Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மீண்டும் தூசி தட்டுகிறார் தேவகவுடா...: முலாயம், நிதிஷ், மம்தாவும் கைகோர்ப்பு

Posted:

பாட்னா : வரும் லோக்சபா தேர்தலில், காங்., பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை அமைப்பதற்கான முயற்சி, மேற்கொள்ளப் பட்டுள்ளது. தேவகவுடா, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார், மம்தா ஆகியோர், இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக, காங்., பா.ஜ., அல்லாத கட்சிகளின் தலைவர்கள், வரும், 5ம் தேதி டில்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளே, பிரதானமாக செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போதும், காங்., பா.ஜ., கூட்டணியில் இடம் பெற ...

ஏ.டி.எம்., பயன்பாடு குறித்து மறு பரிசீலனை செய்ய திட்டம்

Posted:

மும்பை: வங்கிகளின் ஏ.டி.எம்., பயன்பாடு குறித்து, மறுபரிசீலனை செய்து வருவதாக, இந்திய வங்கிகள் சங்க கூட்டத்தில் பேசப்பட்டது.ஏ.டி.எம்., மையங்களில், பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, வங்கிகள் அதிகளவில் செலவிட்டு வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஒரு வங்கியின் வாடிக்கையாளர், ஒரு மாதத்தில், ஐந்து தடவைக்கு மேல், பணம் எடுக்கும் நிலையில், அதற்கு கட்டணம் வசூலிக்க, வங்கிகள் திட்டமிட்டிருந்தன. இதற்கு, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், கே.சி.சக்ரவர்த்தி அதிருப்தி தெரிவித்திருந்தார். குறிப்பாக, வங்கிகள், தங்களுடைய வாடிக்கையாளர்கள், ஐந்து முறைக்கு மேல், பணம் ...

சீக்கியர் கலவர விவகாரத்தில் சிக்குகிறார் கமல்நாத்

Posted:

'சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது, வன்முறையாளர்கள், கலவரத்தில் ஈடுபட, காங்., மூத்த தலைவர், கமல்நாத் தூண்டியதை, நான் நேரில் பார்த்தேன்' என, மூத்த பத்திரிகையாளர், பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதால், கமல்நாத்துக்கு, புது சிக்கல் உருவாகியுள்ளது. யார், யார்?முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான, இந்திரா, 1984ல், அவரின், சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டில்லி முழுவதும், சீக்கியர்களுக்கு எதிராக, கலவரம் வெடித்தது. ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை, காங்., கட்சியை சேர்ந்த சில தலைவர்களே, ...

தேர்தல் பிரசார நாட்களை குறைக்குமாறு பரிந்துரை: அடாவடியை தடுக்கலாம் என்கிறார் முன்னாள் நீதிபதி

Posted:

'பிரசாரத்திற்காக, அதிக நாட்கள் ஒதுக்கப்படுவதை, தடுக்க வேண்டும். அந்த இடைவெளியின் போது தான், அரசியல் கட்சிகள், பணத்தை தண்ணீராக, வாரி இறைக்கின்றன' என்ற யோசனை, முன்வைக்கப்பட்டுள்ளது.அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பது தொடர்பாகவும், தேர்தலின்போது, பண புழக்கத்தை ஒழித்துக் கட்டுவது தொடர்பாகவும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது.இது தொடர்பாக, தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான, ஆலோசனைகளை வழங்கும்படி, மத்திய சட்டக் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டிருந்தது. குற்றப் பின்னணி:இது தொடர்பாக, ...

ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றம்: லோக்சபா தேர்தலை சந்திக்க ஜெ., ரெடி

Posted:

லோக்சபா தேர்தலுக்கு முன், அமைச்சரவையிலும், அதிகாரிகள் மட்டத்திலும், அதிரடி மாற்றம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். புகார்களுக்கு ஆளான, கட்சி நிர்வாகிகளும் மாற்றப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில், பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த முறை நடக்கவிருக்கும் மாற்றம், தேர்தலுக்கானது என்பதால், மிகப்பெரிய அளவில் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தலுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில், ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக, மூத்த அமைச்சர்களான, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ...

'அதுக்குள்ளே அலம்பலை ஆரம்பிச்சுட்டாங்களா?': ஆம் ஆத்மி கட்சியில் எழுந்தது அதிருப்தி அலை

Posted:

புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சி, டில்லியில் ஆட்சியில் அமர்ந்து, ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் செய்யும், அலம்பல்கள் தாங்க முடியவில்லை என்றும், அவர்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும், கட்சியின், இரண்டாம் கட்ட தலைவர்கள், அதிருப்தி குரல் எழுப்பியுள்ளனர். பந்தா பேர்வழிகளாக:டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. 'ஆம் ஆத்மி' என்ற இந்தி வார்த்தைக்கு, தமிழில், 'சாமானிய மக்களின் கட்சி' என்று, அர்த்தம்.'அரசியல்வாதிகளின், வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதும், ...

இலவச பொருட்களை வழங்கும் பணி தீவிரம்: மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

Posted:

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓட்டுகளை அள்ளுவதற்காக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன், மார்ச் 15ம் தேதிக்குள், இலவச மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட பொருட்களை வழங்கி முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தேதி இம்மாத இறுதியிலோ, அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். அதன் பின் அரசின் இலவச திட்டங்களை வழங்க முடியாது.இலவச பொருட்கள் :கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் ...

பா.ஜ., தலைவர்களுடன் ராமதாஸ் விரைவில் பேச்சு: தைலாபுரத்தில் சந்தித்து விரிவாக ஆலோசிக்க ஏற்பாடு

Posted:

'பா.ஜ.,வுடன், கூட்டணி தொடர்பான, பூர்வாங்க பேச்சுவார்த்தை துவங்கும் முன், தைலாபுரம் தோட்டத்தில், அக்கட்சி தலைவர்களை சந்திக்க, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.'திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும், இனி கூட்டணி இல்லை' என, கடந்த ஒன்றரை ஆண்டு களாக, பா.ம.க., கூறி வந்தது. பல்வேறு ஜாதி கட்சிகள், சங்கங்களை இணைத்து உருவாக்கிய, சமுதாய பேரியக்கம் மூலம், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக கூறிய, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், தன் கட்சி சார்பில், 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார்.ஆனால், சமுதாய பேரியக்கம், கதைக்கு ஆகாது என்ற கருத்து, பா.ம.க.,வில் ...

தமிழக மீனவர்களுக்கு எதிரானது மத்திய அரசு: டெசோ கண்டனம்

Posted:

சென்னை : 'தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக, 'கச்சத் தீவில், தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை' என, மத்திய அரசு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது, வன்மையாக கண்டிக்கத் தக்கது' என, தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பான, 'டெசோ' கூறியுள்ளது.டெசோ கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்னமானங்கள்: இனப்படுகொலை:'இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொ டர்பாக, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என, ஐ.நா., சபையில், அமெரிக்கா, மார்ச் மாதம், தீர்மானம் கொண்டு வருகிறது. ...

'விசாவுக்காக மோடி காத்திருக்க வேண்டும்': அமெரிக்க வெளியுறவு அதிகாரி பேட்டி

Posted:

புதுடில்லி : 'அமெரிக்கா விசா வேண்டி, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, எப்போது வேண்டுமானாலும், விண்ணப்பிக்கலாம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. புகார்:பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.குஜராத் முதல்வராக உள்ள நரேந்திர மோடி, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடந்து, 2002ல் ஏற்பட்ட கலவரத்தை அடக்க தவறி விட்டதாக, புகார் உள்ளது.சிறுபான்மை மக்களை காக்க தவறியதற்காக, பிரிட்டனும், அமெரிக்காவும், மோடிக்கு, 'விசா' வழங்குவதில், தயக்கம் காட்டி வருகின்றன.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி, மேரி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™