Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நமது ஈகரையின் சிறப்புக்கவிஞர் M.M.SENTHIL அவர்களை வாழ்த்தலாம் வாங்க...

Posted: 01 Feb 2014 11:06 AM PST

ஈகரையின் சிறப்புக்கவிஞர் செந்தில் அவர்களை அன்போடு வாழ்த்தலாம் வாங்க உறவுகளே... மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் செந்தில்....உங்கள் கவிதை இன்னும் மெருகேறட்டும்

இந்தியக் கார்களின் தரம்....!

Posted: 01 Feb 2014 08:14 AM PST

உலகில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பு குறித்த சோதனை ஜெர்மனியில் நடத்தப்பட்டது. லண்டனைச் சேர்ந்த கார் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய இந்தச் சோதனைக்கு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா நானோ, மாருதி ஸூசுகி ஆல்டோ 800, ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு பிகோ மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ ஆகிய 5 இந்திய பிராண்டட் சிறிய ரக கார்கள் தோ்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு பிராண்டிலும் தலா இரண்டு கார்களை கப்பல் மூலம் ஜொ்மனிக்கு அனுப்பினார்கள். இந்தக் கார்களை வேகமாக ஓட்டிச் சென்று மோத விட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒரு ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -88)

Posted: 01 Feb 2014 08:08 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Posted: 01 Feb 2014 05:48 AM PST

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ? தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள். குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ? தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப ...

மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு

Posted: 01 Feb 2014 05:40 AM PST

மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு தேகம் எங்கும் ஒரு போகம் கூட விடாமல் காதல் விதை போட்டவளே பொறுக்க முடியாமல் புலம்புகிறேன் வதைக்காதே என்னை மேலும் விதைக்காதே உன் காதல் கண்ணை என் மேனி அழகென்று நீ புகுந்தாயா? உன் வாடை புதிதென்று நான் தான் நுகர்ந்தேனா? என் மேனிக்குள் புதைந்தவளே என் பாணியில் நீ பேசி என்னை நீ மடக்கி விட்டாய் என்ன பாணியில் நான் பேசி உன்னை நான் வசியம் செய்ய என்னை நீ புன்னை வண்டு போல் கவர்ந்தாய் என்னில் ஒரு அழகு உண்டென்றா? என்னறிவு ...

அறிமுக அட்டை

Posted: 01 Feb 2014 05:01 AM PST

அடையாளஅட்டை கிடையாது அலுவலகமும் கிடையாது அயர்ந்து சோர்ந்துஇருந்தாலும் அலுவல்விடுப்பு கிடையாது அடுப்படிவேலை மட்டுமல்ல அனைத்துவேலை செய்திடவே அவசியமாய் கல்விஈந்தனர் அன்னைதந்தை அவளுக்கே அடுத்துவரும் சந்ததியினர் அழகாய்பயின்று வளர்ந்திடவே அன்பைக்கற்றுக் கொடுப்பதுடன் அறிவும்ஊட்டி வளர்த்தாளே அல்லும்பகலும் அயராது அலுவல்மட்டும் அங்குண்டு அந்தவேலைக்கு ஊதியந்தான் அன்பின் வடிவாய் கிடைத்திடுமே!!!! என் பெயர் : கிருஷ்ணம்மாள் பிறந்த ஊர் : மதுரை வசிப்பிடம் : சிங்கப்பூர் முகப்புத்தகம் அல்லாது ...

காதல் தந்த கல்வி

Posted: 01 Feb 2014 04:59 AM PST

வாத்தியாரைக் கண்டாலே வார்த்தை முடங்கும் எனக்கு உன்னைக் கண்ட பிறகே முடங்கிய வார்த்தைகள் மூச்சுப் பெற்றதடி பள்ளிக் கூடம் என்றாலே பாகற்காயான எனக்கு தரம் பத்திலேயே காதலை தந்து உனக்காக கோழி கூவும் வேளை காதல் கடிதம் எழுதி நேரத்துக்கே பள்ளி வந்தேனடி உனக்கு நான் எழுதி கவிஞனானேனடி பதில் எழுதாமலே என்னடி ஆனாய் நீ?

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Posted: 01 Feb 2014 04:20 AM PST

மாதவரம் டெலிபோன் காலனியில் கற்பழிக்க முயன்ற அக்காள் கணவர் மேத்யூவை, கல்லூரி மாணவி ஹரிப்ரியா கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரை இழந்த ஹரிப்ரியா, தனது அக்காள் ஹேமாவின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அத்தான் மேத்யூவின் செக்ஸ் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுடனேயே வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் போதையும் காமமும் தலைக்கேறிய நிலையில், மேத்யூ, வக்கிரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். தனது காதல் மனைவியான ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 01 Feb 2014 03:39 AM PST



உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா?

Posted: 01 Feb 2014 02:41 AM PST

கற்செதுக்கி சிலை வடிக்கும் பெண்ணவள் நீயே! தேன்கனி சொற்கொண்டு கவி வடிக்கும் பெண்ணவள் நீயே! சொல்லாக்கம் செய்ய எழுத்தை தொடுப்பவளே உன் சொற்களால் உண்டான கருத்தை ஏன் கசக்கி பிழிகிறாய்? மனத்தால் ஏன் செத்து ஒழிகிறாய்? ஆடவரை கவர்ந்திழுக்கும் கார்மோகினியிவள் என் கற்பை கதைகளால் சூறையாடிய சூறாவளி! உன் மீது எனக்கொன்றும் இல்லை. என் மீது எனக்கான வலிகளும் வரிகளும் இவை. சர்க்கரை சேர்ந்த உன் வார்த்தைகளில் வசப்பட்டவன் இவன் சர்க்கரைகள் கசப்பதாக தகவல் தருகிறாயே ...

கவித் தூறல்கள்

Posted: 01 Feb 2014 02:27 AM PST

********************************
மானம் கெட்டு திரியும்
ஈனப் பிறவியை விட
ஊனங்களைக் காட்டி
ஏனம் ஏந்துபவன் மேல்
**********************************

**********************************

விடியாத முகங்களோடு
விடியலை தேடாதீர்
புலர்ந்த புன்னகை போதும்
விடியல் நம்மை தேடி வர

**********************************

தத்தளிக்கும் போதும் எத்தனிக்கவில்லை??????

Posted: 01 Feb 2014 02:26 AM PST





அழிந்து போன நாகரிகத்தின்
கிழிந்து போன எச்சங்களில் கூட
வரலாற்றுச் சரித்திரத்தை
உயிர் கொடுத்து
உலகம் பூராய் உலாவவிடும்
இவ்வேளையில்,

மானிடம் கெட்டு வாய்க் கொழுப்பாய்
வாஞ்சையில் வீழ்ந்து கிடக்கிறது
எமது சமுதாயம்.

விண்வெளியில் விளையாடும்
வீரர்களின் கீழே

வீண் விவாத திறமைக்கான
பரிசில்களைச் சேகரிக்கிறோம்

நீ வருகையில...

Posted: 01 Feb 2014 02:25 AM PST

இரவுகள் ஒவ்வொன்றும் என்னை வரவேற்க இரவிற்காய் நான் தனியாய் காத்திருக்க நீ வந்த நேரமதில் இருளெங்கும் பல மோதல் உன் ஒளியிலும் ஒரு காதல் உன் சந்திப்பிற்காய் நான் பதுங்க ஆட்களின் ஆரவாரம் எனைத் துரத்த நீ வந்த நேரமதில் பயம் தானே ஒதுங்க தைரியத்தின் தன்மையோ உனைக் கண்டதுமே வெண்மையாக நாய்கள் எங்கும் ஊளையிட நாலு பக்கம் அரவம் வர நீ வாராய் என நான் நினைத்து கொஞ்ச நேரம் அமைதியுற வாள் கிடைத்த கை போல ஓங்கியது எந்தன் மனம் ஓடியது அல்லல் குணம் வெந்நிறமாய் ...

கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்

Posted: 01 Feb 2014 02:20 AM PST

கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்



பருவ வயதினிலே
பல பேரை பார்த்தும்
பல காதல் சொல்லியும்
ஒரு காதல் கூட
ஒன்று சேராமல்
ஒரு பெண்ணை
மணந்த பின்னே
குழந்தைகள் பிறந்த பின்னே
என் வாழ்விற்காய்
நான் தவம் செய்கையிலே
காலடியில் பல காதல்கள்
தவமிருக்கிறது.

அரசன் கடவுளாகிறான்

Posted: 01 Feb 2014 02:17 AM PST

முகங்களைக் குப்புறப் போடுங்கள்
முழந்தாலிட்டு அமருங்கள்
எட்டுத் திக்கும் சத்தம் முழக்குங்கள்
கைகளை உயர்த்திக் கும்பிடுங்கள்
அரசன்
கடவுளாகிவிட்டான்
அவன் சொல்வதே
இனி எங்கள்
தலை விதியையும்
தலைமை விதியையும் ஆட்டும் .

இவன் தலை விதி ஒரு நாள் மாறும் வரை .

தலைமக்கட்கு உரிய குணங்கள்!

Posted: 31 Jan 2014 11:44 PM PST

தலைமகனுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன. அறிவு : எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு. நிறை : காப்பன காத்து கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். ஓர்ப்பு : ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். கடைப்பிடி : கொண்ட பொருள் மறவாமை. தலைமகளுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன. அச்சம் : பெண்மையின் தான் காணப்படாததொரு பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. மடம் : கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. நாணம் ...

தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு

Posted: 31 Jan 2014 11:16 PM PST

தமிழ்ச் செல்வங்கள்: - புலவர் இரா.இளங்குமரன் கொக்கு பறவைகள் சில ஒன்று கூடுகின்றன; மகிழ்வாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன. அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்து மாந்தன் கேட்கிறான்; அவ்வொலி "கொக்', "கொக்' என அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அதனைக் "கொக்கு' என்று வழங்குகின்றான். பின்னர் அப்பெயரைப் பலரும் வழங்குகின்றனர். அப்பெயர் சூட்டிய நாள் தொட்டு இன்று வரை நிலைத்துவிட்டது. "கொக்', "கொக்' என்றதால் வந்த பெயர், அப்பறவையைக் காணாத இடத்தும் வழங்கப்பட்டது. வரிவடிவம் ...

2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 31 Jan 2014 09:16 PM PST

1-2-2014-FHM India Hot Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய http://www64.zippyshare.com/v/62980779/file.html January/February 2014-India Today Travel Plus Magazine PDF இலவசமாக. http://www76.zippyshare.com/v/62918210/file.html 1-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www18.zippyshare.com/v/61236791/file.html 29-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய.. http://www42.zippyshare.com/v/65316492/file.html http://filesflash.com/tfncsc94 January2014-Reader's ...

ப்ரூஸ்லீ அசத்தும் கார் பந்தயம் காமிக்ஸ்தமிழில் இலவசமாக..

Posted: 31 Jan 2014 08:58 PM PST

ப்ரூஸ்லீ அசத்தும் கார் பந்தயம் காமிக்ஸ்தமிழில் இலவசமாக.. இந்திரஜால் காமிக்ஸ் -கார் பந்தயம் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/k32dau5dz5ar9er/Bruc+lee+in+Car+race%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

இளைஞர் புராணம்

Posted: 31 Jan 2014 05:50 PM PST

அன்புடையீர்!

இன்றைய இளைஞர்கள் நம் புராண இதிகாசக் கதைகளை வெறும் கற்பனையென ஒதுக்கி
அவற்றில் உறையும் தத்துவங்களை அறியாது இருக்கின்றனர். இந்த நிலை கொஞ்சம் மாற
ஒரு சிறு முயற்சியாக வாரியார் சுவாமிகள் விளக்கிய 'விநாயக மூர்த்தி கனி பெற்ற' கதையைக்
கவிதையில் தரலாம் என்று தோன்றியதில் எழுந்ததே இந்தப் படைப்பு. இதுபற்றிய அன்பர்களின்
நிறை-குறை கருத்துகளை வரவேற்கிறேன்.

அன்புடன்,
ரமணி

நாயன்மார் மீது பக்தி கொண்ட நாயன்மார்!

Posted: 31 Jan 2014 05:16 PM PST

திங்களூர் வளமிகுந்த சோழ நாட்டிலுள்ள ஒரு திருத்தலம்.எழில்மிகு சோலைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட இத்தலத்திலே வாழ்ந்து வந்த சிவத்தொண்டர் பலருள் அப்பூதி அடிகளார் என்பவரும் ஒருவர். இறைவனின் திருவடிக் கமலங்களை இடையறாது நினைத்து உருகும் இவ்வன்பர் மேன்மையும் புகழும் மிக்கவர். இவர் மனைவியோடும், மகனோடும் இல்லறத்தில் இன்பமுற வாழ்ந்து வந்தார். இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபடும் அரும்பெரும் தவத்தினர். அவர் தமது சிந்தையில் எந்நேரமும் இறைவனின் திருநாமத்தையே கொண்டிருந்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™