Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


யார் இவர்? - ஐசக் நியூட்டன்!

Posted: 13 Feb 2014 10:02 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

பெண் சிசுக்கொலை

Posted: 13 Feb 2014 10:01 AM PST

உங்கள் ஊடலில்
உண்மை இல்லை - அதன்
கூடலில் காதல் இல்லை
காமமெனும் மாயயை வைத்து
கட்டிலில் நீ இருந்த நேரம்
வியர்வை
மூச்சி
அத்தனையும் பொய்யடா!.

உண்மையாக இருந்திருந்தால்
கொன்றிருக்கமாட்டாய்,

பிறந்தது
பெண் குழந்தை எனும் போது.

நல்லவை ஓங்கட்டும் !

Posted: 13 Feb 2014 09:54 AM PST

கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, 'ஆண்டவா... எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே...' என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம், தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், 'சிரிப்பைப் பார்... சிரிப்பை! என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு...' என்று, சிலருக்கு மனம் வெம்முகிறது. அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, இவர்களால் பொறுக்க ...

காதலர் தினம் - பல்சுவை

Posted: 13 Feb 2014 09:34 AM PST


--

மனைவி:
அந்த காதல் ஜோடி எவ்வளவு நெருக்கமா உட்கார்ந்து
இருக்காங்க…நீங்க என்னிக்காவது இப்படி
நடந்துகிட்டீங்களா..?

கணவன்:
அதுக்கு அந்தப் பொண்ணு ஒத்துக்கணுமே..!

-
==============================

ஏமாறாதே…

Posted: 13 Feb 2014 09:21 AM PST

- பெண்ணே! மலரே என்பார்கள் நுகர்ந்ததுமே தூக்கி எறியத்தான் - நிலவே என்பார்கள தேய்ந்து ஒரு நாள் காணாமல் போவாய் என்பதற்காகத்தான் - தாயே என்பார்கள் உன்னிடம் உள்ளதை யாசித்து பெறத்தான் - பொறுமையின் சிகரம் என்பார்கள் அவர்கள் செய்யும் கொடுமையை பொறுத்துக் கொள்ளத்தான் நம்மை சுவைத்து விழுங்கத்தான் - எதிலும் ஏமாறாதே! விழித்துக் கொள் துணிவு கொள்வாய்..! - —————————– >மணிமேகலை தங்கமங்கை- பிப்ரவரி 2014

கவிஞர்கள் ரஸித்த காதல் கவிதைகள்

Posted: 13 Feb 2014 08:50 AM PST




-
ஆலயத்தையும் முகப்பையும்
தாண்டி நீள்கிறது
பக்தர்களின் வரிசை
வாசலிலிலேயே
கிடைத்து விடுகிறது
எனக்கு உன் தரிசனம்..!
-
>க.ரவிச்சந்திரன்

------------------------------------
கவிதையை ரசித்த கவிஞர்: அண்ணமலை
புகைப்படம்: இணையம்

பூக்கள் பலவிதம்...இணையத்தில் சுட்டவை

Posted: 13 Feb 2014 08:36 AM PST


-

-

ஊடல்..

Posted: 13 Feb 2014 08:28 AM PST


-
என்னிடம் நீ
பேசாத கோபத்தில்
உன்னைப் போல்
உன் நினைவுகளும்
தகராறு செய்வது
வாடிக்கை – அன்பே
உயிர்க்காதல்
நம்மைப் பார்க்கிறது
வேடிக்கை..!
-
———————–
>ஈ.கார்த்திகேயன்
(குடும்ப மலர்)

உனக்கு பிடிக்கும் என்பதால்…!

Posted: 13 Feb 2014 08:25 AM PST


-

கையில் குடையிருந்தும்
பிரிக்க மனமில்லாமல்
மழையில் நனைகிறேன் நான்
மழையில்
நனைவது
உனக்கு பிடிக்கும்
என்பதால்..!
-
—————————–
>கலாசிவன்
(குங்குமம்)

மாடு மேய்க்கவும் திறமை வேண்டும்…

Posted: 13 Feb 2014 08:23 AM PST

- எருமையைக் கூட திறமை இருப்பவன்தான் மேய்க்க முடியும்..! - >விஜய் சிவானந்தம் - ——————————— - இந்த அன்பும் இருமுனைக்கூர் கத்திதான்…! - >இளம்பரிதி கல்யாணகுமாரன் - ——————————— - ஏமாற்றப்படுகிறேன் எனத் தெரிந்தும் ஏமாறுவதற்குக் காரணம், அதிக பட்ச அன்பாகவும் இருக்கலாம்! - சக்தி செல்வி - ———————————— - பறவைகளை வாங்கிக் கூண்டில் அடைத்து வளர்ப்பதை விட,ஒரு மரத்தை நடுங்கள்… - பறவைகள் தாமாகவே அதில் கூடு கட்டிக் கொள்ளும்…! - >இளையராஜா டென்டிஸ்ட் - ================================== நன்றி: ...

தொடர்பு எல்லை..!

Posted: 13 Feb 2014 08:18 AM PST





--
உன்னிடம் பேச வேண்டியதை
என்னிடமே பேசிப்பேசி
எனக்கு நானே
பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதே
முழுநேர பணியாகி விட்டதெனக்கு!
ஏனிப்படி எப்போதும் நீ
எனது தொடர்பு எல்லைக்கு
வெளியிலேயே இருக்கிறாய்…!
-
——————————-
>கவியகம் காஜூஸ்

அகிம்சை காதல் !

Posted: 13 Feb 2014 08:18 AM PST

கனகசபேசன், மனைவி ராஜேஸ்வரியுடன் சினிமா தியேட்டரை அடைந்தபோது, மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது. பழைய படம் என்பதால், கூட்டம் அவ்வளவாக இல்லை. டிக்கெட் வாங்க சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்தபோது, அவரை நெருங்கிய, இளைஞன் ஒருவன்,''சார்..."என்று, தயக்கத்துடன் அழைத்தான்.'என்ன?' என்கிற பாவனையில், அவனை ஏறிட்டுப் பார்த்தார் கனகசபேன். ''சார்... என் நண்பனுக்கும் சேர்த்து, டிக்கெட் எடுத்துட்டேன், அவனுக்கு, ஏதோ அவசர வேலையாம்; வரமுடியாதுன்னு, இப்ப போன் செய்து சொல்றான். தனியா உட்காந்து படம் பாக்க எனக்குப் ...

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Posted: 13 Feb 2014 08:13 AM PST

முழுக்க முழுக்க கற்பனை தாங்க! அவள் வருவாளா, அவள் வருவாளா''..: அங்கே ரிஷப்சனில் உள்ள டிவியில், ''அவள் வருவாளா, அவள் வருவாளா.. என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம்...''- என்று சன் மியூசிக்கில் இந்தப் பாடலுக்கு சூர்யா உருகிக் கொண்டிருக்க.. அருகே உள்ள கான்பரன்ஸ் ரூமில் தமிழக பாஜக தலைவர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பிஸி. முழுக்க முழுக்க கற்பனை தாங்க!: அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம்.. இல.கணேசன்: இந்த விஜய்காந்த் என்ன தான் சொல்றார்? எச்.ராஜா: அவர் உளுந்தூர்பேட்டையில ...

ஆஸ்த்மா நோயாளிகளுக்கு

Posted: 13 Feb 2014 08:08 AM PST

ஆஸ்த்மா நோயாளிகளுக்கு அரிய ஆலோசனைகள் . *ஜன நெரிசலும் புழுதியும் அதிகமாக இருக்கக் கூடிய இடத்தில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் . *புகைப் பிடிக்கும் பழக்கத்தை இந்நோயாளிகள் நிறுத்தி விடுவது நல்லது . *மது பானங்களும் இந்நோயாளிகளுக்கு நல்லதல்ல என கூறி நிறுத்தச் சொல்ல வேண்டும் . *மெல்லிய லுôசான ஆடைகளே இவர்களுக்கு உகந்தது எனக் கூறி அணியச் செய்வது நல்லது . *ஆஸ்த்மா நோயாளிகள் உணவு விசயத்தில் முக்கியமாக இரண்டு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அளவுக் கதிகமாக உணவு உண்ணுவதைத் ...

அடடே…!

Posted: 13 Feb 2014 08:07 AM PST

-

-
அம்மாவுக்கு
இடமில்லாத
வீட்டின் பூஜையறையில்
நூறு சாமி படங்கள்..!
-
———————-
>எஸ்.அரவிந்த் ராமசுந்தர்
(குடும்ப மலர்)

பறவை ஆராய்ச்சி: உங்களுக்கும் ஒரு வாய்ப்பு......

Posted: 13 Feb 2014 07:58 AM PST

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ அவற்றைக் கணக்கிடுவதற்கும் உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், திட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு முக்கியப் பங்கு வகிக்கும். சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட ...

உங்களுக்கு தெரியுமா?

Posted: 13 Feb 2014 07:44 AM PST

www. rtoaifmvd.com இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. www. consumer.tn.gov.in தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் ...

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Posted: 13 Feb 2014 07:44 AM PST

சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை 'திடீர்' உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் 'அழியாத கோலங்கள்'. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து 'மூடு பனி' படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த 'மூன்றாம் பிறை' படத்தை டைரக்டு ...

கற்(ர்ப்)பக விருட்சம்!

Posted: 13 Feb 2014 07:34 AM PST

சரவணன், ஆட்டோவிலிருந்து இறங்கி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைய, இரண்டாவது பிளாட்பாரத்தில் தயாராக இருந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ்.கையில் சூட்கேசும், தோளில் பையுமாக முன்னால் நடந்தான்.''என் கிட்ட ஒரு பைய கொடுப்பா... எல்லாத்தையும் நீயே சுமக்கணுமா,'' என்று அப்பா முத்து வினவ,''அப்பா... நீங்க அம்மாவ பத்திரமா கூட்டிட்டு வாங்க. இது ஒண்ணும் பெரிய சுமையில்ல. நம்மோட ரெண்டு செட் துணி தானே இருக்கு.''முழங்கால் வலியால் அவதிப்படும் சுந்தரி, மெதுவாக நடக்க, அவளுக்கு ஈடு கொடுத்து, மெதுவாக நடந்தார் முத்து.எஸ்3 கோச் ...

ஐம்பூதங்களைக் காப்போம்!

Posted: 13 Feb 2014 07:26 AM PST

சூற்றுச்சூழல் சிக்கல்களை நமது மரபு சார்ந்த பார்வையில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வை நோக்கிப் பயணிக்கும் விழாக்களைப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த உலகின் ஐந்து அடிப்படை அம்சங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, விசும்பு (வானம்) ஆகியவற்றைப் பற்றிய ஐம்பூதச் சுற்றுச்சூழல் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. லயோலா கல்லூரி என்விரோ கிளப் உடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட அந்தக் கருத்தரங்கில் துறை சார்ந்த அறிஞர்கள் எளிமையாகவும், ஆழமாகவும் கருத்துகளை முன்வைத்தனர். ...

தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!

Posted: 13 Feb 2014 07:19 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

படித்ததில் பிடித்தது :) - மனிதநேயம்!

Posted: 13 Feb 2014 07:16 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

கண்ணைக்கவரும் எம்ரோய்டர் வேலைப்பாடுகள்

Posted: 13 Feb 2014 07:15 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (215)

Posted: 13 Feb 2014 07:10 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கலவரக்காரர்களையே கலவரப்படுத்தும் லண்டன் சைரன்-

Posted: 13 Feb 2014 07:09 AM PST

கலவரத்தில் ஈடுபடுபவர்களை எளிதாகக் கலைக்க அவர்களின் மூளையை தாக்கி, பயந்து அலறவைக்கும் சைரன் கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் இங்கிலாந்து போலீஸார். கூம்பு வடிவத்தில் இருக்கும் இந்த கருவியை கலவரக் காரர்களை நோக்கி திருப்பினால் போதும், கலவரக்காரர்கள் நிலைகுலைந்து போவார்கள். கலவரக்காரர்களின் மண்டைக் குள் சைரன் சத்தம் பயங்கரமாக ஒலிக்கும். மற்றவர்களுக்கு சாதாரண சத்தமாக இருக்கும் இது, இந்தக் கருவி யாரை நோக்கி இருக்கிறதோ அவர்களுக்கு பயங்கரமாக இருக்கும். அதிலிருந்து வெளிப்படும் சைரன் சத்தம் வாந்தி, ...

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

Posted: 13 Feb 2014 07:08 AM PST

இந்தியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்திய தென்னாப் பிரிக்க அரசுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த வீரத் தமிழச்சிதான் தில்லையாடி வள்ளியம்மை. அந்த வீரநங்கையின் நூறாவது பிறந்த நாளும் நினைவு நாளும் பிப்ரவரி 22-ல் வருகிறது. இதற்காக ஏற்பாடாகும் நிகழ்ச்சிக்காக வள்ளி யம்மையின் உறவுகள் முதல்முறை யாக, தில்லையாடி மண்ணில் கால்பதிக்க வருகிறார்கள். காய்கனி வியாபாரியின் மகள் நாகை மாவட்டம் தில்லையாடி யைச் சேர்ந்த மங்கலம் என்ற ஜானகியும் புதுச்சேரி முனுசாமி முதலியாரும் தென்னாப்பிரிக் காவில் காய் கனி வியாபாரம் ...

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 13 Feb 2014 07:06 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

ஓரு பக்கக் கதை

Posted: 13 Feb 2014 07:05 AM PST

*புதுமனை புகுவிழா. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்பளிப்பு என எல்லாச் சடங்குகளும் சுபமாகவே நிகழ்ந்தேறின. காலை டிபன் முடித்து வெளியில் வந்து வீட்டின் முன் நின்று சிலர் முகப்பின் அமைப்பை மகிழ்ச்சியாகப் பார்த்துப் பேசிக் கொண்டனர், சிறுவர்கள் தெருவில் உற்சாகமாக விளையாடினர். குறும்பு செய்யும் குழந்தைகளை அவரவர் அம்மாக்கள் திட்டி அதட்டி விரட்டினர் . புது வீட்டின் மேல் மாடி முலையில் கட்டி ...

கவிதை

Posted: 13 Feb 2014 06:40 AM PST

[ காதல் அக்கம்  பக்கம்  மறந்து  போகும் ஆசை  மட்டுமே பொங்கி நிற்கும்  மனம் ஆனந்த களிநடனம் புரியும் இதயமது தொலைந்து போகும்   ஈன்றவர் நிலையும்  மறந்து போகும் உள்ளமது உருகி வழியும் ஊரைவிட்டு ஓடவும் தோன்றும் எச்சில் பண்டமும் ருசிக்கும் எங்கே தனிமை என தேடவும் தோன்றும் ஏற்றத் தாழ்வும் மறைந்து போகும் ஏன் இப்படி  என  எண்ணவும் தோன்றும்   ஐம்புலனும் அன்பிலே திளைக்கும் ஐயோ என் அழவும் தோன்றும் ஒயிலாய் நடக்கவும் தோன்றும் ஓரக்கண்னால் பார்க்கவும் தூண்டும் கண்ணிலே  தூக்கம் ...

வேடிக்கையான கலப்பின விலங்குகள்

Posted: 13 Feb 2014 06:37 AM PST

வாழ்த்துக்கள் நண்பரே !

Posted: 13 Feb 2014 06:34 AM PST

வாழ்த்துக்கள் நண்பரே !

பல்லாண்டு பல்லாண்டு மகிழ்ச்சியான இத்தினம்
ஆண்டாண்டு உம்மை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.

ரமணியன்  

( யார் இவர் , எதற்காக வாழ்த்துக்கள் என குழம்பும் உறவுகளுக்கு க்ளு தருகிறேன்.
இவர் , என் பெயரின் முன் பாகத்தை அவர் முன் பாகமாகவும்
என் பெயரின் பின் பாகத்தை, அதன் வேறு பெயராகவும் கொண்டவர்.
அது சரி , இன்று என்ன விசேஷம். சேஷம் (மீதம் ) வைத்து அடுத்து கூறுகிறேன்.
ரமணியன் )

கண்தானம் செய்வது எப்படி?

Posted: 13 Feb 2014 06:31 AM PST

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூடவேண்டும். 2. மின்விசிறியை இயக்கக்கூடாது. 3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். 4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும்வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும். 5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும். யார் கண்தானம் செய்ய முடியாது? நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, ...

தனிமையும் சுகமே. !!

Posted: 13 Feb 2014 06:04 AM PST

தனிமை   அது ஒரு நள்ளிரவு நேரம். பாழடைந்த ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருளின் ஒவ்வொரு அசைவும் திகிலை கிளப்பும் சூழ்நிலையில் இரண்டு பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களில் ஒருவன் முழு போதையில் இருந்தான். மற்றவன் தெளிவோடிருந்தான்.   தெளிவாயிருப்பவன் மிகவும் அஞ்சுகிறான். மரத்தின் சிறு அசைவுகள் கூட அவனுக்கு பிசாசுகள் அசைவது போல் தெரிகிறது. தரையில் இருப்பவை எல்லாம் பாம்புகள் போல் தென்படுகின்றன. அவன் திகிலின் உச்சத்தில் இருக்கிறான்.   அதே சமயம் போதையில் இருப்பவன் இதுபற்றி கவலையே படவில்லை. ...

அன்பான 'அன்பர் தின ' வாழ்த்துககளை பகிர வாங்கோ !

Posted: 13 Feb 2014 05:54 AM PST

அன்பானவர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான 'அன்பர் தின ' வாழ்த்துகள் ! நான் நேற்று ஒரு ஹிந்தி படம் பார்த்தேன், 'ஜெய் ஹோ' என்று, அதில் சல்மான் கான் சொல்வார், "தேங்க்ஸ் சொல்வதற்கு பதில் யாராவது 3 பேருக்கு உதவுங்கள், அவர்களையும் மேலும் 3 பேருக்கு உதவ சொல்லுங்கள்" என்று. அது போல நான் Guest ,உங்களை கேட்டுக்கொள்கிறேன், இந்த அன்பர் தின வாழ்த்துகளை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருடன் பகிருங்கள். இந்த உலகுக்கு இப்போ தேவை 'அன்பு' மட்டுமே ! அதை பகிருங்கள்

சுய தொழில்கள்-7 பேப்பர் டீ கப் தயாரிப்பு:

Posted: 13 Feb 2014 05:35 AM PST

பேப்பர் டீ கப் தயாரிப்பு: அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள். சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை . ...

வறுமைப்புயல் வாட்டிய தடயங்கள் (பாகம்1) இமாம்

Posted: 13 Feb 2014 05:30 AM PST

வறுமைப்புயல் வாட்டிய தடங்கள் (பாகம்1) இமாம் அழகான பூவுக்கும் அருமையான காளைக்கும் பிறந்த அற்புத சிங்கம் ஒன்று குமுறிய வருத்தப்படும் வார்த்தைகள் இவை குடும்ப அங்கத்துவம் ஐந்து என்றாலும் அதில் உள்ள தங்கத் தத்துவம் ஒன்றுதான் அது இங்கு மகிமை பெறுகிறது கதையில் முதுமை பெறுகிறது அரவனைக்க அக்காக்கள் இரண்டு அன்புக்கு தம்பிகள் இரண்டு தப்புகள் எப்போதும் அப்பப்போது வந்து போகும் சண்டைகள் போட்டாலும் அவை சந்தோசத்தில் ஊற்றெடுதது; தேனாறாக மாறி கடல் சென்றடையும் ஒற்றுமையாக துக்கங்களும் தூக்கங்களும் ...

காதல்

Posted: 13 Feb 2014 05:19 AM PST

இளமையிலும் முதுமையிலும் இணைபிரியாதது காதல் இசையும் இன்பமும்போல் இணைந்துவருவது காதல் இயற்கை அன்னையின்ஈடு இணையில்லாபரிசு காதல் இருவயது பாலகனுக்கும் இருப்பதிந்த காதல்(தாய் மீது) இருபத்தெட்டு ஆனபின்னே இளமையில்வேறு காதல்(தம்பதி) இருபல்கூட முளைக்காத இச்சிறு(மி)வனோடு காதல்(குழந்தை) இயலாமுதுமை காலத்திலும் இணைகொடுக்கும் காதல்(முதுமை) இம்மையிலும் மறுமையிலும் இவ்விணையே தந்திடென இறைஞ்சி வேண்டிடுமே இறைவனிடம் இக்காதல் இரவுபகல் பாராது இமைகள் மூடவிடாது இளங்குருத்தை வளர்க்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™