Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மீண்டும் சாதிப்போம்: டோனி

Posted: 14 Feb 2014 11:59 PM PST

உலக கோப்பையை வென்று மீண்டும் சாதனை வரிசையில் இணைவோம் என்று இந்திய அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2015ம் ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது. உலக கோப்பை திருவிழாவுக்கு தொடங்க சரியாக ஓராண்டு இருப்பதை யொட்டி இந்திய அணித்தலைவர் டோனி, ஐ.சி.சி. இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், உலக கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

காணாமல்போனோர் உறவுகளின் கண்ணீரால் கரைந்த கோப்பாய் பிரதேச செயலகம்

Posted: 14 Feb 2014 11:58 PM PST

Missing_promo_Titlecard

Missing_promo_Titlecardயுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவில் காணாமல் போனவர்களுக்கான பதிவுகள் காலை 9.30 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

66 பேரே விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் காலையிலே 106 பேர் பதிவுகளை மேற்கொண்டனர்.

தங்களின் உறவுகளும் காணமல் போயுள்ளனர் ஏன் 66 பேரை மட்டும் விசாரணை செய்கின்றீர்கள் தங்களையும் விசாரணை செய்ய வேண்டும் என வருகை தந்த உறவுகள் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதற்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேரம் போதமை காரணமாக  கடிதம் அனுப்பப்பட்ட 66 பேர் மட்டுமே விசாரணை செய்யப்படுவார்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள்  விசாரணை செய்ய முடியாதவர்களை எப்போது விசாரணை செய்வீர்கள்?

கிளிநொச்சியிலும் இப்படித்தான் தெரிவித்து விட்டு வந்துள்ளீர்கள் எங்களுக்கும் அப்படித்தான் கூறுகின்றீர்கள் எங்களுக்கு சரியான பதிலை கூறுங்கள்.

நாங்கள் இறப்பதற்கு முன்னர் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தாருங்கள், நான்கு நாட்கள் போதாது என்றால் நாட்களை கூட்டி விசாரணை செய்யுங்கள், நாங்களும் காணமல் போனவர்களின் உறவுகளே, இன்னும் எத்தனை காலங்கள் எங்கள் உறவுகளை காணாது அலைந்து திரிவது, எங்களுக்கு விடிவே கிடையாதா? என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினர்.

ஆனாலும் பலன் கிடைக்கவில்லை தாங்கள் வேறு ஒரு தினத்தில் வந்து விசாரணை செய்வதாக கூறிச் சென்றுவிட்டார்கள்.

இது ஒறுபுறமிருக்க கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு பகுதியில் வசிக்கும் ஒருவர் கொழும்பில் தமது உறவு காணமல் போனதாக முறைப்பாடு மேற்கொள்ள வந்திருந்தார்.

ஆனால் 1980 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணமல் போனவர்களே இங்கு விசாரணை செய்யப்படுவதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்து அவரை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெலிங்டன் டெஸ்ட்: இந்தியா முன்னிலையில்

Posted: 14 Feb 2014 11:56 PM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரகானே, டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி முன்னிலை பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0–1 என பின்தங்கியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களை பெற்றது. முதல் நாள் ஆட்டமுடிவில், இந்திய அணி முதல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை கடைசி பந்தில் திரில் வெற்றி

Posted: 14 Feb 2014 11:54 PM PST

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. முதல் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 120 ஓட்டங்களை பெற்றது. 121 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஆட்டநாயகனாக இலங்கை அணியின் திஸர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி

Posted: 14 Feb 2014 11:53 PM PST

நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளையே அறிமுகம் செய்து வந்தது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Nokia X எனும் இக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த போதிலும் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மக்கள் மத்தியில் நொக்கியா கைப்பேசிகள் பலத்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகத்தான சாதனை படைத்தது Twitch

Posted: 14 Feb 2014 11:52 PM PST

உலகின் முன்னணி ஹேம் பிளார்ட்போர்மாக திகழும் Twitch ஆனது ஒரு மாதத்தில் ஒரு மில்லியன் வரையான பயனர்களை எட்டிவருவதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் பயனர்களினூடாக மாதாந்தம் 45 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடுத்த தலைமுறைக்கான Sony PlayStation 4 Twitch அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. அத்துடன் 20 சதவீதமான Twitch ஒளிபரப்பாளர்கள் சொந்தமாக PlayStation 4 சாதனத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அழகுடன் ஆரோக்கியம் தரும் குங்குமப்பூ!

Posted: 14 Feb 2014 11:50 PM PST

ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது தனக்கு பிறக்கப்போகும் குழந்தை நல்ல சிவப்பாக பிறக்க வேண்டும் என்று குங்கும்ப்பூவை பாலில் கலந்து குடிப்பார்கள். குங்குமப்பூ நல்ல நிறத்தை மட்டுமல்ல மனிதனின் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இரத்தம் சுத்தமடைய குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் வரை கொடுப்பார்கள். குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆசியாவிலிருந்து வந்தவர்கள் அமெரிக்கர்கள்? ஆய்வில் தகவல்

Posted: 14 Feb 2014 11:49 PM PST

america_fromasia_002

america_fromasia_002அமெரிக்க நவீன பூர்வீகக்குடிகள் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற தகவல் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12600 ஆண்டுகளுக்கு முன்னர் மொன்டானாவில் புதைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையினது எச்சங்கள் கொல்விஸ் கலாசாரத்தை சேர்ந்த அங்கத்தவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அமெரிக்காவில் முதன்முதலாக குடியேறிய பூர்வீக குடிகள் சுமார் 15000 வருடங்களுக்கு முன் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என நிரூபணமாகியுள்ளதாக ஆய்வுக்கு தலைமை தாங்கிய டொன்மார்க்கின் கொப்பெனேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இஸா வில்லர்ஸ்லெவ் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும், அமெரிக்க பூர்வீக குடிகள் அமெரிக்காவிலிருந்து வந்ததாக நம்பப்படுகின்றது.

மேற்படி கொல்விஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பாலகனின் குடும்பத்தினர் தற்போது நவீன அமெரிக்கா பூர்வீக குடிகள் 80 சதவீதத்தினரது நேரடி மூதாதைகளாவர்.

இந்த பாலகனது மரபணுக்களானது, கனடாவிலுள்ள பூர்வீகக் குடிகளை விட மத்திய மற்றும் தென் அமெரிக்க பூர்வீக குடிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காருக்கே இந்த கதி என்றால் அப்போ மனுஷருக்கு?…..

Posted: 14 Feb 2014 11:47 PM PST

car_snow_001.w245

car_snow_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

துரத்தி துரத்தி காதலித்தவரிடம் ஏமாந்து போன நடிகையின் சோகக் கதை!…..

Posted: 14 Feb 2014 11:45 PM PST

sharmila_001.w245

sharmila_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்ணின் காதுக்குள் குடிகொண்ட லார்வா புழு…… முகம் சுழிக்க வைக்கும் காட்சி!….

Posted: 14 Feb 2014 11:43 PM PST

larva_001.w245

larva_001.w245தாய்வானில் வசிக்கும் பெண் ஒருவரின் காதுக்குள் குடி கொண்டுள்ள லார்வா எனும் இனத்தைச் சேர்ந்த புழுவையே இங்கு காண்கின்றீர்கள். விசேட வைத்தியர்களுள் மூலம் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே இப்புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

This posting includes an audio/video/photo media file: Download Now

கடலிலிருந்து வந்த விசித்திர உயிரனம்…. பயமின்றி புகுந்து விளையாடும் குட்டிப் பெண்….

Posted: 14 Feb 2014 11:41 PM PST

sea_lizard_001.w245

sea_lizard_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

சிக்னல்ல எதற்கு இந்த நடனம்னு தெரியுமா?…. பாருங்க உங்களுக்கே புரியும்!…

Posted: 14 Feb 2014 11:39 PM PST

road_dance_001.w245

road_dance_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்: வயிறு வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு….

Posted: 14 Feb 2014 11:37 PM PST

eating_girl_001.w245

eating_girl_001.w245சீனத் தலைநகரான பீஜிங்கில் மது அருந்திய பின்பு, அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது.

அவரது வயிற்றில் உள்ள குடல் முழுவதையும் அகற்ற முடிவு செய்துள்ளதாக நான்ஜிங் டிரம் டவர் மருத்துவமனையை சேர்ந்த வாங் ஹாவ் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அவரது வயிற்றில் இருந்த எத்தில் ஆல்கஹாலுக்கும், அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மின் அறுவை கத்திக்கும் ஏற்பட்ட தொடர்பினால் இச்சம்பவம் நடந்ததாக ஹாவ் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகிலேயே நீளமான சுரங்கப்பாதை அமைக்கும் சீனா

Posted: 14 Feb 2014 11:35 PM PST

china_plans_001

china_plans_00136 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உலகின் நீளமான சுரங்கத்தை கடலுக்கடியில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.

இரண்டு துறைமுக நகரங்களுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஷேன்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாய்யில் இருந்து லீபோனிங் மாகாணத்தில் உள்ள டைலான் நகரத்தை இணைக்கும் வகையில் சுமார் 123 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கபடுகிறது.

தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான 1,400 கி.மீ. தொலைவை கடந்து செல்ல 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டால் யான்டாய் கடற்பகுதியிலிருந்து போகாய் கடற்பகுதிக்கு 40 நிமிடங்களில் சென்று விடலாம்.

இந்த திட்டம் சீனாவின் 13வது ஐந்தாண்டு திட்டத்திற்குள் (2016-2020) முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சீனாவிலுள்ள கட்டுமான நிறுவனத்தில் சுரங்கம் மற்றும் ரயில்வே நிபுணராக உள்ள வாங் மெங்சூ கூறியுள்ளார்.

இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கான மாதிரி வரைபடம் வரும் ஏப்ரல் மாதம் மாநில கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே அதிவேக ரயில்களின் போக்குவரத்து கட்டமைப்பில் சீனா வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கவர்ச்சியால் சொக்க வைத்த ஜெனிபர் லோபஸ்!

Posted: 14 Feb 2014 11:33 PM PST

jennifer_lofus_002

jennifer_lofus_002நடிகை ஜெனிபர் லோபஸ் இசை ஆல்பம் ஒன்றிற்காக சொகுசிப் படகில் நடந்த படப்பிடிப்பின்போது தனது கவர்ச்சியாலும், செக்ஸியான உடல் அழகாலும் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

நடிகை, பாடகி என பன்முகம் கொண்ட ஜெனிபருக்கு இன்றும் கூட உலகம் முழுவதும் எக்கச்சக்கமான ரசிகர்கள்.

இந்நிலையில் மியாமி அருகே ஒரு சொகுசுப் படகில் வைத்து வி ஆர் ஒன் வே்ர்ல்ட் கப் என்ற இசை ஆல்பத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இந்த ஆல்பப் படப்பிடிப்புக்காக கவர்ச்சியான உடையில் படகின் இரும்புப் பிடி மீது தனது உடலை உரசியபடியும், இடித்தபடியும் காணப்பட்டார்.

உடம்பை இறுக்கிப் பிடிக்கும் வகையிலான வெள்ளை நிற உடையில், ஷார்ட்ஸுடன் காணப்பட்டார். அவருடன் படப்பிடிப்புக்கு வந்திருந்த ஆண்களுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடியும், பேசியபடியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இவர் அணிந்திருந்த ஷார்ட்ஸின் விலை 950 டொலர் விலையாகும்.

இந்த படப்பிடிப்புக்கு ஜெனிபரின் காதலர் காஸ்பர் ஸ்மார்ட்டும் வந்திருந்தார். ஆனால் அவர் உடம்பைக் காட்டவில்லை, மாறாக சட்டை போட்டிருந்தார்.

மேலும், அவரின் முதல் கணவர் மார்க் ஆண்டனியுடன், அவரது இரட்டைக் குழந்தைகள் மாக்ஸ், எம்மி ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் அம்மாவைப் பார்த்து அடிக்கடி கைகளை ஆட்டி ஆட்டி ரசித்து மகிழ்ந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

புகைப்படங்கள் வெளியாகவில்லையே! மனைவியை பிரிகிறார் மிஸ்டர் பீன்?

Posted: 14 Feb 2014 11:30 PM PST

மிஸ்டர் பீனின் மணவாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஸ்டர் பீன் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டில் பிரபலமானவர் ராவன் செபாஸ்டின் அட்கிசன், இவரது மனைவி சுனேந்தரே சாஸ்த்ரி. இவர்கள் இருவரும் அனைத்து கலைநிகழ்ச்சிகளுக்கும் ஒன்றாகவே கலந்துகொள்வர். ஆனால் 2012ம் ஆண்டுக்கு பின்னர், அவர்கள் இருவரும் இணைந்து காணப்படும் புகைப்படங்கள் எதுவும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இதன் காரணமாகவே இந்த சந்தேகம் வலுத்துள்ளது. 2012ம் ஆண்டுக்கு பின்னர் இடையில் அவர்கள் இருவரும் உறவினர் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இத்தாலியின் புதிய பிரதமராக இள வயதானவர் தெரிவு

Posted: 14 Feb 2014 11:28 PM PST

இத்தாலி நாட்டின் பிரதமராக பிளாரென்சோ மேயரும் இளம் வயதுடையவருமான மேட்டியோ ரென்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய அரசமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையிலேயே அம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்த என்றிகோ லெட்டா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதை தொடர்ந்து ஜனாதிபதி ஜார்ஜியோ நேபாலிடானோ, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். தீவிர பரிசீலனைக்கு பின் அந்நாட்டின் பிரதமராக மத்திய-இடது ஜனநாயக கட்சியை சேர்ந்த 39 வயதான ரென்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாக தெரியவந்துள்ளது. அந்நாட்டின் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்

Posted: 14 Feb 2014 11:24 PM PST

vikneswaran

vikneswaranபோருக்கு பின்னர் மீள் அமைப்புக்களை மேற்கொள்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது அவசியம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போரின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போது அவர் இதனை கோரிக்கையாக முன்வைத்தார்.

இந்த விடயம் இலங்கையின் பாதுகாப்பு விடயத்துடன் தொடர்புடையது என்ற போதும் சாத்தியமான விடயமாகவே இருக்கும் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோர் மத்தியிலேயே நிதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பொதிந்துள்ளன. அவை போரின் பின்னர் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப அவசியமானவை.

எனவே இரட்டை குடியுரிமை என்பது முக்கியமான அம்சமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வெளிநாடுகளில் வசிப்போரிடம் இருந்து நிதி வருகையை அனுமதிக்க அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டமை குறித்து விக்னேஸ்வரன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெனிவா காய்ச்சலின் வேகம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted: 14 Feb 2014 11:21 PM PST

sritharan

sritharanஐநாவின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கான நாள் நெருங்க நெருங்க, ஜெனீவா காய்ச்சலின் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்தி மூன்றாவது முறையாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்தக் கூட்டத்தில் பிரேரணை கொண்டு வருவதற்கான ஆயுத்தங்களைத் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றது. எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு, சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று, இந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டிருக்கின்றது.

கடந்த இரண்டு முறைகளிலும் பார்க்க, இம்முறை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் இருந்து வெளிப்படையாகவே இந்தப் பிரேரணைக்கு உரமூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, மோசமான மனித உரிமை மீறல்கள் இட்பெற்றிருக்கின்றன, அதிலும் குறிப்பாக இனப்படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்ற தோரணையில் கருத்துக்கள் இம்முறை மிகவும் துணிகரமான முறையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த மிகமோசமான இராணுவ நடவடிக்கையின்போது, யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த சிவிலியன்களின் பாதுகாப்பு குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்று ஐநாவும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வெளிப்படையாகவே ஆரம்பத்திலிருந்தே குற்றம் சுமத்தி வந்திருக்கின்றன. சர்வதேச நாடுகளும் படிப்படியாக இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்று அங்கீகரிக்கவும், அதுபற்றிய தமது அக்கறைகளையும் வெளிப்படுத்தியிருந்தன.

ஆயினும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து உரமான முறைப்பாடுகளோ அல்லது இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரவு குரல்களோ எழுந்திருக்கவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும், யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் தொடர்சசியாக நிலைநிறுத்தப்பட்டு, முழுமையானதோர் இராணுவச் சூழல் நிலவியதனால், உயிரச்சம் காரணமாக அங்கு மௌனம் அனுட்டிக்கப்பட்டிருந்தது. மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன, இனப்படுகொலை இடம்பெற்றிருந்தது என்று வெளிப்படையாகக் கூறுவதற்குப் பாதிக்கப்பட்ட பொதுமக்களோ அல்லது, அந்த மக்களின் அரசியல் தலைவர்களோ அப்போது, துணிந்து முன்வரவில்லை. ஐநூவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்ற ஜெனீவாவு;க்குச் செல்வதற்குக் கூட, பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதிகள் அல்லது அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் தயக்கம் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இம்முறை அப்படியல்ல. நிலைமைகள் மாறியிருக்கின்றன. அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்த அரசியல் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். இதற்காக முன்கூட்டியே வெளிநாடுகளில் ஆதரவு தேடும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கி;ன்றார்கள். இந்த வகையில் வடமாகாண சபையும்கூட, தனது சார்பில் உறுப்பினர் அனந்தி சசிதரனை முன்கூட்டியே அங்கு அனுப்பி வைத்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் ஏற்கனவே அங்கு சென்றிருக்கின்றனர். இதைவிட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனீவாவுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,

இறுதி யுத்தத்தின்போது, இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டும் பிரேரணைகள் வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்டபோது, இலங்கையின் சட்டத்துறையில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள நீதியரசராகிய முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற பதங்கள் ஆழமான அர்த்தங்கள் பொதிந்தவை. எனவே, ஆதாரங்களின்றி அவற்றைப் பயன்படுத்த முடியாது, என குறிப்பிட்டு, தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இலங்கையில் இழைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லப்படும் மனிதப்படுகொலைகளை விசாரணை செய்வதற்காக பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐநாவின் துணையுடன் உருவாக்க வேண்டும் என்ற திருத்தத்துடன் அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணைகளும், விசாரணைப் பொறிமுறையும் நம்பிக்கைக்கு உரியவை அல்ல. ஏனென்றால் குற்றம் சுமத்தப்பட்டவர்களான இராணுவத்தினர் கலந்து கொள்கின்ற விசாரணைகளாக விசாரணைப் பொறிமுறைகளாக அவைகள் இருக்கின்றன என்பதும் இ;ந்தப் பிரேரணைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

களத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி இறுதி யுத்தத்தின்போது, போர்க்ளூகுற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கின்றன என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்தும் ஒருசில சர்வதேச அமைப்புக்களிடமிருந்துமே ஆரம்பத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. ஐநாவும் இத்தகைய சாரப்பட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. எனினும், புலத்தில் இருந்து எழுந்த கடும் தொனிக்கு ஒத்ததாகவோ அல்லது ஆதரவாகவோ உடனடியாக களத்தி;ல் – இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்;தம் நடைபெற்ற பிரதேசங்களில் இருந்து குரல்கள் வெளிவரவில்லை.

இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது என்பதுபற்றி, தமிழ்த்தேசிய சுட்டமைப்பினர் தெளிவாக உணர்ந்திருந்தும், அறிந்துமிருந்த போதிலும். அரசாங்கத்திற்கு எதிராக – நேரடியாக இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் அமததி வாசிக்கின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்திருந்தனர். அரசாங்கத்தின் முகத்தை முறிக்கக் கூடாது. அவ்வாறு முறிப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற வகையில் ஒரு மென்மைப் போக்கையே பின்பற்றியிருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்ட கூட்டத்தில்கூட, மனித உரிமை மீறல்கள் பற்றியோ அல்லது இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை பற்றியோ பேசப்படவில்லை. இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பொது இடங்களில் பேசுகையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் தலவர்கள் அறிவுரைகூட வழங்கியிருந்தார்கள். காலை பத்துமணி முதல் மாலை ஆறு மணிவரையில் எட்டு மணித்தியாலங்கள் ஒரே தொடர்ச்சியாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் சம்பந்தனையும், விக்னேஸ்வரனையும் பேச்சுக்கள் நடத்துவதற்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைத்திருந்த விடயம் தொடர்பாகவே, மிகவும் முக்கியமாக, ஆராயப்பட்டதாக செ;ய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் நியமித்துள்ள தற்போதைய பாராளுமன்ற தெரிவிக்குழு நம்பகத்தன்மை அற்ற ஒரு முறைமை என்றும், அதன் மூலமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது, எனவே, காலப்போக்கில் நிலைமைகளை அவதானித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கூடி இது சம்மந்தமான முடிவுகளை எடுக்கும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவே செய்தியாளர்களிடம் கூறப்பட்டது.

தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினரக்ள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மாநாடாக இந்தக் கூட்டம், ஏற்பாட்டாளர்களினால் வர்ணிக்கப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் மிக்க ஒரு சந்திப்பாக அந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அரசாங்கத்தை அனுசரித்துச் செல்கின்ற போக்கிலான தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். எனினும் மாகாண சபை உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் அனுசரித்துப் போகின்ற போக்கினை வன்மையாக எதிர்த்திருந்ததுடன், அரசாங்கம் அமைத்துள்ள தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தனர்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் ஒரு மாதம் கடந்த நிலையில் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபைக் கூட்டத்தில் இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இனப்படுகொலை – இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்றும், இவை தொடர்பாக விசாரணை செய்வதற்காக பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐநாவின் துணையுடன் உருவாக்க வேண்டும் என்று அனைத்துலக சமூகத்தைக் கோருவதாகவும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே கூட்டத்தில் மாகாண சபையின் சார்பில் ஐநாவின் மனித உரிமைப் பேரவை கூட்டம் நடைபெறும்போது, ஜெனீவாவுக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இப்போது அவர் அங்கு சென்றடைந்திருக்கின்றார்.

மனித உரிமை மீறல் விடயத்தில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என வலியுத்தும் போக்கில் களத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து, சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியிருப்பதை இப்போது காண முடிகின்றது. குறிப்பாக நோர்வே இதுவிடயத்தில் கூடிய அக்கறை காட்டியிருப்பதை, இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரெட்டே லொஹன் அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் விஜயத்தின் போது வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பொறுப்பு கூறுதலா, மாகாண வடமாகாண சபையின் தடைநிங்கிய செயற்பாடுகளா – எது முக்கியம்?

மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகி 29 ஆம் திகதி வரையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கான நாட்கள் நெருங்க நெருங்க, சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் வட இலங்கையின் நிலைமைகளை நாடிப்பிடித்து அறிவதில் அதிக அக்கறை செலுத்தி வருவதைக் காண முடிகின்றது. இதேபோன்று ஐநா மன்றமும் பொருளாதார அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஹாஓலியங் சூவை வடபகுதிக்கு அனுப்பி பலதரப்பட்டவர்களிடமும் கருத்துக்களைத் திரட்டியிருக்கின்றது. இந்த வகையில் அண்மைய நாட்கள் யாழ்ப்பாணம் இந்த இராஜதந்திரிகளின் விஜயத்தினால் களைகட்டியிருந்தது.

வடமாகாண ஆளுனர், வடமாகாண முதலமைச்சர், யாழ் ஆயர், சிவில் சமூகத்தினர், யாழ் அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல தரப்பட்ட முக்கியஸ்தர்களையும் இவர்கள் குறிப்பாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்தித்திருக்கின்றார்.

இந்தக் சந்திப்புக்களின்போது, அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலான முரண்பாடுகள் பற்றியும், இவ்விரு தரப்பினரும் இணநை;து செயலாற்ற வேண்டியதன் அவசியம், அதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன், யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை ஆயர் இல்லத்தில் வைத்துச் சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரெட்டே லொஹன் அம்மையார், வடமாகாண சபையின் செயற்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இருக்கின்றதா என்று வினவியிருக்கி;ன்றார். அத்துடன், போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளைக் கோருவது யார்? பொதுமக்கள் கோருகின்றார்களா இதில் அக்கறை காட்டுகின்றார்களா அவர்கள் என்ன நினைக்கின்றார்கள், அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதைத் துருவித்துருவி விசாரித்து அறிந்;திருக்கின்றார்.

இதற்குப் பதிலளித்த யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், வடமகாhணசபைக்கும், அரசுக்கும் இடையில் முறுகல் நிலையே தொடர்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அத்துடன், இருதரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் தேவை அவசியம் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கின்றார். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுதல் தொடர்பில் இங்குள்ள பத்திரிகைள், ஊர் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என்று எல்லா தரப்பினருமே ஆர்வம் கொண்டிருப்பதாக யாழ் ஆயர் நோர்வே தூதுவருடனான சந்திப்பின்போது குறிப்பிட்டிருக்கின்றார். உள்நாட்டில் மட்டுமல்ல வெளியிலும் இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதைப் பொதுமக்களும் மற்றவர்களும் விரும்புகின்றார்கள் என்பதையும் யாழ் ஆயர் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த விசாரணைகளின் மூலம் என்ன பயன் கிடைக்கப் போகின்றது என்ற கேள்வியையும் நோர்வே தூதுவர் யாழ் ஆயரிடம் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த ஆயர், ஒருவிசாரணையின் மூலம்தான், காணாமல் போயுள்ளவர்கள் பற்றி, குறிப்பாக குடும்பத்தினரே நேரடியாக இராணுவததினரிடம் கையளித்த தங்கள் இளைஞர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை அரசு என்ன செய்தது என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் மன ஆறுதல் அடையவும் முடியும் என்று தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இத்தகைய விசாணையொன்றின் மூலம் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழிபிறக்கும் என்பதையும் ஆயர் அவருக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

யாழ் ஆயர் மட்டுமல்லாமல், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் ஊர்ப் பெரியவர்கள், பிரமுகர்கள் இளைஞர்கள் போன்றோரையும் நோர்வே தூதுவர் தனித்தனியே சந்தித்துப் பேசியிருக்கின்றார். மொத்தத்தில் யாழ் சமூகத்தின் குறுக்கு வெட்டு முகமாகப் பலரையும் சந்தித்து, கலந்துரையாடியிருக்கின்றார். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுமக்களின் உண்மையான மன உணர்வுகள் என்ன, இத்தகைய விசாரணையொன்று அவசியம் என்று ஒருசில அரசியல்வாதிகள், பத்திரிகைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் வலியுறுத்துகின்றார்களா என்பதைக் கண்டறிவதற்கு நோர்வே தூதுவர் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதேநேரம், வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பினபோது, அரசாங்கத்துடன் வடமாகாண சபை இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பாக கோடிட்டுக் காட்டியிருக்கின்றார். அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதற்கும், வடமாகாண சபைக்குப் பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவதற்கும் நோர்வே பங்களிப்பு செய்யும் என்பதையும் உறுதிபட அவர் கூறியிருக்கின்றார்.

இதேபோன்று ஐநாவின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய பசுபிக் பிராந்திய ஐநாவின் அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளருமாகிய ஹாஓலியங் சூ, வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பின்போது, அரசாங்கமும், வடமாகாண சபையும் அபிவிருத்திச்; செயற்பாடுகளில் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், அத்தகைய இணைந்த செயற்பாட்டில் ஐநா மன்றமும், ஏனைய சர்வதேச நாடுகளும் ஆர்வம் கொண்டிருப்பதையும் வலியுறுத்தி சுட்டிக்காட்டியிருக்கின்றார். முதலமைச்சரும் தனது பங்கிற்கு அரசாங்கத்துடன் தாங்கள் ஒத்துழைப்பதற்கும், இணைந்து செயற்படுவதற்கும் தயராக இருக்கின்ற போதிலும், அரசாங்கமே ஏற்கனவே தீர்மானித்துள்ள ஒரு நிகழ்ச்சி நிரலின்படி நடப்பதற்கு முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார். அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு வடமாகாண சபைத் தடையாக இருக்கக் கூடாது என்பதற்கான வழிவகைகளயும் மேற்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐநா பிரநிதியிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார்.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இதுவரையிலும் இல்லாத வகையில் ஒரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வந்து, அதன் மூலம் பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தைத் திமிற முடியாத வகையிலான ஒரு பொறிக்குள் சிக்க வைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில் வட மாகாண சபையின் செயற்பாடுகள் அரசும், வடமாகாண சபையும் ஒன்றிணைந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடைய உண்மையான மனநிலைகள் என்பவற்றை கண்டறிவதிலும் சர்வதேசம் முயற்சிகள் மேற்கொண்டிருப்பது, ஜெனிவா மாநாட்டின் தீர்மானம் குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இலங்கை அரசாங்சகத்தை சர்வதேச நெருக்கடிக்குள் தள்ள வேண்டியது உண்மையிலேயே அவசியமான ஒரு நடவடிக்கையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

குறிப்பாக சரவ்தேச விசாரணையொன்று இடம்பெறுமானால், அது இலங்கையில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்று இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் அத்தகைய ஒரு விசாரணைக்கான தேவை குறித்து சர்வதேசம் ஆராய முற்பட்டிருக்கின்றதோ என்று எண்ணத் தூண்டியிருக்கின்றது. அத்துடன் இப்போது போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூறுவது முக்கியமா அல்லது அரசாங்கத்தையும் வடாகாண சபையையும் இணைந்து செயற்படச் செய்து யுதத்தி;னால் அழிந்துள்ள பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கான அபிவிருத்திச் செயற்பாடுகளுககு ஊக்கம் கொடுப்பது முக்கியமா என்பதைத் தீர்மானிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றதோ என்று எண்ணிப்பார்க்கச் செய்திருக்கின்றது என்றே எண்ண வேண்டியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™