Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


யுவராஜ் சிங்கை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன்?

Posted: 13 Feb 2014 06:48 AM PST

7வது ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங்கை அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், கடந்த ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்(தற்போது அந்த அணி இல்லை). இந்நிலையில் 7வது சீசனில் இவரை பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் உரிமையாளர் விஜய் மல்லையா தனது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த 17 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. ஊழியர்களின் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மயிர்க்கூச்செறியும் ஒரு பயணம்…..

Posted: 13 Feb 2014 06:47 AM PST

tower_travel_001.w245

tower_travel_001.w245ரஷ்யாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சீனாவின் ஷங்ஹாய் பகுதியில் உள்ள 650 மீற்றர்கள் உயரம் கொண்ட கோபுரத்தில் ஏறி அசத்தியுள்ளனர். இதுவே உலகின் இரண்டாவது மிக உயரமான கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தான் அணியில் புதிய மாற்றங்கள்

Posted: 13 Feb 2014 06:45 AM PST

pakistan cricket team

pakistan cricket teamநிதி மோசடி தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஸகா அஷ்ரவ் அதிரடியாக நீக்கப்பட்டதை தொடர்ந்து அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் பாகிஸ்தானின் புதிய பயிற்றுவிப்பாளராக மொயின் கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் தேர்வுக்குழுவின் தலைமை நிர்வாகியான அமிர் சொஹைல் நீக்கப்பட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸார் கான் இடைக்கால நிர்வாக தெரிவுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8 பேர் அடங்கிய நிர்வாகக்குழுவினால் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

உலக கிண்ண இருபதுக்கு-20 போட்டிகளுக்கான புதிய களத்தடுப்பு பயிற்றுனராக சொயப் மொஹமட் தெரிவாகியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்ணீர் சிந்தும் கன்னி மேரி சிலையால் பரபரப்பு….. காட்சியைக் காண குவியும் மக்கள்!…..

Posted: 13 Feb 2014 06:44 AM PST

mary_statue_crying_001.w245

mary_statue_crying_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐபிஎல் ஏலம்! இன்று அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

Posted: 13 Feb 2014 06:41 AM PST

7வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. சர்வதேச அளவில் பங்கேற்காத வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். இதில் இந்தியாவின் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியதுவம் அளிக்கப்பட்டது. ரிஷி தவான் ரூ. 3 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது, 20 லட்சம் அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்த இவருக்கு ரூ. 2.80 கோடி அதிகமாக 'ஜாக்பாட்' அடித்தது. தொடர்ந்து நடந்த ஏலத்தில் கரண் சர்மாவை ரூ. 3.75 கோடிக்கு அதிகபட்சமாக ஐதராபாத் அணி வாங்கியது. […]

அல்லி மலரின் மகத்துவம்

Posted: 13 Feb 2014 06:40 AM PST

நீரில் பூக்கும் அல்லிச்செடிகளை விட அதன் மலர்களுக்குத்தான் மருத்துவ குணம் அதிகம். இதில் வெள்ளை அல்லி, சிவப்பு அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியது தான். அல்லி பூவை சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து இருபது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து விடும். வெள்ளை அல்லி பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவில் எடுத்து போதிய அளவு சர்க்கரை சேர்த்து நீரில் காய்ச்ச வேண்டும். கூழ்போல கொதித்த பின் இறக்கி ஆறவைத்து […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி

Posted: 13 Feb 2014 06:38 AM PST

dual_phone_002

dual_phone_002ஸ்மார்ட் கைப்பேசி உலகில் முதன் முறையாக இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசியினை Geeksphone Revolution நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

இக்கைப்பேசியில் கூகுளின் Android இயங்குதளம் மற்றும் Mozilla Firefox இயங்குதளம் ஆகியன நிறுவப்பட்டுள்ளன.

இதன் மூலம் விரும்பிய இயங்குதளத்தில் குறித்த கைப்பேசியினை இயக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதில் Dual Core Intel Atom Z560 1.6GHz Processor, 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.

மேலும் 4.7 அங்குல தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.

இம்மாதம் 20ம் திகதி வெளியிடப்படவுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 289 யூரோக்கள் ஆகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிவேகம் கூடிய சேமிப்பு வசதி கொண்ட SD Card

Posted: 13 Feb 2014 06:37 AM PST

தரவுகளை சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு SD Card அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது Super Fast வேகம் கொண்டதும் 64GB சேமிப்பு வசதி கொண்டதுமான UHS-II U3 Extreme Pro SD Card இனை SanDisk நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. 250MB/sec வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியதும் 4K Ultra HD மற்றும் 3D வீடியோ ரெகார்டிங் செய்யக்கூடியதாகவும் இருக்கும் இச்சாதனத்தின் விலையானது 300 அமெரிக்க டொலர்கள் ஆகும். இவை இந்த வருடம் ஏப்ரல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இருவகையான iPhone-களை அறிமுகப்படுத்துகின்றது அப்பிள்

Posted: 13 Feb 2014 06:36 AM PST

அப்பிள் நிறுவனம் iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரைகளைக் கொண்ட இரு வகையான கைப்பேசிகளை வெளியிடவுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் முன்னர் 4.8 அங்குல அளவிலிருந்து 6 அங்குல அளவிற்கு இடைப்பட்ட தொடுதிரையினைக் கொண்டதாக iPhone 6 அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

குத்துச் சண்டையில் பின்னிப் பெடலெடுக்கும் குட்டீஸ்…..

Posted: 13 Feb 2014 06:34 AM PST

foxing_001.w245

foxing_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வடகொரியா- தென்கொரியா சமாதான பேச்சுவார்த்தை

Posted: 13 Feb 2014 06:31 AM PST

கொரிய தீபகற்ப போருக்கு பின்னர் வடகொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாகி விட்டன. இப்போது இரு தரப்பிலும் உறவை வலுப்படுத்த புதிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இரு நாடுகளின் உயர்மட்டக்குழுவினர் முதல் முறையாக அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். தென்கொரிய குழுவுக்கு ஜனாதிபதி பார்க்கின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வடகொரிய குழுவுக்கு அந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள மூத்த அதிகாரியும் தலைமை வகிக்கின்றனர். […]

அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் விளைவு இப்படித்தான் இருக்கும்…..

Posted: 13 Feb 2014 06:29 AM PST

emotional_001.w245

emotional_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதற்கான தடையை நீடித்தது சுவிஸ்

Posted: 13 Feb 2014 06:26 AM PST

swiss_flag-415x260

swiss_flag-415x260சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு, சிறிலங்கா உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.

அதேவேளை, குரோசியா, மொன்ரனிக்ரோ நாட்டவர்களுக்கு ஆயுதங்களை வைத்திருக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சுவிஸ் அரசாங்கம் நீக்கியுள்ளது.

சுவிசில், ஆயுதங்களை வைத்திருக்கவும் வாங்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடுகளான குரோசிய மற்றும், மொன்ரனிக்ரோ நாட்டவர்களும் விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று ஆளும் சமஸ்டி சபை தெரிவித்துள்ளது.

மோதல் சூழல் நிலவும் குறிப்பிட்ட நாட்டவர்கள் சுவிசில் மோதிக் கொள்வதை தடுப்பதற்கும், மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதற்கு சுவிஸ் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும், சுவிற்சர்லாந்து அரசாங்கம் இந்த தடையை விதித்திருந்தது.

அல்பேனியா, அல்ஜீரியா, பொஸ்னியா – ஹெர்சகோவினா, கொசோவோ, மெசிடோனியா, சேர்பியா, துருக்கி மற்றும் சிறிலங்கா ஆகிய நாட்டவர்களுக்கே ஆயுதங்களை வைத்திருக்க சுவிஸ் தடை விதித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தந்தையை அரிவாளால் தாக்கி காதலியை கடத்திய மிஸ்டு கால் காதலன்….

Posted: 13 Feb 2014 06:23 AM PST

lover_phone_001.w245

lover_phone_001.w245சிவகங்கை மாவட்டத்தில் மிஸ்டு காலால் ஏற்பட்ட காதல் ஒரு குடும்பத்தை நிர்மூலமாக்கி உள்ளது. தனது தந்தையையும், சகோதரனையும் தனது கண்முன்னே அரிவாளால் வெட்டினாலும் கண்மூடித் தனமான அந்த மிஸ்டு கால் காதலனுடனே அப்பெண் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இது எப்படியிருக்கு….. பார்க்க பயங்கரமா இருக்குதா?….

Posted: 13 Feb 2014 06:21 AM PST

bear_child_001.w245

bear_child_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

கன்னி மேரி சிலை அழுகிறது! (வீடியோ இணைப்பு)

Posted: 13 Feb 2014 06:20 AM PST

mary_statue_crying_004

mary_statue_crying_004இஸ்ரேலில் கன்னி மேரி சிலை ஒன்று பேசியதாக வந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல்லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கௌரி என்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள கன்னி மேரி சிலை சமீபகாலங்களாக பளபளப்புடன் இருப்பதை, மனைவி அமிரா பார்த்துள்ளார்.

இதனை சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெய்தன்மை தென்பட்டுள்ளது.

அத்துடன் கன்னி மேரி சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டாமென்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தகவல் வெளியே கசிந்துவிடவே, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பார்வையிடுகின்றனர்.

மேலும் சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர்துளி திரண்டு வெளிப்பட்டதாகவும், கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவை கலக்கும் போஸ்டர்

Posted: 13 Feb 2014 06:18 AM PST

love_poster_newyork_004

love_poster_newyork_004தன்னுடைய காதலனை தேடி, இளம்பெண் ஒருவர் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் மரியா விலா.

இவர் சில தினங்களுக்கு முன் மின்சார ரயிலில் பயணித்த போது, அழகான இளைஞரிடம் மனதை பறிகொடுத்துள்ளார்.

தன்னுடைய காதலை வெளிப்படுத்த முயன்ற மரியா, கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதால் முடியாமல் போனது.

அன்றுமுதல் அவ்விளைஞரை தேடித் திரிந்தும் எவ்வித பலனும் இல்லாமல் போனது.

இந்நிலையில் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மனம் கவர்ந்த இளைஞரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக நியூயார்க் நகரம் முழுவதும் 300 போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

அதில் அவனது அடையாளங்களை வர்ணித்ததுடன், இப்படியான காதலனை இழந்து தவிக்கிறேன், உதவி புரிங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மரியாவின் இந்த செயலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விமர்சித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜேர்மன் எம்.பி.க்கு ஆபாச பட குழுவுடன் தொடர்பா?

Posted: 13 Feb 2014 06:16 AM PST

ஜேர்மனியில் ஆபாச பட குழுவுடன் தொடர்புடையதாக கருதி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவிலான ஆபாச படக்குழு ஒன்று ஜேர்மனியில் இயங்கி வருவதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரான செபாஸ்டியன் இடாத்தியின்(வயது 44) பெயரும், அவரது இணையதள ஐ.பி முகவரியும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நீன்பர்க், ஸ்டெட்தாகன் நகர்களில் உள்ள அவரது அலுவலகங்கள், ரேபர்க்கில் உள்ள அவரது வீடுகளில் பொலிசார் […]

வடமாகாணசபை – அரசுக்கு இடையில் முறுகல்: யாழ். ஆயர்

Posted: 13 Feb 2014 06:14 AM PST

வடமாகாண சபையினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாக நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிறிட் லோஷனிடம் தெரிவித்ததாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிறிட் லோஷன் தலைமையிலான குழுவினருக்கும் யாழ். ஆயருக்கும் இடையிலான சந்திப்பு யாழ். ஆயர் இல்லத்தில் புதன்கிழமை (12) மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு கூறியதாகவும் யாழ். ஆயர் கூறினார். இந்தச் சந்திப்பு தொடர்பில் யாழ். ஆயர் தெரிவிக்கையில், 'நோர்வே குழுவினர் வடமாகாண […]

பிரிட்டனும், பிரான்சும் எனது மகள்கள்: ஜனாதிபதி ஒபாமா

Posted: 13 Feb 2014 06:12 AM PST

obama_hollande_005

obama_hollande_005பிரிட்டனும், பிரான்சும் என மகள்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வர்ணித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்தபின், வாஷிங்டனில் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்தனர்.

அப்போது பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நட்புறவு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒபாமா, எனக்கு மாலியா, சாஷா என்று இரு மகள்கள் உள்ளனர். அவர்களில், ஒருவரை விட்டு மற்றொருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது.

அதுபோன்று பிரிட்டனும், பிரான்சும் எனது இரு மகள்களைப் போன்றவை.

இரண்டு நாடுகளும் தனிச்சிறப்புகள் பெற்றுள்ளன, இரண்டு நாடுகளில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™