Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூரில் 66 தாசில்தார் அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம்

Posted: 07 Feb 2014 11:23 PM PST

தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்று பட்ட ஆந்திரா கோரியும் சித்தூர் மாவட்ட என்.ஜி.ஓ. ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 தாசில்தார்

இம்பால், கவுகாத்தி, சென்னை இன்று 3 நகரங்களில் மோடி சூறாவளி பிரசாரம்

Posted: 07 Feb 2014 10:53 PM PST

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சூறாவளி பிரசாரத்தை தொடங்கி விட்டார். இன்று (சனிக்கிழமை) அவர் மணிப்பூர், அசாம், தமிழ்நாடு மாநிலங்களில் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை புறப்பட்ட நரேந்திரமோடி 10 மணிக்கு மணிப்பூர் மாநிலம் சென்று சேர்ந்தார். அம்மாநில தலைநகர் இம்பாலில் 11 மணிக்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில்

உ.பி.யில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் தேர்வு தீவிரம்: 15–ந்தேதி பட்டியல் வெளியாகிறது

Posted: 07 Feb 2014 10:51 PM PST

பாராளுமன்ற தேர்தலில் 400–க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. மாநிலம் வாரியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது. இதற்காக விருப்பம் தெரிவித்து 800–க்கும் மேற்பட்டவர்கள் மனு செய்துள்ளனர். அந்த மனுக்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

திருப்பதி கோவிலில் பக்தர்களின் குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் இலவச பால்

Posted: 07 Feb 2014 10:24 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் முதல் வெள்ளிக் கிழமையன்று தொலைபேசி மூலம் பக்தர்களின் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ''டயல் யுவர் சி.ஓ.'' என்ற இந்த குறை கேட்பு நிகழ்ச்சி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ஜி.கோபால் தலைமையில் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளையும், வேண்டு கோளையும் கூறினார்கள். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சே

காங்கிரஸ் ஆட்சியில் ரிங்ரோடு போட்டதில் ரூ.184 கோடி ஊழல்: வழக்கு பதிவு செய்ய ஆம்ஆத்மி உத்தரவு

Posted: 07 Feb 2014 09:29 PM PST

டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி ஆட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தப்படி உள்ளது. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீது சமீபத்தில் ஆம்ஆத்மி அரசு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் ரிங்ரோடு ஊழல் என்ற மேலும்

பிரதமர் பதவியை ஏற்க தயார்: ராகுல்காந்தி அறிவிப்பு

Posted: 07 Feb 2014 09:14 PM PST

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசார பொறுப்பை ஏற்றுள்ளார். தற்போது அவர் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு அவர் குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். தெற்கு குஜராத் பகுதியில் கடந்த 2 வாரமாக இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடந்து வருகிறது. அந்த யாத்திரையில் ராகுல் பங்கேற்றார். பர்டோலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிறிது தூரம் அவர் காங்கிரஸ் தொண்டர்களுடன் நடந்து சென்றார்.

இஸ்ரோ இந்த ஆண்டு நான்கு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும்: அதிகாரி தகவல்

Posted: 07 Feb 2014 08:29 PM PST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) கடந்த பதினைந்து ஆண்டுகளில் 35 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது. இதன் வணிகப்பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் கடந்த 2012-13ஆம் ஆண்டில் 1,300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நிதி ஆண்டில் இதன் வருவாய் 15 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுடனும், கடந்த புதன்கிழமை அ

சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்

Posted: 07 Feb 2014 07:52 PM PST

தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பில் முதல் பெண் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தான் என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கும், தமிழக போலீஸ் துறைக்கும் கொண்டு வந்துள்ளார்.

காங்கிரஸ், சரத்பவார், மம்தா கட்சி கொடிகளுக்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 07 Feb 2014 07:42 PM PST

தேசிய கொடியைப் போன்று இருப்பதாக கூறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் கொடிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த கட்சிகள் விளக்கம் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிடப்பட்டது. ஜாம்ஷெட்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் அமர்பிரீத் சிங் கனுஜா, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மம்தா பானர்ஜியின்

ஆபாச வலைத்தளங்களுக்கான வாசலை சிறுவர்களுக்கும் திறந்து விடுவதா? ‘கூகுள்’ மீது சமூக ஆர்வலர் போலீசில் புகார்

Posted: 07 Feb 2014 11:45 AM PST

இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக 'கூகுள்', 'யாஹூ' உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் (சர்ச் என்ஜின்) உதவுகின்றன. இவற்றில் 'கூகுள்' தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம்

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஆப்பிரிக்க பெண் கைது - போலீஸ் காவலில் விசாரணை

Posted: 07 Feb 2014 09:11 AM PST

உகாண்டாவைச் சேர்ந்த நபாகுல்லா என்ற பெண், தனது நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டார். இன்று நீதிமன்றத்தில்

மின்னஞ்சல் யுகத்திலும் அஞ்சல்துறைக்கு மவுசு: 248 தபால்காரர் பணியிடங்களுக்கு 1.3 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted: 07 Feb 2014 07:00 AM PST

குறுஞ்செய்தி, மின்னஞ்சல், சமூக வலைத்தளம் என்று தகவல் தொடர்புகள் நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த யுகத்தில், கர்நாடக மாநிலம் வரும் 9ஆம் தேதி நேரடித் தேர்வின் மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ள 248 தபால்காரர் பணியிடங்களுக்கு 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, ஒரு இடத்திற்கு 525 பேர் போட்டியிடுகின்றனர். பெங்களூர்

தெலுங்கானா மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்: ஐதராபாத் பொது தலைநகரம்

Posted: 07 Feb 2014 06:53 AM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்து எம்.பி.க்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வரும் நிலையில், மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற

கொலை வழக்கு: ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 07 Feb 2014 06:29 AM PST

ஜனதா தளம் கட்சியின் தலைவர் காமேஷ்வர் சிங்கின் பாதுகாவலர் முன்னா சிங் சென்ற 2011ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.வான கேதார்நாத் சிங் அவரது சகோதரர் தினாநாத் சிங் மற்றும் மருமகன் சுதிர்குமார் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சரண் மாவட்ட கீழ் நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபர்

ஆம் ஆத்மி தனது பாதையில் இருந்து விலகிவிட்டது: ராம்தேவ்

Posted: 07 Feb 2014 06:16 AM PST

யோகாகுரு பாபா ராம்தேவ் நாக்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காங்கிரசை கடுமையாக எதிர்த்த ஆம் ஆத்மி தற்போது காங்கிரசுடன் கூட்டு சோ்ந்து அதனுடைய ஆதரவில் டெல்லியில் ஆட்சியமைத்துள்ளது. ஊழலை ஒழிப்பதாகவும், நாட்டின் அரசியலை மாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்த

உத்தரகாண்டில் ஜீப் மீது ரெயில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

Posted: 07 Feb 2014 04:55 AM PST

உத்தரகாண்ட் மாநிலம், உத்தம்சிங் நகர் மாவட்டம், மித்கேரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சித்ரகஞ்ச் பகுதியில் இன்று நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு ஜீப்பில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். ருத்ரபூர் அருகே பெங்காலி காலனி என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரெயில், ஜீப் மீது

சந்திரசேகரன் கொலை வழக்கு மீதான சி.பி.ஐ விசாரணைக்கு கேரள அரசு ஒப்புதல்

Posted: 07 Feb 2014 04:26 AM PST

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், ஓஞ்சியத்தைச் சேர்ந்தவர் டி.பி.சந்திரசேகரன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார். பின் கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கட்சியில் இருந்து விலகினார். புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் ஓஞ்சியம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அமோக வெற்றிபெற்றார். இந்நிலையில் 2012 மே 4-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை ஒரு கும்பல் வழி மறித்து கொடூரமாக கொலை செய்தது.

டெல்லி ஆளுநர் காங்கிரசின் ஏஜென்ட்: ஆம் ஆத்மி கட்சி கடும் தாக்கு

Posted: 07 Feb 2014 04:18 AM PST

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இம்மசோதாவை ஜந்தர் மந்தர் பகுதியில் மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்போவதாக இக்கட்சி அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் மோகன் பராசரன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறாமல் நிறைவேற்ற முடியாது என்று டெல்லியின் துணை நிலை ஆளுநர் நவ்ஜீத் ஜங்கிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கெஜ்ரிவால் நவ்ஜீத் ஜங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை: நிதி அமைச்சகம்

Posted: 07 Feb 2014 03:37 AM PST

சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் 88.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மூன்று முறை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் தங்கத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது. அரசின் இந்த நடவடிக்கைகளால் நாட்டின் நடப்பு

தெலுங்கானாவுக்கு தடை கோரிய 9 மனுக்கள் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Posted: 07 Feb 2014 03:11 AM PST

பாராளுமன்றத்தில் தெலுங்கானா பிரச்சினை தொடர்ந்து அமளியை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவைச் சேர்ந்த தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், அது தொடர்பான 9 மனுக்களையும் தள்ளுபடி செய்தது. "தெலுங்கானா விஷயத்தில் கோர்ட் தலையிடுவதற்கு இது சரியான


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™