Tamil Star |
- நண்டு பிடிக்க இவங்க படுற பாட பாத்திங்களா?……
- நீங்களே சொல்லுங்க இவர்களின் பெற்றோரை பாராட்டாமல் இருக்கலாமா?…..
- நம்பமுடியாத வளையும் சிற்பங்கள்……
- நீங்களும் முயற்சி செய்யலாமே இந்த விசித்திர விளையாட்டை…..
- அமோக விற்பனையில் Sony Xperia
- கற்பைக் காப்பாற்ற நடந்த போராட்டம்: காமவெறியனை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்…..
- கணனி வர்த்தகத்தை கைவிடும் சோனி
- சர்ச்சையைக் ஏற்படுத்திய சிறுமியின் இடைவிடாத நடனம்…..
- அறிமுகமாகின்றது Blu Life Pure Mini ஸ்மார்ட் கைப்பேசி
- பூமியையே அதிர வைக்கும் குண்டு பெண்ணின் அட்டகாசமான நடனம்…..
- தனது புதிய கார் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டது BMW
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா திணறல்
- குளிர்கால ஒலிம்பிக்கில் சர்வதேச கொடியுடன் இந்திய வீரர்கள் செல்வது அவமானம்: முன்னாள் வீராங்கனை வருத்தம்
- இலங்கை விவகாரத்தில் பொறுமை தேவை : அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்
- ‘செக்ஸ்’ வார்த்தைகளால் ஆபாச ‘எஸ்.எம்.எஸ்’ : பெண்ணுக்கு ஜெயில் தண்டனை
- தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் – யாழ்.இந்து சமயப் பேரவை
- இலங்கை மற்றும் ஈரான் புகலிடக் கோரிக்கையாளாகளை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் கோரிக்கை
- சிகிச்சைக்கு ஆண் மருத்துவரை அனுமதிக்காததால் கல்லூரி மாணவி இறந்த பரிதாப பலி
- இலங்கையை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் ஆவணப்படம் : ‘’இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது’
- பிரேசிலில் பஸ் கட்டணத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் : வன்முறையாக வெடித்தது
| நண்டு பிடிக்க இவங்க படுற பாட பாத்திங்களா?…… Posted: 07 Feb 2014 05:43 AM PST |
| நீங்களே சொல்லுங்க இவர்களின் பெற்றோரை பாராட்டாமல் இருக்கலாமா?….. Posted: 07 Feb 2014 05:41 AM PST |
| நம்பமுடியாத வளையும் சிற்பங்கள்…… Posted: 07 Feb 2014 05:39 AM PST
சீனாவைச் சேர்ந்த கலைஞரான Li Hongbo என்பவர் கடிதாசிகளைப் பயன்படுத்தி சிற்பங்களை உருவாக்கி அசத்தி வருகின்றார். பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இவரது சிற்பங்கள் யாவும் வளையும் தன்மை அல்லது மீள்தன்மை கொண்டவையாக காணப்படுதல் விசேட அம்சமாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீங்களும் முயற்சி செய்யலாமே இந்த விசித்திர விளையாட்டை….. Posted: 07 Feb 2014 05:37 AM PST
போட்டியாளர்கள் இருவர் தமது கழுத்தில் பட்டிகளை மாட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் இழுத்து விளையாடும் Goanna Pulling எனும் விளையாட்டு தற்போது பிரபலமாகிவருகின்றது. இந்த விளையாட்டின் பிறப்பிடம் அவுஸ்திரேலியாக ஆகும். முதன் முறையாக 1984ம் ஆண்டு இவ்விளையாட்டிற்கான முதலாவது சம்பியன்சிப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 07 Feb 2014 05:35 AM PST
கடந்த காலாண்டுப் பகுதியில் மட்டும் சுமார் 10.7 மில்லியன் கைப்பேசிகள் விற்றுத்தீர்க்கப்பட்டுள்ளன. இதேவேளை அந்நிறுவனமானது மொபைல் உற்பத்தி மூலம் 44.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் மொபைல் சாதனங்கள் மூலம் 4.396 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஹேமிங் சாதன உற்பத்தி மூலம் 4.207 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலும் வருமானமாகப் சோனி நிறுவனம் பெற்றுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கற்பைக் காப்பாற்ற நடந்த போராட்டம்: காமவெறியனை கழுத்தை அறுத்து கொலை செய்த பெண்….. Posted: 07 Feb 2014 05:33 AM PST |
| கணனி வர்த்தகத்தை கைவிடும் சோனி Posted: 07 Feb 2014 05:31 AM PST
இதுகுறித்து சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனி நிறுவன தயாரிப்புகளான பிராவியா தொலைக்காட்சி, காணொளி விளையாட்டு, பிளே ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை உலகம் முழுவதும் மக்கள் ஆவலுடன் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தென் கொரிய தயாரிப்பான சாம்சங் போன்றவைகள் உலக சந்தைக்கு பெருமளவுக்கு வந்ததைத் தொடர்ந்து சோனி நிறுவனத் தயாரிப்பான கணனி விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சோனி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.6,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சோனி நிறுவனத்தின் கணனி தயாரிப்பு உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சோனியின் கணனி தயாரிப்பை ஜப்பானை சேர்ந்த ஜேஐபி நிறுவனத்துக்கு கணிசமான விலைக்கு விற்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் கணனி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பானை சேர்ந்த 1,500 பேர், மற்ற நாடுகளில் உள்ள 3,500 பேர் உள்பட 5,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்களை சோனி நிறுவனத்தின் கணனி தயாரிப்பு பிரிவை வாங்கும் புதிய நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்களை சோனி நிறுவனத்தின் மற்ற தயாரிப்பு பிரிவுகளில் பணியமர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மேலும் சோனி நிறுவனத்தின் கைப்பேசி மற்றும் காணொளி விளையாட்டு உள்ளிட்ட வர்த்தகத்தை பெருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இதுபோன்ற தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தவும் பணியார்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்ச்சையைக் ஏற்படுத்திய சிறுமியின் இடைவிடாத நடனம்….. Posted: 07 Feb 2014 05:29 AM PST
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, 15 வயது சிறுமி நான்கு மணிநேரம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதியன்று இரவு நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் சீனாவின் புகழ்பெற்ற நடன நட்சத்திரமான யங் லிபிங்கின் உறவினர் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி வை கைகி, புத்தாண்டு நடனத்தை மேடையில் ஆடினார். நீண்ட வெள்ளை ஆடையில் மேடையில் தோன்றிய அந்தப் பெண், கடந்து செல்லும் நேரத்தையும், பருவ நிலை மாற்றங்களையும் குறிக்கும் விதமான நடனம் ஒன்றினை நான்கு மணி நேரம் இடைவிடாது சுழன்றபடி நடனமாடினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இந்த சிறுமியை இடைவிடாது நான்கு மணிநேரத்திற்கு சுழலவிட்டது குறித்து இணையதளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஒரு விமர்சகர் இதனைக் கொடூரமானது என்று குறிப்பிட்டு தன்னைப் பொருத்தவரை அழகு என்ற அம்சத்திற்குப் பதிலாக வெறுப்பே தோன்றியது என்று தெரிவித்திருந்தார். மற்றொரு விமர்சகர் 15 வயது சிறுமியை இதுபோல் தொடர்ந்து சுழலவிட்டது தவறான மதிப்பையே அளித்தது என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தொடர்ந்து சுழலவிடுவதன்மூலம் எதனைக் குறிக்க முடியும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார், இதுபோன்ற ஏராளமான விமர்சனங்கள் இந்த நிகழ்ச்சியை சாடியிருந்தன. ஆனால், அந்த சிறுமியோ இந்த நடனம் தனக்கு அளிக்கப்பட்ட ஒருவகையான ஆன்மீகப் பயிற்சி என்று குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய திறனை அறிய இது தனக்கொரு சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ள அவர், எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முடிகிறதா என்று முயற்சிப்பதுபோல் இதுவும் ஒரு முயற்சியாகும். இந்த வாய்ப்பினை அளித்ததன் மூலம் தன்னுடைய ஆன்மாவை சுத்தப்படுத்திக் கொள்ள உதவியதற்கு கடவுளுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அறிமுகமாகின்றது Blu Life Pure Mini ஸ்மார்ட் கைப்பேசி Posted: 07 Feb 2014 05:27 AM PST
4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய MediTek Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன. இதன் விலையானது 249 அமெரிக்க டொலர்களாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூமியையே அதிர வைக்கும் குண்டு பெண்ணின் அட்டகாசமான நடனம்….. Posted: 07 Feb 2014 05:25 AM PST |
| தனது புதிய கார் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டது BMW Posted: 07 Feb 2014 05:24 AM PST
புதிய என்ஜின் தொழில்நுட்பம், றியர் வீல் உட்பட Twin Circular ஹெட்லைட் என்பவற்றினை உள்ளடக்கியதாக இக்கார் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. 10 வருடங்களிற்கு மேலாக தயாரிக்கப்பட்டு வரும் Sports Activity Vehicle (SAV) தொழில்நுட்பத்தைக் கொண்ட கார்களின் இரண்டாம் தலைமுறைக் கார்களாக BMW X3 கார்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா திணறல் Posted: 07 Feb 2014 05:21 AM PST
அதன்பின் மேக்குல்லத்து டன் டிம் சவுத்தி ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய மேக்குல்லம் இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 2–வது இரட்டை சதமாகும். சவுத்தி 27 ரன்னிலும், சோதி 23 ரன்னிலும், வாக்னர் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கடைசி விக்கெட்டாக பிரண்டன் மேக்குல்லம் அவுட் ஆனார். அவர் 224 ரன் எடுத்தார். இதில் 29 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். நியூசிலாந்து அணி 503 ரன் குவித்தது. இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், ஜாகீர்கான் 2 விக்கெட்டும், முகமதுசமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் களம் இறங்கினர். தொடக்கமே கடும் அதிர்ச்சியாக இருந்தது. போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் 3–வது பந்தில் தவான் (0 ரன்) 'டக்' அவுட் அனார். அடுத்து களம் இறங்கிய புஜாரா (1 ரன்) அதே ஓவரில் கடைசி பந்தில் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது. அடுத்த அதிர்ச்சியாக வீராட்கோலியும் வெளியேறினார். 4 ரன் எடுத்திருந்தபோது டிம் சவுந்தியின் பவுன்சர் பந்தை எதிர்கொண்ட கோலியின் கையுறையில் பந்து பட்டு ஸ்லிப்பிடம் கேட்ச் ஆனது. அப்போது 10 ரன்னாக இருந்தது. அதன்பின் முரளிவிஜய், ரோகித்சர்மா ஜோடி பொறுமையாக ஆடியது. முரளிவிஜய் 26 ரன்னில் வாக்னர் பந்தில் போல்டு ஆனார். அப்போது ஸ்கோர் 51 ரன்னாக இருந்தது. அடுத்து ரோகித்சர்மாவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ரோகித்சர்மா அரை சதம் அடித்தார் இறுதியில் இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 07 Feb 2014 05:19 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை விவகாரத்தில் பொறுமை தேவை : அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் Posted: 07 Feb 2014 05:16 AM PST
பயங்கரவாத பிடியிலிருந்து மீண்டுள்ள இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போதியளவில் கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கருணாதிலக்க ஹங்கேவத்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஓர் அங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை செய்துள்ளதாகவும் ஒன்றன் பின் ஒன்றாக இவை அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தள்ளார். ஆயுதம் ஏந்திய நபர்களை தண்டித்து ஒதுக்காமல், அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அநேகமான முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக கருணாதிலக்க ஹங்கேவத்த தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘செக்ஸ்’ வார்த்தைகளால் ஆபாச ‘எஸ்.எம்.எஸ்’ : பெண்ணுக்கு ஜெயில் தண்டனை Posted: 07 Feb 2014 05:09 AM PST
இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் பகுதியை சேர்ந்த பெண் மிச்செலி சாப்பேன். இவர் 'பேஸ்புக்' இணைய தளத்தில் தனது தந்தை ராய் ஷாக்சன், மாற்றாந்தாய் லூசி ஆகியோர் பெயரில் கணக்கு தொடங்கினார். அவர்கள் பெயரில் தனக்காக விபசாரத்துக்கு ஆள் தேடினார். அதற்காக நூற்றுக்கணக்கானவர்களுக்கு 'செக்ஸ்' வார்த்தைகளால் ஆபாச 'எஸ்.எம்.எஸ்' அனுப்பினார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் மிச்செலி சாப்மேன்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது தந்தை தன்னை 21 வருடங்களாக கண்டு கொள்ளவில்லை என்றும், அவரையும் தனது மாற்றாந்தாயையும் பழி வாங்கவே இது போன்று நடந்து கொண்டதாகவும் கூறினார். கைது செய்யப்பட்ட மிச்செல் சாப்மேன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 20 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்தது. இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுபோன்ற வழக்கில் ஜெயில் தண்டனை பெற்ற முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் – யாழ்.இந்து சமயப் பேரவை Posted: 07 Feb 2014 05:04 AM PST
பேரவையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த 2ஆம் திகதி பேரவை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு: போர் முடிவடைந்த பின்னரும் ஆலயங்களில் நடை பெற்று வரும் திருட்டுச் சம்ப வங்கள் மற்றும் ஆலயங்கள் மீதான தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளது. இவ்வாறான தாக்குதல், திருட்டுத் தொடர்பில் ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களைத் தீர்ப்பதற்காக எதிர்வரும் ஏப்ரலில் ஆலயபரிபாலன சபைகளின் மாநாட்டைக் கூட்டல்,இந்து நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கப்படும் வரிகளை நிலுவையுடன் விலக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். சைவ சித்தாந்தக் கல்லூரிக்குப் பொருத்தமான பேரறிஞர்களையும் இந்தியாவிலிருந்து தகுதிவாய்ந்த நிபுணர்களையும் வரவழைத்து அவர்கள் மூலம் பயிற்சிகளை வழங்க இலங்கை அரசு தகுந்த உதவிகளை வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட இந்து நிறுவனங்களைக் கட்டி வளர்க்க ஏற்ற உதவிகளை இந்திய அரசு வழங்கவேண்டும். இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்மக்கள் மன நிறைவுடன் ஏற்கக்கூடிய தீர்வுகளை முன் வைப்பதற்குரிய ஆத்மிக பலத்தை பெளத்த பீடங்கள் இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும். போரால் பூட்டப்பட்டுத் திறக்கப்படாத ஆலயங்களில் பூசைகளை ஆரம்பிக்க அரசு உத விகளை வழங்கவேண்டும். போர்க் காலத்தில் இந்து ஆலயங்களுக்குப் பூசைத் திரவியங்களை இலவசமாக வர்த்தகப் பிரமுகர்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்ட யாழ். வணிகர் கழகத்துக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களில் மாலைநேர வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆலயங்களில் பெறுமதி வாய்ந்த உண்டியல்களை ஆலய நிர்வாகம் சட்ட பூர்வமான பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும். கைதடி நவீன தொழில்பயிற்சி நிலையம் இயங்கிவரும் இடத்துக்கான வாடகைப் பணத்தை தருவதற்கான நடவடிக்கையை யாழ்.அரச அதிபர் மேற்கொள்ள வேண்டும். முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தி.மகேஸ்வரன் முயற்சியில் காரைநகரில் அமைக் கப்பட்ட முதியோர் பாராமரிப்புக் கட்டடத்தை உடனடியாகக் கையளிக்கப் பிரதேச செயலர் உதவ வேண்டும். சைவ உயர் பீடத்தைக் கூட்டி எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் சித்திரைப் பூரணை தினத்தை சரியான நாளாக அறிவிக்கப்பட வேண்டும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை மற்றும் ஈரான் புகலிடக் கோரிக்கையாளாகளை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் கோரிக்கை Posted: 07 Feb 2014 05:00 AM PST
ஜோர்ஜ் நியூஹவுஸ், ஜுலியன் பேர்ன்சயிட், டேன் மொரி மற்றும் ஜேய் வில்லியம்ஸ் ஆகிய சட்டத்தரணிகளே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமானதும், மனிதாபிமானத்திற்கு புறம்பானதுமான வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளளனர்.நவுரு தீவுகளின் உச்ச நீதிமன்றில் குறித்த சட்டத்தரணிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நியாயமற்ற வகையில் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்திற்கு புறம்பான வகையில் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளனர். நவுரு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இது நவுருவின் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது எனவும் சட்டத்தரணி ஜோர்ஜ் நியூஹவுஸ் ( George Newhouse) தெரிவித்துள்ளார்.புகலிடக் கோரிக்கையாளர்களை கால வரையறையின்றி தடுத்து வைப்பதனை நவுரு அரசியல் சாசனம் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஓர் காலப்பகுதிக்கு அதாவது புகலிட கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரையில் தடுத்து வைப்பதனை அனுமதித்தபோதிலும், காலவரையறையின்றி தடுத்து வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நவுரு தீவுகளின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து திருப்திகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். சில வேளைகளில் வழக்கு விசாரணைகளில் பங்கேற்க தமக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகக் கூடுமென குறிப்பிட்டுள்ளார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிகிச்சைக்கு ஆண் மருத்துவரை அனுமதிக்காததால் கல்லூரி மாணவி இறந்த பரிதாப பலி Posted: 07 Feb 2014 04:58 AM PST
அவசரகாலத்தில் உதவும் ஆண் மருத்துவ ஊழியர்களை பெண்கள் வளாகத்தின் உள்ளே விடுவதற்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே அவர்கள் அனுமதி அளித்ததாகவும் அதற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டார் என்றும் பத்திரிகை தகவல் வெளிவந்தது. ஆனால் அந்த வளாகத்தின் பொறுப்பாளரான பத்ரன்-அல்-ஓமர் உடனடியாக மருத்துவ உதவிகள் அழைக்கப்பட்டதாகவும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டதாகவும் கூறி இந்தத் தகவலை மறுத்துள்ளார். ஆயினும் இந்த சம்பவம் இணையதளத்தில் பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. பாலின பாகுபாடினால் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் கடுமையான விதிகளே இந்தப் பெண்ணின் மரணத்திற்குக் காரணமாக இருந்துள்ளது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல் கடந்த 2002-ம் ஆண்டில் மெக்காவின் பெண்கள் பள்ளியில் ஒரு தீவிபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த பெண்கள் பர்தா அணிந்திருக்கவில்லை என்று அவர்களை வெளியே தப்பிக்கவிட மத நம்பிக்கை கொண்ட காவல்துறையினர் மறுத்ததால் அதில் 15 பெண்கள் மரணமடைந்ததுவும் அதன்பின்னர் பெண்கள் பள்ளி நிர்வாகம் கல்வி அமைச்சகத்தின் கீழ் வந்ததுவும் இங்கு குறிப்பிடப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும் ஒரு விசாரணை கோரியுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் கலாச்சாரத்தையோ, குடும்பத்தையோ பற்றி யோசிக்காமல் விரைந்து முடிவெடுக்கும் நிர்வாகமே தேவை என்று அங்கு பணிபுரியும் பேராசிரியர் அசிசா யூசுப் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் ஆவணப்படம் : ‘’இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது’ Posted: 07 Feb 2014 04:53 AM PST
இதில் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலேடெய் உட்பட உலகளவில் பல்வேறு தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் அண்மையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனும் கலந்து கொண்டு தனது ஆவணப்படத்தை வெளியிட்டார். இந்த ஆவணப்படத்தில் வெளியானவைகள் இப்பொழுது இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக சிங்கள பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள செய்தியில், சமீபத்தில் பூநகரி பகுதியில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் பிரபாகரன், பிரித்தானியா பாராளுமன்றத்தில் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது '(This Land Belongs to the Army) என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி வன்னிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இவர் 'புலித்தடம் தேடி- இரத்த ஈழத்தில் 25 நாட்கள்' என்ற தொடரை எழுதி அதை அண்மையில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இவர் பிரித்தானியா தமிழர் பேரவை, தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு அழைப்பின் பேரிலேயே இதில் கலந்து கொண்டுள்ளார். இதே போல் இவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.களையும் அழைத்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரேசிலில் பஸ் கட்டணத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் : வன்முறையாக வெடித்தது Posted: 07 Feb 2014 04:42 AM PST
இதனால் வெகுண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த சிறு சிறு கற்களை எடுத்து அதிகாரிகளைத் தாக்க முயன்றனர். அங்கு நடந்த கலவரத்தினால் அதிகாரிகள் ரெயில் நிலையத்தை மூடினர். இதனால் அங்கு காத்திருந்த பயணிகள் அனைவரும் அவதியுறும் நிலை ஏற்பட்டது.க ண்ணீர்ப் புகை வீசப்பட்டதில் அருகிலிருந்த சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். நல்ல சுகாதாரம், நல்ல கல்வி வசதிகள் கொடுக்கப்பட்டு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் மக்கள் போராடும் நிலைக்கு வரமாட்டார்கள். அதுமட்டுமின்றி எங்களுக்குத் தேவைப்படாத விளையாட்டுகளில் அரசு பணத்தை வாரி இறைக்கின்றது. எங்களுக்குத் தேவை நல்ல கல்வி, சுகாதாரம் மற்றும் கண்ணியமான பொது போக்குவரத்து மட்டுமே என்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தயிஸ் ஜொராவோ என்ற 22 வயது இளைஞன் ஒருவன் குறிப்பிட்டான். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



























