை நடத்தியது. இதற்காக ஒவ்வொரு மந்திரிகளாக அங்கு வந்து கொண்டிருந்தனர். |
| சத்தீஸ்கார் மாநிலத்தில் குகை இடிந்து விழுந்து 8 பேர் பலி Posted: 04 Feb 2014 10:02 AM PST சத்தீஸ்கார் மாநில சூரஜ்பூர் மாவட்டத்திலுள்ள குகையை சுற்றிப்பார்க்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் சென்று இருந்தனர். அப்போது மலையிலிருந்து உருண்ட வந்த பெரிய பாறாங்கல் ஒன்று உருண்டு குகையின் மேல் வந்து விழுந்தது. இதில் குகை இடிந்து விழுந்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |