Tamil Star |
- புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்!- அஸ்வர் எம்.பி.
- போட்டியில இதெல்லாம் ரொம்ப சகஜம் பாஸ்…..
- ஒரு அழகான பிஹரை இப்படி அழ வச்சி கொடுமை படுத்துறாங்களே……
- கால்களின்றிய காதலன் காதலியுடன் ஆடிய நடனம்: அங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த காதல் ஜோடி…..
- சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்
- வாலிபரை விழுங்கிய ராட்சத அலை……
- கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம்! ஜப்பானில் சாதனை
- விமானம் விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி காட்சி
- சச்சின் பாதி, ஷேவாக் பாதி கலந்த கலவை தான் “கோஹ்லி”
- முதன் முறையாக பூமியை தொடும் பாதங்கள்
- சாதனை படைக்கும் குமார் சங்கக்கார
- படையினரின் போர்க்குற்ற தடயங்கள் அழிக்கப்படுவதாக அறிக்கை
- மைக்ரோசொப்ட் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகல்
- ஜெனிவா பயணத்தை கைவிட்டார் அனந்தி – அச்சுறுத்தல் இருப்பதால் இந்த முடிவு
- டைட்டானிக் கப்பலின் வில்லன் உருகுகிறது!
- கண்ணீருக்கு பதிலாக கற்கள் (வீடியோ இணைப்பு)
- ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்!
- நெடுங்கேணியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அட்டூளியம்!
- இலங்கை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பிரித்தானியாவில் குற்றச்சாட்டு
- இலங்கை சுதந்திர தினத்திற்கு உலக நாடுகள் வாழ்த்து
| புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்!- அஸ்வர் எம்.பி. Posted: 05 Feb 2014 01:01 AM PST முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரேரணை கொண்டு வருபவர்கள் மேற்படி விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு புனித பள்ளிவாசலில் இருந்து உலகிற்கு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| போட்டியில இதெல்லாம் ரொம்ப சகஜம் பாஸ்….. Posted: 05 Feb 2014 12:59 AM PST |
| ஒரு அழகான பிஹரை இப்படி அழ வச்சி கொடுமை படுத்துறாங்களே…… Posted: 05 Feb 2014 12:56 AM PST |
| கால்களின்றிய காதலன் காதலியுடன் ஆடிய நடனம்: அங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த காதல் ஜோடி….. Posted: 05 Feb 2014 12:53 AM PST |
| Posted: 05 Feb 2014 12:52 AM PST வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் வெந்தயம் தரும் நன்மைகளை பார்ப்போம், 1.வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும். 2.இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாலிபரை விழுங்கிய ராட்சத அலை…… Posted: 05 Feb 2014 12:50 AM PST
ஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன்பிடிக்கும் கப்பலை புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார். புயலின் காரணமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், அதை தாண்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென பொங்கி எழுந்த அலை, குறித்த நபரை அடித்து சென்றது. இதனை பார்த்த நபர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், விரைவாக மீட்டாலும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம்! ஜப்பானில் சாதனை Posted: 05 Feb 2014 12:48 AM PST
இதன் மூலம் முன்புறத்தில் ஏதேனும் தடை உள்ளதாக என அறிந்து கொள்ளும். இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள்(cerci) உள்ளன, பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும். இதனை கொண்டு ஜப்பானின் ஒசாகா பல்கலைகழகம் புதுவித சென்சார்களை உருவாக்கியுள்ளது. இந்த சென்சார்களின் மூலம் மிக எளிதாக தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். கரப்பான் பூச்சிகளின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய, கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ்(trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்துவார்கள். இந்த திரகம் உள்ளே எலக்ட்ரோட்ஸை உருவாக்கும், அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும். இந்த எலக்ட்ரோட்ஸ் மூலம் ஊசி அனோட் /காத்தோடாக மாறி நிரந்திர மின்சாரம் கிடைக்கும், இது சென்சாரின் உபயோகத்திற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இதற்கு முன்பு சோதனை செய்து பார்த்த போது, ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சாரத்தை தந்ததாம். எப்படியோ, கரப்பான் பூச்சியில இருந்து கரண்ட கண்டுபிடிச்சுடாங்க!... This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமானம் விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி காட்சி Posted: 05 Feb 2014 12:45 AM PST
இதில் பயணம் செய்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர், இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சச்சின் பாதி, ஷேவாக் பாதி கலந்த கலவை தான் “கோஹ்லி” Posted: 05 Feb 2014 12:43 AM PST சச்சின், ஷேவாக், டிராவிட் ஆகியோர் கலந்த கலவை தான் வீராட் கோஹ்லி என நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மார்ட்டின் குரோவ் கூறுகையில், இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோஹ்லி கலங்கரை விளக்கமாக திகழ்கிறார். உண்மையான அணித்தலைவராக விளங்கும் நோக்கில் அவர் ஆட்ட நுணுக்கங்களை விரைவாக கற்றுக் கொள்கிறார். நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். டிராவிட்டை போல தீவிரமாகவும், ஷேவாக்கை போல தைரியமாகவும், சச்சினை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதன் முறையாக பூமியை தொடும் பாதங்கள் Posted: 05 Feb 2014 12:42 AM PST |
| சாதனை படைக்கும் குமார் சங்கக்கார Posted: 05 Feb 2014 12:40 AM PST டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை சார்பாக அதிக சதங்களைப் பெற்ற வீரர் மற்றும் பங்களாதேஷூக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்ற வீரர் ஆகிய இரண்டு சிறப்புகளை குமார் சங்கக்கார பெற்றுள்ளார். பங்களாதேஷூக்கு எதிரான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனைகளை எட்டினார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, 49 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| படையினரின் போர்க்குற்ற தடயங்கள் அழிக்கப்படுவதாக அறிக்கை Posted: 05 Feb 2014 12:37 AM PST
இலங்கை அரச படைகள் போரின் இறுதிக்கட்டங்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் வகையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் தவிர்ப்பு வலயத்தில், பொதுமக்கள் மீது திட்டமிட்டு, கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதும், இந்த ஆட்டிலறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதும் குறித்து இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது. பொது நல ஆலோசனை மையத்தின், அனைத்துலக குற்றவியல், ஆதாரத் திட்டத்தினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், உள்ளிட்ட சரணடைந்த விடுதலைப் புலிகளின் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீதான பாலியல் வல்லுறவு, சித்திரவதை, மருத்துவமனைகள் மீதான பீரங்கித் தாக்குதல், பொதுமக்களுக்கு உணவு, மருந்து கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டமை, குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பொதுமக்களும் சிறார் போராளிகளும் புலிகளால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும், போர்க்குற்றங்களும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்துள்ள இந்த அறிக்கை, இதுகுறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இருதரப்பினாலும், வன்முறைகள் இழைக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆய்வு நடத்தப்பட்ட, 2008 செப்டம்பர் தொடக்கம். 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இலங்கை அரச படையினரே பொறுப்பாக இருந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்ட்டுளை மறுத்தாலும், அனைத்துலக விசாரணையை நடத்துவதன் மூலம், சிறிலங்காவின் மிக மூத்த அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளை அனைத்துலக குற்றவியல் நிதிமன்றுக்கு கொண்டு செல்ல வழிவகுக்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், குற்றச்சாட்டுகள் குறித்து ஒளிப்படங்கள் தொடர்பான தடயவியல் ஆய்வு, செய்மதிப்படங்கள், சுதந்திரமான இராணுவ ஆய்வாளர்களின் கருத்துகள், புதிய சாட்சிகளின் பதிவுகள் என்பனவற்றை கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் புதைக்கப்பட்டது, பதிவு செய்யப்பட்டது தொடர்பான மூன்று வெவ்வேறு சாட்சிகளின் சாட்சியங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரச படைகள், போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை திட்டமிட்டு அழித்து விட்டதாக ஒரு சாட்சி, குற்றம்சாட்டியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைக்ரோசொப்ட் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகல் Posted: 05 Feb 2014 12:35 AM PST உலகின் முதனிலை கணனி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகிக்கொண்டார். உலகச் செல்வந்தர்களில் முன்னணி வகித்து வரும் பில் கேட்ஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆவார். பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் தொம்பசன் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பணிப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட பில் கேட்ஸ், நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்தும் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட […] |
| ஜெனிவா பயணத்தை கைவிட்டார் அனந்தி – அச்சுறுத்தல் இருப்பதால் இந்த முடிவு Posted: 05 Feb 2014 12:32 AM PST ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில், தாம் பங்கேற்கப் போவதில்லை என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் நிலைப்பாடு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர், தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த […] |
| டைட்டானிக் கப்பலின் வில்லன் உருகுகிறது! Posted: 05 Feb 2014 12:31 AM PST
இங்கிலாந்தில் உள்ள சவுத்ஹாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது, இதில் 2224 பயணிகளும், கப்பல் சிப்பந்திகளும் இருந்தனர். ஏப்ரல் 15ம் திகதி வடக்கு அட்லாண்டிக் கடலில் கிரீன்லேண்ட் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது ஐகோப்ஷவ்ன் என்ற பனிப்பாறையில் மோதி சேதம் அடைந்ததால், கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 1500 பேர் கடலில் மூழ்கி பலியாகினர், 1178 பேர் மட்டுமே உயிர் காக்கும் படகுகள் மூலம் உயிர் தப்பினர். இச்சம்பவம் நடந்து சுமார் 102 ஆண்டுகள் ஆகிறது, இந்நிலையில் இந்த டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை கடந்த 40 ஆண்டுகளாக உருகி வருகிறது. தொடக்கத்தில் மிக மெதுவாக உருகி வந்த பனிப்பாறை, தற்போது மிக வேகமாக உருகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அட்லாண்டிக் கடலின் நீர்மட்டமும் உயரும் அபாயம் உள்ளது. இத்தகவலை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் இயான் ஜவுகின் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கண்ணீருக்கு பதிலாக கற்கள் (வீடியோ இணைப்பு) Posted: 05 Feb 2014 12:28 AM PST
ஏமன் நாட்டை சேர்ந்த சாண்டியா சாலே(வயது 12) என்ற சிறுமியின் விழிகளில் இருந்தே, கண்ணீருக்கு பதிலாக கற்கள் வந்து விழுகின்றன. மருத்துவர்களுக்கும் சவாலாக திகழ்கின்றார், சிறுமிக்கு ஏதோ வினோத சக்தி உள்ளதாக உள்ளூர் நகர மக்கள் நம்புகின்றனர். சில மணிநேரங்களில் ஒரு சிறு பெட்டியை நிரப்பும் அளவுக்கு கற்களை குவிக்கின்றார், இதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்! Posted: 05 Feb 2014 12:25 AM PST அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்த பெண் 3 ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது. அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இங்கு உணவு சாப்பிட வந்த பெண், ஓட்டல் ஊழியர்கள் அமி சபானி(25), சாரா செக்கிங்கர்(23), அம்பர் கரியோலிச்(28) ஆகியோருக்கு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெடுங்கேணியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அட்டூளியம்! Posted: 05 Feb 2014 12:23 AM PST நெடுங்கேணி மாமடுச்சந்தி, 17ம் கட்டையில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களின் வீட்டுக்குள், திடீரென உட்புகுந்த இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த மூன்றாம் திகதி மதியம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர், கைதுக்கான காரணத்தை இராணுவ புலனாய்வாளர்களிடம் கேட்டபோது, தூசன வார்த்தைகளால் ஏசிக்கொண்டே அடிக்கவும் கையோங்கியவாறு, இன்று புதன் கிழமை பதவியாவுக்கு வருமாறு கூறிவிட்டு, தம் பிள்ளைகள் மூவரையும் அவர்கள் அழைத்துச்சென்றதாக பெற்றோர் […] |
| இலங்கை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பிரித்தானியாவில் குற்றச்சாட்டு Posted: 05 Feb 2014 12:18 AM PST
எனினும், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இந்தியா இன்னமும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது. யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை அதிக நாட்டம் காட்டுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பும் சர்வதேச சமூகமும் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை சுதந்திர தினத்திற்கு உலக நாடுகள் வாழ்த்து Posted: 05 Feb 2014 12:13 AM PST இலங்கையின் சுதந்திர தினத்திற்கு உலக நாடுகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளன. இலங்கையின் 66ம் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நேற்றைய தினம் நடைபெற்றது. பஹ்ரெய்ன் நாட்டின் பிரதமர் காலீபா பின் சல்மான் அல் காலீபா, சுதந்திர தின வாழ்;த்துக்களை அனுப்பி வைத்துள்ளார்.நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் ஏற்பட வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் யாவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, டுபாயின் பிரதமர் சேக் காலீபா பின் சயிட் அல் நாயானும், […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















