Tamil Star |
- 5 நிமிடத்தில் 14 மசாலா தோசைகள்!….
- கடற்குதிரை குஞ்சு பொரிக்கும் அரிய காட்சி…!
- பொலிசை புரட்டி எடுத்த நபர்!..
- பதியுதீன் நினைத்தால் வன்னியில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு – வடக்கு முதல்வர்
- இவங்க ரெண்டு பேரும் அப்படி என்னதான் பேசிக்குறாங்க!..
- தீவிரவாத மோதல் சிக்கலை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் – ஜனாதிபதி
- முயற்சி இருந்தால் எதையும் வெல்லலாம் “சூப்பர் சிங்கர் புகழ் திவாகர்”
- அட என்னமா கொஞ்சிக்கிறாங்க இவங்க…..
- சமாதானத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது – ஜனாதிபதி
- கலை வடிவம் பெறும் சச்சினின் சாதனைகள்
- பாரத ரத்னாவை கைப்பற்றிய சச்சின்
- சிறீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கு….! ஓர் கடிதம்
- Acer அறிமுகப்படுத்தும் Aspire S7 நோட்புக்
- வடக்கு மக்களை ஐரோப்பிய நாடுகள் மீண்டும் மனித கேடயமாக்குகின்றன – ஜனாதிபதி
- சிங்கக்கொடி ஏற்ற மறுத்த ரவிகரன். பாடசாலை நிகழ்வில் பரபரப்பு.
- கணனியில் இலகுவாக இறுவட்டுக்களை கையாள்வதற்கு
- ஆயிரக்கணக்கான பணியாளர்களை இடைநிறுத்தம் செய்யும் டெல்
- ஹேப்பி பர்த்டே பேஸ்புக்
- போராட்டத்திற்கு மத்தியில் மலர்ந்த காதல்
- நாய்கள் தொல்லை ! அலறும் மக்கள்
| 5 நிமிடத்தில் 14 மசாலா தோசைகள்!…. Posted: 04 Feb 2014 05:09 AM PST |
| கடற்குதிரை குஞ்சு பொரிக்கும் அரிய காட்சி…! Posted: 04 Feb 2014 05:05 AM PST பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை(200 முட்டைகள்) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 04 Feb 2014 05:01 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| பதியுதீன் நினைத்தால் வன்னியில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு – வடக்கு முதல்வர் Posted: 04 Feb 2014 04:59 AM PST கத்தோலிக்க – முஸ்லீம் பிரச்சனை, தமிழர் – முஸ்லீம் பிரச்சனை, சிங்களவர் – முஸ்லீம் பிரச்சனை, சிங்களவர் – தமிழர் பிரச்சனை என்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் நினைத்தால் அவற்றை நீதியும் நியாயமுமான முறையில் தீர்த்து வைக்கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையில் சுகாதார தொழிலார்ளகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். […] |
| இவங்க ரெண்டு பேரும் அப்படி என்னதான் பேசிக்குறாங்க!.. Posted: 04 Feb 2014 04:49 AM PST |
| தீவிரவாத மோதல் சிக்கலை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் – ஜனாதிபதி Posted: 04 Feb 2014 04:47 AM PST தீவிரவாதத்திற்கு எதிரான மோதலின் போது காணப்படும் சிக்கல்களை உலகில் பலம் பொருந்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வு கேகாலையில் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் அடிப்படை அற்றது எனவும் அதில் உண்மை கிடையாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் இன்று அனுபவித்துவரும் சுதந்திரத்தை பறிக்க இடமளிக்கப்பட மாட்டாதெனவும் […] |
| முயற்சி இருந்தால் எதையும் வெல்லலாம் “சூப்பர் சிங்கர் புகழ் திவாகர்” Posted: 04 Feb 2014 04:40 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| அட என்னமா கொஞ்சிக்கிறாங்க இவங்க….. Posted: 04 Feb 2014 04:36 AM PST |
| சமாதானத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது – ஜனாதிபதி Posted: 04 Feb 2014 04:28 AM PST
66ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியிலேயே சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காடடியுள்ளார். இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றதாகவும், 2009ம் ஆண்டு மே மாதம் முதல் வடக்கு மக்கள் முதல் அனைவரும் சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களினால் அனுபவிக்கப்பட்டு வரும் சுதந்திரத்தை எவரும் எடுத்துச் செல்ல இந்த அரசாங்கம் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட உள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை பலம்பொருந்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கலை வடிவம் பெறும் சச்சினின் சாதனைகள் Posted: 04 Feb 2014 04:23 AM PST இந்தியக் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தனது சொந்த ஊரான மும்பையில் 200-வது டெஸ்ட் போட்டியுடன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்திய அரசு அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அவருக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த விருதினை இந்திய அரசு சச்சினுக்கு இன்று அளிக்கவுள்ளது. இந்த நேரத்தில் நாசிக்கைச் சேர்ந்த ஓவியரான பிரபுல் சாவந்த் சச்சினின் வாழ்க்கை […] |
| பாரத ரத்னாவை கைப்பற்றிய சச்சின் Posted: 04 Feb 2014 04:21 AM PST சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவித்துள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். 24 ஆண்டுகள் நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16ம் திகதி சொந்த மண்ணில் பிரியாவிடை பெற்றார். டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய அணிக்கு அவரது சேவைகளை கவுரவிக்கும் விதமாக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்குவதாக மத்திய அரசு […] |
| சிறீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கு….! ஓர் கடிதம் Posted: 04 Feb 2014 04:19 AM PST
ஜெயவேவா சத்ததையும் கொஞ்சம் குறை..அப்போதுதான் எல்லாம் புரியும் உனக்கு. உயிரினங்கள் அனைத்தும் பிரியமான- மிகமிக விருப்பமான ஒரு சொல் இருக்குமாக இருந்தால் அதுதான் "சுதந்திரம்" விடுதலை" என்பன. உன் தேசசுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருப்பாய். காலிமுகக் கடற்கரையில் உன் முப்படைகளையும் கொண்டு நிலமதிர அணிவகுப்பிடு. கறுப்புகண்ணாடியும் சிவப்பு தோள் துண்டும் அணிந்த உன் தேசத்து அதிபர் உரைக்கு கைதட்டு. யாரிடமோ திருவோடு ஏந்தி வாங்கி குவித்து வைத்திருக்கும் ஆயுதங்களின் பளபளப்பில் துட்டகைமுனுவை நினைவிருத்து. இது எல்லாம் செய். உன் சிங்களதேச சுதந்திர தினம். அதில் என்ன கூத்ததடித்தாலும் எமக்கு குறைவேதும் இல்லை- குற்றமும் இல்லை. ஆனால்,உன் பக்கத்து தேசமான தமிழீழமெங்கும் இராணுவ முற்றுகைகளுக்குள்ளேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று நீ விரும்பிக் கொண்டிருக்கிறாய் பார், அதுதான் எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் நீ தென்னிலங்கையில் ஏற்றும் அதே சிங்ககொடிதான் தமிழர் மண்ணிலும் ஏறியே ஆகவேண்டும் என்று நீ அடம்பிடிக்கிறாய் பார் அதுதான் எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை- ஒருபோதும். இன்று நீ சுதந்திரதினமாக கொண்டாடும் இந்த நாள் எமது வரலாற்றிலும் முக்கியமானது தெரியுமா.. ? இந்த நாளில் (04 பெப்) இருந்துதான் தமிழர்கள்மீதான இனப்படுகொலை ஆரம்பித்தது. இந்த நூற்றாண்டின் மிகவும் கொடிய குரூரமான இனப்படுகொலையை எம்மீது நடாத்திவிட்டு ஒன்றுமே நடைபெறாதது போல் சிங்களதேசமக்கள் நடப்பதைத்தான் எம்மால் ஜீரணிக்க முடியவில்லை. லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுபுதைத்து, சிதைத்து எரித்ததன் குறியீடாக தமிழர்கள் பெருஞ் சோகத்துடன் நினைவுகொள்ளும் மே18 என்பதை வெற்றிநாளாக குதூகலிக்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை உண்மையாகவே நாம் வெறுப்புடனும் வன்மத்துடனுமே பார்க்கிறோம்- அதனால்தான் இந்த நாளை நாம் கரிநாளாக, துக்கநாளாக, எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாளாக நினைக்கின்றோம். உனக்கு தெரியுமா…எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இ.ந்த நாளை நாங்கள் எவரும் மனம் ஒத்து கொண்டாடியதில்லை என்று. எரிந்தும் கரிகியும் கிடந்த சிங்கக் கொடிகள்தான் என் வீதிகளில் கிடக்கமுடியும் என்பதில் இருந்தே ஒன்று புரியவில்லையா உனக்கு. சிங்கள தேசத்தின் சிங்கக் கொடி தமிழர் தாயகத்தில் ஆயுதபடைகளின் துணையின்றி ஒருநிமிசம் கூட பறக்கமுடியாது என்ற யதார்த்தத்தை நீ ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய் என்று தெரியவில்லை. கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி பார்…. முதலில் ஒன்று உனக்கு தெரியுமா…எங்களின் தாயக இறைமை ஒருபோதும் நாம் சிங்கள இனத்திடம் ஒப்படைத்ததே இல்லை.அது ஐரோப்பிய காலனி ஆதிக்க கடவுள்கள் செய்தவினை. ஐரோப்பியர் இந்த தீவுக்கு வந்தபோது இங்கு ஒன்றும் சிங்கள ராஜ்யமே முழுவதும் இருந்ததில்லை. அந்த காலம் உலகம் முழுதும் இருந்த ஆட்சிமுறையான மன்னர் ஆட்சியில் நீங்கள் சிங்கள மன்னர்களாலும், நாங்கள் எமது மொழிபேசும் தமிழ் மன்னர்களாலுமே ஆளப்பட்டு வந்தோம். ஒரு தீவுக்குள் இரண்டு தேசங்கள். 1619ல் போத்துகீசர்கள் சங்கிலியனை வென்றபோதும்கூட எமது தமிழ்த் தேச இறைமை அவர்களிடம் இலகுவாக வீழ்ந்துவிடவில்லை. வருணகுலத்தான் போன்றவர்கள் தஞ்சை நாயக்கமன்னர்களிடம் இருந்து உதவி பெற்று தமிழ்தேச இறைமையை தக்க வைப்பதற்காக போரிட்ட வரலாறுகளும், அதன்பின்னர் பண்டார வன்னியன் போரிட்ட வரலாறுகளும் எமக்கும் உண்டு. தமது நிர்வாக வசதிக்காக இந்த தீவு முழுதையும் ஒன்றாக்கிய ஆங்கிலேயர் தாம் வெளியேறும்போது அதனை உங்களிடம் ஒப்படைத்து சென்ற வரலாற்று துரோகத்தால்தான் நானும் நீயும் ரத்தம் சிந்துகின்றோம் தெரியுமா.. நிற்க, இலங்கைதீவின் சுதந்திரத்துக்காக உன் முப்பாட்டனும், பாட்டனும் போரிடாவிட்டாலும் உலகெங்கும் ஏற்பட்ட அழுத்தங்களால் போகிற போக்கில் பக்கிம்காம் அரசி தூக்கி எறிந்த சுதந்திர பிச்சை உன் சிங்கள தலைவர்களின் திருவோட்டில் விழுந்ததுதான் இன்றைய பிரச்சனைகளுக்கு கால். அதுவரை பதுங்கி இருந்த சிங்கள பேரினவாத பேய் 04.02.48க்கு பின்னரே வெளிவந்து விசுவரூபமெடுத்து விசரெடுத்து ஆடத்தொடங்கியது. உன் மூளையின் ஒவ்வொரு திசுக்களிலும் மகாவம்ச கனவை ஊட்டியும் ஊற்றியும் வளர்த்தெடுத்த சிங்கள பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஆள்வதுதான் சிங்கள இனத்தின் இருத்தலுக்கு மிகமுக்கியம் என்ற சேதியை எப்படியோ பதியம் போட்டுள்ளது. நீயும் யார் தமிழர்களை அதிகமாக அழிக்கிறார்களோ அவர்களையே வாக்களித்து தெரிவுசெய்து பேரினவாத சேற்றுக்குள் சங்கமித்தாய். தமிழர்கள் தொடர்ச்சியாக அடக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உனக்கு உறைக்காமல் விட்டாலும் எமக்கு உறைத்தது. அதனாலேயே எமக்கே உரித்தான எம் தாய்மண்ணில் எம் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட எழுந்தோம்.விடுதலைக்கான எழுச்சியானது அது. எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குதல்களும் எவ்வளவு வலிகளை தந்தாலும் வரலாறு அதில் இருந்து விடுதலை ஆக ஒரு சக்தியை வழங்கும் என்பது பொது விதி அல்லவா… எமக்கும் ஒரு தலைவன் கிடைத்தான்.யாருக்குமே கிடைக்காத ஒரு நேர்மையான உண்மையான வழிகாட்டி ஒருவன் கிடைத்தான். முப்பதாண்டுகள் அவன் நடாத்திய உன்னதமான போராட்டம் சிங்கள மகனே உனக்கு எத்தனை சேதி சொல்லியும் நீ இன்னும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வரலாற்று சோகம் போ. உதாரணத்துக்கு ஒன்று, சிங்கள பேரினவாத ஆட்சி மையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் களத்தை திறந்தது சிங்களம்.ஆனால் தமிழர் போராட்டம் சிங்கள பேரினவாத ஆட்சிமையத்தின் மூளை மடிப்புகளுக்குள்ளும் அதிர்வுகளை பொறிகளை உருவாக்கி சிங்களம் முழுதையும் அச்சத்தில் வைத்திருந்த காலத்தை எப்படித்தான் அத்தனை சுலபமாக மறந்தாயோ தெரியவில்லை. தமிழர்களுக்கான சுதந்திரம்தான் சிங்களமக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும் என்று எங்கள் தேசியதலைவன் சொன்னதன் அர்த்தத்தை நீ எப்படி புரிந்து கொண்டாயோ தெரியவில்லை… ஒரே தீவுக்குள் இன்னொரு தேசத்தை அடிமையாக அடக்கி வைத்திருக்கும் வரைக்கும் உண்மையான சுதந்திரத்தினை சிங்களமக்களும் அனுபவிக்க முடியாது என்பதுதான் முப்பதாண்டு போராட்டம் சிங்கள இனத்துக்கு சொல்லிய வரலாறு. வரலாற்றில் எப்போதாவது அரிதாக நிகழும் போர்க்கள வாய்ப்பு, துரோகத்தின் கூட்டு, மேலாதிக்க ஒத்துழைப்பு, சர்வதேச ஒத்துழைப்பு என்பன ஒன்றாக இணைந்ததால் கிடைத்த தற்காலிக வெற்றியையே முழுமையானதாக, நிரந்தரமானதாக எண்ணிக் கொண்டிருக்கும் சிங்களமகனே, அந்த பெரும் இனவழிப்பு நாட்களான 2009 மே 18ல் கூட எமது போரிடும்வலு,ஆளணி,தளபாடங்கள் என்பனவற்றை இழந்திருக்கிறோம் உண்மைதான். ஆனால் தமிழர் தாயக இறைமை என்பதை எந்தவொரு இடத்திலும் உங்களிடம் சரணாகதி வைக்கப்படவில்லை. எல்லா காலங்களிலும் வரலாறு அடக்குமுறையாளனுக்கு சாதகமாவே இருந்தது கிடையாது. அடக்கப்பட்ட மக்களும் எப்போதும் தூங்கிக் கிடப்பார்கள் என்பதும் கிடையாது. சிங்கள தேச சுதந்திரநாளுக்காக சிங்கக் கொடியை ஆட்டியபடியே கூவிக்குதூகலிக்கும் சிங்களகுடிமகனே, கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பார். யாரோ கண்படிப் பிரபுத்துவ பண்டாரநாயகாக்களுக்காகவும், சேனநாயக்காகளுக்காகவும், ராஜபக்சே குடும்பத்துக்காகவும் நீ ஆயுதம் ஏந்தி எம் மண்ணில் இன்னும் எத்தனை காலம்தான் நிலைகொண்டு நிற்கபோகிறாய்…. உலக வரலாறுகளை புரட்டிப்பார். உலகம் முழுதும் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை வைத்திருந்த சக்ரவர்த்தினி பக்கத்து நாடாக இருந்த போதிலும் எழுந்தார்களே அயர்லாந்தின் தான்பிரின்கள் அவர்கள் எப்படி எழுந்தார்கள் என்பதையும், மேலும் உலகமுழுதும் எழுச்சி கொண்ட மக்களின் வரலாறுகளையும் புரட்டிப்பார் … ஏன் அதிகதூரம் போகிறாய்.. உன் பக்கத்திலேயே..மிக பக்கத்திலேயே பார். உன் சிங்கள தேச தலைநகரின் நீதிமன்றிலேயே "தமிழீழ தேசத்தவர்களான எம்மை விசாரிக்க சிங்கள தேசத்துக்கு உரிமை இல்லை" என்று எம் விடுதலை வீரர்கள் முழங்கினார்களே அப்போதே தெரியவில்லையா நீ வேறுதேசம் நாம் வேறுதேசம் என்று.. பொன்னம்பலம் ராமநாதன்களை கண்டுபழகி போட்ட கணக்கால் தமிழர்கள் சலுகைகளையே யாசிப்பர், போரிடவே மாட்டார்கள் என்ற கனவுடன் தூங்கிக்கிடந்த சிங்கள பேரினவாத கனவுகலைத்து யதார்த்தத்தை தீயாக பொசுக்கி புரியவைக்க ஒருவன் பிறப்பான் என்பதை சேனநாயகாவும் பண்டாவும் ஒருபோதும் கனவுகூட கண்டிருக்கமாட்டார்கள்தான். ஆனால் நடந்தது என்ன என்பதை நீ உன் கண்ணாலே கண்டும் கேட்டும் இருப்பாய். எனவே இப்போதே ஆதிக்க எண்ணம் கலை.உனக்கு இருக்கும் சுதந்திரதேசம் போல ஒன்று தமிழர்களுக்கும் இருக்கு என்ற யதார்த்தம் புரி. உன்மீது சவாரி செய்யும் சிங்கள ராஜபக்சேகளை தூக்கி எறி. மீண்டும் சொல்கிறேன்….எங்களின் தேசியதலைவன் சொன்னதுபோல தமிழர்களின் சுதந்திரம்தான் சிங்கள மக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள். இந்த தீவில் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் பொங்க அதுவே முடிவாகும். அதுவரை உன் சுதந்திரநாள் எமக்கு துக்கநாள்தான்.உன் சுதந்திர நாளை எம்மீதான இனப்படுகொலை ஆரம்பித்த நாளாகவே பார்ப்போம். சந்திப்போம்… தமிழீழமகன் ச.ச.முத்து This posting includes an audio/video/photo media file: Download Now |
| Acer அறிமுகப்படுத்தும் Aspire S7 நோட்புக் Posted: 04 Feb 2014 04:16 AM PST Acer நிறுவனமனாது Aspire S7 எனும் புத்தம் புதிய நோட்புக் ஒன்றினை இந்த வாரத்தில் அறிமுகம் செய்கின்றது. முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள இந்த நோட்புக் ஆனது 13.3 அங்குலம் அளவுடையதும், 2,560 x 1,440 Pixel Resolution உடையதுமான WQHD திரையினைக் கொண்டுள்ளது. ஏனைய கணனிகளை விடவும் 20 சதவீதம் குறைந்த ஒலியை பிறப்பிக்கும் இக்கணனி மைக்ரோசொப்ட் விண்டோ 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் Intel Core i5 Processor, பிரதான நினைவகமாக 8GB […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு மக்களை ஐரோப்பிய நாடுகள் மீண்டும் மனித கேடயமாக்குகின்றன – ஜனாதிபதி Posted: 04 Feb 2014 04:09 AM PST
இன்று கேகாலையில் நடைபெற்ற 66 வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் ஜெனிவாவில் கொண்டு இலங்கைக்கு எதிராக கொண்டு வர முயற்சிக்கும் யுத்த குற்றச்சாட்டுகள் சமாதானத்தை விரும்பாதவர்களின் செயற்பாடுகள் .நாட்டின் பிரிவினைவாதத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பவர்களினால் வழங்கப்படும் தகவல்களை வைத்தே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்றும் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்மொழிய இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருப்பதன் பின்னணியில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அன்று தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்தமை உட்பட விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி எவரும் பேசவில்லை என்று குறிப்பிட்டார். தொடந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்களை மீண்டும் கேடயமாக்க சில மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றன. இதனை வட பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களை காப்பாற்றுவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் என்றுதான் நாடுகள் மீது அவர்கள் கை வைப்பார்கள். தமிழ் மக்களுக்கு நாம் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது வேறு நாட்டிற்கு அடிமையாகவோ அல்லது கேடயங்களாக வாழ்வதற்கோ அல்ல என்று குறிப்பிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிங்கக்கொடி ஏற்ற மறுத்த ரவிகரன். பாடசாலை நிகழ்வில் பரபரப்பு. Posted: 04 Feb 2014 04:04 AM PST
முல்லைத்தீவு ஒலுமடு தமிழ்வித்தியாலய இல்லவிளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட ரவிகரனை , இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றி வைக்க அழைத்தபோது , ரவிகரன் அதை வெளிப்படையாக மறுத்த நிகழ்வு அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது , முல்லைத்தீவு ஒலுமடு தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி , பாடசாலை அதிபர் திரு,சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. வலயக்கல்வித் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள் சிலரும் அப்பகுதி கிராம அலுவலர், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர். பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்து சிறப்பித்தார். பாடசாலை சமூகத்தால் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மங்கள விளக்கேற்றல் முடிந்ததும் தேசியக்கொடியினை பிரதம விருந்தினர் ரவிகரன் அவர்களை ஏற்றி வைக்க, அறிவிப்பாளர் அறிவித்தபோது , ரவிகரன் அதை மறுத்ததாக தெரிய வருகிறது. இதையடுத்து , பிரதம விருந்தினர் அவர்கள் ஏற்றுவது தான் முறையென சிலரால் அருகில் தெரிவிக்கப்பட்டபோதும் ரவிகரன் மறுத்துவிட்டார். தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கக்கொடி ஏற்ற மாட்டேன் என்று கூறிவிட்டார். படையினர் ,பொதுமக்கள் என பலர் குழுமியிருந்த அந்த நிகழ்வில் , ரவிகரனின் மறுப்பு , பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதையடுத்து அங்கு வந்திருந்த படை அதிகாரி ஒருவர் கொடி ஏற்றினார். அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளில், அதிபர் தனதுரையில் தமது பாடசாலையின் கட்டடம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் புனரமைப்பு அவசியம் பற்றி வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ரவிகரன் தனதுரையில் உரிய தேவைகள் பற்றிய விடயங்களில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கணனியில் இலகுவாக இறுவட்டுக்களை கையாள்வதற்கு Posted: 04 Feb 2014 04:00 AM PST கணனியில் இலகுவாகவும், விரைவாகவும் இறுவட்டுக்களை (CD/DVD) கையாள்வதற்கு பிரத்தியேக மென்பொருள் ஒன்று உதவி புரிகின்றது. FastEject எனும் இம்மென்பொருளின் உதவியுடன் இறுவட்டு செலுத்தியை விரைவாக திறக்கவும், மூடவும் முடியும். அத்துடன் மவுஸின் உதவியுடன் மட்டுமல்லாது கீபோர்ட் ஷார்ட் கட்களின் உதவியுடனும் இறுவட்டு செலுத்தியை கையாளும் வகையில் இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்கச் சுட்டி தரவிறக்கச் சுட்டி |
| ஆயிரக்கணக்கான பணியாளர்களை இடைநிறுத்தம் செய்யும் டெல் Posted: 04 Feb 2014 03:47 AM PST கணனி உற்பத்தியில் பிரபல்யம் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் டெல் நிறுவனமானது, இந்த வாரத்தில் சுமார் 15,000 பணியாளர்களை இடை நிறுத்தம் செய்யவுள்ளது. இதுவரை இல்லாத அளவில் பெரிய எண்ணிக்கையிலான பணியாளர்களை இடைநிறுத்த தயாராகும் அந்நிறுவனம், இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை. எனினும் அமெரிக்காவிலுள்ள பணியாளர்களை இடைநிறுத்தவுள்ளதுடன் அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான கொடுப்பனவு, 75 சதவீத போனஸ், 18 மாதங்களுக்கான சுகாதாரக் காப்புறுதி என்பனவற்றினையும் வழங்க டெல் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 04 Feb 2014 03:44 AM PST சமூக வலைத்தளத்தில் வல்லரசாக வலம் வரும் பேஸ்புக் இன்று தனது 10வது பிறந்த நாளை இன்று(பிப்ரவரி 4ம் திகதி) கொண்டாடுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகர்பெர்க் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார். அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார். இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைத் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| போராட்டத்திற்கு மத்தியில் மலர்ந்த காதல் Posted: 04 Feb 2014 03:34 AM PST உக்ரேனை சேர்ந்த நபர் ஒருவர், தனது காதலியிடம் மிகவும் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். உக்ரேனில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜென்யா என்பவர், தனது காதலி நஸ்ட்யாவிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தி உள்ளார். சுதந்திர சதுக்கத்துக்கு அருகே உள்ள வீதியிலேயே கடந்த 2ம் திகதி தனது காதலை பற்றி கூறியுள்ளார். தலைக்கவசம், முகமூடி, குண்டு துளைக்காத ஆடை என அனைத்தையும் அணிந்து கொண்டு, ஒற்றைக்காலில் மண்டியிட்டு ஒலிபெருக்கி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாய்கள் தொல்லை ! அலறும் மக்கள் Posted: 04 Feb 2014 03:30 AM PST ரஷ்யாவில் நாய்கள் தொல்லை தாங்க முடியாமல் மக்கள் தினம் தினம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் எங்கு பார்த்தாலும் தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பகல் நேரங்களில் பஸ், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தோடு உலா வரும் இந்த நாய்கள், இரவு நேரங்களில் சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றன. சுரங்க ரயில் பாதைகளிலும் இந்த நாய்கள் சகஜமாக வலம் வருகின்றன. அதிலும் குறிப்பாக சாலை விதிகளை தவறாமல் பின்பற்றுக்கின்றன, பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே சாலையை கடந்து […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









