Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

12 Years a Slave : பிரிட்டனின் Bafta விருதை வென்றது

Posted:

இங்கிலாந்தின் உயரிய சினிமா விருது வழங்கும் விழாவான பஃப்டா (Baftas)வில் மிகச்சிறந்த திரைப்படத்திற்கான விருதை 12 Years a Slave திரைப்படமும், மிகச்சிறந்த பிரித்தானிய திரைப்படத்திற்கான விருதை Gravity யும் பெற்றுக் கொண்டன. இரண்டுமே ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Read more ...

சுவிஸில் அகதி அந்தஸ்து வேண்டும்! எதியோப்பிய விமானத்தைக் கடத்திய துணை விமானி!

Posted:

எதியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபபாவிலிருந்து ரோமுக்கு வரும் வழியில் கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் அவசரமாக சுவிற்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தில் தரையிறக்கபபட்டுள்ளது.


Read more ...

தமிழகத்தில் அணு உலைக்கு எதிரானவர்கள், மீனவ, விவசாய சமூகத்தினரை குறிவைக்கும் ஆம் ஆத்மி

Posted:

தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் இடிந்தகரை போராட்டக் காரர்கள், மீனவக் குழுக்கள் மற்றும் விவசாயிகளை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சி முயற்சி மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.


Read more ...

மெக்குலம் இரட்டைச் சதம் : இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அதிரடி

Posted:

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து பலமான நிலையில் உள்ளது. 


Read more ...

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

Posted:

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது வளரும் நாடுகளை விட இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.


Read more ...

நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் கூடி உள்ளது!

Posted:

இன்று தாக்கலாக உள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூடி உள்ளது.


Read more ...

இராஜதந்திர திறனற்ற குழுவே ஜெனீவா செல்கிறது; அது நாட்டுக்கு ஆபத்தானது : சஜித் பிரேமதாஸ

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் சார்பில் இராஜதந்திர திறனற்ற குழுவொன்றே செல்கிறது.


Read more ...

இலங்கையிலிருந்து பிரித்தானியா வெளியேறிய காலத்திருந்து சர்வதேச விசாரணை வேண்டும்: த.தே.ம.மு

Posted:

இலங்கையிலிருந்து பிரித்தானியா வெளியேறிய காலத்திலிருந்து இன்றை வரைக்கும் நடைபெற்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.


Read more ...

சுதந்திர இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் பெரும் ஊழல்!:அத்வானி

Posted:

சுதந்திர இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில்தான் பெரும் ஊழல் நடைபெற்று உள்ளது


Read more ...

அருட்தந்தை பிரான்ஸிஸ் முன்னிலையில் எனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார்; யோகியின் மனைவி சாட்சியம்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான யோகரத்தினம் யோகி இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் (மே 18, 2009) அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்திடம்


Read more ...

சென்னை உட்பட தமிழகத்தில் இன்று மழைக்குவாய்ப்பு !

Posted:

சென்னை உட்பட தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Read more ...

காணாமற்போனவர்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் : அனந்தி சசிதரன்

Posted:

இலங்கையில் மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினராக அனந்தி சசிதரன் (எழிலன்) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் ஜெனீவா சென்று திரும்பியமை தொடர்பில் பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவுக்கான தன்னுடைய விஜயத்தின் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஜெனீவாவிலுள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசியுள்ளதாக அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

இதன்போது, மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லத்தக்க வகையிலான உள்ளுர் விசாரணைகள் என்பன தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி மோதலின் நேரடி சாட்சியாக மட்டுமல்லாமல், இராணுவத்தினரிடம் சரணடைவதற்காகத் தனது கணவனை நேரடியாகக் கையளித்தவர்களில் ஒருவர் என்ற வகையிலும், இராணுவத்திடம் உறவினர்களை ஒப்படைத்தவர்களின் சார்பிலும் தான் ஜெனீவா சென்று வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போலவே காலம் கடத்துவதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை இப்போது நடத்தி வருகின்றது. இந்த விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில், எமது உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்த பின்னர், அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ள எங்களுடைய வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் வாதாடுகின்ற வழக்கறிஞர் ஒருவரே காணாமற்போயுள்ளவர்கள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இலட்சக்கணக்கான மக்கள் பார்த்திருக்க இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமற்போயிருக்கின்றார்கள். அதனை மறுத்து வாதாடுகின்ற வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட விசாரணையில் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியாது. இதற்காகவே நாங்கள் சுதந்திரமாக அச்சமின்றி சாட்சியமளிக்கத்தக்க ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என்று ஜெனீவாவில் சந்தித்த சர்வதேச பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறியுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

வா..வா ! 48

Posted:

' ஈபிள் ' கோபுரம் இருந்த திசையில்  இருவரும் நடந்தார்கள்.


Read more ...

சீதனமாக 8 எம்.எல்.ஏக்களை கொடுத்தோம். ஆனால் மாப்பிளையே ஓடிவிட்டார் : அர்விந்த் கேஜ்ரிவாலை கேலி செய்யும் ...

Posted:

ஆம் ஆத்மி கட்சிக்கு தாம் சீதனமாக தமது எட்டு எம்.எல்.ஏக்களை கொடுத்ததாகவும் ஆனால் மாப்பிளை (அர்விந்த் கேஜ்ரிவால்) பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் கேலி செய்துள்ளார் உள்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.


Read more ...

ப.சிதம்பரத்திற்கு எதிராக செருப்பு வீசியவர் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்!

Posted:

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மேற்கு டெல்லியிலிருந்து போட்டியிட தெரிவாகியுள்ள 20 வேட்பாளர்களில் ஒருவர் ஜர்னாயில் சிங்.


Read more ...

சோச்சி குளிர்கால ஒலிம்பிக்கில் ஒரு வழியாக பறந்தது இந்திய தேசியக் கொடி

Posted:

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீது சர்வதேச சம்மேளனம் வித்திதிருந்த இடைநீக்கம் முடிவுக்கு வந்துள்ளது.


Read more ...

ஓரினச் சேர்க்கைத் திருமண ஜோடிக்கு ஆசி வழங்க முடியாது!:பிரிட்டன் தேவாலயங்கள்

Posted:

பிரிட்டனில் உள்ள கிறித்தவத் தேவாலயங்களைச் சேர்ந்த பிஷோப்கள் சமீபத்தில் இங்கிலாந்துப் பாதிரியார்களுக்கென புதிய வழிகாட்டல்களை அறிவித்துள்ளனர்.


Read more ...

நயன்தாரா சொல்லப்போகும் விஷயம் என்ன?

Posted:

வாலு போய் கத்தி வந்துச்சு டும் டும் டும் என்பது மாதிரியே ‘வாலு’ படத்தை டீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் சிம்பு.


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும்; நவிபிள்ளையின் அறிக்கையில் பரிந்துரை

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

29 000 பள்ளிச் சிறுவர்கள் இணைந்து அமைத்த பாகிஸ்தான் தேசியக் கொடி:உலக சாதனை முயற்சி

Posted:

சனிக்கிழமை பாகிஸ்தானின் லாகூர் நகரில் 29 000 இற்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் இணைந்து வானத்தில் இருந்து பார்க்கும் போது பாகிஸ்தான் தேசியக் கொடி தோன்றுமாறு பதாதைகளைத் தாங்கி உருவமைத்து உலக சாதனை படைத்துள்ளனர்.


Read more ...

18 பேருடன் மாயமான நேபாள விமானம்

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் ஒரு வெளிநாட்டினர் உட்பட 18 பேருடன் பயணம் செய்த நேபால் ஏர்லைன்ஸைச் சேர்ந்த சிறிய விமானம் ஒன்று மாயமாகி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™