Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மக்களை ஏமாற்றிவிட்டார்: முதல்– மந்திரி கெஜ்ரிவாலை சுட்டுக் கொல்வேன்- ஆட்டோ டிரைவர் ஆவேசம்

Posted: 05 Feb 2014 11:04 PM PST

டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன் ஒரு மர்ம டெலிபோன் வந்தது. கட்சி தலைவர் டி.டி.சர்மா போனை எடுத்தார். அதில் பேசியவர் தன்னை ராம் நாராயணன் பகத் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்ததாக தெரிவித்தார். திடீர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை ஏமாற்றி விட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தவறிவிட்டார். அவரது செயல்பாடுகள் சரியில்லை என்றார்.

தீவிரவாதி புல்லரைத் தொடர்ந்து மேலும் 3 பேரை தூக்கில் போட தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 05 Feb 2014 10:26 PM PST

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 21–ந் தேதி ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்களது கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி காலதாமதமாக முடிவு எடுத்ததால் தண்டனையை குறைப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து இருந்தனர். அவர்களுடன் சேர்த்து மேலும் 15 பேர் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஜெகன்மோகனின் தங்கை தேர்தலில் குதிக்கிறார்: விஜயவாடா தொகுதியில் போட்டி

Posted: 05 Feb 2014 10:09 PM PST

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவரது தாயார் விஜயம்மா புலிவெந்தலா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தங்கை ஷர்மிளாவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது ஷர்மிளா நியாயம் கேட்டு

டி.பி. சந்திரசேகரன் கொலை வழக்கு: சதிக்கு பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்க 6 போலீஸ் அதிகாரிகள் குழு

Posted: 05 Feb 2014 09:51 PM PST

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து புரட்சிக்கர கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கிய டி.பி. சந்திரசேகரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த கொச்சி கோர்ட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அந்த கைதிகள் தற்போது கண்ணூர் சிறையில்

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்

Posted: 05 Feb 2014 09:51 PM PST

இந்திய கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் 12 மடங்கு உயர்ந்து உள்ளதாக பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்.) தெரிவித்துள்ளது. அதோடு இந்திய பணக்காரர்களின் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடியாகும். லட்சுமி மித்தல் ரூ.96 ஆயிரம் கோடி சொத்து குவித்து 2–வது இடத்திலும், துலீப் ஷங்வி ரூ.83,400 கோடி சொத்து குவித்து 3–வது இடத்திலும் உள்ளனர். இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலில் சிவ் நாடார் 7–

நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

Posted: 05 Feb 2014 09:47 PM PST

15-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த கூட்டம், வருகிற 21-ந்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடரின் முதல் நாளான நேற்று தெலுங்கானா, வகுப்பு வாத தடுப்புச் சட்டம், அருணாசால பிரதேச எம்.எல்.ஏ. மகன் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

3 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்: சீமாந்திரா பகுதியில் அரசு அலுவலகங்கள் முடங்கியது

Posted: 05 Feb 2014 09:23 PM PST

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வகை செய்யும் மசோதாவை பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி டெல்லியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார். மாநில பிரிவினைக்கு எதிராக போராடும் அரசியல் வாதிகளுக்கு ஆதரவாகவும் ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வலியுறுத்தியும் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த 4½ லட்சம் அரசு ஊழியர்கள்

திருப்பதி கோவிலில் ரத சப்தமி விழா: பக்தர்கள் தரிசனம்

Posted: 05 Feb 2014 09:05 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. இதையொட்டி இன்று ஒரே நாளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி 7 வாகனங்களில் மாட வீதியில் உலா வருகிறார். இதனை காண திரளான பக்தர்கள் நேற்று முதலே திருமலையில் குவியத் தொடங்கினர். இன்று காலை 5.30 மணி அளவில் சூரிய பிரமை வாகனத்தில் சூரிய நாராயண மூர்த்தி அலங்காரத்தில் மலையப்ப சாமி எழுந்தருளினார். பின்னர்

முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சுட்டுக் கொல்வேன்: ஆட்டோ டிரைவர் ஆவேசம்

Posted: 05 Feb 2014 09:04 PM PST

டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன் ஒரு மர்ம டெலிபோன் வந்தது. கட்சி தலைவர் டி.டி.சர்மா போனை எடுத்தார். அதில் பேசியவர் தன்னை ராம் நாராயணன் பகத் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்ததாக தெரிவித்தார். திடீர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை ஏமாற்றி விட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தவறி விட்டார். அவரது செயல்பாடுகள் சரியில்லை என்றார்.

உடனடி விசா வருகை திட்டத்தை 180 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ள இந்திய அரசு

Posted: 05 Feb 2014 08:33 PM PST

பாகிஸ்தான், ஈரான், இலங்கை, சீனா உள்ளிட்ட எட்டு முன்குறிப்பு நாடுகள் தவிர்த்து விசா தாராளமயமாக்கல் திட்டத்தின் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்திய அரசு 180 நாடுகளுக்கு உடனடி வருகை விசா திட்டத்தையும், மின்னணு பயண அங்கீகாரத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. வெளிநாட்டுப் பயணிகள் இணையதளம் மூலம் பயண அனுமதிக்கு விண்ணப்பித்தால் அதனைத் தொடர்ந்த ஐந்து வேலை நாட்களுக்குள்

பிரணாப் முகர்ஜி விவகாரம்: மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 05 Feb 2014 07:06 PM PST

கொல்கத்தாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பிரணாப் முகர்ஜிக்கு 2 முறை பிரதமர் ஆகிற வாய்ப்பை இந்திரா காந்தி குடும்பம் தடுத்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான குலாம்நபி ஆசாத் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் இடையே நிருபர்களிடம் பேசினார். அப்போது பிரணாப் முகர்ஜி தொடர்பாக நரேந்திர மோடி கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "எங்கள் கட்சியில் நாங்கள் செய்வது குறித்து அவர் கவலைப்பட தேவை இல்லை" என கூறினார். மூன்றாவது அணி குறித்த கேள்விக்கு குலாம்நபி ஆசாத், "இது ஜனநாயக நாடு. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு அணியை உருவாக்க உரிமை உள்ளது. 3-வது அணி பற்றி நான் எதுவும் கூற முடியாது" என பதில்

ஷிமோகா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் எட்டியூரப்பா ஒப்புதல்

Posted: 05 Feb 2014 05:35 PM PST

ஷிமோகா பாராளுமன்ற தொகுதியில் போட்டிசமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எட்டியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கட்சித்தலைவர்களும், மாவட்ட கட்சிக்காரர்களும் என்னை வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கேட்டுக்கொண்டுள்ளனர். நானோ அல்லது எனது மகன் ராகவேந்திராவோ ஷிமோக தொகுதியிலிருந்து போட்டியிடுவோம்.

பெண்கள் கபடியில் உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை வேலை கேட்டு ஜார்கண்டில் போராட்டம்

Posted: 05 Feb 2014 03:14 PM PST

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றிப்பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை விந்தியாவாசினியும் இடம் பெற்றிருந்தார். பின்னர் தனது சொந்த மாநிலத்திற்கு வந்த விந்தியாவாசினிக்கு அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டாவின் அரசு வேலை தருவதாக

மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்

Posted: 05 Feb 2014 02:25 PM PST

ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த முடிவை கொண்டு வரும் மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீமாந்திரா பகுதியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்தில்

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும்: சோனியாகாந்தி உறுதி

Posted: 05 Feb 2014 01:54 PM PST

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்ந்து நீடிக்கும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உறுதி அளித்தார். மத்திய, மாநில அரசுகள் சார்பில், எஸ்.சி., எஸ்.டி. போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானா விவகாரம் ‘விக்கல்’ போன்றதுதான் ‘பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும்’: மன்மோகன்சிங்

Posted: 05 Feb 2014 01:23 PM PST

பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2-ம் பகுதி கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே உறுப்பினர்களின் அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட புதிய அணி அமைப்பு: 11 கட்சி தலைவர்கள் ஆலோசனை

Posted: 05 Feb 2014 12:36 PM PST

அடுத்த பாராளுமன்ற பொது தேர்தல், ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய முஜாஹிதின் பயங்கரவாதி யாசின் பட்கல், உதவியாளன் கைது

Posted: 05 Feb 2014 12:03 PM PST

மும்பையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி மூன்று இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். 141 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பயங்கரவாத இயக்கமான இந்திய முஜாஹிதினுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தியாவிற்கு தேவை தானியங்களை சேமிப்பது, துப்பாக்கிகளை குவிப்பதல்ல: விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்

Posted: 05 Feb 2014 10:28 AM PST

இந்திய பசுமை புரட்சியின் தந்தையாக கருதப்படும் விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், இன்று மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவிலுள்ள டாக்டர். பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிஷி வித்யாபீட விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பொம்மை தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் கருகி சாவு

Posted: 05 Feb 2014 09:23 AM PST

டெல்லியின் முண்டகா பகுதியில் உள்ள பொம்மை தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இன்று மதியம் பொம்மைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™