Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சாம்சுங் நிறுவனத்தின் அதிரடி

Posted: 16 Feb 2014 07:17 AM PST

samsung_galaxy_002

samsung_galaxy_002சாம்சுங் நிறுவனம் அதன் சமீபத்திய பேப்லட்டான கேலக்ஸி மெகா பிளஸ் பேப்லட் பற்றி சீனாவில் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிட்டுள்ளது.

கேலக்ஸி மெகா 5.8 போன்ற சாம்சுங் கேலக்ஸி மெகா பிளஸ், இரட்டை காத்திருப்பு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும்.

இது ஒரு qHD (540x960 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வருகிறது மற்றும் TouchWiz UI உடன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. என்றாலும், பதிப்பு தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை. 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. ரேம் திறன் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

8 மெகாபிக்சல் பின்புற கமெரா, அத்துடன் 1.9-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா உள்ளது. மைக்ரோ SD அட்டை வழியாக (குறிப்பிடப்படாத அதிகபட்ச கொள்ளளவு) விரிவாக்கக்கூடிய 8GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கொண்டு வருகிறது.

ஒரு 2600mAH பேட்டரி திறன் கொண்டுள்ளது. கேலக்ஸி மெகா பிளஸ் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், Wi-Fi, GLONASS, ஜிபிஎஸ் மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும்.

சாம்சுங் கேலக்ஸி மெகா பிளஸ் பேப்லட் அம்சங்கள்

*qHD (540x960 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே

*1.2GHz குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்)

*இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)

*8 மெகாபிக்சல் பின்புற கமெரா

*1.9-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா

*மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு

*ப்ளூடூத்

*Wi-Fi

*GLONASS

*ஜிபிஎஸ்

*3 ஜி

*ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்

*2600mAH பேட்டரி

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலுக்கு சத்தூட்டும் தர்பூசணி

Posted: 16 Feb 2014 07:16 AM PST

தர்பூசணி பழம் மனிதனுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் நல்ல ஊட்டச்சத்துகளையும் அளிக்கிறது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் இரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியும். கட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், மற்றும் கீல்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் ஆகியவை உள்ளது. இது வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம். 100 கிராம் […]

Toshiba அறிமுகம் செய்யும் 5TB வன்றட்டு

Posted: 16 Feb 2014 07:15 AM PST

Toshiba நிறுவனமானது முதன் முறையாக 5TB கொள்ளவுடைய வன்றட்டினை அறிமுகம் செய்யவுள்ளது. MG04 எனும் வியாபாரக் குறியீட்டுடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இச்சாதனமானது 3.5 அங்குல அளவுடையதாகவும், 5 பிளட்டர்களை (Platters) கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 175MiB/s இல் இருந்து 205MiB/s வரையான வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். இது தவிர 2TB, 3TB, 4TB எனும் சேமிப்ப கொள்ளவுடைய வன்றட்டுக்களையும் Toshiba அறிமுகம் செய்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெரிந்து கொள்வோம்: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை படித்துவிட்டாரா என்பதை அறிய!!

Posted: 16 Feb 2014 07:13 AM PST

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள். குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. 1. முதலில் எப்போதும் போல மின்னஞ்சல் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிரடி மாற்றத்திற்கு உட்படும் பேஸ்புக் வசதி

Posted: 16 Feb 2014 07:12 AM PST

facebook_001

facebook_001பேஸ்புக் கணக்கு ஒன்று உருவாக்கும் போது குறித்த பயனர் என்ன பால் என்பதை தெரிவு செய்வது கட்டாயமாகும்.

எனினும் இதுவரை காலமும் இந்த வசதியில் ஆண் அல்லது பெண் என்று இலகுவாக தெரிவு செய்யும் வசதி தரப்பட்டிருந்தது.

ஆனால் திருநங்கைகள் பேஸ்புக் கணக்கினை உருவாக்கும்போது இவ்வசதியில் பிரச்சினை ஏற்படுவதனால் பேஸ்புக் நிறுவனம் தனது வியாபார வலையமைப்பு நிறுவங்களுள் ஒன்றான LGBT உடன் இணைந்த மேற்கொண்ட கலந்துரையாடலின்படி இதற்கான மாற்று வசதியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்படி உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் Male (He/His), Female (She/Her) அல்லது Neutral (They/Their) என்றவாறு தெரிவு செய்யும் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

Windows 8 விற்பனையில் சிகரத்தை எட்டியது மைக்ரோசொப்ட்

Posted: 16 Feb 2014 07:11 AM PST

மைக்ரோசொப்ட் நிறுவனம் மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்தியிருந்த Windows 8 இயங்குதளமானது தற்போது 200 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியுள்ளன. விண்டோஸ் 7 இயங்குதள விற்பனையை விடவும் மந்தமான வேகத்திலேயே விற்பனை இடம்பெற்ற போதிலும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களில் 100 மில்லியன் கொப்பிகளையும், அதன் பின்னரான 6 மாதங்களில் 100 மில்லியன் கொப்பிகளையும் விற்பனை செய்துள்ளது. எனினும் விண்டோஸ் 7 இயங்குதளமானது ஒரு வருட காலப்பகுதியில் 240 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தற்போது எதிர்வரும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

Posted: 16 Feb 2014 07:10 AM PST

australia_win_004

australia_win_004அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியில் அவுஸ்ரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 397 ஒட்டங்களைக் குவித்தது.

இதில் மார்ஸ் 148 ஒட்டங்களையும் சிமித் 100 ஒட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் ஸ்டெயின் அதிகப்படியாக 4 இலக்குகளை வீழ்த்தினார்.

தனது முதலாவது இன்னிங்ஸிற்க்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 206 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதில் அதிகப்படியாக ஏபி டி வில்லியர்ஸ் 91 ஒட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக ஜோன்சன் மிகவும் சிறப்பாக பந்து வீசி 7 இலக்குகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்ஸிற்க்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 290 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதில் வார்ணர் 115 ஒட்டங்களை அதிகப்படியாக பெற்றார்.

481 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது 2வது இனிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 200 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்து 281 ஒட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்காவின் 2வது இனிங்ஸில் ஏபி டி வில்லியர்ஸ் 48 ஒட்டங்களை அதிகப்படியாக பெற்றார்.

அவுஸ்ரேலிய அணியின் பந்து வீச்சில் முதல் இனிங்ஸைப் போலவே இரண்டாவது இனிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய ஜோன்சன் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்ரேலிய அணி 1 – 0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்து பயிற்றுவிப்பாளராக கொலிங்வூட் நியமனம்

Posted: 16 Feb 2014 07:09 AM PST

paul_collingwood_001

paul_collingwood_001மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் அணியில் போல் கொலிங்வூட் சேர்க்கப்பட்டுள்ளார்.

டேஹாம் அணியின் சகலதுறை வீரரான 37 வயது போல் கொலிங்வூட், 68 டெஸ்ட் போட்டிகளிலும் 197 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் 35 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கரிபியன் தீவுகளில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளை இங்கிலாந்து வெற்றிபெற்ற போது அணியின் கப்டனாக போல் கடமையாற்றினார்.

போல் கொலிங்வூட் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சகல அணிகளுக்கும் வழங்கிய உற்சாகத்தை இங்கும் எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் போல் டவுன்ரொன் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலககோப்பையில் ஆடக்கூடாது: கிளார்க்குக்கு கட்டளையிட்ட ஆலன்பார்டர்

Posted: 16 Feb 2014 07:08 AM PST

clark_alanbarder_001

clark_alanbarder_001உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிளார்க் ஆடக்கூடாது என்று முன்னாள் அணித்தலைவர் ஆலன்பார்டர் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் கண்டிப்பாக விலகவேண்டும், உலக கோப்பையில் ஆடக்கூடாது.

அவர் டெஸ்டில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அடுத்த 12 மாதங்கள் கிளார்க்குக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஆலன்பார்டர் தலைமையில் அவுஸ்திரேலியா 1987ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அன்புள்ள யுவராஜ்! கிங்பிஷர் ஊழியர்களின் மடல்

Posted: 16 Feb 2014 07:07 AM PST

yuvaraj_singh_001

yuvaraj_singh_001ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட வேண்டாம் என்று யுவராஜுக்கு, கிங்பிஷர் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கை, விஜய் மல்லையாவின் ஐ.பி.எல். அணியான பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

ஐ.பி.எல். ஏலத்தில் இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச தொகையாகும்.இந்நிலையில் கிங்பிஷர் நிறுவனத்தின் ஊழியர்கள் பெங்களுர் அணிக்காக விளையாட வேண்டாம் என்று வலியுறுத்தி யுவராஜ் சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.

அதில், அன்புள்ள யுவராஜ், கிங்பிஷர் விமான நிறுவனத்தின் ஊழியர்களாகிய நாங்கள் அனைவரும் உங்களது தீவிர ரசிகர்களாவோம்.

அதுமட்டுமல்லாது, நீங்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சமயம் விரைவில் நீங்கள் நலம்பெற்று வந்த செய்தியைக் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.

நடக்கவுள்ள ஐ.பி.எல் போட்டியில் விளையாட தங்களை ரூ.14 கோடிக்கு எங்களது நிறுவனம் ஏலம் எடுத்ததை கேள்விப்பட்டபோது நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

ஏனெனில் எங்கள் அனைவருக்கும் கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இக்காரணத்தால் நாங்கள் அனைவரும் கடன் நெருக்கடியில் தவிக்கிறோம். எனவே தாங்கள் எங்களுக்காக இப்போட்டியில் விளையாடவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இக்கடிதம் யுவராஜ் சிங்கின் பார்வைக்கு சென்றது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை. கடந்த சில காலமாக சர்வதேச போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வரும் யுவராஜ் சிங்குக்கு, ஐ.பி.எல். போட்டிகள் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

Posted: 16 Feb 2014 07:06 AM PST

india_beatpakistan_002

india_beatpakistan_002'யு 19' உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. துபாயில் 19வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் சர்ஃபராஸ் கான் 74 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 68 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சமாதான பேச்சுவார்த்தை தோல்வி – ஒபாமா எச்சரிக்கை

Posted: 16 Feb 2014 07:04 AM PST

syria_peace_talk_003

syria_peace_talk_003சிரியாவுடன் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சிரியாவுக்கான ஐ.நா. தூதர் லக்தர் பிராகிமி ஜெனீவாவில் தெரிவித்தார்.

சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 1,36,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் லக்தர் பிராகிமி நேற்று அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது,

"சிரியாவில் உள்ள அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தப் போர் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை உணர வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

சிரியா எதிர்க்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லூயேசபி கூறும்போது, "சிரியா விவகாரத்துக்கு அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் வீணானது'' என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் சில இடைநிலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு ராஜதந்திரத் தீர்வு நோக்கி நிலைமையை நகர்த்த நாம் அனைவரும் தொடர்ந்து வேலை செய்யப் போகின்றோம் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்களே சொல்லுங்க இவர்களின் பெற்றோரை பாராட்டாமல் இருக்கலாமா?…..

Posted: 16 Feb 2014 06:58 AM PST

child_mud_001.w245

child_mud_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பொது இடத்துல பெண்களை சீண்டினால் என்ன நடக்கும்?…..

Posted: 16 Feb 2014 06:57 AM PST

girl_chet_001.w245

girl_chet_001.w245      

This posting includes an audio/video/photo media file: Download Now

காதலர் தினம் பற்றிய மக்களின் கருத்து – ஒரு ஜாலி டிரிப்!….

Posted: 16 Feb 2014 06:55 AM PST

lovers_day_001.w245

lovers_day_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

சினிமா பாணியில் பணத்திற்காக பிணத்திற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்!….

Posted: 16 Feb 2014 06:53 AM PST

death_man_hospital_001.w245

death_man_hospital_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ் நட்சத்திரங்களின் ஜாலி இண்டர்வியூ……

Posted: 16 Feb 2014 06:52 AM PST

yazh_movie_team_001.w245

yazh_movie_team_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படியொரு பெருத்த அவமானம் உனக்கு தேவையா?….

Posted: 16 Feb 2014 06:49 AM PST

shoot_001.w245

shoot_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆசிர்வாதம் இல்லை

Posted: 16 Feb 2014 06:48 AM PST

england_church_001

england_church_001திருமணம் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு ஆசி வழங்கக் கூடாது என இங்கிலாந்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்களுக்கு தலைமை பிஷப்கள் கட்டளையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிஷப்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்களுக்குள் வழிபாட்டுக்காக ஓரினச்சேர்கையாளர்கள் வரலாம். ஆனால்,தி ருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சடங்கு- சம்பிரதாய விழாக்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணங்களுக்குதான் பொருந்தும். ஓரினச்சேர்க்கை ஜோடிகளின் திருமணத்தை தேவாலயங்களில் நடத்த அனுமதிக்க கூடாது.

அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு ஆசி வழங்கவும் கூடாது என இங்கிலாந்தில் உள்ள அனைத்து தேவாலயங்களின் பாதிரியார்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைப் பொருத்தவரை கடந்த 2005-ம் ஆண்டில் இருந்தே ஓரினச்சேர்க்கையாளர்களுக்குள் நடக்கும் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற தம்பதியருக்கு உள்ள அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு பொருந்தும் என அரசு அறிவித்திருந்த நிலையில் பிஷப்களின் இந்த புதிய கட்டளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பாதிரியார் விரும்பினால், அவர் பணியாற்றும் தேவாலயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு திருமனம் நடத்தி வைக்கலாம் என்ற உரிமை இதற்கு முன்னர் வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்த புதிய கட்டளையின் மூலம் பாதிரியார்களின் அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேஸ்புக் மூலம் சில நிமிடங்களில் பல லட்சம் நண்பர்கள்

Posted: 16 Feb 2014 06:42 AM PST

facebook_logo

facebook_logoஅமெரிக்காவில் 10 வயது சிறுவன் பேஸ்புக் மூலம் சில நிமிடங்களிலேயே 13 லட்சம் நண்பர்களை பெற்றுள்ளான்.

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுவன், மனஇறுக்க நோயால் பாதிக்கப்பட்டதால் நண்பர்கள் யாரும் இல்லாது தனிமையில் தவித்தான்.

இதனால் கவலையுற்ற அவனது தாயார் ஜெனிபர் ஹன்னிகம் தனது மகனின் 10வது பிறந்தநாளில் அவனுக்கு நண்பர்களை பரிசாக கொடுக்க வேண்டும் என எண்ணினார்.

இந்நிலையில் தற்போதைய காலக்கட்டத்தில் நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொள்ள வரப்பிரசாதமாக கிடைத்துள்ள பேஸ்புக் வலைதளத்தில், தனது மகனுக்காக தனி பக்கத்தை உருவாக்கி, அதில் அவனது நோய் குறித்தும், அவனுக்கு நண்பர்களே இல்லை என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.

இதை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அவனுக்கு 13 லட்சம் நண்பர்கள் கிடைத்ததால் அச்சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளான்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™