ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
- ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...
- ஒரு திருமண அழைப்பு (சாப்ட்வேர் இன்ஜிநியர் )
- எதிர்பாராதது - 1954
- இந்துக்களின் தினசரிக் கடமைகள்:
- புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி!
- சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!
- கலிகால அசுரன்
- நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்)
- அஆ வாழ்க்கை
- ஈகரையின் அன்புள்ளங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
- 25000 ஆயிரம் பதிவுகள் கடந்த யினியவன்(கொலைவெறி) அண்ணா
- சுரங்கள் ராகங்கள் .
- பயணி அமைதியானார்
- *எழுத்தாளர்.சுஜாதா-வின் ஆன்மீக சிந்தனைகள்
- "ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"
- புரூக்ளின் ப்ரிட்ஜ் - இது ஒரு உண்மை நிகழ்வு...
- வெற்றிக்கு வழி!
- கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;
- 'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்)
- படித்து ரசித்த புகைப்பட கவிதைகள்
- புகழ்ச்சி புதுக் கவிதை
- தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..!
- கவிஞர்.மீரா-வின் “குக்கூ” கவிதைகள்.
- எங்கள் சிவாஜி
- பரமனுக்குப் பணிவிடை செய்!
- "கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க"
| நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் Posted: 11 Feb 2014 10:47 AM PST கடவுள் மனிதனை படைத்து ஏதேன் தோட்டத்தில் விடுகிறார் .அங்கு அனைத்து கனிகளையும் புசிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது ஒன்றை தவிர ,அறிவு விருட்சம் என்று சொல்லபடுகின்ற அம்மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று கட்டளை வருகிறது .அந்த நேரத்தில் சாத்தான் (satan ) எனபடுபவர் பாம்பின் உருவத்தில் வந்து.அக்கனியை புசித்தால் அறிவு கிடைக்கும் என கூறி மனிதர்களை சாப்பிட வைக்கிறார் .மனிதர்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விரட்டபடுகிறார்கள் பின்னர் கடவுளின் கட்டளையை கீழ்படிய மறுத்த சாத்தானும் பூமிக்கு விரட்டபடுகிறார் ... |
| ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... Posted: 11 Feb 2014 10:43 AM PST 1. நிறைய நீர் குடிக்கவும் நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது. சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை உணர்ந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். நீர் அருந்துவது எவ்வளவு தேவையானது என்பதை உணர்வீர்கள். 2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் ... |
| ஒரு திருமண அழைப்பு (சாப்ட்வேர் இன்ஜிநியர் ) Posted: 11 Feb 2014 09:52 AM PST It's a Software Engineer's wedding Invitation! |
| Posted: 11 Feb 2014 09:19 AM PST அன்பு ஈகரை சிவாஜி ரசிகர்களுக்கு இந்த பதிவுகள் சமர்ப்பணம் - இவைகள் எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல - இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நான் , பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை . நேற்று சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது . நான் அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் - திருவாளர் வாசுவின் நடையையோ , தமிழையோ தயவு செய்து என் பதிவுகளில் எதிர்பார்க்காதீர்கள் - அதே ... |
| இந்துக்களின் தினசரிக் கடமைகள்: Posted: 11 Feb 2014 09:11 AM PST 1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழ வேண்டும். 2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்தனை செய்ய வேண்டும். 3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் - ஏதேனும்) அணிய வேண்டும். நீறில்லா நெற்றி பாழ் என்பதற்கேற்ப எதையும் அணிந்து கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது. 4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவேண்டும். காலை - மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் ... |
| புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Posted: 11 Feb 2014 07:59 AM PST புகைக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா முன்னகர்கிறது. உலகம் முழுவதுமே புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை வலுவாக உயர்த்தியதில் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் உயிர்கள் புகைக்குப் பலி கொள்வதில், புகைப்பது தொடர்பான சமூக மனநிலை முக்கியக் காரணம் என்றால், அந்தச் சமூக மனநிலை மாற்றிக் கட்டமைக்கப்பட்டதில், அமைத்ததில் விளம்பரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. புகையிலையின் நெடி நறுமணமாகவும், புகைத்த பின் ஏற்படும் ... |
| சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Posted: 11 Feb 2014 07:47 AM PST சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கவுதமன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது: இந்தியாவின் மூத்த தொழிற் சங்கத் தலைவரான சிங்காரவேலர், 1860-ம் ஆண்டு பிறந்தவர். நாட்டிலேயே முதன்முறையாக 1923-ம் ஆண்டு மே தினத்தைக் கொண்டாடியவர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றி பெறச் செய்வதில் பெரும் பங்காற்றியவர். பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகளை அறிந்த சிங்காரவேலர் மிகச் சிறந்த வழக்கறிஞர். ... |
| Posted: 11 Feb 2014 07:06 AM PST மது நிஜத்தை நிழல் ஆக்கியது, உயிரை காற்றாக்கியது ,ஆழ்ந்த உறக்கத்தை கூட மரணமாக இருக்குமோ என நினைக்க வைத்து மனைவியை ,பெற்ற பிள்ளைகளை,நட்பை,உறவுகளை,தினந்தோறும் ஈமச்சடங்கை நினைவுக்கு கொண்டு வந்தது,இளம்பெண்களை விதவையாக்கி இரத்த பந்தங்களை உருக வைத்தது,குழந்தைகளை அனாதையாக்கி,திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும்,குழ்ந்தை தொழிலாளர்களாகவும் மாற்றியது.நல்ல குணமுள்ள மனிதர்களையும் மதுவின் மயக்கம் பல ஜென்மங்களை எடுக்க வைத்தது, நினைக்கும் போதெல்லாம் பல பிறவிகளை எடுக்க வைத்து அசட்டு தைரியத்தை கொடுத்து, சட்டத்தை ... |
| நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3 (சிவாஜி என்ற மாநடிகர்) Posted: 11 Feb 2014 05:52 AM PST நடிகர் திலகம் மனோகரனாக (சிவாஜி என்ற மாநடிகர்) தொடர் 10 பாகம் 3 மதிவதன மனோகரனாக நடிகர் திலகம். மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!? அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் ... |
| Posted: 11 Feb 2014 05:37 AM PST அன்பே என்றோம் ஆருயிரே என்றோம் இதயம் கலந்து ஈருயிர் ஒன்றானோம் உழைப்பே பலமாய் ஊக்கம் கொண்டோம் எதையும் வென்று ஏற்றம் கண்டோம் -ஐயமின்றி ஒற்றுமை கொண்டு ஓரணியாய் நின்று ஔதகம் போற்ற அஃதே வாழ்வோம் ! கிருஷ்ணா |
| ஈகரையின் அன்புள்ளங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். Posted: 11 Feb 2014 05:14 AM PST ஈகரையின் அன்புள்ளங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். 'மனோகரா' படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்புச் சிறப்பைப் பற்றி (நடிகர் திலகம் மனோகரனாக 'மனோகரா' தொடர் 10 பாகம் 3) (சிவாஜி என்ற மாநடிகர் தொடர்) பகுதியில் ஒரு வாரமாக மிக்க சிரமப்பட்டு பதிவிட்டுள்ளேன். அது மட்டுமல்லாமல் படத்தின் கதையையும் பாகம் ஒன்றிலும், இரண்டிலும் விவரமாகத் தொகுத்து அளித்துள்ளேன். எனவே 'மனோகரா' முழு பதிவையும் (மூன்று பாகங்கள்) பொறுமையாகப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். எனவே தங்கள் அனைவரது கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் ... |
| 25000 ஆயிரம் பதிவுகள் கடந்த யினியவன்(கொலைவெறி) அண்ணா Posted: 11 Feb 2014 05:14 AM PST உங்க பதிவுகள் இப்போதெல்லாம் ஆமை வேகத்தில் நகர்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா. |
| Posted: 11 Feb 2014 05:12 AM PST சுரங்கள் ஏழு. 1)ச-சட்சம் 2)ரி-ரிஷபம் 3)க-காந்தாரம் 4)ம-மத்திமம் 5)ப-பஞ்சமம் 6)த-தைவதம் 7)நி-நிஷாதம் சரிகமபதநி பாடும் பொது ஏறுவரிசை சுவரங்களை ஆரோகணம் என்றும் இறங்குவரிசை சுவரங்களை அவரோகணம் என்றும் அழைக்கிறோம்(எ.கா: ஆரோகணம்: ச ரி க ம ப த நி ச அவரோகணம்: ச நி த ப ம க ரி ச) ராகங்கள் 16. 1-ஆலாபனை, 2-ஆரோகணம், 3-அவரோகணம், 4-அங்கம், 5-ஐன்ய ராகம், 6-கமகம், 7-மேளகர்த்தா ராகம், 8-பிரயோகம், 9-ராகமாலிகை, 10-சக்ரம், 11-சம்பூர்ண ராகம், 12-ஸ்ருதி, 13-ஸ்வரம், 14-சரிகமபதநி, 15-ஸ்தாயி, ... |
| Posted: 11 Feb 2014 04:57 AM PST பயணி அமைதியானார் இரவு நேரம். இந்த பஸ் விட்டால் அடுத்த பஸ் இன்னும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் கிராமத்துப் பயணிகள் அவசர அவசரமாக ஏறினர். உள்ளே நுழைந்தச் சிலர் சீட்டைத் தேடிப் பிடித்து அமர்ந்தனர். சிலர் நின்றனர். ஓருவர் மட்டும் உட்காருவதற்கு அமர்ந்திருந்தவரிடம் நகர்ந்து அமரச் சொல்லித் தகராறு செய்தார். அவரும் "எப்படிங்க, இன்னொருத்தர் உட்கார முடியும்?". "பாருங்க"- என்று பதில் சொன்னார். பேச்சு சப்தம் உக்கிரமானது. கண்டக்டர் "என்ன அங்கே தகராறு இடமில்லேன்னா, நின்னுட்டு வாங்க ... |
| *எழுத்தாளர்.சுஜாதா-வின் ஆன்மீக சிந்தனைகள் Posted: 11 Feb 2014 04:56 AM PST ஆன்மீக சிந்தனைகள் *சூரியனிலும் கண்ணிலும் உள்ள ஓளித் தன்மையே பிரம்மம். *எதை அறிந்தால் எல்லாம் அறிந்தவாறே அது பிரம்மம். *பிரம்மத்திற்கு தான் மாறாமல் எலகை படைக்கும் விசித்திர சக்தி உண்டு என்று வேதம் சொல்வதை, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். *ஆத்மா அறிவாக இருக்கிறது. * ஆத்மா உள்ள வரை அறிவும் அதனுடன் இருக்கிறது. *எந்த உறுப்பிலிருந்து பிராணன் நீங்குமோ அது உடனே இறக்கிறது. *பிரம்ம ஞானத்தை அடைவதற்கு இளமையும் அறிவும் மௌனமும் தேவை. *மரணம் அடைந்த பின் நுண் உடல் அழிவதில்லை. *பிரம்ம ... |
| "ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி" Posted: 11 Feb 2014 04:53 AM PST ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்: 1) ஆடம்பரமாய் வாழும் தாய், 2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, 3) ஒழுக்கமற்ற மனைவி, 4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும் 5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.. இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் நன்றி:முகநூல் |
| புரூக்ளின் ப்ரிட்ஜ் - இது ஒரு உண்மை நிகழ்வு... Posted: 11 Feb 2014 03:40 AM PST நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம். 1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார்.பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர்.இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டியது இல்லை இனி கட்டவும் முடியாது என்றனர். ரூப்ளிங் தன்னால் இதை கண்டிப்பாக கட்ட முடியும் என்று நம்பினார்.முழு நேரமும் ... |
| Posted: 11 Feb 2014 03:22 AM PST 1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள். 2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர். 3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும். 4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும். 5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது. 6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது. 7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும். 8. ... |
| கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்; Posted: 11 Feb 2014 03:16 AM PST *பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. * வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. *சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது. *பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. * கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது. *கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. *கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. * நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது. *தரிசனம் செய்தபின் ... |
| 'மனோகரா' தொடர் 10 பாகம் 2 (சிவாஜி என்ற மாநடிகர்) Posted: 11 Feb 2014 01:24 AM PST 'மனோகரா' தொடர் 10 (சிவாஜி என்ற மாநடிகர்) தொடர் 10 'மனோகரா' படத்தின் கதை பாகம் இரண்டை நீங்கள் அனைவரும் படிப்பதற்கு முன் நான் முன்னம் பதிந்த இப்படத்தின் கதையின் முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை அனைவரும் தொடர்ச்சியாகப் படிப்பதற்கு வசதியாக இங்கு பதிவிடுகிறேன். இப்போது நீங்கள் 'மனோகரா' படத்தின் கதையின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மொத்தம் இரண்டு பாகங்களையும் படித்து மகிழலாம். 'மனோகரா' படத்தின் கதை இந்த இரண்டு பாகங்களுடன் முடிவுற்றது. பாகம் 1 சோழ பரம்பரையின் வீர மன்னன் புருஷோத்தமன். ... |
| படித்து ரசித்த புகைப்பட கவிதைகள் Posted: 11 Feb 2014 01:07 AM PST ![]() |
| Posted: 11 Feb 2014 01:06 AM PST வண்ண வண்ணப் பூக்கள் வண்ணத்துப் பூச்சியை-அதன் பட்டுச் சிறகுகளைப் புகழ்ந்துப் பேசினால் அதுவே,அதற்கு மகிழ்ச்சி . வண்ணத்துப் பூச்சி-தன் பட்டுச் சிறகின் அழகை-தானே புகழ்ந்துப் பேசிக் கொண்டால் அதுவே,தற்பகழ்ச்சி . பூக்களெல்லாம் வண்ணத்துப் பூச்சியை அதன் அழகியலையோ அழகின்மையையோ ஆண்மையையோ, ஆளுமையையோ விமர்ச்சித்துப் பேசினால் அது,வஞ்சகப் புகழ்ச்சி . பூக்களின் மற்றும் பறப்பனவைகளின் விமர்சனங்களை ஏற்றுக் கேட்டு நெடுங் காற்றின் கவிப் பயணத்தில் வண்ணத்துப் பூச்சிகள் என்றென்றும் அடைவதில்லை மனத் ... |
| தூக்கமின்மை நோயில் தள்ளும் கைபேசி அலாரம்..! Posted: 11 Feb 2014 12:23 AM PST கலிபோர்னியா: நீங்கள் இரவில் திடீரென்று கண் விழிக்கிறீர்கள்.மணி பார்ப்பதற்காக உங்கள் கைபேசியை எடுக்கிறீர்கள்.அதில் நேரம் அதிகாலை மூன்று மணி என்பதுடன் இரண்டு குறுஞ்செய்திகளும் இருக்கிறது.அதனை பார்க்கும் முன்பே அது டுவிட்டர் அழைப்பா,பேஸ்புக் அழைப்பா என்ற கனவிலேயே உங்களது தூக்கம் போய்விடும். தற்போதைய காலகட்டத்தில் முக்கால் பங்கு கைபேசி பயனாளிகளின் நிலை இந்த விபரீத தூக்கமின்மை வியாதிதான்.இதற்கு ஒரே வழி,கைபேசியை இரவில் இடம் மாற்றி வைத்துவிட்டு,பழைய கால கடிகார அலாரத்திற்கு மாறுவதுதான். கைப்பேசியை அமைதியாக்கி ... |
| கவிஞர்.மீரா-வின் “குக்கூ” கவிதைகள். Posted: 10 Feb 2014 08:56 PM PST . *குயில் மயில் தென்றல் கொஞ்சம் எதுகை மோனை கூடவே கள்ளுப் பானை... அட, அப்புறம் என்ன ஆஸ்தான கவியே ஆகலாம். *அவன் அவள் முதல் இரவின் மோகன உறவில் முட்டி மோதி உடைகிற தந்தத் தாஜ்மால். *இரவில் அடுத்த வீட்டில் பால் குடித்த அசதி, பகலில் வந்து படுக்கப் பூனைக்கு என் வீட்டு மாடி வசதி. *கண்டு பிடித்தேன் கைக் குட்டையை நொடியில் கரித்துணியாய் அடுப்படியில். *தண்ணீர்க் குள்ளே கிடக்கும் சிப்பி ஓரு கண்ணீர்த் துளிக்காய் நெஞ்சில் முத்துக் காதல் நிரப்பி. *இதயத்தில் என்ன விரிசல் ... |
| Posted: 10 Feb 2014 07:20 PM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| Posted: 10 Feb 2014 05:51 PM PST விகடமாகத் தோன்றும் எளிமையான பாடலுக்குள், விவேகத்தைப் பொதித்துவைக்கும் விந்தையான விந்தையை மிகவும் திறமையாகப் புரிந்துள்ளனர் நம் புலவர்கள். புதிர்களை அவிழ்த்து விடைகாணத் தூண்டும் விடுகதை உத்தியில் அமைந்த பாடல் ஒன்று விவேகசிந்தாமணியில் காணப்படுகிறது. வளமான வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறும் அப்பாடலின் கருத்து இதுதான்: "தகுதியுள்ள வறியவருக்குத் தானம் செய்; பண்பற்ற பகைவரைக் காண நேர்ந்தால் விரைவாக விலகி ஓடு; பார் முழுவதையும் படைத்து ஆட்சி செய்யும் மதுரைச் சொக்கராம் பரமனுக்குப் பணிவிடை செய்!' படித்தவுடன் ... |
| "கண்ணப்ப நிற்க; என் வலத்தினில் என்றும் நிற்க" Posted: 10 Feb 2014 05:14 PM PST கண்ணப்ப நாயன்மாரின் குருபூசை சுறவம் (தை) மாதம் மான்றலை (மிருகசீரிஷம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது. உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
