மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பெண் தொழிலாளி கொலையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: இறந்த பெண்ணின் சகோதரர் வலியுறுத்தல்
- அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து: பட்ஜெட்டில் நிதியமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு
- மத்திய இடைக்கால பட்ஜெட்: உணவு, எரிபொருள் மானியத்திற்கு 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
- கேரளாவில் திரிஷ்யம் படம் பார்த்து துணிகர கொலை
- உ.பி., கர்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான், குஜராத்: 5 மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயார்
- தெலுங்கானா விவகாரம்: 5 மத்திய மந்திரிகள் அத்வானியுடன் சந்திப்பு
- 48 நாட்களில் ஆட்சியை இழந்தார்: பாராளுமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் ஜொலிப்பாரா?
- ஹெலிகாப்டர் பேர ஊழல்: விமானப்படை முன்னாள் தளபதியின் சகோதரர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை
- பாராளுமன்ற தேர்தலுக்காக நான் ராஜினாமா செய்யவில்லை:அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
- வரி ஏய்ப்பை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
- சோனியா அரசியலுக்கு வந்தது எப்படி?: மத்திய மந்திரி புத்தகத்தில் புதிய தகவல்கள்
- பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பு ரூ.70 லட்சம் ஆகிறது: தேர்தல் கமிஷன் தீவிர பரிசீலனை
- சத்தீஸ்கர் முதல் மந்திரியின் சகோதரர் சாலை விபத்தில் படுகாயம்
- மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் கங்கை ஆற்றை சீர் குலைக்கும் திட்டங்கள் ரத்து: சுஷ்மா சுவராஜ் உறுதி
- மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசிய ஆசாமி ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு
- வெளிநாட்டு நிதி விவகாரத்தில் கெஜ்ரிவால் இன்னும் பதில் அளிக்கவில்லை: ஷிண்டே தகவல்
- திருட்டு தொடர்பான புகார்களை இனி ‘ஆன்லைன்’ மூலம் தெரிவிக்கலாம்: டெல்லி போலீஸ் புதிய திட்டம்
- பாராளுமன்றத்தில் மிளகுப்பொடி வீச்சு விவகாரத்தில் உரிமைக்குழு விசாரணை: சபாநாயகர் மீரா குமார் நடவடிக்கை
- எட்டு எம்.எல்.ஏ.க்களை வரதட்சணையாக கொடுத்தும் மணமகன் கெஜ்ரிவால் ஓடிவிட்டார்: சல்மான் குர்ஷித் வேதனை
- ஹரியானா முதல் மந்திரி ஹூடா மீது ஷு வீச்சு
| பெண் தொழிலாளி கொலையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: இறந்த பெண்ணின் சகோதரர் வலியுறுத்தல் Posted: 16 Feb 2014 11:10 PM PST கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை அடுத்த நிலம்பூர் காங்கிரஸ் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்தவர் ராதா (வயது 49). திருமணமாகாத இவர் கொலை செய்யப்பட்டு பிணம் சாக்கு மூட்டையில் கட்டி அந்த பகுதியில் உள்ள குளத்தில் வீசப்பட்டது. நிலம்பூர் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், காங்கிரஸ் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பிஜு நாயர், அவரது நண்பர் |
| அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து: பட்ஜெட்டில் நிதியமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு Posted: 16 Feb 2014 11:09 PM PST வேளான் விளை பொருளான அரிசியை அப்பட்டியலிலிருந்து நீக்கி அதன் மீது சேவை வரி விதித்து உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு. ஆனால் அதே சமயத்தில் மற்றொரு வேளான் விலை பொருளான கோதுமைக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள், விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரிகள் ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர். |
| மத்திய இடைக்கால பட்ஜெட்: உணவு, எரிபொருள் மானியத்திற்கு 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு Posted: 16 Feb 2014 10:32 PM PST நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கிடையே 2014-15-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரையை ப.சிதம்பரம் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உணவு மற்றும் எரிபொருள் மானியத்திற்காக ரூ. 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காக ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டில் 4 மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் அமைக்கப்படும். அதுபோல் 7 விமான நிலையங்களும் அமைக்கப்படும். |
| கேரளாவில் திரிஷ்யம் படம் பார்த்து துணிகர கொலை Posted: 16 Feb 2014 10:25 PM PST மோகன்லால் மீனா நடித்த திரிஷ்யம் மலையாள படம் சமீபத்தில் ரிலீசாகி பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது. ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாம். இப்படத்தின் வெற்றி இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதை தமிழில் ரீமேக் செய்கின்றனர். மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்கிறார். மீனா கேரக்டரில் நடிக்க நதியா, சிம்ரன், பெயர்கள் அடிபடுகின்றன. |
| உ.பி., கர்நாடகம், மராட்டியம், ராஜஸ்தான், குஜராத்: 5 மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயார் Posted: 16 Feb 2014 10:15 PM PST பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கிறது. அடுத்த வாரம் தேர்தல் தேதி வெளியாகிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் இந்த முறை ராகுல்காந்தி தலைமையில் தேர்தலை சந்திக்கிறது. அவர் கட்சியின் தேர்தல் குழு தலைவராகவும், பிரசார கமிட்டி துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து தேர்தல் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். |
| தெலுங்கானா விவகாரம்: 5 மத்திய மந்திரிகள் அத்வானியுடன் சந்திப்பு Posted: 16 Feb 2014 10:01 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க சீமந்திரா பகுதி அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 13–ந்தேதி பாராளு மன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அந்த பகுதி எம்.பி.க்கள் ரகளையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி தூவப்பட்டது. இது தொடர்பாக 16 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி, பல்லம் ராஜு, |
| 48 நாட்களில் ஆட்சியை இழந்தார்: பாராளுமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் ஜொலிப்பாரா? Posted: 16 Feb 2014 09:51 PM PST ஆம் ஆத்மி– இதற்கு அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ... ஆனால் பலருக்கு இந்த கட்சியை புடிச்சிருக்கு..! அரசியல் ஒரு சாக்கடை. அதில் இறங்க வேண்டாம் என்ற தனது குருநாதர் அன்னாஹசாரேவின் எச்சரிக்கையையும் மீறி சாக்கடையில் இறங்கி சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை என்று களம் இறங்கினார் கெஜ்ரிவால். தலையில் காந்தி குல்லா... தோளில் சோல்னா பையுடன் தெருவில் இறங்கி நடந்ததால் மக்களை கவர்ந்தார். டெல்லி வாசிகளுக்கு இது புதுமை. |
| ஹெலிகாப்டர் பேர ஊழல்: விமானப்படை முன்னாள் தளபதியின் சகோதரர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை Posted: 16 Feb 2014 09:16 PM PST முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக அகஸ்டா வெஸ்ட்லேன்ட் என்ற இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் இத்தாலி நிறுவனத்துக்கு இடைத்தரகராக செயல்பட்ட கைடோ ஹசிக்கி என்பவர், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு, ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. |
| பாராளுமன்ற தேர்தலுக்காக நான் ராஜினாமா செய்யவில்லை:அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி Posted: 16 Feb 2014 08:21 PM PST டெல்லி சட்டமன்றத்தில் ஜன லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காகவே அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக புகார் எழுந்தது. அதன்படி மக்களிடம் அனுதாபத்தை பெறுவதற்காக ஜன லோக்பால் மசோதாவை காரணம் காட்டி அவர் பதவி விலகியதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இந்த புகார்களை அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை. எனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் ராஜினாமா செய்யவில்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால் பாராளுமன்ற தேர்தலுக்காக, ஒரு முதல்-மந்திரி பதவி விலக வேண்டியதில்லை. முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவது என்பது சூதாட்டமல்ல. |
| வரி ஏய்ப்பை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை Posted: 16 Feb 2014 07:17 PM PST ஒரு நாட்டை நிர்வகிப்பதில், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு வரி வருவாய்தான் கைக்கொடுக்கிறது. ஆனால் நமது நாட்டில் வரி ஏய்ப்பு செய்வதில் சாமானியர்கள் முதற்கொண்டு தொழில் அதிபர்கள்வரை ஒருவருக்கொருவர் போட்டிபோடுகின்றனர். ஆனால் அதையெல்லாம் கடந்து, வரி ஏய்ப்பு செய்வோரை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்காக அது நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துகிறது. |
| சோனியா அரசியலுக்கு வந்தது எப்படி?: மத்திய மந்திரி புத்தகத்தில் புதிய தகவல்கள் Posted: 16 Feb 2014 07:12 PM PST மத்திய உணவு மந்திரி பேராசிரியர் கே.வி.தாமஸ், 'சோனியா: மக்களின் அன்புக்குரியவர்' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவர் சோனியா காந்திக்கும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கும் இடையேயான உறவு, சோனியா காந்தி அரசியலுக்கு வந்த சூழல் பற்றி விவரித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்ததில், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், அதையொட்டியே 1995-ம் |
| பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் செலவு வரம்பு ரூ.70 லட்சம் ஆகிறது: தேர்தல் கமிஷன் தீவிர பரிசீலனை Posted: 16 Feb 2014 07:06 PM PST பாராளுமன்ற தேர்தலில், தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பு கடந்த 2009-ம் ஆண்டு ரூ.25 லட்சமாக இருந்தது. 2011-ம் ஆண்டு இது ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் இந்த மூன்று ஆண்டுகளில் கடுமையாக விலைவாசி உயர்ந்து, பெரும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரம்பினை உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே தேர்தலுக்கு உரிய வரம்பினை விட பல மடங்கு தொகையை |
| சத்தீஸ்கர் முதல் மந்திரியின் சகோதரர் சாலை விபத்தில் படுகாயம் Posted: 16 Feb 2014 01:21 PM PST சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ரமன் சிங்கின் மூத்த சகோதரர் அசோக் சிங் நேற்று தனது குடும்பத்தாருடன் காரில் சென்று கொண்டிருந்தார். ராய்பூரில் இருந்து ஷிவ்நாராயண் செல்லும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிர் |
| மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் கங்கை ஆற்றை சீர் குலைக்கும் திட்டங்கள் ரத்து: சுஷ்மா சுவராஜ் உறுதி Posted: 16 Feb 2014 12:54 PM PST மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் கங்கை ஆற்றை சீர் குலைக்கும் மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். |
| மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது ’ஷு’ வீசிய ஆசாமி ஆம் ஆத்மி கட்சி எம்.பி. வேட்பாளராக அறிவிப்பு Posted: 16 Feb 2014 12:22 PM PST மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது 'ஷு' வீசிய ஆசாமியை எம்.பி. வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் |
| வெளிநாட்டு நிதி விவகாரத்தில் கெஜ்ரிவால் இன்னும் பதில் அளிக்கவில்லை: ஷிண்டே தகவல் Posted: 16 Feb 2014 12:01 PM PST ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமான முறையில் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் |
| திருட்டு தொடர்பான புகார்களை இனி ‘ஆன்லைன்’ மூலம் தெரிவிக்கலாம்: டெல்லி போலீஸ் புதிய திட்டம் Posted: 16 Feb 2014 11:43 AM PST கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்பாக இனி வீட்டில் இருந்தபடியே 'ஆன்லைன்' மூலம் புகார் அளிக்கும் புதிய முறையை டெல்லி போலீஸ் துறை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. |
| Posted: 16 Feb 2014 11:37 AM PST பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் மிளகுப்பொடி வீச்சு நடத்திய விவகாரத்தை உரிமைக்குழுவின் விசாரணைக்கு அனுப்பி சபாநாயகர் மீரா குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். |
| எட்டு எம்.எல்.ஏ.க்களை வரதட்சணையாக கொடுத்தும் மணமகன் கெஜ்ரிவால் ஓடிவிட்டார்: சல்மான் குர்ஷித் வேதனை Posted: 16 Feb 2014 06:14 AM PST டெல்லி சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் தங்களது எட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கியது. |
| ஹரியானா முதல் மந்திரி ஹூடா மீது ஷு வீச்சு Posted: 16 Feb 2014 05:38 AM PST கடந்த 2ம் தேதி பானிப்பட் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஹரியானா மாநில முதல் மந்திரியான பி.எஸ்.ஹூடாவை மர்ம நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். அனேகமாக அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீண்டு வந்திருக்கமாட்டார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |