Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஏப்ரல் மாதம் உயரும் கியாஸ் விலையை யாராலும் தடுக்க முடியாது: வீரப்பமொய்லி பேட்டி

Posted: 13 Feb 2014 11:23 PM PST

ஏப்ரல் 1–ந்தேதி முதல் கியாஸ் விலை உயரும் என்று வீரப்ப மொய்லி கூறினார். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறிய தாவது:– ஏப்ரல் 1–ந்தேதி முதல் கியாஸ் விலை உயரும். கியாஸ் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை யாராலும் தடுக்க முடியாது. இயற்கை எரியாவு விவகாரத்தில் என் மீது டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்து இருப்பது சட்ட

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1500 கைதிகள் உண்ணாவிரதத்தால் 53 ஆயுள் கைதிகள் விடுதலை

Posted: 13 Feb 2014 11:17 PM PST

ஜார்க்கண்ட்டில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாநிலம் முழுவதும் 1500 கைதிகள் ஒட்டு மொத்தமாக உண்ணாவிரதம் இருந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் பலர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருந்தனர். மொத்தம் மாநிலம் முழுவதும் 53 கைதிகள் இதுபோல் விடுதலை செய்யப்படாமல் இருந்தனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1500 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தை சிறையில் இருக்கும்

டெல்லியில் தலைமை செயலாளர்கள் கூட்டம்: தேர்தல் தேதி 20–ந்தேதி முடிவு

Posted: 13 Feb 2014 11:13 PM PST

பாராளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் 31–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து வரும் ஏப்ரல் – மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து வருகிறது. முதல் கட்டமாக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் கமிஷன் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள

மிளகு பொடி வீச்சுக்கு பாதுகாப்பு குறைவே காரணம்: எம்.பி.க்கள் பைகளை சோதனை செய்ய கோரிக்கை

Posted: 13 Feb 2014 11:01 PM PST

பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எம்.பி.க்கள் நடந்து கொண்ட வீதம் நாட்டுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. ஜனநாயக மரபை மீறி நடந்து கொண்டதால் வரலாறு காணாத அளவுக்கு மோதல் சம்பவங்கள் நடந்தன. முதல் நாள் தெலுங்கானா எதிர்ப்பு எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட்டின் போது பட்ஜெட்டை கிழித்து இடையூறு ஏற்படுத்தினார்கள். ரெயில் மந்திரி மல்லிகார்ஜூன கார்கே பட்ஜெட்டை முழுவதும் படிக்க முடியாமல் பாதியிலேயே முடித்துக் கொண்டார்.

அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டது: பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி

Posted: 13 Feb 2014 10:50 PM PST

தமிழர்கள் பிரச்சினைகள் பற்றி பிரதமரிடம் பேசினேன். தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் பேசினேன். தமிழகத்தை சேர்ந்தவர்களும் தமிழர்களாக இருக்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்தவர்களும் தமிழர்களாக இருக்கிறார். இருவருக்கும் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று பிரதமர் என்னிடம் கூறினார். மேலும், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறினேன். அவரும் இதற்கு விரைவில் தீர்வு ஏற்பட வழிவகை

க்ரிஷி வசந்த் கண்காட்சி இரண்டாவது பசுமை புரட்சியின் தொடக்கம்: பிரித்விராஜ் சவான்

Posted: 13 Feb 2014 10:44 PM PST

நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயிகள் அளித்துவரும் பங்களிப்பை கொண்டாடும் வகையில் நாக்பூரில் மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 5 நாட்களாக 'க்ரிஷி வசந்த்' வேளாண்பொருள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்ட்ரா மாநில முதல் மந்திரி பிரித்விராஜ் சவான் இந்த கண்காட்சி இரண்டாவது பசுமை புரட்சியின் தொடக்கம் என வர்ணித்துள்ளார். இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள

பிரதமர் மன்மோகன்சிங்குடன் விஜயகாந்த் சந்திப்பு

Posted: 13 Feb 2014 10:26 PM PST

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 20 பேர் உடன் சென்றனர். நேற்று டெல்லி சென்று சேர்ந்த விஜயகாந்த், இன்று காலை எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் இல்லம் சென்றார்.

மாநில கட்சிகளில் அதிமுக – திரிணாமுல் காங்கிரசுக்கு அதிக இடம்: கருத்து கணிப்பில் தகவல்

Posted: 13 Feb 2014 09:57 PM PST

'டைம்ஸ் நவ்' டி.வி.யும், சி.ஓட்டர் அமைப்பும் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 227 தொகுதி களில் வெற்றி பெற

துப்பாக்கி முனையில் ஓட்டல் உரிமையாளரிடம் நகை, பணம் கொள்ளை

Posted: 13 Feb 2014 09:54 PM PST

நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஓட்டல் உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புமிக்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சதிஷ் ஹஸ்பே (36) என்பவர் மும்பையின் தானே மாவட்டத்தில் கஷிமிரா பகுதியில் சனாம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு ஓட்டலை பூட்டும் நேரத்தில் அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்தது. இதில் ஒருவன் சதிஷின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினான்.

எம்.பி.க்கள் ரகளையால் தெலுங்கானா மாநிலத்துக்கு ஆதரவு பெருகி விட்டது: சந்திரசேகரராவ்

Posted: 13 Feb 2014 09:28 PM PST

பாராளுமன்றத்தில் தெலுங்கானா தனி மாநில மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமந்திரா பகுதி எம்.பி.க்கள் நேற்று பெரும் அமளியில் ஈடுபட்டனர். சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி. எல்.ராஜகோபால் எம்.பி.க்கள் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தார். இதனால் சபாநாயகர் மீராகுமார் உள்பட பல எம்.பி.க்கள் கண் எரிச்சலாலும், மூச்சு திணறலாலும் அவதிப்பட்டனர். சபையில்

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிக தொகை: செல்போன் கட்டணம் உயர்கிறது

Posted: 13 Feb 2014 09:27 PM PST

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.61 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது மத்திய அரசு எதிர்பார்த்ததை விட அதிக வருவாயாகும்.

தெலுங்கானா மசோதா தாக்கல்: சீமாந்திரா பகுதியில் இன்று 2–வது நாளாக 'பந்த்'

Posted: 13 Feb 2014 08:51 PM PST

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைவது தொடர்பான மசோதா பெரும் அமளிக்கிடையே பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில சீமாந்திரா பகுதியில் நேற்று அரசு ஊழியர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு

டெல்லியில் 18–ந்தேதி சந்திப்பு: மம்தாவுக்கு ஆதரவாக அன்னாஹசாரே பிரசாரம்

Posted: 13 Feb 2014 08:48 PM PST

சமூக சேவகர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் பின்னர் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கெஜ்ரிவால் அன்னாஹசாரேயிடம் இருந்து பிரிந்து சென்று ஆம்ஆத்மி கட்சி தொடங்கினார். கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய

கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மீன் ஏற்ற வந்த லாரி–ஜீப் மோதல்: 5 பேர் பலி

Posted: 13 Feb 2014 08:43 PM PST

கொல்லத்தை அடுத்த குளத்துபுழா பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோசம்மா, கோபிநாதன், மரியம்மா, அனீபா ராவுத்தர், பொன்னம்மா உள்பட 11 பேர் ஒரு ஜீப்பில் கொல்லம் நோக்கி சென்றனர். அப்போது கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மீன் லோடு ஏற்ற ஒரு லாரி வந்தது. வி.எஸ்.என். கல்லூரி சந்திப்பில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஜீப் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில், ஜீப்பில் இருந்த ரோசம்மா, கோபிநாதன், மரியம்மா, அனீபா ராவுத்தர், பொன்னம்மா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வி

சீமாந்திராவுக்கு புதிய தலைநகர்: வரிச்சலுகைகளும் அளிப்பதாக தெலுங்கானா மசோதாவில் தகவல்

Posted: 13 Feb 2014 07:35 PM PST

ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா மாநிலம் அமைக்க வகைசெய்யும் 'ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு மசோதா' நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே அதை தாக்கல் செய்தார். மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும். பொது தலைநகரில், தற்போது கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளும் அடங்கும். சீமாந்திரா மாநிலத்துக்கு 45 நாட்களுக்குள் புதிய தலைநகரை தேர்வு செய்ய வல்லுனர் குழுவை மத்திய அரசு அமைக்கும். சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆந்திர கவர்னரே கவர்னராக இருப்பார். தலைநகரை நிர்வாகம் செய்வதற்காக, அங்கு வாழும் மக்களின் உயிரையும், உடைமையையும் பாதுகாக்கும் விசேஷ பொறுப்பு கவர்னருக்கு உண்டு. சீமாந்திராவின் புதிய தலைநகரில் கவர்னர் மாளிகை, ஐகோர்ட்டு, தலைமை செயலகம், சட்டசபை, சட்ட மேலவை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அர

பாராளுமன்ற தேர்தல்: தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.40 லட்சமாக நிர்ணயம்

Posted: 13 Feb 2014 07:20 PM PST

பாராளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பாக, கடந்த 2009-ம் ஆண்டு வரை ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்படி, பின்னர் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தல்களில் இது

3-வது அணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு இருக்காது: பிரகாஷ் கரத் தகவல்

Posted: 13 Feb 2014 07:16 PM PST

நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு, காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத 11 இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறினார். கட்சி பத்திரிகையில் அவர் இதுகுறித்து எழுதி இருப்பதாவது:- அந்த கூட்டத்தில், மாற்று அணி அமைப்பது பற்றி அறிவிக்கப்படும். அதன் கொள்கை, இலக்கு, அடிப்படை கட்டமைப்பு பற்றியும் அறிவிக்கப்படும். மேற்கண்ட 11 கட்சிகளில் பெரும்பாலானவை மாநில கட்சிகள். எனவே, அவை ஒன்றுக்கொன்று வேறு வேறு மாநிலங்களில் கூட்டணியோ,

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பெயரை வெளியிட்டதற்கு உ.பி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டது

Posted: 13 Feb 2014 07:11 PM PST

உத்திரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு அம்மாநில அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் முன் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான

டெல்லி சட்டசபையில் கடும் அமளி: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'மைக்' உடைப்பு

Posted: 13 Feb 2014 03:54 PM PST

டெல்லி சட்டசபையின் விசேஷ கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, நள்ளிரவு சோதனையில் ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய சட்ட மந்திரி சோம்நாத் பாரதி பதவி

சத்தீஸ்கரில் 3 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 13 Feb 2014 03:36 PM PST

சத்தீஸ்கரில் மாநிலம், நாராயண்பூரில் நடைபெற்ற நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் 3 நக்சல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அபுஜ்மத் பகுதிக்கு அருகிலுள்ள நெல்னார் என்ற இடத்தில் நடந்ததாக துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஓ.பி.சர்மா தொலைபேசி மூலம் தகவல் தெரிவத்தார். ராய்ப்பூரில் இருந்து 450 கி.மீ தொலைவில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™