Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்

Posted: 06 Feb 2014 10:33 AM PST

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள் 1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு ...

மைக்ரோசாஃப்ட் புதிய சி.இ.ஓ. சத்யாவுக்கு ஆண்டுக்கு ரூ.112 கோடி சம்பளம்,,,

Posted: 06 Feb 2014 10:22 AM PST

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) நியமிக்கப்பட்ட சத்யா நாதெள்ளாவுக்கு ஆண்டு ஊதியம் ரூ.112 கோடி என்று அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆந்திர மாநிலம் ஹைதராபாதைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா செவ்வாய்க்கிழமை நியமனம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு ஆண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார்) ரூ.112 கோடி சம்பளம் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)

Posted: 06 Feb 2014 08:14 AM PST

'மனோகரா' தொடர் 10 (சிவாஜி என்ற மாநடிகர்) தொடர் 10 'மனோகரா' படத்தின் கதை பாகம் இரண்டை நீங்கள் அனைவரும் படிப்பதற்கு முன் நான் முன்னம் பதிந்த இப்படத்தின் கதையின் முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை அனைவரும் தொடர்ச்சியாகப் படிப்பதற்கு வசதியாக இங்கு பதிவிடுகிறேன். இப்போது நீங்கள் 'மனோகரா' படத்தின் கதையின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மொத்தம் இரண்டு பாகங்களையும் படித்து மகிழலாம். 'மனோகரா' படத்தின் கதை இந்த இரண்டு பாகங்களுடன்  முடிவுற்றது. பாகம் 1 சோழ பரம்பரையின் வீர மன்னன் புருஷோத்தமன். ...

வருமான சான்றிதழ் பெற நீதி மன்ற கட்டண வில்லை ஓட்ட வேண்டாம்

Posted: 06 Feb 2014 07:43 AM PST

வருமான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது பொதுவாக RS 10 நீதி மன்ற கட்டண வில்லை ஓட்டபடுகிறது உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அவ்வாறு ஒட்டவேண்டிய அவசியமோ, அரசாணையோ இல்லை என்பது உண்மை. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாமல் ஓட்டுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு பதிலாக இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

கழிவுநீர் ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் தான்

Posted: 06 Feb 2014 07:43 AM PST

ஆயிரக்கணக்கான எதிரிகளை நேரடியாக சந்திக்கும் கடைநிலை தொழிலாளர்களின் நலனுக்காக வேண்டுகோள்: தினந்தோறும் ஆயிரக்கணக்கான கிரிமிகளிடமிருந்து நம்மை காப்பாற்றி "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" பழமொழிக்கு முன்னுதாரனமாக விளங்கும் துப்புரவு சுகாதார பணியில் ஈடுபடும் அரசு,மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக முக்கியத்துவமும் சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் . இதில் குறிப்பாக மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வது, கால்வாய் சுத்தம் செய்வது என அனைத்து சுகாதார வளர்ச்சி பணிகளில் ...

சாமி தந்த வரம் தட்டி பறிக்கும் பூசாரி(அரசு பணியாளர்கள்)

Posted: 06 Feb 2014 07:42 AM PST

அரசின் இலவச மின்விசிறி,கிரைண்டர்,மிக்சி, திட்டம் எந்த இடர் பாடும் இல்லாமல் பயனாளர்களுக்கு வழங்க முதல்வர் நினைத்தாலும், அதை நடை முறைபடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தன போக்கால் அரசுக்கு அவப்பெயர் உண்டாகிறது. திட்டங்கள் என்றாலே பெரும்பாலும் ஏழை மக்களின் நலனுக்காகதான் என்பதை யாரும், எவரும் மறுக்க முடியாது ஏனென்றால் பணக்காரர்களுக்கு பெரும்பாலும் அவர்களது தேவைகளை அவர்களே நிவர்த்தி செய்து கொள்வது தான். ஆனால் அரசின் திட்டங்களையே முழுமையாக நம்பி இருக்கும் ஏழை மக்களின் சம உரிமைகளை அதிகாரிகள் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -90)

Posted: 06 Feb 2014 06:40 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்

Posted: 06 Feb 2014 06:37 AM PST

நல்ல ஊர் எது?

Posted: 06 Feb 2014 04:37 AM PST

குட்டிக் கதை வெளியூரிலிருந்து பிழைப்புத் தேடி அந்த ஊருக்கு இளைஞன் ஓருவன் வந்தான். அந்த ஊர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் "ஐயா,நீங்கள் இந்த ஊரிலிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். உங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்லுங்கள். இந்த ஊர் நல்ல தானா?" நான் இங்கேயே தங்கி விடலாமா? என்று கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்தப் பெரியவர் "வாயும் கையும் ஒழுங்காக இருந்தால் எந்த ஊரும் நல்ல ஊர் தான்"-என்று பதில் சொன்னார். "ஐயா, நீங்கள் சொல்வது எனக்கு ...

கருணை இல்லையா?

Posted: 06 Feb 2014 04:30 AM PST



பசுமையா யிருந்த என்னைக்
கொதிக்கும் நீரிலே போட்டு
திகைக்க வைக்கிறாய்.
எண்ணெய்யிலே போட்டு
கருக வைக்கிறாய்.
பெண்ணே, உனக்கென்
மீதென்ன வன்மம்.
கருணையோ
அனுதாபமோ இல்லையா?
சொல் பெண்ணே, என்று
கேள்விக் கணைத்தொடுத்து
மன வருத்தப்பட்டது
மணக்கும் கறிவேப்பிலை.

ஆஸ்கார் விருதுபெற்ற About elly - சினமா விமர்சனம்!!

Posted: 06 Feb 2014 03:08 AM PST

About Elly | 2009 | Iran | 119 min | Directed by : Asghar Farhadi. இயக்குனர் அஸ்கர் பர்ஹாதியின் நான்காவது படம் இது. ஹிட்ச்ஹாக் பாணியில் ஒரு சோசியல் திரில்லரை கொடுத்து இருக்கிறார். நான்கு ஜோடிகள் ஜாலியாக டூர் வருகிறார்கள். வழக்கமாக தங்கும் ரிஸார்டில் இடம் இல்லாததால் ஒரு 'டஞ்சன் வில்லாவில்' வேறு வழியில்லாமல் தங்குகிறார்கள். மூன்று ஜோடிகள் மட்டுமே கணவன் - மனைவி குழந்தைகளோடு வந்தவர்கள். ஒரு ஜோடி திருமணம் ஆகாதவர்கள். ஆனால் அவர்கள் திருமணம் ஆனவர்கள் என்றும், தேநிலவுக்காக வந்தவர்கள் ...

*சாட்சி

Posted: 06 Feb 2014 02:36 AM PST

*சாட்சி

நீதி மன்றங்களில்
பகவத் கீதையின் மேல்
கை வைத்து
சத்திய பிரமாணம் செய்து
உண்மையாகவே
சொல்கிறார்கள்
பொய் சாட்சி.

லண்டனில் முத்தமிட்டதால் மாட்டிக்கொண்ட நகைத்திருடன்

Posted: 06 Feb 2014 02:29 AM PST

பிரான்சில் நகையை திருடிய திருடர்கள் நகைக்கடையின் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் போலிசாரிடம் பிடிபட்டனர். பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். அந்த பெண்ணை கயிற்றால் கட்டிவைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றினர். பின் நகைக்கடையின் சாவியை தருமாறும் இல்லையென்றால் கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டினர். உயிருக்கு பயந்த அந்த பெண் கடைச்சாவியை திருடனிடம் கொடுத்தார். ஒரு திருடன் மட்டும் கடைக்குச் சென்று ...

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Posted: 06 Feb 2014 02:17 AM PST

M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ...

காதலன் கணவனாகிறான்

Posted: 06 Feb 2014 02:05 AM PST

கண்ணே மணியே கண்ணுக்கு இனியவளே களையான கலைமானே கண்ணூறு பட்டுவிடும் கண்ணில் தூசு பட்டும் கண்ணீர் வரவிடமாட்டேன் கண்டாலும் காணாவிட்டாலும் கருத்தில் கரைந்தவளே என கன்னியின் காதலனாகவும்❤️ கண்ணில் தூசியாய் கருவிழியில் உறுத்துகிறாய் கட்டிக் கரும்பும் கசக்கிறது உன்னாலே கற்கண்டு சர்க்கரையும் கனிஊறிய தேனும்எட்டிக் காயாய் ஆனதடி உன்னாலே கண் மூடி திறக்குமுன் கண் முன்னே நில்லாதேஎன கரம்பிடித்த கணவனாகவும்

லேடி ஷிவ்காமீஸ் லவ்வர்ஸ்..

Posted: 06 Feb 2014 12:52 AM PST

லேடி ஷிவ்காமீஸ் லவ்வர்ஸ்.. ***************************** சின்னக் கண்ணன் ***************************** இந்த நாஸ்டால்ஜியா எனத் தமிழில் அழைக்கப் படும் மலரும் நினைவுகள் இருக்கிறதே...அது ஒருவகையில் மனிதனுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் தான்... பாருங்கள்.. 39வது வருடப் பாட்டில் இருக்கும் மன எம் பி3 ப்ளேயரை படக்கென்று 20 வருடத்திற்கு முன்னால் கொண்டு சென்றால்... அட யார் இந்தப் பையன்.. இளமையாய், காதுவரை நீண்ட கிருதாவுடன், தலைகீழ்ப் ப மீசையுடனும்,கொஞ்சம் நல்ல சுமாரான அழகாவே இருக்கிறான்.. இன்னும் ...

எங்கள் சிவாஜி

Posted: 05 Feb 2014 11:27 PM PST

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 05 Feb 2014 11:23 PM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™