Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முன்னேற விரும்பும் பெண்கள் இந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும்

Posted: 27 Feb 2014 10:05 AM PST

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் ஒரு முயற்சி வெற்றி பெறும்போது நமக்கு என்ன கிடைக்கிறது? நாம் விரும்பியதை அடைகிறோம். நம் சாதனை - நம்மால் முடியும் என்று நிரூபிக்கிறது. நமக்கு நம் மீதே ஒரு பெருமை ஏற்படுகிறது. நமக்கு மனநிறைவைத் தருகிறது. மேலே கூறிய நான்கு விளைவுகளையும் பார்த்தோமானால் கடைசியில் கூறப்பட்ட மூன்று விளைவுகளும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்வுகள் என்பது புரியவரும். நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் ...

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

Posted: 27 Feb 2014 09:49 AM PST

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை  பாகம் 1  ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம்  சிங்க முகமும் , மனித உடலும் , நீண்ட கோரைப்பற்களும் , தொங்குகின்ற நாக்கும் , உருண்ட கண்களும் , அம்பினை போன்ற கூர்மையான நகங்களும் கொண்ட அதிபயங்கர உருவமாகிய நரசிம்மர் ,இரணியனைக்  கொன்ற பின்னரும் , அவனது இரத்தத்தைக் குடித்ததால் மிகுந்த உக்கிரம் பெற்று சினம் தணியாது உலகத்தினையே நடுங்க வைத்தார் .  தேவர்கள் பயம்  கொண்டு கோபத்தைத் தணிக்கும்படி நரசிம்மமூர்த்தியை பிராத்திக்க , அவர்களின் பிராத்தனையால் உற்சாகமடைந்த நரசிம்ஹர் மேலும் உக்கிரம் ...

cool lip – பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பொருள்

Posted: 27 Feb 2014 09:44 AM PST

ஒரு இளைஞன் இந்த நீல நிற சாஷேயை பிரித்து ஒன்றை எடுத்து உதடிடுக்கில் வைத்துக் கொள்ள ஆஹா என்ன ஒரு புத்துணர்ச்சி? உடனே எங்கிருந்தோ மூன்று நவ நாகரீக நங்கைகள் ( இங்கே அப்படி என்றால் தையல் கடையில் இருந்து கடாசிய துண்டு துணிகளை மட்டும் உடுத்தியவர்கள் ) வந்து ஒட்டிக் கொள்ள … இப்படி போகும் அந்த விளம்பரம். எல்லா தொலைக் காட்சிகளிலும் சாதாரணமாக காட்டப் படும் விளம்பரம். சரி இது ஏதோ வாய்க்கு புத்துணர்ச்சி தரும் பொருட்களுக்கான விளம்பரங்களில் ஓன்று என்று நினைத்து பலரும் அலட்சியப் படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தி ...

உலக வாழ்க்கையில் இரண்டே இரண்டு அனுபவங்கள்தாம் அந்தரங்கமானவை!

Posted: 27 Feb 2014 09:43 AM PST

உயிரில்லாத உடலாக அம்மா என் முன்னே கிடந்த போது எனக்கு எட்டு வயது. அதுதான் நான் முதலில் பார்த்த மரணம். சாந்தமான ஒரு புன்னகையோடு அம்மா செத்துப் போயிருந்தாள். அம்மா இறந்து போனாள் என்றே நம்ப முடியாமல் தடுமாற வைக்கிற அற்புதமான, இயற்கையான புன்னகை. அன்றிலிருந்து இறந்தவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சாவைப் பற்றிய பயமோ அல்லது வேறு எதிர்மறையான எண்ணங்களோ எனக்கு வந்ததே கிடையாது. ஒருவர் இறந்த உடனே உற்றார் உறவினர் கூடி அழுவதானாலோ, செய்தித்தாள்களில் 'மரண அறிவித்தல்' என்று விளம்பரப்படுத்துவதாலோ, அல்லது நகரின் ...

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய 715 உலகங்கள்: நாசா கண்டுபிடிப்பு

Posted: 27 Feb 2014 09:35 AM PST

கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்களின் கண்டுபிடிப்பு பற்றி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி இதனை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி சூரிய குடும்பத்திற்கு வெளியே செழிப்பான புதிய 715 உலகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. 'இன்று நாம் கிட்டத்தட்ட மனித தெரிந்த கிரகங்கள் எண்ணிக்கையை இருமடங்காக்கியுள்ளது,' என்று கலிபோர்னியாவின், Moffett Field நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தின் ஜேக் ஜே Lissauer கூறியுள்ளார். கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் ...

வெற்றிக்கு முதல் படி...! எது முக்கியம், தம்பி?

Posted: 27 Feb 2014 09:15 AM PST

வாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! யாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்? "என்ன செய்கிறீர்கள்? எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்பதைத்தான். 'என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்' என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை - தொழில் - நம்மை அடையாளம் காட்டுகிறது. ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. ...

11 கோடி ரூபாயில் தங்க உள்ளாடை!

Posted: 27 Feb 2014 08:32 AM PST

தங்கள் தயாரிப்புகளை, மக்களிடம் பிரபலப்படுத்துவதற்கு, தங்களால் முடிந்த அளவு தந்திரங்களை கையாண்டு வருகின்றன, தனியார் நிறுவனங்கள். இந்த விஷயத்தில், ஒரு சில நிறுவனங்கள், வரம்பு கடந்து செயல்படுவது, வழக்கமாகி விட்டது. சீனாவின், ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஒரு நகை கடை நிறுவனம், இந்த விஷயத்தில், அனைவரையும் அதிசயிக்க வைக்கும், தந்திரத்தை கையாண்டுள்ளது. மூன்று கிலோ தங்கத்தை பயன்படுத்தி, பெண்கள் அணியும் உள்ளாடைகளை தயாரித்துள்ளது. இந்த உள்ளாடைகளின் மதிப்பு, 11 கோடி ரூபாய். சீனாவின் பிரபல மாடல் ஒருவர், ...

என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data)

Posted: 27 Feb 2014 08:26 AM PST

இந்த தாள்கள் எனக்கு
வாய்ப்பளிக்க பயன்படாவிட்டாலும் பரவாயில்லை;
அலுவலக நொருக்குத்தீனிகளுக்கு
அடியில் வைத்து பரிமாற பயன்படட்டும்".

மூலையில் போட்டுவிடாதீர்கள்  முனுமுனுத்துக்கொண்டே இருக்கும்,
முடிந்தால்
முழுதாய் உபயோகித்துவிட்டு குப்பையில்  வீசிவிடுங்கள்.
புன்னகையுடன் விடைபெற்றுவிடும்.

இப்படிக்கு
நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்.

எங்கள் சிவாஜி

Posted: 27 Feb 2014 07:54 AM PST

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...

ரமணியின் கவிதைகள்

Posted: 27 Feb 2014 06:47 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

கவனம் நண்பர்களே

Posted: 27 Feb 2014 06:15 AM PST

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு ...

பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டமும் வேண்டுமா?

Posted: 27 Feb 2014 05:46 AM PST

என்னதான் உழைப்பு புத்திசாலித்தனம் இருந்தாலும் பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டமும் வேண்டுமா? கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஒன்று அதிர்ஷ்டம் என்ற பெயரில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது போன்று உங்கள் கேள்வி அமைந்துள்ளது. வாதத்துக்காக இதை ஒப்புக்கொண்டால் காட்டிமிராண்டியாக வாழக்கையைத் தொடங்கி, இன்று விண் வெளிக்கு வான் கலத்தை அனுப்பிக் கொண்டிருக்கும் மனித முயற்சி கேவலப்படுத்துப்பட்டுவிடும். Mirracle or Methodology மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுச சக்தியா? அல்லது வெற்றிக்கான வழிமுறையா ? என்பதில் ...

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?

Posted: 27 Feb 2014 04:47 AM PST

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள். நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது. யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற "திறந்த கதவு" கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது. ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல். எடுத்த காரியங்களின் விளைவுகள் ...

நேரம் பொன்னானது

Posted: 27 Feb 2014 04:38 AM PST

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள். நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது. யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற "திறந்த கதவு" கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது. ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல். எடுத்த காரியங்களின் ...

திரு + நங்கை = திருநங்கை ( Transwoman )

Posted: 27 Feb 2014 04:33 AM PST

ஆணென்றும் பெண்ணென்றும் இல்லாதெம்மை தடுத்தாய் இருதலைக் கொள்ளியென ஏனெமெக்கு உருக்கொடுத்தாய். திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்பால் ஆண்களாக அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். அதாவது "பிறப்பால் ஒரு பாலினத்தை சார்ந்தவர்கள், சில உயிரியல்(Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்து, பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபர்கள்" திருநங்கைகள் என்று குறிக்கப்படுகின்றார்கள். பல ...

உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் !

Posted: 27 Feb 2014 04:08 AM PST

முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார். முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு "ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்" என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…" உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து இங்கே வெளியிடப் போகிறேன். யார் ...

' நாவடக்கம் ' ஒரு நாகரிகம்

Posted: 27 Feb 2014 03:59 AM PST

வாய்க்கொழுப்பு என்றால் பச்சையாகச் சொன்னது போலிருக்கும். மாறாக நாவடக்கம் வேண்டும் என்று சொன்னால் அது மிகவும் நாகரிகமான சொல்லாகக் கருதப்படும் நாவடக்கமாகப் பேசுவது மிகச் சிறந்த நாகரிகமாகும். நாவடக்கம் நாவடக்கம் என்பதிலே மேம்போக்காகக் கருதினால் இரண்டு பொருள்கள் தொனிக்கும் ஒன்று நாவை அடக்கிப் பேசவேண்டும் என்பது மற்றொன்று நாச்சுவைக்கு அடிமையாகாமல் அடக்கி ஆளவேண்டும் என்பது. அதாவது அளவாகச் சாப்பிட்டு உடம்பைப் பெருக்க வைத்துக்கொள்ள கூடாது என்பது. இந்தக் குழப்பத்திற்கு ஆளாகாமல் இருக்கவே வாய்க்கொழுப்பு ...

படித்ததில் பிடித்தது - எழுத்தாளர் பாலகுமாரன் பேட்டி - விகடன்

Posted: 27 Feb 2014 03:54 AM PST

நன்றி : bala Kumaran blogspot (எழுத்துலகுக்கு வரவேண்டும் என்றால் நிகழ்வுகளை, சமூகத்தை உற்று கவனித்தல் என்பது மிக முக்கியமாச்சே என்று சொல்லிவிட்டு, நீங்கள் உற்று கவனித்த விஷயம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து வெளிவந்த சரளமான பதில் இது...) என்னுடைய ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள பழமறநேரி. எங்கப்பாவுக்கு மருவூர். அருகில் உள்ள கிராமம்தான். இரண்டுமே மிகச் செழிப்பான கிராமங்கள். ஆனால் நான் கிராமத்தில் வளரவில்லை. இளவயதிலேயே பட்டணத்துக்கு வந்துவிட்டேன். முன்னர் ...

சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது?

Posted: 27 Feb 2014 03:48 AM PST

வீட்டுக்கு வெளியே ஓர் ஓரமாய்த் தயங்கித் தயங்கி உட்கார்ந்திருக்கிறது நம்பிக்கை வெகு நேரமாய்! கவலையும் பயமும் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கட்டிலில் என்னுடன். சாயங்காலத்துக் காற்றுப் போல் உரிமையோடு உள்ளே நுழையும் சலனம். விரக்தி- ஒரு போர்வையாய் என் தலை முதல் கால்வரை போர்த்தியிருக்கும். வீட்டுக்கு வெளியே ஓர் ஓரமாய்த் தயங்கித் தயங்கி உட்கார்ந்திருக்கிறது நம்பிக்கை வெகு நேரமாய்! நம்பிக்கையிடம் சலனமும் பெரு மூச்சும் சண்டை பிடிக்க பயம் ஓடிச்சென்று பரிகாசம் ...

சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்

Posted: 27 Feb 2014 03:42 AM PST

இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களைப் பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, "பாசிடிவாக" இருக்கும். "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!" என்று எதையும் தள்ளிப் போட மாட்டர். எங்கேயாவது போக வேண்டுமா? ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா? உடனே செய்து விடுவர். "பிறகு" என்ற வார்த்தையே அவர்களிடம் கிடையாது. நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ...

ஏன் இப்படி? உலகமே நமக்கெதிராக - ஆண்டவனே நமக்கெதிராக இருக்கிறார்களா?

Posted: 27 Feb 2014 02:30 AM PST

வாழ்வில் தோல்வி என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும். வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக் கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன். அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான். நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி நாமே தீர்மானம் செய்துவிடுகிறோம். நாம் தோல்வியாளன் என்று நம்மீது நாமே முத்திரை குத்திவிடுகிறோம். ...

குதிரைகள் சொன்ன பாடம் !

Posted: 27 Feb 2014 02:22 AM PST

குதிரைகள் பசுக்கள் போல வாய் விட்டு கதறுவதில்லை வலியில்லை என்பதல்ல வலிமையே குதிரை ரூபம். தொட்டதும் சிலிர்க்கும் குதிரை சவுக்குக்காப் பணிந்து போகும் - இது குதிரைகள் எனக்கு சொன்ன வேதத்தின் முதலாம் பாடம். குளம்படி ஓசைக் கவிதை குதிரையின் கனைப்புக் கீதம் வீசிடும் வாலே கொடிகள் பொங்கிடும் நுரையே கடல்கள் பிடரியின் வரைவே வயல்கள் உருண்டிடும் உடம்பே பூமி சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு - இது குதிரைகள் எனக்கு சொன்ன வேதத்தின் இரண்டாம் பாடம். குதிரைகள் பயணம் செய்யா கூட்டமாய்ப் ...

படித்ததில் பிடித்தது :) - திசை திருப்பும் பாட்டு வேண்டாம்!

Posted: 27 Feb 2014 02:07 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

ஆமையும், முயலும்

Posted: 27 Feb 2014 01:59 AM PST

ஒரு வகுப்பறை. ஆமை, முயல் இவைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயக் கதையை மாணவர்களுக்குச் சொன்னார் ஆசிரியர். பிறகு, "இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?" என்று மாணவர்களைக் கேட்டார். ஆச்சரியம்! எத்தனைவிதமான பதில்கள்! அத்தனையும் விதவிதமான பார்வைகளின் வெளிப்பாடுகள். போயும் போயும், ஒரு ஆமையுடன் ஓடுவதற்கு முயல் சம்மதிக்கலாமா? அதுவே அது செய்த முதல் தப்பு. முயலுக்கு கொஞ்சம் ஆணவம் சார். ஆணவம் இருந்தால் எப்படி சார் ஜெயிக்க முடியும்? முயற்சி என்று இறங்கிவிட்டால், கடைசி வரைக்கும் ஒரு கை ...

வாராய், நீ வாராய்!

Posted: 27 Feb 2014 01:48 AM PST

கொஞ்சம் பொறுங்கள்! உங்களோடு ஒரு ஐந்து நிமிடம் பேசவேண்டும். உங்கள் இறுகிய முகத்தைப் பார்க்கும்போது ஏதோ விபரீதமான முடிவு எடுத்துவிட்டது போலத் தெரிகிறது. தற்கொலை செய்து கொள்ள தயாராக இருந்தாலோ, அல்லது தயார்படுத்திக் கொண்டிருந்தாலோ, அல்லது தயார்படுத்திக் கொண்டிருந்தாலோ என்னோடு வாருங்கள், நான் உங்களுக்கு உதவிசெய்கிறேன்! நான் சொல்வதை சற்று கவனமாகக் கேளுங்கள். அதன்பிறகு முடிவெடுங்கள். மற்றவர்களைப் போல, இந்த நேரத்தில் தத்துவங்களை சொல்லியோ உங்களை மேலும் குழப்பப் போவதில்லை. சாதாரணமாகவே பேசுகிறேன். ...

சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!

Posted: 27 Feb 2014 01:33 AM PST

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தோல்வி அடையுங்கள்" என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. தோல்வி விரும்பத்தகாத ஒன்றாகவே குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. நமக்கு கற்பிக்கப்பட்ட தவறானப் பாடங்களில் இது மோசமான ஒன்று. வாழ்க்கையில் தவிர்க்க இயலாத, சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நிகழ்வு. "தோல்வி" இதை தவிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இதிலிருந்து தப்பி ஓடுவதற்கும் மட்டுமே வழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. வருகிறது. பல மாணவர்களும், இது போன்ற காரணத்தினாலேயே தற்கொலை விஷத்தில் ...

பிஸ்கட் உண்பது நல்லதா?

Posted: 27 Feb 2014 01:31 AM PST

பிஸ்கட் உண்பது நல்லதா? அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? என்ற தலைப்பில் சி.ஏ.ஐ என்ற என்.ஜி.ஒ அமைப்பு கருத்தரங்கம் நடத்தியது. கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டவை: பழம், பிஸ்கட், வடை, சமோசா, சாலட், முறுக்கு போன்ற கொறிக்கும் தீனிகளை ஓய்வு நேரங்களிலோ, உணவுக்கு மாற்றாக சில நேரங்களிலோ எடுத்து கொள்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் இவைகளின் தரம் பற்றி விவாதித்தாலும் இவை உடலுக்கு எந்த வகையில் உகந்தது என்ற விவாதம் இன்னும் உலகெங்கும் நடைபெற்று தான் வருகிறது. இவைகளுள் தேநீர் மற்றும் ...

காதலித்தால் மட்டுமே...

Posted: 27 Feb 2014 01:29 AM PST

ஏக்கக் கவிதைகளை எழுதிக் குவித்திடும் என்னுடைய பார்வைகள்... எதற்கென்றே தெரியாமல் உன்னைப் பார்த்தால் புன்னகைக்கும் என்னுடைய உதடுகள்... எங்கோ நீ இருக்க கனவினிலே உனை அணைத்து கசக்கிப் பிழிந்திடும் என்னுடைய நினைவுகள்... நினைவுகளின் அணிவகுப்பில் உன்னையே மீண்டும் மீண்டும் வண்ணந் தீட்டிப் பார்த்திடும் என்னுடைய எண்ணங்கள்... எதிலென்று தெரியாமல் அதற்குள்ளே சிக்கி விடுபட முடியாமல் தவித்துத் துடித்திடும் என்னுடைய உணர்வுகள்... வாய்க்காலாய் ஓடி வடிகாலைத் தேடி ...

உன் எதிர்காலம் உன் கையில் ...

Posted: 27 Feb 2014 01:03 AM PST

நமது நோக்கம் இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம். அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும். உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன். மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை. நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ...

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை

Posted: 27 Feb 2014 12:59 AM PST

இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும் காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக் கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப் பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும் சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன பொம்மைகள்?. பார்க்காதே பேசாதே கேட்காதே என்று தத்துவம் போதித்தது மூன்று குரங்கு பொம்மைகள். .

அடக்கி வைத்தலின் விளைவு ?

Posted: 27 Feb 2014 12:49 AM PST

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழை விவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்ய நண்பன் அவனை காண வந்தான். விவசாயி "வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன் வந்தபின் நாம் பேசலாம் " என்றான். அந்த நண்பன் "இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக ...

மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்

Posted: 27 Feb 2014 12:39 AM PST

அறிமுகம்: மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் ...

மஹாசிவராத்திரி - சிவாஜி படங்கள் மூலம் ஒரு சிறப்பு வீடியோ தொகுப்பு

Posted: 27 Feb 2014 12:29 AM PST

இன்று ஒரு உன்னதமான நாள் - இனிய நாள் - மஹாசிவராத்திரி - எல்லோரும் இந்த அருமையான நாளில் இறைவனை வழிபாட்டு எல்லா இன்பங்களும் பெற வேண்டும் என்று இறைவனை வணங்கிவிட்டு - nt படங்களில் இடம் பெற்ற சிவனை புகழும் சில படங்களையும் , பாடல்களையும் இங்கு உங்களுக்கு சமர்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - அவர் படங்களை விட்டால் உவமை காட்ட வேறு யார் உள்ளார்கள் ? எந்த படம் அப்படிப்பட்ட சிறப்பை அடைந்துள்ளது ? அன்புடன் ரவி

பிஸினஸ் - குட்டிக்கதை

Posted: 27 Feb 2014 12:22 AM PST

கோ யம்பேட்டில் மொத்தவியாபாரக் கடை வைத்திருப்பவர் 'பழக்கடை' பாண்டி! பல ஊர்களில் இருந்தும் ஆப்பிள், ஆரஞ்சு என்று வாங்கி விற்கக்கூடிய ஆள். அவர் கடைதேடி ஒரு இளைஞன் வந்து நின்றான். ''அண்ணாச்சி... என் பேர் கண்ணன். ஒரு ஃப்ரெண்டோடு சேர்ந்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். குறைஞ்ச அட்வான்ஸுக்கு நூறு ஆப்பிள் பழங்கள் கொடுத்தீங்கன்னா வித்து உங்க பணத்தை செட்டில் பண்ணிடுவேன்'' என்றான். ''தொழில் தொடங்கறது நல்ல விஷயம். நான் 'குரோர்பதி' அமிதாப்பச்சன் ஸ்டைலில் ஒரு கேள்வி கேட்கிறேன். சரியா பதில் சொல்லிட்டா, ...

உறவுக்கு கை கொடுப்போம்!

Posted: 27 Feb 2014 12:17 AM PST

அலுவல் வேலை காரணமாக, புனேவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அருண். அவன் அருகில் வந்த ரேணு, ''நீங்க கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?'' என்று கேட்டாள்.''எனக்கு மட்டும் உன்னையும், பூரணியையும் தனியே விட்டுட்டு, புனே போகணும்ன்னு ஆசையா? வேற வழி இல்லாமதான போறேன். மூணு நாளுதானே...ஓடி வந்துடுவேன்.'' ''அதுக்கு இல்லீங்க...நம்ம கல்யாண நாள் வேற வருது; அன்னைக்கு விருந்துக்கு எல்லாரையும், கூப்பிட்டு இருக்கேன். 'ப்ளான் செய்தப்படி வர முடியல; வேலை இருக்கு'ன்னு ஏதாவது காரணம் சொல்லி, நீங்க சொதப்பிட போறீங்களோன்னு, ஒரே ...

தருமர் பார்வையும், துரியோதனன் பார்வையும்!

Posted: 27 Feb 2014 12:12 AM PST

ஞாயிற்றுக்கிழமை — பிரகாசம் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டபின், மனைவி மரகதத்துடன், முற்றத்தில் அமர்ந்து, வழக்கம் போல் பேச்சுக் கச்சேரியை துவங்கினார். பொதுவாக, வெளிநாட்டில் இருக்கும் மகன், மருமகள், பேத்தி குறித்தும், வேலைக்காரி கேட்டிருக்கும் சம்பள உயர்வு, தங்கம் விலைச் சரிவு, சீனாவின் அத்துமீறல் என்று, விமர்சனம் போய்க் கொண்டிருக்கும்; இடையிடையே தன் சொந்த ஊரான பேச்சிப்பள்ளம் குறித்தும் பேசுவார். பேச்சிப்பள்ளம், ஒரு சிறிய ஊர் என்றாலும், ஆறு, ஏரி, தோப்பு, வயல்வெளின்னு பசுமையாய் இருக்கும். ...

தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! பார்கோடு என்றால் என்ன?

Posted: 27 Feb 2014 12:06 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

குடும்ப ஒற்றுமை பேணுவோம்!

Posted: 26 Feb 2014 11:57 PM PST

சக்திக்கு நவராத்திரி போல, சிவனுக்கு சிவராத்திரி. இந்த விரதம் மிகவும் எளிமையானது; அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது நன்மை தரும். வேடுவன் ஒருவன் வேட்டைக்கு வந்தான். அன்று, அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. பகல் பொழுது கழிந்து, இரவு வேளை நெருங்கி விட்டது. வீட்டுக்கு வெறுங்கையோடு போனால், குடும்பத்தினர் எதை சாப்பிடுவர் என்று, ஏதேனும் மிருகம் சிக்கும் வரை காட்டிலேயே இருக்க முடிவெடுத்தான் வேடன். அதனால், ஒரு மரத்தின் மீதேறி, விடிய விடிய கண்விழித்து அமர்ந்திருந்தான். அவனது குடுவையில் சிறிது ...

திட்டமிடுதலும், செயல்படுதலும் இணைந்தால்தான் வெற்றி

Posted: 26 Feb 2014 11:40 PM PST

ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். 'திட்டமிடல்' என்பதுதான் அந்த அரண்! "வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர்களாகவே இருப்பார்கள்". இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம், இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை! "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற கருத்தில், என்ன வேறுபாடு சொல்லமுடியும்? ஆனால், இந்தச் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில், சொல்லில் வராத ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™