Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கெஜ்ரிவாலைப் போல மோடி பதவி விலகாதது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

Posted: 15 Feb 2014 11:47 PM PST

தேசிய அரசியலில் குதிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆனால், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது மேலும்

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

Posted: 15 Feb 2014 11:40 PM PST

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தெலுங்கானா பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 12–ந்தேதி ரெயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரெயில் மந்திரி மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்த போது ஆந்திர எம்.பி.க்கள் பட்ஜெட்டை கிழித்து வீசினார்கள். இதனால் அவர் பட்ஜெட் வாசிப்பதை பாதியிலேயே முடித்துக் கொண்டார். அதற்கு மறுநாள் (13–ந் தேதி) தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்ட

நரேந்திரமோடியை தொடர்ந்து மம்தா பானர்ஜியை அமெரிக்க தூதர் சந்திக்கிறார்

Posted: 15 Feb 2014 11:24 PM PST

குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடிக்கு விசா அளிக்க அமெரிக்கா மறுத்தது. இந்த நிலையில் பா.ஜனாதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அவருக்கு வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. எனவே, அவரை சந்தித்து பேச இந்தியாவில் உள்ள தனது தூதரை அமெரிக்கா நியமித்தது. அதை தொடர்ந்து அமெரிக்க தூதர் நான்சி போவல் குஜராத் சென்று நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து தற்போது திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்–

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

Posted: 15 Feb 2014 11:02 PM PST

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழா சிறப்பு வாய்ந்தது. லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபாடும் நிகழ்ச்சி ஆண்டுதோறும்

ராஜினாமாவிற்கு பின் கெஜ்ரிவால் கட்சிக்கு குவியும் நன்கொடை: ஒரே நாளில் ரூ.27 லட்சம் வசூலானது

Posted: 15 Feb 2014 10:57 PM PST

ஊழல் எதிர்ப்பை மையமாக கொண்டு கட்சியை தொடங்கிய கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களை பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 48 நாட்கள் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி செய்தது. ஜனலோக்பால் மசோதாவுக்காக கெஜ்ரிவால் டெல்லி முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பிறகு அவருக்குரிய செல்வாக்கு மேலும் அதிகரித்து உள்ளது. அவருக்கான நன்கொடை அதிகரித்து உள்ளது. பதவியை ராஜினாமா செய்த மறுநாளில் மட்டும் அவரது கட்சி நன்கொடை மூலம் ரூ.27.78 லட்சம் வசூலாகி இருந்தது. பிப்ரவரி மாதத்தில்

திருவனந்தபுரம் அருகே கேரள தம்பதிக்கு புலித்தோல் விற்ற குமரி தொழிலாளி கைது

Posted: 15 Feb 2014 10:39 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை வனத் துறை அதிகாரி சதீசனுக்கு அந்த பகுதியில் உள்ள ஒற்ற சேகரம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் புலித்தோல்களை வெளிநாட்டுக்கு கடத்தி விற்கும் கும்பல் பதுங்கியிருப்பதாக ஒரு ரகசிய தகவல்

காங்–பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது: 3–வது அணி ஆட்சி அமைக்கும் முலாயம்சிங் யாதவ் பேச்சு

Posted: 15 Feb 2014 10:09 PM PST

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆளும் சமாஜ் வாடி கட்சியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் முலாயம்சிங் பேசியதாவது:- வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நமக்கு முக்கியமானது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. அந்த நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அதற்கு 3-வது அணிதான் தீர்வாக அமையும். 3-வது அணி ஆட்சி அமைக்கும். அந்த அரசாங்கத்தில் நாம் பெரிய கட்சியாக பங்கு வகிப்போம்.

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: கிரண்குமார் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார்

Posted: 15 Feb 2014 09:32 PM PST

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திராவை பிரிக்க சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருவதால் அரசு நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது தெலுங்கானா ஆதரவு எம்.பி.க்களும், எதிர்ப்பு எம்.பி.க்களும் மோதிக் கொண்டனர். விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. எல்.ராஜகோபால் மிளகு பொடி ஸ்பிரே அடித்ததால் சபாநாயகர் மீராகுமார் உள்பட பல எம்.பி.க்கள் கண் எரிச்சல், சுவாச கோளாறால் அவதிப்பட்டனர். எம்.பி.

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: டெல்லியில் ஜெகன்மோகன் ரெட்டி நாளை ‘தர்ணா’

Posted: 15 Feb 2014 09:23 PM PST

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை தோற்கடிக்க செய்ய அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நாளை மறுநாள் தெலுங்கானா மசோதா விவாதத்துக்கு வருகிறது. பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டி தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் டெல்லியில் நாளை ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஜந்தர் மந்தரில் இந்த தர்ணா போராட்டம் நடக்கிறது. இதற்காக தொண்டர்கள் 2 விசேஷ ரெயில்களில் நேற்று டெ

எரிவாயு விலை முறைகேடு பற்றி மோடி மவுனம் சாதிப்பது ஏன்?: அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

Posted: 15 Feb 2014 09:22 PM PST

டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்–மந்திரி பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதன் பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தற்போது முதலாளித்துவத்தை நண்பனாக வைத்து அரசியல் நடத்துகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு 5 தொகுதி கிடைத்தால் போதும். அதை ஓழித்துக்கட்டுவோம். தற்போதைய எம்.பி.க்கள் மதம், ஊழல், கிரிமினல், கவர்ச்சி போன்றவற்றில் திளைக்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துடனான இயற்கை எரிவாயு விலை நிர்ணய

ஆம் ஆத்மி கட்சி வந்தால் 3–வது அணியில் சேர்ப்போம்: இந்திய கம்யூ. ஏ.பி.பரதன் பேட்டி

Posted: 15 Feb 2014 09:19 PM PST

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– 11 கட்சிகள் இணைந்து 3–வது அணியை அமைக்க உள்ளோம். இந்த அணியில் பல மாநில முதல்–அமைச்சர்கள் உள்ளனர். இந்த அணி பெரும்பான்மை பெறும் பட்சத்தில் அவர்களில் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக உள்ள கட்சிகள் 3–வது அணியில் சேர்த்துக் கொள்ளப்படும். அதேபோல் ஆம்ஆத்மி கட்சியும் வந்தால் சேர்த்துக் கொள்வோம். ஆனால் அது அந்த கட்சியின் இறுதி முடிவாக இருக்க

ஆம் ஆத்மி கட்சி ஒரு நக்சலைட் இயக்கம்: சுப்பிரமணியசாமி தாக்கு

Posted: 15 Feb 2014 09:05 PM PST

பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:– ஆம் ஆத்மி கட்சிக்கு தண்ணீர், மின்சாரம் போன்ற பிரச்சினைகள் தவிர, குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு

எரிவாயு விலை முறைகேடு புகார்: கெஜ்ரிவால் மீது அம்பானி வழக்கு

Posted: 15 Feb 2014 08:20 PM PST

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இயற்கை எரிவாயு எடுப்பது சம்பந்தமான ஒப்பந்தம் செய்தது. அவ்வாறு எடுக்கப்படும் எரிவாயுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் சாதகமாக விலை நிர்ணயம்

டெல்லி சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்: பா.ஜனதா அறிவிப்பு

Posted: 15 Feb 2014 08:02 PM PST

டெல்லியில் 48 நாள் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கவிழ்ந்து விட்டது. இந்த நிலையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா சட்டசபை கட்சித்தலைவர் டாக்டர் ஹர்சவர்தன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "டெல்லியில் அரசு அமைப்பதில் அதீத ஆர்வம் இல்லை. தற்போது பந்து, கவர்னரின் களத்தில் உள்ளது. அவர் முடிவு எடுக்கட்டும். என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் சந்தோஷமாக ஏற்போம்" என கூறினார்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறும் சூப்பர் மாம்

Posted: 15 Feb 2014 07:32 PM PST

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குழநதைகளின் தாயான அன்ஷு ஜம்சென்பா கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியும் பின்னர் அதே மாதம் 21ஆம் தேதியும் எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறி சாதனை படைத்தார். இதன்மூலம் பத்து நாட்களுக்குள் இரண்டு முறை எவரெஸ்டில் ஏறிய ஒரே தாய் என்ற சிறப்பை இவர் பெற்றார். கடந்த 2013ஆம் ஆண்டில் ஆறு பேர் கொண்ட குழுவினருடன் இணைந்து மறுமுறை எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறினார். தற்போது வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று நான்காவது முறையாக மலையேறும் இவர் இந்த

திருப்பதி நடைபாதையில் சென்னை பக்தர்கள் மீது சரமாரி கல்வீசி தாக்குதல்

Posted: 15 Feb 2014 03:59 PM PST

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ரோகித், ஜெயா, பூனம் ஆகிய 3 பேர் நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கீழ்திருப்பதியில் இருந்து அலிபிரி கேட் நடைபாதை வழியாக சென்றனர். 7 கிலோமீட்டர் தொலைவை கடந்து சென்றபோது,

முன்னாள் சப்-இன்ஸ்பெக்டரை கடித்த பாவத்துக்கு ’தெருநாய்’ மீது வழக்கு

Posted: 15 Feb 2014 02:44 PM PST

உத்தரபிரதேசம் மாநிலம், புலண்ட்ஷஹ்ர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் சிங். டெல்லி போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரை சமீபத்தில் தெருநாய் ஒன்று கடித்து விட்டது.

உ.பி.யில் மாயாவதி கட்சி தலைவர் சுட்டுக் கொலை

Posted: 15 Feb 2014 12:05 PM PST

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் காசியாபாத் மாவட்ட முன்னாள் தலைவர் அமர்பால் ஜாதவ்(40). நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று விட்டு லோனி வழியாக நேற்று ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஒடிசா: காட்டுக்குள் கல்லூரி மாணவியை கற்பழித்த காதலன் உட்பட 4 பேர் கைது

Posted: 15 Feb 2014 11:14 AM PST

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பயின்று வருகிறார். தனியார் விடுதியில் தங்கியபடி படித்து வரும் இவருக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னர் 'ஆன்லைன்' மூலம் சந்தோஷ்

8 வயது சிறுவனை சந்திக்க பாதுகாப்பு வளையத்தை கடந்த ராகுல் காந்தி

Posted: 15 Feb 2014 09:53 AM PST

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™